7th Tamil Unit 5 Questions

7th Tamil Unit 5 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 7th Tamil Unit 5 Questions With Answers Uploaded Below.

1) “இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்

என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்” என்ற பாடலைப் பாடியவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) சுரதா

D) நாராயணக்கவி

விளக்கம்: “இன்பத்தமிழ்க் கல்வி” என்னும் தலைப்பின் கீழ் பாரதிதாசன் எழுதிய பாடல் வரிகளே இவையாகும்.

2) பொருத்துக.

அ. எத்தனிக்கும் – 1. சமம்

ஆ. வெற்பு – 2. வயல்

இ. கழனி – 3. மலை

ஈ. நிகர் – 4. முயலும்

A) 4, 3, 2, 1

B) 3, 4, 2, 1

C) 4, 2, 3, 1

D) 4, 3, 1, 2

விளக்கம்: எத்தனிக்கும் – முயலும்

வெற்பு – மலை

கழனி – வயல்

நிகர் – சமம்

3) பொருத்துக

அ. பரிதி – 1. மழைமேகம்

ஆ. அன்னதோர் – 2. உறங்கியிருந்தார்

இ. கார்முகில் – 3. அப்படி ஒரு

ஈ. துயின்றிருந்தார் – 4. கதிரவன்

A) 4, 3, 1, 2

B) 4, 3, 2, 1

C) 4, 2, 3, 1

D) 4, 1, 3, 2

விளக்கம்: பரிதி – கதிரவன்

அன்னதோர் – அப்படியொரு

கார்முகில் – மழைமேகம்

துயின்றிருந்தார் – உறங்கியிருந்தார்

4) “இன்பத்தமிழ்க் கல்வி” என்னும் பாடலில் பாரதிதாசனின் எண்ணங்களில் பொருந்தாததைத் தேர்க

A) என்னைக் கவிதையாக எழுதுக என்றது வானம்

B) எங்களைக் கவி ஓவியமாகத் தீட்டுக என்றது நீரோடை

C) அன்பினைக் கவிதையாக எழுதுக என்றனர் ஆடும் மயில் போன்ற பெண்கள்

D) “மலை போன்ற எங்களது தோள்களின் அழகினை எழுதுங்கள்” என்றனர் வில் ஏந்திய வீரர்கள் விளக்கம்: மலை போன்ற எங்களது தோள்களின் அழகினை எழுதுங்கள் என்றனர் வேல் ஏந்திய வீரர்கள்.

5) பிசிராந்தையார் என்பது எவ்வகை நாடகம்?

A) இசை நூல்

B) ஓவிய நூல்

C) நாடக நூல்

D) உரைநடை நூல்

விளக்கம்: பிசிராந்தையார் என்பது நாடகநூல். இதன் ஆசிரியர் பாரதிதாசன்

6) பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது?

A) குடும்ப விளக்கு

B) பாண்டியன் பரிசு

C) கண்ணகி புரட்சிக் காப்பியம்

D) பிசிராந்தையார்

விளக்கம்: பாரதிதாசனின் பிசிராந்தையார் என்ற நூலுக்கு சாகித்த அகாடமி விருது அளிக்கப்பட்டது. இவர் கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்.

7) பொருந்தாததைத் தேர்க.

A) அழகின் சிரிப்பு

B) இசையமுது

C) இருண்டவீடு

D) மலைக்கள்ளன்

விளக்கம்: மலைக்கள்ளன் என்பது நாமக்கல் கவிஞர் இயற்றிய நூலாகும். பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, கண்ணகி புரட்சிக் காப்பியம், பிசிராந்தையார் ஆகியவை பாரதிதாசனின் படைப்புகள் ஆகும்.

8) “இன்பத்தமிழ் கல்வி” என்னும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

A) பிசிராந்தையார்

B) பாரதிதாசன் கவிதைகள்

C) அழகின் சிரிப்பு

D) இருண்ட வீடு

விளக்கம்: பாரதிதாசன் கவிதைகள் என்னும் நூல் தொகுப்பிலிருந்து “தமிழ்ப்பேறு” என்னும் தலைப்பின் கீழ் “இன்பத்தமிழ்க் கல்வி” என்னும் பாடல் அமைந்துள்ளது.

9) பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது?

A) மயில்

B) குயில்

C) கிளி

D) அன்னம்

விளக்கம்: “ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம்” என்னும் வரிகளில் பெண்கள் மயில்களுக்கு நிகர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

10) ஏடெடுத்தேன்-பிரித்தெழுதுக

A) ஏடெடு + தேன்

B) ஏ + டெடுத்தேன்

C) ஏடு + எடுத்தேன்

D) ஏ + டெடுத்தேன்

விளக்கம்: ஏடெடுத்தேன் – ஏடு + எடுத்தேன் என்று பிரியும்

11) துயின்றிருந்தார் பிரித்தெழுதுக.

A) துயின்று + இருந்தார்

B) துயில் + இருந்தார்

C) துயின்றி + இருந்தார்

D) துயின் + இருந்தார்

விளக்கம்: துயின்றிருந்தார் – துயின்று + இருந்தார் எனப் பிரியும்

12) என்று + உரைக்கும் சேர்த்தெழுதுக.

A) என்றுஉரைக்கும்

B) என்றிரைக்கும்

C) என்றரைக்கும்

D) என்றுரைக்கும்

விளக்கம்: என்று + உரைக்கும் என்பது என்றுரைக்கும் எனப் புணரும்

13) சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் எது?

A) நற்றிணை

B) குறுந்தொகை

C) நாலடியார்

D) திரிகடுகம்

விளக்கம்: சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் நாலடியார். இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.

14) “வேளாண்மை வேதம்” என்று அழைக்கப்படும் நூல் எது?

A) திருக்குறள்

B) ஏலாதி

C) திரிகடுகம்

D) நாலடியார்

விளக்கம்: நாலடியார் நூலானது வேளாண்வேதம், குட்டித்திருக்குறள் எனவும் அழைக்கப்படும்

15) நாலடியார் எத்தனை வெண்பாக்களால் ஆனது?

A) 300

B) 400

C) 180

D) 120

விளக்கம்: நாலடியார் நானூறு வெண்பாக்களால் ஆனது. இதனை நாலடி நானூறு என்றும் அழைப்பர்.

16) நாலடியார் எத்தனை பகுப்புகளைக் கொண்டது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: நாலடியார் நூலானது அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.

17) நாலடியார் எந்த நூலுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது?

A) திருக்குறள்

B) ஏலாதி

C) திரிகடுகம்

D) நாண்மணிக்கடிகை

விளக்கம்: நாலடியார், திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை “நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்னும் தொடர் மூலம் அறியலாம்.

18) பொருத்துக

அ. வைப்புழி – 1. வாய்க்கும்படி கொடுத்தாலும்

ஆ. கோட்படா – 2. கல்வி

இ. வாய்த்து ஈயில் – 3. பொருள் சேமித்து வைக்குமிடம்

ஈ. விச்சை – 4. ஒருவரால் கொள்ளப்படாது

A) 4, 3, 2, 1

B) 4, 2, 3, 1

C) 3, 4, 1, 2

D) 3, 2, 1, 4

விளக்கம்: வைப்புழி – பொருள் சேமித்து வைக்குமிடம்

கோட்படா – ஒருவரால் கொள்ளப்படாது

வாய்த்து ஈயில் – வாய்க்கும்படி கொடுத்தாலும்

விச்சை – கல்வி

19) ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் எது?

A) அன்பு

B) பொருள்

C) புண்ணியம்

D) கல்வி

விளக்கம்: ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகா.

20) “வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை” என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது?

A) திருக்குறள்

B) வேளாண்வேதம்

C) ஏலாதி

D) திரிகடுகம்

விளக்கம்: “வைப்பழி கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை

மிகச் சிறப்பின் அரசர் செறின் வல்வார்

எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன

விச்சைமற்று அல்ல பிற” – நாலடியார்

21) கல்வியைப் போல் ________ செல்வம் வேறில்லை

A) விலையில்லாத

B) கேடில்லாத

C) உயர்வில்லாத

D) தவறில்லாத

விளக்கம்: கல்வியைப் போல் கேடில்லாத செல்வம் வேறில்லை என்பதை “வைப்புழி கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை” என்ற வரிகள் மூலம் அறியலாம்.

22) “வாய்த்தீயின்” பிரித்தெழுதுக

A) வாய்த்து + ஈயின்

B) வாய் + தீயின்

C) வாய்த்து + தீயின்

D) வாய் + ஈயின்

விளக்கம்: வாய்த்தீயின் – வாய்த்து + ஈயின் எனப் பிரியும்

23) கேடில்லை-பிரித்தெழுதுக

A) கேடி + இல்லை

B) கே + இல்லை

C) கேள்வி + இல்லை

D) கேடு + இல்லை

விளக்கம்: கேடில்லை – கேடு + இல்லை எனப் பிரியும் .

24) எவன் + ஒருவன்-சேர்த்தெழுதுக.

A) எவன்ஒருவன்

B) எவனொருவன்

C) எவ்னொருவன்

D) ஏன்னொருவன்

விளக்கம்: எவன் + ஒருவன் – எவனொருவன் எனப் புணரும்

25) “வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்

வேகாது வேந்த ராலும்______” என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?

A) ஏலாதி

B) நாலடியார்

C) தனிப்பாடல் திரட்டு

D) திரிகடுகம்

விளக்கம்: “வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்

வேகாது வேந்த ராலும்

கொள்ளத்தான் முடியது கொடுத்தாலும்

நிறைவன்றிக் குறைவு றாது

கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு

மிகஎளிது கல்வி என்னும்

உள்ளப்பொருள் உள்ளிருக்கப் புறத்தேயோர்

பொருள்தேடி உலகின் றீரே” – தனிப்பாடல் திரட்டு

26) அழியாத செல்வம் எது?

A) பணம்

B) பொருள்

C) கல்வி

D) நகை

விளக்கம்: உலகில் பலவகையான செல்வங்கள் உள்ள. அவற்றுள் அழியாத செல்வம் கல்விச் செல்வம் ஆகும். பிற செல்வங்கள் அனைத்தும் அழியும் தன்மை உடையது.

27) உலகிலுள்ள உயிரினங்களுள் தனித்தன்மை உடையது எது?

A) தாவரம்

B) விலங்கு

C) பூஞ்சை

D) மனிதன்

விளக்கம்: உலகிலுள்ள உயிரினங்களுள் தனித்தன்மை உடையது மனிதன் ஆகும். ஏனெனில் மனிதனுக்கு தான் எதிர்காலம் சொல்ல முடியது.

28) “கேடில் விழுச்செல்வம் _______ ஒருவற்கு”

மாடல்ல மற்ற யவை” – குறளை நிறைவு செய்க.

A) கல்வி

B) அன்பு

C) அறம்

D) ஒழுக்கம்

விளக்கம்: “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்ற யவை” என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது கல்வி, மட்டுமே அழியாச் செல்வம் மற்ற அனைத்து செல்வங்களும் அழிந்துவிடும் என்பது இதன் பொருள்.

29) எது ஓர் ஒளிவிளக்கு போன்றது?

A) அன்பு

B) அறம்

C) ஒழுக்கம்

D) கல்வி

விளக்கம்: கல்வி ஓர் ஒளிவிளக்கு. ஏனெனில், கல்வி, இருக்கும் இடத்தை ஒளிமயமாக ஆக்குவது ஆகும். கல்வி கற்ற ஒருவர். அதை பலருக்கும் கற்றுக் கொடுக்கும் போது கல்வி பலருக்கு ஒளி தருவதாக அமைகிறது.

30) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர் – இப்பாடல் வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன?

A) நாலடியார்

B) நான்மணிக்கடிகை

C) ஏலாதி

D) திருக்குறள்

விளக்கம்: இது திருக்குறள் ஆகும். இதன் பொருள், கல்வி அறிவு பெறாதவர் விலங்கிற்கு ஒப்பானவர் என்று வள்ளுவர் உரைக்கின்றார்.

31) “நன்றின்பால் உய்ப்பது அறிவு” என்ற கூறியவர் யார்?

A) சமண முனிவர்

B) நக்கீரர்

C) கபிலர்

D) திருவள்ளுவர்

விளக்கம்: நல்ல செயலை செய்ய, இன்னொருவர் வந்து சொல்ல வேண்டும் என்று காத்திருக்கக் கூடாது என்பதே இதன் பொருளாகும்.

32) இளம்பிள்ளைகளை நல்ல குடிமக்களாக உருவாக்கும் திறன் பெற்றவர்கள் யார்?

A) பெற்றோர்

B) ஆசிரியர்

C) சான்றோர்

D) அரசு

விளக்கம்: இளம்பிள்ளைகளை நல்ல குடிமக்களாக உருவாக்கும் திறன் பெற்றவர்கள் ஆசிரியர்களே.

33) “பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்

எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்” இப்பாடல் யாருடையது?

A) நாமக்கல் கவிஞர்

B) பாரதிதாசன்

C) சுரதா

D) பாரதி

விளக்கம்: நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தவர் பாரதியார்.

34) உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

A) பாரதி

B) பாரதிதாசன்

C) வீ.முனுசாமி

D) வள்ளுவர்

விளக்கம்: திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி. இவை நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர்.

35) வீ. முனுசாமி-ன் புகழ் பெற்ற நூல் எது?

A) வள்ளுவர் உள்ளம்

B) வள்ளுவர் காட்டிய வழி

C) திருக்குறளில் நகைச்சுவை

D) உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்

விளக்கம்: மேற்கண்ட அனைத்து நூல்களும் வீ. முனுசாமி-ன் நூல்களே. அவற்றுள் பெரும் புகழ் பெற்ற நூல் “உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்” என்பதாகும்.

36) திருக்குறளார் வீ.முனுசாமி-ன் எந்த நூலிலிருந்து “வாழ்விக்கும் கல்வி” என்ற பாடல் தொகுக்கப்பட்டது?

A) வள்ளுவர் உள்ளம்

B) வள்ளுவர் காட்டிய வழி

C) திருக்குறளில் நகைச்சுவை

D) சிந்தனைக் களஞ்சியம்

விளக்கம்: வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை, உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம், சிந்தனைக் களஞ்சியம் ஆகியவை வீ. முனுசாமியின் நூல்கள் ஆகும்.

37) கல்வியல்லாத நாடு_______வீடு போன்றது.

A) விளக்கில்லாத

B) பொருளில்லாத

C) கதவில்லாத

D) வாசலில்லாத

விளக்கம்: கல்வியில்லாத நாடு விளக்கில்லாத வீடு போன்றது. விளக்கில்லாத வீட்டில் யாரும் குடியிருக்க மாட்டார்கள். அதேபோல், கல்வியில்லாத குடும்பத்தை யாரும் மதிக்க மாட்டார்கள்.

38) “உயர்வடைவோம்” பிரித்தெழுதுக.

A) உயர் + வடைவோம்

B) உயர் + அடைவோம்

C) உயர் + வடைவோம்

D) உயர் + அடைவோம்

விளக்கம்: உயர்வடைவோம் – உயர் + அடைவோம் என்றுப் பிரியும்.

39) இவை + எல்லாம் – சேர்த்தெழுதுக

A) இவையெல்லாம்

B) இவையெல்லாம்

C) இதுயெல்லாம்

D) இவயெல்லாம்

விளக்கம்: இவை + எல்லாம் – என்பது இவையெல்லாமம் என்றுப் புணரும்

40) “இளமையில் கல்” என்று கூறியவர் யார்?

A) ஒளவையார்

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) திருவள்ளுவர்

விளக்கம்: “இளமையில் கல்” என்று கூறியவர் ஒளவையார். இளமைப்பருவம் கல்விக்கே உரியதாகும். இளமையில் கற்கும் கல்வி, ஒருவனை சான்றோனாக்கும்.

41) குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துக்களை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியர் யார்?

A) சுப்பிரமணியம்

B) உ.வே.சா

C) பாரதி

D) சுப்ரபாரதிமணியன்

விளக்கம்: குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துக்களை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியவர் சுப்ரபாரதிமணியன் ஆவார்.

42) சுப்ரபாரதிமணியன் நடத்தி வருகிற இதழ் எது?

A) பின்னல்

B) வேட்டை

C) புத்துமண்

D) கனவு

விளக்கம்: சுப்ரபாரதிமணியன் நடத்தி வரும் இதழ் “கனவு”. மற்றவை அவரது நூல்கள் (பின்னல், வேட்டை, புத்துமண், தண்ணீர் யுத்தம், இதை சொல்லும் கலை).

43) தமிழில் மொத்தம் எத்தனை ஓரெழுத்து ஒருமொழி உள்ளது?

A) 40

B) 42

C) 44

D) 46

விளக்கம்: தமிழில் மொத்தம் 42 ஓரெழுத்து ஒருமொழி உள்ளது. ஓர் எழுத்தே பொரும் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர்.

44) தமிழில் 42 ஓரெழுத்து ஒருமொழி உள்ளது எனக் கூறியவர் யார்?

A) சமணமுனிவர்

B) பவணந்தி முனிவர்

C) தொல்காப்பியர்

D) அகத்தியர்

விளக்கம்: “நன்னூல்” என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர், தமிழில் 42 ஓரெழுத்து ஒரு மொழி உள்ளன எனக் கூறுகிறார்.

45) தமிழில் எத்தனை ஓரெழுத்து ஒருமொழி சொற்கள் நெடில் எழுத்தாக அமைந்துள்ளது?

A) 40

B) 42

C) 38

D) 36

விளக்கம்: நொ, ஆகிய இரண்டு சொற்களைத் தவிர ஏனைய 40 சொற்களும் நெடில் எழுத்தாகவே அமைந்துள்ளது.

46) அம்பு” என்று பொருள் தரும் ஓரெழுத்து ஒருமொழி எது?

A) ஆ

B) ஏ

C) ஊ

D) ஏ

விளக்கம்: ஆ- பசு

ஈ – கொடு

ஊ – இறைச்சி

ஏ- அம்பு

47) “பூமி”-யைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?

A) ஐ

B) ஓ

C) கூ

D) கா

விளக்கம்: ஐ – தலைவன்

ஓ – மதகுநீர் தாங்கும் பலகை

கா – சோலை

கூ – பூமி

48) “அரசன்” என்பதை குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?

A) கை

B) கோ

C) சா

D) சீ

விளக்கம்: கை – ஒழுக்கம்

கோ – அரசன்

சா – இறந்துபோ

சீ – இகழ்ச்சி

49) “உயர்வு” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?

A) சே

B) சோ

C) தா

D) தீ

விளக்கம்: சே – உயர்வு

சோ – மதில்

தா – கொடு

தீ – நெருப்பு

50) “கடவுள்-யைக் குறிக்கும் ஒரெழுத்து ஒருமொழி எது?

A) தூ

B) தே

C) தை

D) நா

விளக்கம்: தூ – தூய்மை

தே – தெய்வம்

தை – தைத்தல்

நா – நாவு

51) “வறுமை”-யைக் குறிக்கும் ஒரெழுத்து ஒருமொழி எது?

A) நீ

B) நே

C) நை

D) நோ

விளக்கம்: நீ – முன்னிலை ஒருமை

நே – அன்பு

நை – இழிவு

நோ – வறுமை

52) “மேகம்” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?

A) பா

B) பூ

C) பே

D) பை

விளக்கம்: பா- பாடல்

பூ – மலர்

பே – மேகம்

பை – இளமை

53) “வான்” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?

A) போ

B) மா

C) மீ

D) மூ

விளக்கம்: போ – செல்

மா – மாமரம்

மீ – வான்

மூ – மூப்பு

54) “அன்பு” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?

A) மே

B) மை

C) மோ

D) யா

விளக்கம்: மே – அன்பு

மை – அஞ்சனம்

மோ – மோத்தல்

யா – அகலம்

55) “மலர்” என்பதைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?

A) வா

B) வீ

C) வை

D) வெள

விளக்கம்: வா – அழைத்தல்

வீ – மலர்

வை – புல்

வெள – கவர்

56) ‘து’ என்னும் ஓரெழுத்து ஒருமொழி உணர்த்தும் பொருள் என்ன?

A) உண்

B) நோய்

C) அம்பு

D) பசு

விளக்கம்: து – உண்

நொ – நோய்

ஏ – அம்பு

ஆ – பசு

57) பகுபதம் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்கள் பகுபதங்கள் ஆகும். இது பெயர் பகுபதம், வினைப்பகுபதம் என 2 வகைப்படும்.

(எ.கா) வேலன் – இதை வேல் + அன் எனப் பிரிக்க இயலும்.

58) பெயர்பகுபதத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் பெயர்ப்பகுபதம் ஆகும். இதனை பொருள், இடம், காலம், சினை, குணம்(அல்லது) பண்பு, தொழில் என 6 வகையாகப் பிரிக்கலாம்.

59) பொருத்துக.

அ. பொன்னன் – 1. இடம்

ஆ. நாடன் – 2. பொருள்

இ. கண்ணன் – 3. காலம்

ஈ. சித்திரையான் – 4. சினை

A) 2, 1, 4, 3

B) 2, 1, 3, 4

C) 1, 2, 3, 4

D) 1, 2, 4, 3

விளக்கம்: (பொன் + அன்) பொன்னன் – பொருள்

(நாடு + அன்) நாடன் – இடம்

(கண் + அன்) கண்ணன் – சினை

(சித்திரை + அன்) சித்திரையான் – காலம்

60) “இனியன்” என்பது என்ன வகை பெயர்பகுபதம்?

A) சினை

B) பொருள்

C) பண்பு

D) இடம்

விளக்கம்: இனியன் என்பதை இனிமை + அன் எனப் பிரிக்கலாம். இனிமை என்பது பண்பைக் குறிக்கும்.

61) “உழவன்” என்பது என்ன வகை பெயர்பகுபதம்?

A) பண்பு

B) இடம்

C) காலம்

D) தொழில்

விளக்கம்: உழவன் என்பதை உழவு + அன் எனப் பிரிக்கலாம். இது ‘உழவு’ என்னும் தொழிலை அடிப்படையாகக் கொண்டது.

62) “உண்கின்றான்” என்பது எவ்வகை சொல்?

A) பகுபதம்

B) பெயர்ப்பகுபதம்

C) வினைப்பகுபதம்

D) பகாப்பதம்

விளக்கம்: உண்கின்றான் என்பதை உண் + கின்று + ஆன் எனப் பிரிக்கலாம். மேலும் இது உணவு உண்பதைப் பற்றிய வினையைப் பேசுவதால் இது வினைப்பகுபதம் ஆகும்.

63) பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

A) 4

B) 5

C) 6

D) 7

விளக்கம்: பகுபத உறுப்புகள் 6 வகைப்படும். அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.

64) எப்போதும் கட்டளையாகவே அமையும் பகுபத உறுப்பு எது?

A) பகுதி

B) விகுதி

C) சந்தி

D) சாரியை

விளக்கம்: பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதி ஆகும். இது கட்டளையாகவே அமையும்.

65) பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது எது?

A) சந்தி

B) இடைநிலை

C) சாரியை

D) விகாரம்

விளக்கம்: பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது இடைநிலை ஆகும்.

66) பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் அமையும் மெய்யெழுத்து எவ்வாறு அழைக்கப்படும்?

A) சந்தி

B) இடைநிலை

C) சாரியை

D) விகாரம்

விளக்கம்: பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி எனப்படும்.

67) பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் எவ்வாறு அழைக்கப்படும்?

A) சந்தி

B) விகாரம்

C) சாரியை

D) பகுதி

விளக்கம்: பெரும்பாலும் இடைநிலைக்கும், விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை எனப்படும்.

68) பகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படும்

A) சந்தி

B) விகாரம்

C) சாரியை

D) பகுதி

விளக்கம்: பகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்

69) பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால், எண், இடம் அல்லது முற்று, எச்சம் ஆகியவற்றை காட்டுவது எது?

A) பகுதி

B) சந்தி

C) விகுதி

D) சாரியை

விளக்கம்: பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால், எண், இடம் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது விகுதி ஆகும்.

70) வந்தான்-இச்சொல்லில் பகுபதத்தின் சாரியை உறுப்பு எது எனக் காண்க?

A) வா

B) த்

C) அன்

D) வ

விளக்கம்: வந்தான் – வா(வ) + த்(ந்) + த் + அன் + ஆன்

வா – பகுதி. இது வ எனக் குறுகி இருப்பது விகாரம்

த் – சந்தி, இது ‘ந்’ எனத் திரிந்து இருப்பது விகாரம்

த் – இறந்தகால இடைநிலை

அன் – சாரியை

ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

71) சரியான கூற்றைத் தேர்க.

1. பகுபத உறுப்புகளாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் ஆகும். இது எப்போதும் அடிச்சொல் அல்லது வேர்ச்சொல் ஆக அமையும்.

2. இது 6 வகைப்படும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 1 மட்டும் தவறு

D) 1, 2 தவறு

விளக்கம்: பகுபத உறுப்புகளாகப் பிரிக்க முடியாத சொற்கள் பகாப்பதம் ஆகும். (எ.கா) மரம், கழனி, உண், எழுது. இவை அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்கும். இது 4 வகைப்படும்.

72) பொருத்துக.

அ. பெயர்ப்பகாப்பதம் – 1. உறு, தவ, நனி, கழி

ஆ. வினைப்பகாப்பதம் – 2. நட, வா, படி, வாழ்

இ. இடைப்பகாப்பதம் – 3. நிலம், நீர், நெருப்பு, காற்று

ஈ. உரிப்பகாபதம் – 4. மன், கொல், தில், போல்

A) 3, 2, 1, 4

B) 2, 3, 4, 1

C) 2, 3, 1, 4

D) 3, 2, 4, 1

விளக்கம்: உரிப்பகாப்பதம் – உறு, தவ, நனி, கழி

வினைப்பகாப்பதம் – நட, வா, படி, வாழ்

பெயர்ப்பகாப்பதம் – நிலம், நீர், நெருப்பு, காற்று

இடைப்பகாபதம் – மன், கொல், தில், போல்

73) எழுதினான் என்பது_________

A) பெயர் பகுப்பதம்

B) வினைப்பகுபதம்

C) பெயர்ப்பகாபதம்

D) வினைப்பகாப்பாம்

விளக்கம்: எழுதுதால் என்னும் வினையைக் குறிக்கிறது. மேலும், பிரிக்க முடிந்த சொல்லாக அமைந்தால் எழுதினான் என்பது வினைப்பகுபதம் ஆகும்.

74) காலத்தைக் காட்டும் பகுபத உறுப்ப எது?

A) பகுதி

B) விகுதி

C) இடைநிலை

D) சந்தி

விளக்கம்: இடைநிலை என்பது பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவதாகும்.

75) பொருத்துக

அ. பெயர் பகுபதம் – 1. வாழ்ந்தான்

ஆ. வினை பகுபதம் – 2. மன்

இ. இடை பகுபதம் – 3. நனி

ஈ. உரி பகுபதம் – 4. பெரியார்

A) 4, 1, 2, 3

B) 4, 2, 1, 3

C) 4, 3, 2, 1

D) 4, 1, 3, 2

விளக்கம்: பெயர் பகுபதம் – பெரியார்

வினை பகுபதம் – வாழ்ந்தான்

இடை பகுபதம் – மன்

உரி பகுபதம் – நனி

76) இடம் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: இடம் 3 வகைப்படும். அவை தன்மை, முன்னிலை, படர்க்கை

77) பொருத்துக

அ. தன்மை – 1. அலை

ஆ. முன்னிலை – 2. நாம்

இ. படர்க்கை – 3. நீங்கள்

A) 3, 2, 1

B) 1, 2, 3

C) 2, 3, 1

D) 2, 1, 3

விளக்கம்: தன்மை – தன்னைக் குறிப்பது – நான், நாம், நாங்கள், என், எம், எங்கள்

முன்னிலை – முன்னால் இருப்பவரைக் குறிப்பது – நீ, நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள்

படர்க்கை – தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது – அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, இவன், இவள், இலை

78) பொருத்துக

அ. புல்லை மேய்வது – 1. தீ

ஆ. சுடுவது – 2. ஆ

இ. மணம் வீசுவது – 3. ஏ

ஈ. பறப்பது – 4. வீ

A) 2, 1, 3, 4

B) 2, 3, 4, 1

C) 3, 2, 4, 1

D) 2, 1, 4, 3

விளக்கம்: புல்லை மேய்வது – ஆ (பசு)

சுடுவது – தீ (நெருப்பு)

மணம் வீசுவது – வீ (மலர்)

ஈ. பறப்பது – ஏ (அம்பு)

79) பொருத்துக.

அ. கோடை விடுமுறை – 1. Degree

ஆ. குழந்தை தொழிலாளர் – 2. Child Labour

இ. பட்டம் – 3. Summer Vacation

ஈ. கல்வியறிவு – 4. Literacy

A) 2, 4, 3, 1

B) 2, 3, 4, 1

C) 3, 2, 4, 1

D) 3, 2, 1, 4

விளக்கம்: கோடை விடுமுறை – Summer Vacation

குழந்தைத் தொழிலாளர் – Child Labour

பட்டம் – Degree

கல்வியறிவு – Literacy

80) பொருத்தமற்றதைத் தேர்க

A) நீதி – Moral

B) சீருடை – Uniform

C) வழிகாட்டுதல் – Way

D) ஒழுக்கம் – Discipline

விளக்கம்: வழி – Way

வழிகாட்டுதல் – Guidance

81) காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் எது?

A) கல்வி

B) காலமறிதல்

C) வினையறிதல்

D) மடியின்மை

விளக்கம்: காலமும், நேரமும் போனால் திரும்பி வராது. மேலும் காலத்தின் அருமை என்ன என்பதை உரைக்கும் வகையில் திருவள்ளுர் காலமறிதல் என்னும் ஓர் அதிகாரத்தைப் படைத்துள்ளார்.

Exit mobile version