7th Tamil Unit 2 Questions

7th Tamil Unit 2 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 7th Tamil Unit 2 Questions With Answers Uploaded Below.

1) ஒரு நாட்டின் வளம், அந்நாட்டில் அமைந்துள்ள எதைப் பொருத்து மதிப்பிடப்படுகிறது?

A) காடு

B) தொழிற்சாலை

C) கடல்

D) மீன் வளம்

விளக்கம்: ஒரு நாட்டின் வளம் அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது. அதனால்தான் காட்டின் வளமே நாட்டின் வளம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

2) நமக்கு எப்போதும் காட்சிக்கு இன்பம் தருபவை எவை?

1. காடு 2. கடல் 3. விலங்கு

A) 1 மற்றும் 2

B) 1 மற்றும் 3

C) 1 மற்றும் 2

D) 1, 2 மற்றும் 3

விளக்கம்: காடும் கடலும் நமக்கு எப்போதும் காட்சிக்கு இன்பம் தருபவை. ஒரு நாட்டின் வளம். அந்நாட்டின் காடுகளைப் பொருத்தே அமைகிறது.

3) கார்த்திகை தீபமெனக் காடெல்லாம் பூத்திருக்கும் எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?

A) முடியரசன்

B) மு.வரதராசனார்

C) சுரதா

D) உடுமலை நாராயணக்கவி

விளக்கம்: கார்த்திகை தீபமெனக் காடெல்லாம் பூத்திருக்கும் எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் சுரதா. காடு எனும் தலைப்பின் கீழ் இப்பாடலை எழுதியுள்ளார்.

4) பொருந்தாததைத் தேர்க.

A) ஈன்று – தந்து

B) களித்திட – மகிழ்ந்திட

C) கொம்பு – கிளை

D) நச்சரவம் – மிகுந்த சுவை

விளக்கம்: நச்சவரம் – விடமுள்ள பாம்பு

அதிமதுரம் – மிகுந்த சுவை

விடுதி – தங்குமிடம்

5) எதைப் போலக் காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும்?

A) நட்சத்திரங்கள்

B) மின்மினிப் பூச்சிகள்

C) வண்ண விளக்குகள்

D) கார்த்திகை விளக்குகள்

விளக்கம்: கார்த்திகை விளக்குகள் போலக் காடுகள் முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும். அவற்றைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும் என்று சுரதா உரைக்கிறார்.

6) பொருத்துக.

அ. குயில் – 1. அதிமதுரம் உண்ணும்

ஆ. மயில் – 2. கிழங்கு உண்ணும்

இ. பன்றி – 3. கூவும்

ஈ. யானை – 4. நடனமாடும்

A) 3, 4, 2, 1

B) 3, 4, 1, 2

C) 4, 3, 2, 1

D) 4, 3, 1, 2

விளக்கம்: குயில் – கூவும். மயில் – நடனமாடும். பன்றி – கிழங்கு உண்ணும். யானை – அதிமதுரம் உண்ணும்

7) சுரதாவின் இயற்பெயர் என்ன?

A) கவியரசு

B) துரைராசு

C) பாரதிதாசன்

D) இராசகோபாலன்

விளக்கம்: சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன் என்பதாகும். இவர் தன் பெயரை சுரதா என மாற்றிக் கொண்டார்.

8) சுரதா யார் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை மாற்றிக் கொண்டார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) காந்தி

D) சுப்ரமணிய ஐயர்

விளக்கம்: பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் சுரதா, எனவே பாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்ற பெயரை அடிப்படையாக வைத்து சுப்புரத்தினதாசன் என தம் பெயரை மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும்.

9) உவமைக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் யார்?

A) பாரதிதாசன்

B) பாரதி

C) சுரதா

D) மு.வ

விளக்கம்: உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் சுரதாவை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர்.

10) சுரதாவின் நூல்களில் பொருந்தாததைத் தேர்க.

A) அமுதும் தேனும்

B) தேன்மழை

C) துறைமுகம்

D) இருண்ட வீடு

விளக்கம்: இருண்ட வீடு என்ற நூலின் ஆசிரியர் பாரதிதாசன். மற்ற நூல்களான அமுதும் தேனும் தேன்மழை, துறைமுகம் போன்றவை சுரதாவின் நூல்கள்.

11) காடு என்னும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட சுரதாவின் பாடல் அவரது எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

A) அமுதும் தேனும்

B) தேன்மழை

C) துறைமுகம்

D) எதுவுமில்லை.

விளக்கம்: காடு என்னும் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பாடல் சுரதாவின் தேன்மழை என்னும் நூலில் இயற்கை எழில் என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டதாகும்

12) பச்சை மயில் நடிக்கும் பன்றி கிழங்கெடுக்கும் – என்ற பாடல் எப்பாடலைச் சார்ந்தது?

A) வெண்பா

B) ஆசிரியப்பா

C) கலிப்பா

D) கிளிக்கண்ணி

விளக்கம்: இது கிளிக்கண்ணி எனும் பாவகையைச் சேர்ந்தது. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை கிளிக்கண்ணி ஆகும்.

13) பின்வருவனவற்றுள் காட்டைக் குறிக்காத சொல் எது?

A) அடவி

B) கால்

C) மிளை

D) வானகம்

விளக்கம்: வானகம் என்பது வானத்தை அதாவது விண்வெளியைக் குறிக்கிறது. அடவி, கால், மிளை, கா, கான், கானகம், அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம் ஆகியவை காட்டைக் குறிக்கும் பிறச்சொற்களாகும்.

14) நெஞ்சில் உரமுமின்றி

நேர்மை திறமுமின்றி என்ற பாடலின் ஆசிரியர் யார்?

A) பாரதியார்

B) சுரதா

C) பாரதிதாசன்

D) மு.வ

விளக்கம்: நெஞ்சில் உரமுமின்றி

நேர்மை திறமுமின்றி

வஞ்சனை சொல்வாரடீ – கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடி

கூட்டத்தில் கூடிநின்று

கூவிப் பிதற்றலன்றி

நாட்டத்தில் கொள்ளாரடீ கிளியே

நாளில் மறப்பாரடீ

இப்பாடலை பாரதியார் பாடியுள்ளார். இது கிளிக்கண்ணிப் பாடலாகும்.

15) சரியான விடையைத் தேர்க.

வாழை, கன்றை ___________

A) ஈன்றது

B) வழங்கியது

C) கொடுத்தது

D) தந்தது

விளக்கம்: வாழை கன்றை ஈன்றது என்பதே சரி

16) காடடெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்தெழுதுக.

A) காடு + டெல்லாம்

B) காடு + எல்லாம்

C) கா + டெல்லாம்

D) கான் + எல்லாம்

விளக்கம்: காடு + எல்லாம் = காடெல்லாம். காடு + எல்லாம் = கா(ட் + உ) + எல்லாம். உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி காட் + எல்லாம் என மாறிற்று. பின் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி காட் + எல்லாம் என்பது காடெல்லாம் என மாறியது.

17) கிழங்கு + எடுக்கும் என்பதை சேர்த்து எழுதுக.

A) கிழங்குஎடுக்கும்

B) கிழங்கெடுக்கும்

C) கிழங்குடுக்கும்

D) கிழங்கொடுக்கும்

விளக்கம்: கிழங்கு + எடுக்கும் = கிழங்கெடுக்கும். கிழங்கு + எடுக்கும் = கிழங்(க் + உ) + எடுக்கும். உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும் எனும் விதிப்படி, கிழங்க் + எடுக்கும் என்றானது. பின் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி கிழங்கெடுக்கும் என்றானது.

18) நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடமாக திகழ்வது?

A) காடு

B) மரம்

C) மலை

D) கடல்

விளக்கம்: நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்களே மரங்கள். அவை மனித வாழிவியலோடு பின்னிப் பிணைந்தவை.

19) அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற கவிதையில் ஆசிரியர் யார்?

A) சுரதா

B) இராமச்சந்திரக் கவிராயர்

C) ராஜமார்த்தாண்டன்

D) மௌலி

விளக்கம்: அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற கவிதையின் ஆசிரியர் ராஜமார்த்தாண்டன். கால வெள்ளத்தில் மரங்கள் மறையலாம். ஆனால் அவற்றைப் பற்றிய நினைவுகள் மறையாது என்பதை விளக்கும் கவிதை இது.

20) பொருள் கூறுக – துஷ்டி கேட்டல்

A) வட்டி கேட்டல்

B) பணம் கேட்டல்

C) பரவசப்படுதல்

D) துக்கம் விசாரித்தல்

விளக்கம்: துஷ்டி கேட்டல் என்பதன் பொருள் துக்கம் விசாரித்தல் என்பதாகும்.

21) ராஜமார்த்தாண்டன் நடத்திய இதழ் என்ன?

A) நியூ இந்தியா

B) அசோக மித்திரன்

C) காமன் வீல்

D) கொல்லிப்பாவை

விளக்கம்: கொல்லிப்பாவை (சிற்றிதழ்) – ராஜமார்த்தாண்டன்

நியூ இந்தியா – அன்னிபெசண்ட் (தினசரி நாளிதழ்)

அசோக மித்திரன் – ஜெகதீச தியாகராஜன்

காமன் வீல் – அன்னி பெசண்ட் (வார இதழ்)

22) ராஜமார்த்தாண்டனின் எந்த நூல், தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது?

A) கொங்குதேர் வாழ்க்கை

B) அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

C) ராஜ மார்த்தாண்டன் கவிதைகள்

D) கொல்லிப்பாவை

விளக்கம்: ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காக தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினை ராஜமார்தாண்டம் பெற்றார்.

23) ராஜமார்த்தாண்டன், எந்தத் தலைப்பின் கீழ் சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார்?

A) கொங்குதேர் வாழ்க்கை

B) அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

C) ராஜமார்மார்த்தாண்டன் கவிதைகள்

D) கொல்லிப்பாவை

விளக்கம்: ராஜமார்த்தாண்டன், கொங்குதேர் வாழ்க்கை எனும் தலைப்பின் கீழ் சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். இவர் கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.

24) குழந்தை வரைந்தது பறவைகளை மட்டுமே வானம் தானாக உருவானது என்ற புதுக்கவிதையின் ஆசிரியர் யார்?

A) நா.பிச்சமூர்த்தி

B) சி.சு.செல்லப்பா

C) சி.மணி

D) கலாப்பிரியா

விளக்கம்: இது கலாப்பிரியா எழுதிய புதுக்கவிதையாகும். மேலும்,

கொப்புகள் விலக்கி

கொத்துக் கொத்தாய்

கருவேலங்காய்

பறித்துப் போடும் மேய்ப்பனை

ஒரு நாளும்

சிராய்ப்பதில்லை

கருவமுட்கள் எனும் புதுக்கவிதையையும் எழுதியுள்ளார்.

25) இரவில் மெல்லிய நிலவொளியில் நாவற்பழ மரங்களை நோக்கி படையெடுத்து வருபவை எவை என ராஜமார்த்தாண்டன் கூறுகிறார்?

A) எலிகள்

B) பறவைகள்

C) வெளவால்

D) ஆந்தை

விளக்கம்: இரவில் மெல்லிய நிலவொளியில் நாவற்பழ மரங்களை நோக்கி வெளவால் கூட்டம் படையெடுத்து வரும் என ராஜமார்த்தாண்டன் கூறுகிறார்.

26) நாவற்பழத்திற்கு உவமையாக ராஜமார்த்தாண்டம் குறிப்பிடுவது எது?

A) பச்சை இலை

B) கோலிக்குண்டு

C) பச்சைக்காய்

D) செங்காய்

விளக்கம்: பளபளக்கும் பச்சை இலைகளுடே கருநீலக் கோலிக்குண்டுகளாய் நாவற்பழங்கள் கிளைகளில் தொங்கும் என ராஜமார்தாண்டம் கூறுகிறார்

27) சுட்ட பழங்கள் என்ற அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற கவிதையில் குறிப்பிடுவது எது?

A) மண் ஒட்டிய பழங்கள்

B) சூடான பழங்கள்

C) வேகவைத்த பழங்கள்

D) சுடப்பட்ட பழங்கள்

விளக்கம்: காக்கை குருவி மைனா கிளிகள்

இன்னும் பெயரறியாப் பறவைகளுடன்

அணில்களும் காற்றில் உதிர்த்திடும்

சுட்ட பழங்கள் பொறுக்க

சிறுவர் கூட்டம் அலைமோதும் – ராஜமார்த்தாண்டன்

28) பிரித்தெழுதுக. பெயரறியா

A) பெயர + றியா

B) பெயர் + ரறியா

C) பெயர் + அறியா

D) பெயர + அறியா

விளக்கம்: பெயரறியா = பெயர + றியா. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி (ர் + அ) பெயர் + அறியா என்பது பெயரறியா என மாறியது.

29) பிரித்தெழுதுக. மனமில்லை

A) மண + மில்லை

B) மனமி + இல்லை

C) மனம் + மில்லை

D) மனம் + இல்லை

விளக்கம்: மனமில்லை = மனம் + இல்லை. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே எனும் விதிப்படி ம் + இ = மி என மாறி மனமில்லை என்றானது.

30) நேற்று + இரவு சேர்த்தெழுதுக

A) நேற்றுஇரவு

B) நேற்றிரவு

C) நேற்றுரவு

D) நேற்இரவு

விளக்கம்: நேற்று + இரவு = நேற்றிரவு. நேற்று + இரவு + நேற்(ற் + உ) + இரவு. “உயிரிவரின் உக்குரல் மெய்விட்டும்” எனும் விதிப்படி, நேற்ற் + இரவு என்றானது. பின் “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி, ற் + இ = றி என மாறி நேற்றிரவு என்றானது.

31) மனிதனின் முதல் இருப்பிடம் எது?

A) பூஞ்சோலை

B) வீடு

C) குடிசை

D) காடு

விளக்கம்: மனிதனின் முதல் இருப்பிடம் காடுதான் வளம் நிறைந்த நிலம், அடர்ந்த மரம், செடி, கொடிகள், நன்னீர், நறுந்காற்று என அனைத்தும் நிரம்பியது காடாகும்.

32) எது பறவைகள், விலங்குள், தாவரங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது?

A) சரணாலயம்

B) விலங்குகள் காப்பகங்கள்

C) காடுகள்

D) நீர்நிலைகள்

விளக்கம்: பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடமாக காடுகள் திகழ்கிறது. காடுகளின் செழிப்புக்குக் காட்டுயிர்கள் உதவுகின்றன.

33) பின்வருவனவற்றுள் புலிகள் காப்பகம் எங்கு அமைந்துள்ளது?

A) முண்டந்துறை

B) விராலி மலை

C) முதுமலை

D) வேடந்தாங்கல்

விளக்கம்: முண்டந்துறை – புலிகள் சராணலயம்

விராலி மலை – மயில்கள் சராணயலம்

முதுமலை – யானைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் – பறவைகள் சரணாலயம்

34) “முன் இசைவு” என்பதன் பொருள் என்ன?

A) முன்னோர் சொத்து

B) முன் பணம் பெறுதல்

C) முன் அனுமதி பெறுதல்

D) முன்னோர் வாக்கு

விளக்கம்: அனுமதி என்பதன் தமிழ் சொல் “இசைவு” ஆகும். எனவே முன் இசைவு என்பது முன் அனுமதியை குறிக்கும்

35) தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் எது?

A) முண்டந்துறை புலிகள் காப்பகம்

B) விராலி மலை மயில்கள் சரணாலயம்

C) சத்தியமங்கலம் வனப்பகுதி

D) வேடந்தாங்கல்

விளக்கம்: முண்டந்துறை புலிகள் காப்பகம், தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பமாகும். இது திருநெல்வேலியில் அமைந்துள்ளது.

36) முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு என்ன?

A) 865 கி.மீ2

B) 840 கி.மீ2

C) 900 கி.மீ2

D) 895 கி.மீ2

விளக்கம்: முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு 895 கி.மீ2. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டு மான் போன்ற அரிய விலங்குகள் வாழ்கின்றன.

37) உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன?

A) 3

B) 4

C) 2

D) 5

விளக்கம்: உலகில் 2 வகையான யானைகள் உள்ளன. அவை ஆசிய யானைகள் மற்றும் ஆப்பிரிக்க யானை

38) ஆசிய யானைகளில் எந்த யானைக்கு தந்தம் உண்டு?

A) ஆண் யானை

B) பெண் யானை

C) ஆண் மற்றும் பெண் யானை

D) எதற்குமில்லை

விளக்கம்: ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தம் உண்டு. பெண் யானைக்கு இல்லை.

39) ஆப்பிரிக்க யானைகளில் எந்த யானைக்கு தந்தம் உண்டு?

A) ஆண் யானை

B) பெண் யானை

C) ஆண் மற்றும் பெண் யானை

D) எதற்குமில்லை

விளக்கம்: ஆப்பரிக்க யானைகளில் ஆண் மற்றும் பெண் யானை இரண்டிற்குமே தந்தம் உண்டு. மேலும் ஆப்பிரிக்க யானைகள், ஆசிய யானைகளை விட உருவத்தில் பெரிதாக இருக்கும்.

40) யானைக் கூட்டத்திற்கு எந்த யானை தலைமைத் தாங்கும்?

A) ஆண் யானை

B) பெண் யானை

C) குட்டி யானை

D) A மற்றும் B

விளக்கம்: யானைகள் எப்போதும் கூட்டமாகவே வாழும். இந்தக் கூட்டத்திற்கு ஒரு பெண் யானைதான் தலைமை தாங்கும்.

41) ஒரு யானைக்கு ஒரு நாளைக்கு எத்தனை கிலோ உணவு தேவைப்படுகிறது?

A) 300 கிலோ

B) 250 கிலோ

C) 350 கிலோ

D) 280 கிலோ

விளக்கம்: யானைகள் தங்களுக்குத் தேவையான தண்ணீர், உணவு ஆகியவற்றுக்காக இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும். ஒரு யானை நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல், இலை தழைகளை உணவாக உட்கொள்ளும்.

42) ஒரு யானைக்கு ஒரு நாளுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படும்?

A) 63

B) 64

C) 65

D) 66

விளக்கம்: ஒரு யானைக்கு ஒரு நாளைக்கு 250 கிலோ உணவும் 65 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது.

43) எது மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு?

A) புலி

B) சிங்கம்

C) கரடி

D) யானை

விளக்கம்: யானை மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு. அது பாசம் நிறைந்த விலங்கும் கூட.

44) சரியான கூற்றைத் தேர்க.

1. யானைகள் பொதுவாக மனிதர்களைத் தாக்கும்

2. யானைக்கு கண்பார்வை குறைவு. ஆனால் கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதி.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: பொதுவாக யானைகள் மனிதர்களைத் தாக்குவதில்லை. அவற்றின் வழித்தடங்களில் குறுக்கிடும்போது தான் மனிதர்களைத் தாக்குகிறது.

45) தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது?

A) சத்தியமங்கலம்

B) கோவை

C) கோடியக்கரை

D) பிச்சாவரம்

விளக்கம்: தமிழ்நாட்டில் மேட்டுப்பாளையத்தில்(கோவை மாவட்டம்) வனக் கல்லூரி அமைந்துள்ளது.

46) தமிழ்நாட்டில் வேளாண்மைப் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?

A) சென்னை

B) தஞ்சாவூர்

C) திருநெல்வேலி

D) கோவை

விளக்கம்: தமிழ்நாட்டில், வேளாண்மைப் பல்லைக்கழகம் கோவையில் அமைந்துள்ளது. அங்கு இளநிலை வனவியல், முதுநிலை வனவியல் ஆகிய படிப்புகள் உள்ளன.

47) கரடி எவ்வகை உண்ணி?

A) தாவர உண்ணி

B) விலங்குண்ணி

C) அனைத்துண்ணி

D) எதுவுமில்லை

விளக்கம்: கரடி ஓர் அனைத்துண்ணி. அது பழம், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கறையான் போன்றவற்றை உண்ணும்.

48) கரடிக்கு மிகவும் பிடித்த உணவு எது?

A) பழங்கள்

B) தேன்

C) புற்றீசல்

D) கறையான்

விளக்கம்: கரடிக்கு மிகவும் பிடித்த உணவு கரையான். அது பழம், தேன் போன்றவற்றை உண்ண மரங்களில் ஏறும்.

49) நன்கு வளர்ந்த கரடி எத்தனை கிலோ வரை இருக்கும்?

A) 100

B) 140

C) 180

D) 160

விளக்கம்: நன்கு வளர்ந்த கரடி 160 கிலோ வரை இருக்கும். கரடியின் உடலைப் போர்த்தி இருக்கும் அடர்ந்த முடிகள் தேனீக்களிடமிருந்து அதனை காப்பாற்றிவிடும்.

50) எந்த விலங்கு இரவில் மட்டுமே வேட்டையாடும் தன்மைக் கொண்டது?

A) சிங்கம்

B) கரடி

C) காட்டெருமை

D) புலி

விளக்கம்: புலிகள் இரவில் மட்டுமே வேட்டையாடும் தன்மை கொண்டது. அது தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை.

51) சரியான கூற்றைத் தேர்க

1. புலிகள் தனித்து வாழும் இயல்புடையவை.

2. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: புலிகள் தனித்து வாழும் இயல்புடையது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும் மற்ற புலிகள் அந்த எல்லைக்குள் செல்லாது.

52) கருவுற்ற புலி எத்தனை நாட்களில் குட்டியை ஈனும்?

A) 70

B) 80

C) 90

D) 100

விளக்கம்: கருவுற்ற புலியானது 90 நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும். அந்தக் குட்டிகளை 2 ஆண்டுகள் வரை வளர்த்து. வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லையை வகுத்துத் தனியாக அளிக்கும்.

53) ஒரு காட்டின் வனத்தைக் குறிக்கும் குறியீடாக விளங்கும் விலங்கு எது?

A) சிங்கம்

B) புலி

C) மான்

D) யானை

விளக்கம்: புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடாக விளங்குகிறது.

54) ”பண்புள்ள விலங்கு” எனப்படுவது எது?

A) சிங்கம்

B) கரடி

C) யானை

D) புலி

விளக்கம்: புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை. எனவே தான் புலி பண்புள்ள விலங்கு எனப்படும்.

55) காட்டின் அரசனாக விளங்கும் விலங்கு எது?

A) சிங்கம்

B) புலி

C) கரடி

D) யானை

விளக்கம்: காட்டின் அரசனாக விளங்குவது சிங்கம், உலகில் ஆசியச் சிங்கம், ஆப்பிக்கச் சிங்கம் என இரண்டு வகைச் சிங்கம் வாழ்கின்றன.

56) “கிர் சரணாலயம்” எங்கு அமைந்துள்ளது?

A) மகாராஷ்டிரா

B) மேற்கு வங்காளம்

C) மத்திய பிரதேசம்

D) குஜராத்

விளக்கம்: இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கிர் சராணலயத்தில் மட்டுமே ஆசிய சிங்கங்கள் உள்ளன.

57) இயற்கை விஞ்ஞானிகள் எந்த விலங்கை காட்டின் அரசன் என்கிறார்கள்?

A) கரடி

B) மான்

C) சிங்கம்

D) புலி

விளக்கம்: நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட புலியே உயர்ந்தது. எனவே தான் இயற்கை விஞ்ஞானிகள் காட்டின் அரசன் புலி என்கிறார்கள்.

58) அழகில் சிறந்த மான் வகை எது?

A) புள்ளிமான்

B) சருகுமான்

C) மிளாமான்

D) வெளிமான்

விளக்கம்: எல்லா வகை மான்களிலும் நம் நாட்டுப் புள்ளி மான்களே அழகில் சிறந்தவை என்பர். சருகுமான், மிளாமான், வெளிமான், எனப் பல வகையான மான்கள் இந்தியாவில் உள்ளன.

59) ஆசிய யானைகளில் ஆண்-பெண் யானைகளை வேறுபடுத்துக.

A) காது

B) தந்தம்

C) கண்

D) கால்நகம்

விளக்கம்: ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தம் உண்டு. பெண் யானைக்கு இல்லை.

60) காட்டாறு பிரித்தெழுதுக.

A) காடு + ஆறு

B) காட்டு + ஆறு

C) காட் + ஆறு

D) காட் + டாறு

விளக்கம்: காட்டாறு = காடு + ஆறு. காடு + ஆறு – இதில் “உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்” எனும் விதப்படி கா(ட் + உ) + ஆறு என்பது காட் + ஆறு என்றானது.

பின் தன்னொற்றிரட்டல் எனும் விதிப்படி காட்(ட்) + ஆறு என்றானது. இறுதியாக “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி ட் + ஆ = டா என மாறி காட்டாறு என்றானது.

61) ”அனைத்துண்ணி” பிரித்தெழுதுக.

A) அனைத்து + துண்ணி

B) அனை + துண்ணி

C) அனைத் + துண்ணி

D) அனைத்து + உண்ணி

விளக்கம்: அனைத்துண்ணி = அனைத்து + உண்ணி. அனைத்(த + உ) + உண்ணி. இதில் “உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்” எனும் விதிப்படி ‘உ’ கெட்டு அனைத்த் + உண்ணி என்றானது. பின் “உடல்மேல்வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி த் + உ என மாறி அனைத்துண்ணி என்றானது.

62) நேரம் + ஆகி சேர்த்தெழுதுக.

A) நேரமாகி

B) நேராகி

C) நேரம்ஆகி

D) நேர்ஆகி

விளக்கம்: நேரம் + ஆகி = நேரமாகி. “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி ம் + ஆ = மா என மாறி நேரமாகி என்றானது.

63) வேட்டை + ஆடிய சேர்த்தெழுதுக.

A) வேட்டைஆடிய

B) வேட்டையாடிய

C) வேட்டாடிய

D) வேடாடிய

விளக்கம்: வேட்டை + ஆடிய = வேட்டையாடிய எனப் புணரும்

64) பல்வகை மரங்கள் நிறைந்த ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்ட காடு எங்கு அமைந்துள்ளது?

A) அந்தமான் தீவு

B) நிக்கோபார் தீவு

C) பிஜிலி தீவு

D) மணல் தீவு

விளக்கம்: ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வகை மரங்கள் நிறைந்த காடானது மணல் தீவில் அமைந்துள்ளது.

65) மணல் தீவில், தனி மனிதனால் உருவாக்கப்பட்ட காடானது எந்த ஆற்றின் நடுவே அமைந்துள்ளது?

A) ஜமுனா

B) கங்கா

C) பிரம்மபுத்திரா

D) தபதி

விளக்கம்: பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே உள்ள மணல் தீவில் தனி மனிதனால் உருவாக்கப்பட்ட காடு அமைந்துள்ளது.

66) மணல் தீவில் எவ்வகை மரம் மட்டுமே வளரும்?

A) வாழை

B) கரும்பு

C) மூங்கில்

D) முந்திரி

விளக்கம்: மணல் தீவிகளில் மூங்கில் மட்டுமே வளரும் எனினும் பிரம்மபுத்திரா நதியின் நடுவே அமைந்த மணல் தீவில் பல்வகை மரங்கள் வளருகின்றன.

67) இந்தியாவின் வனமகன் என்ற அழைக்கப்படுபவர் யார்?

A) ஜாதவ் பயோங்

B) யூசப் அலி

C) யூசப் கான்

D) முகமது அலி

விளக்கம்: தனி மனிதராக ஜாதவ்பயோங் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார். இதனால் இவர் “இந்தியாவின் வனமகன்” எனப்படுகிறார்.

68) “ஜாதவ்பயோங்” எம்மாநிலத்தைச் சேர்ந்தவர்?

A) உத்திரப்பிரதேசம்

B) பீகார்

C) அஸ்ஸாம்

D) மேகாலயா

விளக்கம்: இந்தியாவின் வனமகனான ஜாதவ்பயோங் அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

69) “ஜாதவ்பயேங்” தனி மனிதனாக ஒரு காட்டை உருவாக்க எத்தனை ஆண்டுகள் ஆனது?

A) 25

B) 30

C) 35

D) 40

விளக்கம்: ஜாதவ்பயோங் மணல் தீவில் தனி மனிதனாக ஒரு காட்டை உருவாக்க 30 ஆண்டுகள் ஆனது.

70) பிரம்மபுத்திரா ஆற்றில் எந்த ஆண்டு ஏற்ப்பட்ட வெள்ளம், ஜாதவ்பயோங்-யை காடு உருவாக்க தூண்டியது?

A) 1969

B) 1979

C) 1974

D) 1989

விளக்கம்: 1979-ஆம் ஆண்டு பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், அடித்து வரப்பட்ட பாம்புகள், மரங்கள் இல்லாத தீவில் கரை ஒதுங்கி மடிந்தன. இதனைக் கண்ட ஜாதவ்பயேங் அங்கே ஒரு காட்டை உருவாக்க வேண்டுமென முடிவெடுத்தார்.

71) அசாமில் சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டம் எத்தனை நாட்கள் செயல்பட்டது?

A) 2 ஆண்டுகள்

B) 4 ஆண்டுகள்

C) 1 ஆண்டுகள்

D) 3 ஆண்டுகள்

விளக்கம்: அசாமில் அரசு சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தியது. அத்திட்டம் 3 ஆண்டுகளில் முடிந்துவிட்டது.

72) மணல் பரப்பில் மூங்கில் தவிர பிற மரங்களும் வளர மண்ணின் தன்மையை மாற்ற வேண்டுமன ஜாதவ்பயேங்-யிடம் கூறியவர் யார்?

A) யூசப் மேனன

B) முகமது அலி

C) ஜாதுநாத்

D) ஜோர்விராட்

விளக்கம்: மணல் பரப்பில் பிற மரங்கள் வளர மண்ணின் தன்மையை மாற்ற வேண்டுமெனக் ஜாதவ்பயேங்-யிடம் அசாம் வேளாண்மைப் பல்கலைகழகப் பேராசிரியர் ஜாதுநாத் ஜாதவ்பயேங்கிடம் கூறினார்.

73) மணல் பரப்பில் மரம் வளர வேண்டுமெனில் மண்ணின் தன்மையை மாற்ற எவை உதவும் என ஜாதுநாத் கூறினார்?

A) மண்புழு

B) சிவப்புக் கட்டெரும்பு

C) எறும்பு

D) A மற்றும் B

விளக்கம்: மணல் பரப்பில் மூங்கில் மட்டுமின்றி பிற மரங்களும் வளர மண்ணின் தன்மையை மாற்ற வேண்டும். அதற்கு மண்புழு மற்றும் சிவப்புக் கட்டெரும்பும் உதவும் எனக் கூறினார் ஜாதுநாத்.

74) எந்த விலங்கு தங்கியிருக்கும் காட்டை “வளமான காடு” எனக் கூறிவர்?

A) புலி

B) யானை

C) சிங்கம்

D) மான்

விளக்கம்: யானைகள் தங்கியிருக்கும் காடுதான் வளமான காடு என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.

75) ‘காட்டின் வளம்’ எனக் குறிக்கப்படும் விலங்கு எது?

A) புலி

B) யானை

C) சிங்கம்

D) மான்

விளக்கம்: காட்டின் வளம்’ எனக் குறிக்கப்படும் விலங்கு புலி ஆகும். வளமான காட்டில் யானைகள் தங்கியிருக்கும்.

76) ஜாதவுக்கு எப்போது “இந்திய வனமகன் (குழசநளவ ஆயn ழக ஐனெயை) ” என்னும் பட்டம் எப்போது கிடைத்தது?

A) 2011

B) 2012

C) 2013

D) 2019

விளக்கம்: 2012-ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு “ஜாதவ் வனமகன்” என்னும் பட்டம் வழங்கியது.

77) ஜாதவ் பயோங் எப்போது பத்மஸ்ரீ விருது பெற்றார்?

A) 2015

B) 2014

C) 2013

D) 2012

விளக்கம்: 2015 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை ஜாதவ்பயோங்க்கு வழங்கியது.

78) ஜாதவ்பயோங்-க்கு “மதிப்புறு முனைவர்” பட்டம் வழங்கிய அமைப்பு எது?

A) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

B) பெரியார் பல்கலைக்கழகம்

C) இந்திரா காந்தி

D) கௌகாத்தி பல்கலைக்கழகம்

விளக்கம்: கௌகாத்தி பல்கலைக்கழகம் “மதிப்புறு முனைவர்” எனும் பட்டத்தை ஜாதவ்பயோங்க்கு வழங்கி கொளரவித்தது.

79) எந்த விலங்கு வந்த பிறகுதான், காட்டின் உணவுச் சங்கிலி நிறைவடைந்தது என ஜாதவ் கூறுகிறார்?

A) சிங்கம்

B) புலி

C) யானை

D) கழுகு

விளக்கம்: புலிகள் வந்த பிறகுதான், காட்டின் உணவுச் சங்கிலி நிறைவடைந்தது என ஜாதவ் கூறுகிறார்.

80) ஜாதவ் பயேங்-கை பாராட்டிப் பேசியவர் யார்?

A) ஜாதுநாத்

B) ஜட்டுகலிட்டா

C) முகமது அலி

D) தோஸ்த் அலி

விளக்கம்: ஜட்டுகலிட்டா எனும் வனவிலங்கு ஆர்வலர் ஜாதவ்பயேங்-ன் காட்டைப் பற்றிக் கேள்விப்பட்டு அசாமிற்கு வந்து அவரைப் பாரட்டிச் சென்றனர்.

81) ஜாதவ்பயேங்-ன் காட்டை பற்றி எந்த இதழில் செய்தி வெளிவந்தது?

A) டைம்ஸ்

B) டெக்கான் கிரானிக்கல்

C) ஹிந்த்

D) தினகரன்

விளக்கம்: ஜாதவ்பயேங்-ன் காட்டைப் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா என்ற இதழில் செய்தி வெளியானது.

82) ஐ, கை, பை என ஐகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?

A) 2

B) 1 ½

C) 1

D) ½

விளக்கம்: ஐ, கை, பை என ஐகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய 2 மாத்திரை அளவில் முழுமையாக ஒலித்தது.

83) சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் வரும்போது தனக்குரிய 2 மாத்திரை அளவிலிருந்து ஒலிக்கும் ஐகாரம் எது?

A) ஒளகாரக்குறுக்கம்

B) மகரக்குறுக்கம்

C) ஐகாரக்குறுக்கம்

D) எதுவுமில்லை

விளக்கம்: வையம், சமையல், பறவை என சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம் ஐகாரக்குறுக்கும் எனப்படும்.

84) ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?

A) 2

B) 1 ½

C) 1

D) ½

விளக்கம்: ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது 1 ½ மாத்திரை அளவில் ஒலிக்கும். இடையிலும், இறுதியிலும் வரும்போது 1 மாத்திரை அளவில் ஒலிக்கும்.

85) ஒளகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்

A) 2

B) 1½

C) 1

D) ½

விளக்கம்: ஒள, வெள என ஒளகார எழுத்து தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது. ஒளவையால், வெளவால் எனச் சொற்களின் முதலில் வரும்போது தனக்குரிய 2 மாத்திரையிலிருந்து குறைந்து 1 ½ மாத்திரை அளவில் ஒலிக்கிறது.

86) ஒளகாரம் சொல்லின் இடையிலும், இறுதியிலும் வரும்போது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?

A) 2

B) 1 ½

C) 1

D) எதுவுமில்லை

விளக்கம்: ஒளகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது.

87) “வலம் வந்தான்” என்பதில் மகர மெய்யெழுத்தானது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?

A) 2

B) ½

C) ¼

D) 1

விளக்கம்: “வலம் வந்தான்” என்பதில் மகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வருவதால் மகர மெய்யானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்த குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது.

88) பொருந்தாதைத் தேர்க

A) அம்மா

B) வலம்வந்தான்

C) போலும்

D) மருளும்

விளக்கம்: அம்மா என்பதில் மகர மெய்யெழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது. மற்றவற்றில் ¼ மாத்திரையாக குறைந்து ஒலிக்கிறது.

89) அஃகு, எஃகு ஆகியவை எவ்வகை குறுக்கம்?

A) ஐகாரக்குறுக்கம்

B) ஒளகாரக்குறுக்கம்

C) குறுக்கமில்லை

D) ஆய்தக்குறுக்கம்

விளக்கம்: அஃகு, எஃகு ஆகிய சொற்களில் ஆய்த எழுத்து, தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

90) முஃடீது, கஃறீது என்பவை எவ்வகை குறுக்கம்?

A) ஐகாரக்குறுக்கம்

B) ஒளகாரக்குறுக்கம்

C) மகரக்குறுக்கம்

D) ஆய்தக்குறுக்கம்

விளக்கம்: முள் + தீது = முஃடீது, கல் + தீது = கஃறீது. இச்சொற்களிலுள்ள ஆய்த எழுத்து, தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்த கால் மாத்திரை அளவில் ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பது ஆய்தக்குறுக்கம்.

91) “வேட்கை” என்னும் சொல்லில் ஒளகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு என்ன?

A) அரை

B) ஒன்று

C) ஒன்றரை

D) இரண்டு

விளக்கம்: ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது 1 மாத்திரை அளவில் ஒலிக்கும்.

92) மகரக்குறுக்கம் இடம்பெறாத சொல் எது?

A) போன்ம்

B) மருண்ம்

C) பழம் விழுந்தது

D) பணம் கிடைத்தது

விளக்கம்: மகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வந்தால் மட்டுமே மகர மெய்யானது தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும்.

93) சொல்லின் முதலில் மட்டுமே இடம்பெறுவது எது?

A) ஐகாரக்குறுக்கம்

B) ஒளகாரக்குறுக்கம்

C) மகரக்குறுக்கம்

D) ஆய்தக்குறுக்கம்

விளக்கம்: ஓளகாரக்குறுக்கம் சொல்லின் முதலில் மட்டுமே வரும், இடையிலும் இறுதியிலும் வராது.

94) பால் எத்தனை வகைப்படும்?

A) 4

B) 5

C) 6

D) 12

விளக்கம்: பால் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என 5 வகைப்படும்.

95) பொருத்துக.

அ) மாணவன், செல்வன் – 1. பலர்பால்

ஆ) ஆதினி, மாணவி – 2. ஒன்றன்பால்

இ) மாணவர்கள், மக்கள் – 3. பெண்பால்

ஈ) கல், பசு – 4. ஆண்பால்

A) 4, 3, 1, 2

B) 4, 3, 2, 1

C) 1, 4, 3, 2

D) 1, 3, 4, 2

விளக்கம்: உயர்தினையில், ஆணைக்குறிப்பது – ஆண்பால்

பெண்ணைக் குறிப்பது – பெண்பால்

ஒன்றுக்கு மேற்பட்டவரைக் குறிப்பது – பலர்பால்

அஃறிணையில் ஒன்றைக் குறிப்பது – ஒன்றன்பால்

ஒன்றுக்கு மேற்பட்டவரைக் குறிப்பது – பலவின் பால்

96) ‘மகளிர்’ என்ற சொல்லின் எதிர்பாலுக்குரிய பெயரைத் தேர்க.

A) ஆண்

B) மூத்தோர்

C) ஆடவர்

D) அரசன்

விளக்கம்: எதிர்பாலுக்குரிய பெயர்கள்:

மகளிர் X ஆடவர்

அரசன் X அரசி

பெண் X ஆண்

மாணவன் X மாணவி

சிறுவன் X சிறுமி

தோழி X தோழன்

97) ‘பல்லுயிர் மண்டலம்’ என்பதன் ஆங்கிலச் சொல் என்ன?

A) Poverty

B) Wild Trees

C) Forester

D) Bio diversity

விளக்கம்: தீவு – Island

இயற்கை வளம் – Natural Resource

வனவிலங்குகள் – Wild Animals

வனப் பாதுகாவலர் – Forest Conservator

உவமை-Parable

காடு-Jungle

வனவியல்-Forestry

பல்லுயிர் மண்டலம்-Bio Diversity

98) “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள்” என்று திருக்குறளின்

பெருமையை போற்றியவர் யார்?

A) திருவள்ளுவர்

B) காக்கை பாடினியார்

C) ஒளவையார்

D) கம்பர்

விளக்கம்: மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கி அல்லது எவ்வாறு வாழ வேண்டும் என்று நன்கு சிந்தித்து எழுதப்பட்ட நூல் திருக்குறள் இது போன்ற ஒரு நூல் திருக்குறள். இது போன்ற ஒரு நூல் உலகில் எந்த மொழியில் இதுவரை தோன்றியதில்லை.

99) தமிழ்நூல்களில் “திரு” என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் எது?

A) திருப்பாவை

B) திருவாஞ்சிக்களம்

C) திருவிளையாடல்

D) திருக்குறள்

விளக்கம்: திருக்குறள் அறத்ததுப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பகுப்புகளைக் கொண்ட “திரு” என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் ஆகும்.

100) பொருத்துக.

அ. அறத்துப்பால் – 1] 70 அதிகாரம்

ஆ. பொருட்பால் – 2] 25 அதிகாரம்

இ. இன்பத்துப்பால் – 3] 38 அதிகாரம்

A) 3, 1, 2

B) 3, 2, 1

C) 1, 3, 2

D) 2, 3, 1

விளக்கம்: அறம் – 38, பொருள் – 70, இன்பம் – 25 என அதிகாரங்களைக் கொண்ட திருக்குறள் மொத்தம் 1330 குறள்களை உடையது. இதற்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உண்டு.

101) திருவள்ளுவர் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவர்?

A) 1500

B) 2500

C) 2000

D) 3000

விளக்கம்: திருவள்ளுவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர். இவர் முதற்பாவலர், பொய்யில் புலவர், சொந்நாப்போதார் என்றும் அழைப்பர்.

102) ‘வாய்மை’ எனப்படுவது எது?

A) அன்பாகப் பேசுதல்

B) தீங்குதராத சொற்களைப் பேசுதல்

C) தமிழில் பேசுதல்

D) சத்தமாக பேசுதல்

விளக்கம்: “வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீமை இலாத சொலல்” என்னும் குறளில் வாய்மை என்பது தீங்குதராத சொற்களைப் பேசுதல் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

103) யாருடைய செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்?

A) மன்னன்

B) பொறாமை இல்லாதவன்

C) பொறாமை உள்ளவன்

D) செல்வந்தன்

விளக்கம்: “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செல்வியான்

கேடும் நினைக்கப் படும்”

பொறாமை கொண்டவருடைய செல்வமும், பொறாமை இல்லாதவருடைய

வறுமையும் சான்றோரால் ஆராயப்படும்.

104) பொருட்செல்வம்

A) பொரு + செல்வம்

B) பொருட் + செல்வம்

C) பொருள் + செல்வம்

D) பொரும் + செல்வம்

விளக்கம்: பொருட்செல்வம் = பொருள் + செல்வம் எனப் பிரியும்.

105) யாதெனின் பிரித்தெழுதுக.

A) யா + எனின்

B) யாது + தெனின்

C) ய + தெனின்

D) யாது + எனின்

விளக்கம்: யாதெனின் = யாது + எனின் எனப் பிரியும்.

106) தன் + நெஞ்சு சேர்த்தெழுதுக.

A) தன்நெஞ்சு

B) தன்னெஞ்சு

C) தானெஞ்சு

D) தனெஞ்சு

விளக்கம்: தன் + நெஞ்சு = தன்நெஞ்சு எனப் புணரும்.

107) தீது + உண்டோ-சேர்த்தெழுதுக.

A) தீதுண்டோ

B) தீதுஉண்டோ

C) தீதிண்டே

D) தீயுண்டோ

விளக்கம்: தீது + உண்டோ = தீதுண்டோ எனப் புணரும்.

Exit mobile version