7th Tamil Unit 4 Questions

7th Tamil Unit 4 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 7th Tamil Unit 4 Questions With Answers Uploaded Below.

1) கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பம் எது?

A) கலங்கரை விளக்கம்

B) கலம்

C) ரேடார்

D) சோனார்

விளக்கம்: கடலும் கடல்சார்ந்த இடமும் தமிழரின் வாழ்நிலங்களுள் ஒன்று. கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பமே கலங்கரை விளக்கம். இது குறித்துச் சங்கப் பாடல் குறிப்பிடுகிறது.

2) “வானம் ஊன்றிய மதலை போல

ஏணி சாற்றிய ஏற்றருஞ் சென்னி_______” என்ற பாடலைப் பாடியவர் யார்?

A) நக்கீரர்

B) கடயலூர் உருத்திரங் கண்ணனார்

C) முடத்தாம கண்ணியார்

D) கபிலர்

விளக்கம்: “வானம் ஊன்றிய மதலை போல

ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி

விண்பொர நிவந்த வேயா மாடத்து

இரவில் மாட்டிய இலங்குசுடர் நெகிழி

உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்

துறை……” என்னும் பாடலை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியுள்ளார்

3) கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய “கலங்கரை விளக்கம்” என்னும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

A) பட்டினப்பாலை

B) மதுரைக்காஞ்சி

C) பெரும்பாணாற்றுப்படை

D) சிறுபாணாற்றுப்படை

விளக்கம்: “வானம் ஊன்றிய _______’ எனத் தொடங்கும் ‘கலங்கரை விளக்கம்’

பாடல் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பெரும்பாணாற்றுப்படையிலிருந்து எடுக்கப்பட்டது.

4) பட்டினப்பாலை நூலின் ஆசிரியர் யார்?

A) கபிலர்

B) கடியலூர் உருத்திரங் கண்ணனார்

C) நக்கீரர்

D) முடத்தாமக் கண்ணியார்

விளக்கம்: பட்டினப்பாலை, பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று, இதனை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியுள்ளார்.

5) பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் யார்?

A) கடியலூர் உருத்திரங்கண்ணனார்

B) தொண்டைமான் இளந்திரையன்

C) ராஜராஜ சோழன்

D) கரிகாலச் சோழன்

விளக்கம்: கடியலூர் உருத்திரங் கண்ணனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். இவர் இயற்றிய பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.

6) வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்பட்டது.

A) மதுரைக்காஞ்சி

B) பட்டினப்பாலை

C) குறிஞ்சிப்பாட்டு

D) ஆற்றுப்படை இலக்கியம்

விளக்கம்: வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்.

7) பொருத்துக

அ. தூண் போன்றது – 1. மாடம்

ஆ. விண்ணை முட்டுவது – 2. எரியும் விளக்கு

இ. துறைமுகத்திற்கு அழைப்பது – 3. கலங்கரை விளக்கம்

A) 3, 2, 1

B) 2, 3, 1

C) 1, 2, 3

D) 3, 1, 2

விளக்கம்: தூண் போன்றது – கலங்கரை விளக்கம்

விண்ணை முட்டுவது – மாடம்

துறைமுகத்திற்கு அழைப்பது – எரியும் விளக்கு

8) பொருந்தாததைத் தேர்க.

A) மதலை – தூண்

B) ஞெகிழி – பிளாஸ்டிக்

C) அழுவம் – கடல்

D) சென்னி – உச்சி

விளக்கம்: நெகிழி – பிளாஸ்டிக் ஞெகிழி – தீச்சுடர்

9) சரியானதைத் தேர்க

A) உரவுநீர் – பெருநீர்பரப்பு

B) கரையும் – தடுக்கும்

C) மதலை – மாடம்

D) வேயாமாடம் – ஓலையால் வேயப்பட்டது.

விளக்கம்: உரவுநீர் – பெருநீர்பரப்பு

கரையும் – அழைக்கும்

மதலை – தூண்

வேயாமாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது. திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்

10) பொருந்தாததைத் தேர்க

A) மதுரைக் காஞ்சி

B) புறநானூறு

C) நெடுநல்வாடை

D) குறிஞ்சிப்பாட்டு

விளக்கம்: புறநானூறு என்பது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. மற்றவை பத்துப்பாட்டு நூல்கள்.

பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்

11) கடலில் துறைமுகம் அறியாமல் கலங்குவன எவை?

A) மீன்கள்

B) மரங்கலங்கள்

C) தூண்கள்

D) மாடங்கள்

விளக்கம்: ‘உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்’ என்னும் வரிகளில், கடலில் துறைமுகம் அறியாமல் கலங்குவன மரக்கலங்கள் என்பதை குறிப்பிடுகிறது.

12) எவை கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிக்கின்றன?

A) கடல்

B) கப்பல்

C) மீன்

D) A மற்றும் B

விளக்கம்: கடலும், கப்பலும் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிப்பவை. அலைவீசும் கடலில் அசைந்தாடிச் செல்லும் கப்பலைக் காணக்கான உள்ளம் உவகையில் துள்ளும்.

13) “உலகுகிளர்ந்த தன்ன உருகெழு வங்கம்” எனத் தொடங்கும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

A) புறநானூறு

B) ஐங்குறுநூறு

C) அகநானூறு

D) கலித்தொகை

விளக்கம்: ‘உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்’ எனத் தொடங்கும் பாடல் அகநானூற்றின் 255-ம் பாடல் ஆகும்

14) அகநானூற்றின் 255-ஆவது பாடல் யாரால் பாடப்பட்டது?

A) நக்கீரர்

B) ஒளவையார்

C) முடத்தாமக்கண்ணியார்

D) மருதன் இளநாகனார்

விளக்கம்: ‘உலகுகிளர்ந்த தன்ன உருகெழு வங்கம்’ எனத் தொடங்கும், அகநானூற்றின் 255-வது பாடல் மருதன் இளநாகனாரால் பாடப்பட்டது. இவர் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.

15) “நெடுந்தொகை” என அழைக்கப்படும் நூல் எது?

A) ஐங்குநூறு

B) அகநானூறு

C) கலித்தொகை

D) பரிபாடல்

விளக்கம்: ‘நெடுந்தொகை’ என அழைக்கப்படுவது அகநானூறு. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புலவர் பலவரால் பாடப்பட்ட 400 பாடல்களைக் கொண்டது.

16) கலித்தொகையில் மருதத்திணையில் உள்ள எத்தனைப் பாடல்களை இளநாகனார் பாடினார்?

A) 25

B) 30

C) 35

D) 40

விளக்கம்: கலித்தொகையின் மருத்திணையிலுள்ள 35 பாடல்களையும் பாடியவர். இளநாகனார். இவர் மருதத்திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்

17) உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது எது?

A) கலம்

B) ஓடம்

C) படகு

D) நாவாய்

விளக்கம்: உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய். அது புலால் நாற்றமுடைய அலைவீசும் பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும்.

18) பொருத்துக.

அ. உரு – 1. அழகு

ஆ. போழ – 2. காற்று

இ. வங்கூழ் – 3. நாவாய் ஓட்டுபவன்

ஈ. நீகான் – 4. பிளக்க

A) 1, 4, 3, 2

B) 1, 3, 4, 2

C) 1, 4, 2, 3

D) 1, 2, 4, 3

விளக்கம்: உரு – அழகு

போ – பிளக்க

வங்கூழ் – காற்று

நீகான் – நாவாய் ஓட்டுபவன்

19) பொருத்துக

அ. வங்கம் – 1. கனரக உயர்ந்த

ஆ. எல் – 2. கலங்கரை விளக்கம்

இ. கோடு உயர் – 3. கப்பல்

ஈ. மாட ஒள்ளெரி – 4. பகல்

A) 3, 4, 1, 2

B) 3.4, 2, 1

C) 4, 3, 1, 2

D) 4, 3, 2, 1

விளக்கம்: வங்கம் – கப்பல்

எல் – பகல்

கோடு உயர் – கரை உயர்ந்த

மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

20) பொருத்தமற்றதைத் தேர்க.

A) நற்றிணை

B) குறுந்தொகை

C) பரிபாடல்

D) நெடுநல்வாடை

விளக்கம்: நெடுநல்வாடை என்பது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. மற்றவை எட்டுத்தொகை நூல்களாகும். எட்டுத்தொகை நூல்கள்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு.

21) மக்கள் எதில் ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்?

A) கடலில்

B) காற்றில்

C) கழனியில்

D) வங்கத்தில்

விளக்கம்: மக்கள் வங்கத்தில் அதாவது கப்பலில் ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர். வங்கம் – கப்பல்

22) புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது எது?

A) காற்று

B) நாவாய்

C) கடல்

D) மணல்

விளக்கம்: புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது கடல். சான்று: “புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ”.

23) பிரித்தெழுதுக. “பெருங்கடல்”

A) பெருமை + கடல்

B) பெரு + கடல்

C) பெரி + கடல்

D) பெருங் + கடல்

விளக்கம்: பெருங்கடல் = பெருமை + கடல் எனப் பிரியும்.

24) இன்று + ஆகி சேர்த்தெழுதுக.

A) இன்றுஆகி

B) இன்றிஆகி

C) இன்றாகி

D) இன்றாஆகி

விளக்கம்: இன்று + ஆகி = இன்றாகி எனப் புணரும்

25) எதுகை இடம்பெறாத இணை எது?

A) இரவு-இயற்கை

B) வங்கம்-சங்கம்

C) உலகு-புலவு

D) அசைவு-இசைவு

விளக்கம்: சொல்லின் 2-வது எழுத்து ஒன்றி வருவது எதுகை. இரவு-இயற்கை-இதில் 2-ம் எழுத்து ஒன்றாக இல்லை.

26) பயணம் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பயணம் 3 வகைப்படும். அவை, தரைவழிப் பயணம், நீர்வழிப் பயணம், வான்வழிப் பயணம் ஆகும். பயணம் செய்வதில் தமிழர்களுக்கு எப்போதும் பெரு விருப்பம் உண்டு.

27) நீர்வழிப் பயணம் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: நீர்வழிப் பயணத்தை உள்நாட்டு நீர்வழிப் பயணம், கடல்வழிப் பயணம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

28) வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியை எவை?

A) ஆறுகள்

B) மாடுகள்

C) குதிரைகள்

D) கப்பல்கள்

விளக்கம்: வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியவை கப்பல். கப்பல்கள் கட்டுவதும், கப்பல்கள் செலுத்துவதும் மிகச் சிறந்த தொழில்நுட்பம் சார்ந்த கலைகளாகும்.

29) நமக்கு கிடைத்த நூல்களிலேயே மிகவும் பழமையான நூல் எது?

A) திருக்குறள்

B) சங்க இலக்கியம்

C) நாலடியார்

D) தொல்காப்பியம்

விளக்கம்: நமக்கு கிடைத்த நூல்களிலேயே மிகவும் பழமையான நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் மூல நூல் அகத்தியம் என்பர்.

30) “முந்நீர் வழக்கம்” என்று கடற்பயணத்தைக் குறிப்பிடும் நூல் எது?

A) திருக்குறள்

B) அகத்தியம்

C) தொல்காப்பியம்

D) சங்க இலக்கியம்

விளக்கம்: தொல்காப்பியம், கடற்பயணத்தை “முந்நீர் வழக்கம்” எனக் குறிப்பிடுகிறது. எனவே, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழர்கள் கடல் பயணம் செய்துள்ளனர் என்பதை அறியலாம்.

31) “கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து” என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?

A) திருக்குறள்

B) பட்டினப்பாலை

C) அகநானூறு

D) பதிற்றுப்பத்து

விளக்கம்: திருவள்ளுவர் காலத்திலேயே பெரிய கப்பல்கள் இருந்தன என்பதை “கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து” என்ற குறள் விளக்குகிறது.

32) பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்களின் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை கூறும் நூல் எது?

A) திருக்குறள்

B) பட்டினப்பாலை

C) அகநானூறு

D) பதிற்றுப்பத்து

விளக்கம்: பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.

33) “உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்” என்று குறிப்படும் நூல் எது?

A) பட்டினப்பாலை

B) பதிற்றுப்பத்து

C) அகநானூறு

D) சேந்தன் திவாகரம்

விளக்கம்: “உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்” என்று பெரிய கப்பலை அகநானூறு குறிப்படுகிறது.

34) “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்” என்று உரைக்கும் நூல் எது?

A) பட்டினப்பாலை

B) பதிற்றுப்பத்து

C) அகநானூறு

D) சேந்தன் திவாகரம்

விளக்கம்: “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்” என்று உரைக்கும் நூல் பதிற்றுப்பத்து

35) எந்த நிகண்டு நூலில் பலவகையான கப்பலின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன?

A) பதிற்றுப்பத்து

B) பரிபாடல்

C) திவாகரம்

D) சேந்தன் திவாகரம்

விளக்கம்: “சேந்தன் திவாகரம்” என்னும் நிகண்டு நூலில் பலலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்படப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழர்கள் கப்பல் கட்டும் தொழிலில் பரந்துபட்ட அறிவு பெற்றிருந்தார்கள் என்பதை அறியலாம்.

36) எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து எடுத்துவிட்டு அதை என்னவாகப் பயன்படுத்தினர்?

A) கட்டுமரங்கள்

B) தோணிகள்

C) ஓடம்

D) படகு

விளக்கம்: உட்பகுதி தோண்டபட்டவை என்பதால் அவை தோணிகள் எனப்பட்டன. இதேபோல், மரங்கள் பலவற்றை இணைத்துக் கட்டி கட்டுமரங்களாகப் பயன்படுத்தினர்.

37) பொருத்தமற்றதைத் தேர்க

A) கலம்

B) வங்கம்

C) நாவாய்

D) மிதவை

விளக்கம்: சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்டுத்தப்படுபவை – தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம். கடற்பயணத்திறகுப் பயன்படுத்தப்படுபவை – கலம், வங்கம், நாவாய்

38) எந்த நாட்டு அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது?

A) ஐஸ்லாந்து

B) கிரீன்லாந்து

C) நியூசிலாந்து

D) இங்கிலாந்து

விளக்கம்: நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழர்கள் அயல் நாடுகளுக்குக் கப்பல்களில் சென்றனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்

39) பிற்காலச் சோழர்களில் எந்த அரசன் பெரிய கப்பற்பiடையைக் கொண்டு பல நாடுகளை வென்றார் என வரலாறு கூறுகிறது?

A) இராசராச சோழன்

B) இராசேந்திர சோழன்

C) கரிகாலச் சோழன்

D) A மற்றும் B

விளக்கம்: பிற்காலச் சோழர்களினல் இராசராச சோழனும், இராசேந்திரச் சோழனும் பெரிய கப்பற்படையைக் கொண்டு பல நாடுகளை வென்றனர் என வரலாறு கூறுகிறது.

40) கம்மியர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A) ஓவியக் கலைஞர்

B) இசைக் கலைஞர்

C) நடனக் கலைஞர்

D) கப்பல் கட்டும் கலைஞர்

விளக்கம்: தமிழர்கள் முற்காலத்திலேயே கப்பல் கட்டும் கலையை நன்கு அறிந்திருந்தனர். கப்பல் கட்டும் கலைஞர்கள் கம்மியர் என்று அழைக்கப்பட்டனர்.

41) ‘கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஒய்’ என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) மணிமேகலை

B) சீவக சிந்தாமணி

C) சிலப்பதிகாரம்

D) குண்டலகேசி

விளக்கம்: “கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்” என்னும் வரிகள் மணிமேகலை நூலில் இடம்பெற்றுள்ள. இது கப்பல் கட்டும் கலைஞர்கள் கம்மியர்கள் என அழைக்கப்படுவர் என்பதைக் குறிப்பிடுகிறது.

42) நீர்மட்ட வைப்பிற்கு எவ்வகை மரங்களை கம்மியர் பயன்படுத்தினர்?

A) வேம்பு, இலுப்பை, புன்னை, தேக்கு

B) வேம்பு, இலுப்பை, தேக்கு, வெண்தேக்கு

C) புன்னை, நாவல், வேம்பு, இலுப்பை

D) புன்னை, நாவல், தேக்கு, இலுப்பை

விளக்கம்: நீர்மட்ட வைப்பிற்கு வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல் போன்ற மரங்களையும், பக்கங்களுக்குத் தேக்கு, வெண்தேக்கு, போன்ற மரங்களையும் பயன்படுத்தினர் கப்பல் கலைஞர்கள்

43) மரத்தின் வெட்டுவாயின் நிறத்தைக் கொண்டு அதன் தன்மையை அறியும் திறன் பெற்றவர்கள் யார்?

A) யவனர்கள்

B) எகிப்தியர்கள்

C) சீனர்கள்

D) தமிழர்கள்

விளக்கம்: மரத்தின் வெட்டப்பட்ட பகுதியை வெட்டுவாய் என்பர். அதன் நிறத்தைக் கொண்டு மரத்தின் தன்மையை அறிந்தவர்கள் தமிழர்கள்

44) இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

A) தச்சுமுழம்

B) பதுமை

C) கரிமுக அம்பி

D) கண்ணடை

விளக்கம்: இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் கண்ணடை என அழைக்கப்படும். தமிழர்கள், கப்பல் கட்டுமானத்திற்கு சுழி உள்ள மரங்களைப் பயன்படுத்தாமல் தவிர்த்தனர்.

45) கப்பல் கட்டும்போது, அதன் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை அளக்க எந்த நீட்டலளவையை பயன்படுத்தினர்?

A) கண்டை

B) தச்சுமுழம்

C) கரிமுக அம்பி

D) பரிமுக அம்பி

விளக்கம்: அக்காலத்தில் தமிழர்கள் கப்பலைக் கட்டும் போது அதன் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றைச் சரியான முறையில் கணக்கிட்டுக் கப்பல்களை உருவாக்கினர். இவற்றை தச்சுமுழம் என்னும் நீட்டலளவையல் கணக்கிட்டனர்.

46) பெரிய படகுகளில் முன்பக்கத்தை யானை, குதிரை, அன்னம் முதலியவற்றின் தலையைப் போன்று வடிவமைப்பதும் உண்டு. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) கரிமுக அம்பி

B) பரிமுக அம்பி

C) A மற்றும் B

D) கண்ணடை

விளக்கம்: பெரிய படகுகளில் முன்பக்கத்தை யானை, குதிரை, அன்னம் முதலியவற்றின் தலையைப் போன்று வடிவமைப்பதும் உண்டு. இது கரிமுக அம்பி, பரிமுக அம்பி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

47) கம்மியர்கள், சுண்ணாம்பையும், சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இம்முறையைப் பாராட்டியர் யார்?

A) பார்த்தலோமியா டயஸ்

B) மார்க்கோபோலோ

C) வாஸ்கோடகாமா

D) யுவான் சுவாங்

விளக்கம்: மரங்களையும் பலகைகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்கும்போது அவற்றுக்கு இடையே தேங்காய் நார், பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இறுக்கி ஆணிகளை அறைந்தனர். சுண்ணாம்பு மற்றும் சணலைக் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இதனால் கப்பல் பழுதடையாமல் நெடுங்காம் உழைத்தன. இம்முறையை இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்க்கோபோலோ என்னும் கடற்பயணி வியந்து பாராட்டியுள்ளார்.

48) கம்மியர்கள் பயன்படுத்திய மர ஆணிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) மரஆணி

B) கட்டுமர ஆணி

C) தொகுதி

D) பகுதி

விளக்கம்: இரும்பு ஆணிகள் துருப்பிடித்துவிடும் என்பதால் மரத்தினாலான ஆணிகளையே பயன்படுத்தினர். இந்த ஆணிகளைத் தொகுதி என்பர்.

49) ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பலை 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிய ஆங்கிலேயர் யார்?

A) ராபர்ட் கிளைவ்

B) மாரக்கோபோலோ

C) ஏ.ஓ. ஹீயூம்

D) வாக்கர்

விளக்கம்: ஆங்கிலேயரது கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழுது பார்க்க வேண்டும். ஆனால், தமிழர்கள் கப்பல் 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டியதில்லை என ஆங்கில அறிஞர் வாக்கர் கூறினார்.

50) காற்றின் உதவியால் செலுத்தப்படும் கப்பல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

A) பாய்மரம்

B) தோணி

C) ஓடம்

D) படகு

விளக்கம்: காற்றின் உதவியால் செலுத்தப்பட்டும் கப்பல்கள் பாய்மரக் கப்பல்கள் எனப்பட்டன. பெரிய பாய்மரம், திருக்கைத்திப் பாய்மரம், பாணப்பாய்மரம், கோசுப் பாய்மரம் போன்ற பாய் மரங்களை தமிழர்கள் பயன்படுத்தினர்.

51) பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று கூறும் நூல் எது?

A) பட்டினப்பாலை

B) பதிற்றுப்பத்து

C) பரிபாடல்

D) தொல்காப்பியம்

விளக்கம்: பாய்மரங்களைக் கட்டும் பல வகையான கயிறுகளும் இருந்தன. அலை அஞ்சான் கயிறு, தாம்பாங்கயிறு, வேடாங்கயிறு, பளிங்கைக் கயிறு, மூட்டங்கயிறு, இளங்கயிறு, கோடிப்பாய்க்கயிறு. இதேபோல் பாய் மற்றும் கயிறு ஆகியவற்றை இணைக்க மரப்பிசின் பயன்படுத்தியதாக பரிபாடல் கூறுகிறது

52) பொருத்துக

அ. அடிமரம் – 1. நங்கூரம்

ஆ. குறுக்கு மரம் – 2. பருமல்

இ. கப்பலை திருப்ப – 3. ஏரா

ஈ. கப்பலை நிறுத்த – 4. சுக்கான்

A) 2, 3, 1, 4

B) 3, 2, 4, 1

C) 4, 2, 1, 3

D) 4, 3, 21

விளக்கம்: அடிமரம் – எரா, குறுக்கு மரம் – பருமல், கப்பலைத் திருப்ப – சுக்கான், கப்பலை நிறுத்த – நங்கூரம்

53) கப்பலின் முதன்மையான உறுப்பு எது?

A) அடி மரம்

B) பருமல்

C) வங்கு

D) கூம்பு

விளக்கம்: கப்பலின் முதன்மை உறுப்பு அடிமரம் ஆகும். இது எரா எனவும் அழைக்கப்படும். இது ஏரா, பருமல், வங்கு, கூம்பு, பாய்மரம், சுக்கான், நங்கூரம் போன்றவை கப்பலின் உறுப்புகளுள் சிலவாகும்.

54) சமுக்கு என்னும் ஒரு கருவியை கப்பல்களில் பயன்படுத்தினர் என்று கூறும் நூல் எது?

A) தொல்காப்பியம்

B) பரிபாடல்

C) பட்டிப்பாலை

D) கப்பல் சாத்திரம்

விளக்கம்: சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று கப்பல் சாத்திரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. இது காந்த ஊசி பொருத்தப்பட்ட திசைகாட்டும் கருவியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

55) பொருத்தமற்றதைக் காண்க.

A) மாலுமி

B) மீகாமன்

C) நீகான்

D) சமுக்கு

விளக்கம்: மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி முதலியவை கப்பல் செலுத்துபவரை குறிப்பிடுகிறது. சமுக்கு என்பது அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட திசைக்காட்டும் கருவி.

56) காற்றின் திசையை அறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையைத் தமிழ்கள் நன்கு அறிந்திருந்தனர் எனக் கூறும் நூல் எது?

A) அகநானூறு

B) புறநானூறு

C) பரிபாடல்

D) ஐங்குறுநூறு

விளக்கம்: காற்றின் திசையை அறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர் எனப் புறப்பாடல் அடிகளில் வெண்ணக் குயத்தியார் குறிப்பிடுகிறார்.

57) “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளி தொழில் ஆண்ட உரவோன் மருக” என்ற வரிகளில் இடம்பெற்ற நூல் எது?

A) அகநானூறு

B) புறநானூறு

C) பரிபாடல்

D) ஐங்குறுநூறு

விளக்கம்: இவ்வரிகள் புறநானூற்றில் 66-வது பாடலாக அமைந்துள்ளது. தமிழர்கள் காற்றின் திசை அறிந்து கலம் செலுத்தினர் என்று குறிப்பிடுகிறது.

58) தவறானக் கூற்றைத் தேர்க.

1. கடலில் காற்று வீசும் திசை, கடல் நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத் தமிழர்கள் தம் படட்றிவால் நன்கு அறிந்து அவற்றுக்கேற்ப உரிய காலத்தில் சரியான திசையில் கப்பலைச் செலுத்தினர்

2. திசைகாட்டும் கருவியைப் பயன்படுத்தியும் வானில் தோன்றும் விண்மீன்களின் நிலையை வைத்தும் திசையை அறிந்து கப்பலைச் செலுத்தினர் தமிழர்கள்

3. எனினும், கோள்களின் நிலைமையை வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும் காலங்களை தமிழர்களால் கணிக்க முடியவில்லை.

A) 1, 3 சரி

B) 2, 3 சரி

C) 1, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: கப்பல் ஓட்டும் மாலுமிகள் சிறந்த வானியல் அறிவை பெற்றிருந்தனர். கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும் காலங்களையும் கடல்நீர்; பொங்கும் காலத்தையும் அறிந்து தகுந்த காலத்தில்

கப்பலைச் செலுத்தினர்.

59) “கலங்கரை விளக்கம்” என்பதன் பொருள் என்ன?

A) கப்பலை நிறுத்தும் சமிக்ஞை விளக்கு

B) கப்பலை புறப்படச் சொல்லும் சமிக்ஞை விளக்கு

C) கப்பலை துறைமுகத்திற்கு அழைக்கும் விளக்கு

D) A மற்றும் C

விளக்கம்: “கலங்கரை விளக்கம்” என்பதன் பொருள் கப்பலை அழைக்கும் விளக்கு என்பதாகும். உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினைக் கொண்டதாக இஃது அமைக்கப்படும். கலம் – கப்பல், கரைதல் – அழைத்தல் – அழைத்தல். இதனால் இது கலங்கரை விளக்கம் எனப் பெயர் பெற்றது.

60) “கலம் தந்த பொற்பரிசும்

கழித்தோணியால் கரை சேரக்குந்து” என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?

A) அகநானூறு

B) நெடுந்தொகை

C) புறநானூறு

D) பரிபாடல்

விளக்கம்: இவ்வரிகள், புறநானூற்றில் 343-ஆனது பாடலாக அமைந்துள்ள, பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் கரைக்கு அருகில் வர இயலாது. எனவே கப்பலிலுள்ள பொருள்களைத் தோணிகள் மூலம் கரைக்குக் கொண்டு வந்த செய்தியை இப்பாடல் வரிகள் உணரத்துகிறது.

61) பழந்தமிழர்கள் எவற்றை வழிகாட்டிகளாகப் பயன்படுத்திக் கடல் பயணம் செய்து இருக்கலாம் என்னும் கருத்தும் உள்ளது?

A) சுறா

B) டால்பின்கள்

C) திமிங்கலம்

D) ஆமைகள்

விளக்கம்: கடல் ஆமைகள் இன்ப்பெருக்கத்துக்காகத் தகுந்த இடம் தேடி நீண்ட தூரம் பயணம் செய்கின்றன. அவை செல்லும் வழியைசல் செயற்கைக் கோள்கள் மூலம் தற்போது ஆராயந்துள்ளனர். அவ்வழியிலுள்ள நாடுகளுடன் தமிழர்கள் வாணகத் தொடர்பு கொண்டு இருந்ததை அறிய முடிகிறது.

62) தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்க எதுப் பயன்படுகிறது?

A) கலம்

B) வங்கம்

C) நாவாய்

D) கடம்

விளக்கம்: சிறிய நீர்நிலைகளைக் கடக்க – தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம்.

கடல் பயணத்திற்கு – கலம், வங்கம், நாவாய்

63) கடலின் நீர் மட்டம் எப்போது உயரும்?

A) மாதத் தொடக்கத்தில்

B) மாத இறுதியில்

C) முழுநிலவு நாள்

D) A மற்றும் C

விளக்கம்: கடலின் நீர் மட்டம் அம்மாவாசை மற்றும் முழுநிலவு நாளன்று உயரும். காரணம் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி நாளன்று பூமி, சூரியன், நிலவு ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் அமையும்.

64) ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சுவாசம் பெற்று எத்தனை மணி நெரம் வரை கடலுக்குள் நீந்த முடியும்?

A) 6 மணி நேரம்

B) 7 மணி நேரம்

C) 8 மணி நேரம்

D) 9 மணி நேரம்

விளக்கம்: ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சுவாசம் பெற்று ஒன்பது மணி நேரம் வரை கடலுக்குள் நீந்த முடியும்.

65) அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் யார்?

A) நெமோ

B) நாட்டிஸஸ்

C) ஜுல்ஸ் வெர்ன்

D) ஃபராகட்

விளக்கம்: அறிவியல் புனைக்கதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜுல்ஸ் வெர்ன்

66) ஜுல்ஸ் வெர்ன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

A) பிரான்ஸ்

B) இத்தாலி

C) இலண்டன்

D) அமெரிக்கா

விளக்கம்: ஜுல்ஸ் வெர்ன் என்பவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். அறிவியல் புனைகதைகளின் தலைமகன் எனப் போற்றப்படும் இவர், அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றி தம் புதினங்களில் எழுதியவர்.

67) பொருந்தாததைத் தேர்க.

A) எண்பது நாளில் உலகத்தை சுற்றி

B) பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்

C) ஆழ்கடலின் அடியில்

D) உயிரினங்களின் தோற்றம்

விளக்கம்: உயிரினங்களின் தோற்றம் என்ற நூலின் ஆசிரியர் சார்லஸ் டார்வின். மற்ற நூல்களை ஜுல்ஸ் வெர்ன் எழுதினார்.

68) பொருந்தாததைத் தேர்க.

A) சொல்

B) எழுத்து

C) மொழி

D) பதம்

விளக்கம்: மொழி, பதம், கிளவி ஆகியவை சொல் என்பதன் பொரள் தரும் வேறு சொற்கள் எழுத்து என்பது தமிழ் எழுத்துக்களைக் குறிக்கிறது.

69) ஓர் எழுத்து தனித்தும் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்து வந்து பொருள் தருவது எது?

A) எழுத்து

B) சொல்

C) பொருள்

D) சொற்றொடர்

விளக்கம்: சொல் என்பது ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவதாகும். (எ.கா) வா, அறம்

70) இலக்கண முறைப்படி சொல் எத்தனை வகைப்படும்?

A) 3

B) 2

C) 4

D) 6

விளக்கம்: இலக்கண முறைப்படி பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என சொற்கள் 4 வகைப்படும்.

71) இலக்கிய முறைப்படி சொல் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 6

D) 4

விளக்கம்: இலக்கிய முறைப்படி சொல்லானது இயற்சொல், திரிச்சொல், திசைச் சொல், வடசொல் என 4 வகைப்படும்.

72) எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்து சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

A) இயற்சொல்

B) திரிசொல்

C) திசைச்சொல்

D) வடசொல்

விளக்கம்: எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொல் எனப்படும். (எ.கா) கடல், கப்பல், எழுதினான், படித்தான்.

73) இயற்சொல் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: பெயர் இயற்சொல், வினை இயற்சொல், இடை இயற்சொல், உரி இயற்சொல் என இயற்சொல் 4 வகைப்படும்.

74) பொருத்துக.

அ. மண், பொன் – 1. வினை இயற்சொல்

ஆ. நடந்தான், வந்தான் – 2. உரி இயற்சொல்

இ. அவனை, அவனால் – 3. பெயர் இயற்சொல்

ஈ. மாநகர் – 4. இடை இயற்சொல்

A) 3, 1, 4, 2

B) 3, 1, 2, 4

C) 1, 3, 4, 2

D) 1, 3, 2, 4

விளக்கம்: மண், பொன் – பெயர் இயற்சொல்

நடந்தான், வந்தான் – வினை இயற்சொல்

அவனை, அவனால் – இடை இயற்சொல்

மாநகர் – உரி இயற்சொல்

75) கற்றோர்க்கு மட்டுமே விளங்குபவையாகவும், இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவகையாகவும் அமையும் சொற்கள் எது?

A) இயற்சொல்

B) திரிசொல்

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

விளக்கம்: கற்றோர்க்கு மட்டும விளங்குபவையாகவும், இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் திரிசொல் எனப்படும் (எ.கா) வங்கூழ், அழுவம்

76) பொருத்துக.

அ. வங்கூழ் – 1. கடல்

ஆ.அழுவம் – 2. மிகுந்த பயன்

இ. சாற்றினான் – 3. சொன்னான்

ஈ. உறுபவன் – 4. காற்று

A) 4, 3, 2, 1

B) 4, 1, 3, 2

C) 4, 2, 3, 1

D) 3, 4, 2, 1

விளக்கம்: வங்கூழ் – காற்று

அழுவம் – கடல்

சாற்றினான் – சொன்னான்

உறுபவன – மிகுந்த பயன்

77) திரிசொல் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 4

C) 6

D) 8

விளக்கம்: பெயர்த்திரிசொல், வினை திரிசொல், இடைத் திரிசொல், உரி திரிசொல் என திரிசொல் 4 வகைப்படும்

78) பொருத்துக.

அ. அழுவம், வங்கம் – 1. இடை திரிசொல்

ஆ. இயல்பினான், பயின்றான் – 2. உரி திரிசொல்

இ. அன்ன, மான – 3. பெயர் திரிசொல்

ஈ. கூர், கழி – 4. வினை திரிசொல்

A) 4, 3, 2, 1

B) 3, 4, 2, 1

C) 3, 4, 1, 2

D) 3, 2, 1, 4

விளக்கம்: அழுவம், வங்கம் – பெயர் திரிசொல்

இயல்பினான், பயின்றான் – வினை திரிசொல்

அன்ன, மான – இடை திரிசொல்

கூர், கழி – உரி திரிசொல்

79) பொருளின் அடிப்படையில் திரிசொல் எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: பொருளின் அடிப்படையில் திரிசொல், ஒரு பொருள் குறித்த பல திரி சொல், பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என இரண்டு வகைப்படும்.

80) மாறுபட்டதைத் தேர்க.

A) வங்கம்

B) அம்பி

C) நாவாய்

D) இதழ்

விளக்கம்: வங்கம், அம்பி, நாவாய் ஆகியவை கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருகிறது. இதனால் இது ஒரு பொருள் குறித்த பல திரிசொல் ஆகும். இதழ் என்பது பூவின் இதழ், உதடு, கண்ணிமை, பனையேடு, நாளிதழ் ஆகிய பல பொருள்களைத் தருவதால் பல பொருள் குறித்த ஒரு திரிசொல் ஆகும்.

81) வட மொழித் தவிர பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படும்

A) திரிசொல்

B) திசைசொல்

C) உரிச்சொல்

D) இயற்சொல்

விளக்கம்: வடமொழித் தவிர, பிற மொழிகளிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் ஆகும். (எ.கா) சாவி, சன்னல், பண்டிகை, இரயில்

82) முற்காலத்தில் பாண்டிய நாட்டைத் தவிர, பிறப் பகுதிகளில் வழங்கிய கேணி, பெற்றம் போன்ற சொற்கள் எவ்வாற அழைக்கப்பட்டன?

A) இயற்சொல்

B) உரிச்சொல்

C) வடசொல்

D) திசைசொல்

விளக்கம்: வடமொழித் தவிர, பிற மொழிகளிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச் சொல் ஆகும். கேணி என்ற சொல்லின் தமிழ்ச் சொல் கிணறு. பெற்றம்-ன் தமிழ்ச் சொல் பசு

83) வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெற்ற சொற்கள் எவை?

A) இயற்சொல்

B) உரிசொல்

C) திசைச்சொல்

D) வடசொல்

விளக்கம்: வடசொல் எனப்படும் சமஸ்கிருதத்தில் இருந்து வந்து தமிழில் இடம்பெற்ற சொற்கள் ‘வடசொல்’ எனப்படும். (எ.கா) வருடம், மாதம், கமலம், விடம், சக்கரம்

84) வடசொற்கள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: வடசொற்கள் தற்சமயம், தற்பவம் என 2 வகைப்படும்.

85) வடமொழியில் இருப்பது போன்ற தமிழில் எழுதுவதை எவ்வாறு அழைப்பர்?

A) வடசொல்

B) திசைச்சொல்

C) தற்சமம்

D) தற்பவர்

விளக்கம்: வடமொழியில் இருப்பது போன்ற தமிழில் எழுதுவதை தற்சமம் என்பர். (எ.கா) கமலம், அலங்காரம்

86) வடமொழி சொல்லை தமிழ் எழுத்துக்களால் மாற்றி எழுதுவதை எவ்வாறு அழைப்பர்?

A) திசைச்சொல்

B) தமிழ்சொல்

C) தற்சமம்

D) தற்பவம்.

விளக்கம்: லஷ்மி என்பதை இலக்குமி என்றும், விஷம் என்றும் தமிழ் எழுத்துக்களால் மாற்றி எழுதுவதைத் தற்பவம் என்பவர்

87) பொருத்துக

அ. இயற்சொல் – 1. பெற்றம்

ஆ. திரிசொல் – 2. இரத்தம்

இ. திசைச்சொல் – 3. அழுவம்

ஈ. வடசொல் – 4. சோறு

A) 4, 3, 2, 1

B) 3, 4, 2, 1

C) 1, 3, 4, 2

D) 4, 3, 1, 2

விளக்கம்: இயற்சொல் – சோறு

திரிசொல் – அழுவம்

திசைச்சொல் – பெற்றம்

வடசொல் – இரத்தம்

88) காலம் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 9

விளக்கம்: இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என காலம் 3 வகைப்படும்

இறந்தகாலம் – ஆடினாள்

நிகழ்ந்தகாலம் – ஆடுகின்றாள்

எதிர்காலம் – ஆடுவாள்

89) பொருத்துக

அ. கலங்கரை விளக்கம் – 1. Marine Creature

ஆ. கடல்வாழ் உயிரினம் – 2. Submarine

இ. நீர்மூழ்கிக்கப்பல் – 3. Light House

ஈ. கப்பல்தளம் – 4. Shipyard

A) 3, 1, 2, 4

B) 3, 1, 4, 2

C) 3, 4, 1, 2

D) 4, 3, 2, 1

விளக்கம்: கலங்கரை விளக்கம்- Light House

கடல்வாழ் உயிரினம் – Marine Creature

நீர்மூழ்கிக்கப்பல் – Sub Marine

கப்பல்தளம் – Shipyard

கப்பல் தொழில்நுட்பம் – Marine Technology

90) பொருத்துக.

அ. துறைமுகம் – 1. Harbour

ஆ. புயல் – 2. Storm

இ. மாலுமி – 3. Anchor

ஈ. நங்கூரம் – 4. Sailor

A) 1, 3, 2, 4

B) 1, 2, 4, 3

C) 1, 2, 3, 4

D) 1, 3, 4, 2

விளக்கம்: துறைமுகம் – Horbour

புயல் – Storm

மாலுமி – Sailor

நங்கூரம் – Anchor

பெருங்கடல் – Ocean

Exit mobile version