7th Tamil Unit 1 Questions

7th Tamil Unit 1 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 7th Tamil Unit 1 Questions With Answers Uploaded Below.

1) உலக மொழிகளில் தொன்மையான நம் தமிழ்மொழி வாழ்வுக்குத் தேவையான எவற்றை கூறுவதாக “எங்கள் தமிழ்” செய்யுள் பகுதியில் இடம் பெற்றிருக்கிறது?

a) அறநெறி

b) நல்லொழுக்கம்

c) அன்பு

d) அன்பு மற்றும் அறம்

விளக்கம்: தமிழ் மொழி தொன்மையும் இனிமையும் வளமையும் உடையது. இது வாழ்வுக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் கூறுகிறது.

2) “இன்பம் பொழிகிற வானொலியாம்

எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்” என்னும் பாடல் வரிகளை இயற்றியவர் யார்?

a) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

b) கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

c) மீனாட்சி சுந்தனார்

d) பாரதியார்

விளக்கம்: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் அவர்கள் “எங்கள் தமிழ்” என்னும் தலைப்பின் கீழ் இப்பாடலை இயற்றியுள்ளார். நம் தமிழ் மொழியானது அச்சத்தை நீக்கி இன்பம் தருகிற தேன் போன்ற மொழி எனக் கூறுகிறார்.

3) நம் காப்பிய மொழியான தமிழ்மொழி தமிழ் மக்களின் எதுவாக விளங்குகிறது?

a) கண்

b) உயிர்

c) மூளை

d) குரல்

விளக்கம்: அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிற தமிழ்மொழி, தமிழ் மக்களின் குரலாக விளங்குகிறது. அது அனைவரிடமும் அன்பையும், அறத்தையும் தூண்டுகிறது.

4) கொல்லாமையைக் குறிக்கோளாகவும் எதை கொள்கையாகவும் கொண்டு,

எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவுகிறது?

a) பொய்யாமை

b) பொறுமை

c) ஆன்மீகம்

d) கொல்லாமை

விளக்கம்: கொல்லாமையைக் குறிக்கோளாகவும், பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும். இத்தகைய பெருமை வாய்ந்தது நம் தமிழ் மொழி.

5) “பொருள்பெற யாரையும் புகழாது

போற்றாதரையும் இகழாது” என்னும் வரிகள் எந்த தலைப்பின் கீழ் இயற்றப்பட்டது?

a) மலைக்கள்ளன்

b) இன்பத்தமிழ்

c) என்கதை

d) எங்கள் தமிழ்

விளக்கம்: தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். தம்மை போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார். இக்கருத்தை உள்ளடக்கிய இப்பாடல் வரிகள் நாமக்கல் கவிஞர் இயற்றிய “எங்கள் தமிழ்” என்னும் பாடல் தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ளது.

6) எங்கள் தமிழ்மொழி எதைப் போன்ற மொழி என நாமக்கல் கவிஞர் “எங்கள் தமிழ்” என்னும் பாடலில் குறிப்பிட்டுள்ளார்?

a) அமுதம்

b) தேன்

c) இமயம்

d) அ மற்றும் ஆ

விளக்கம்: எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழி என நாமக்கல் கவிஞர் கூறுகிறார். மேலும் இது அருள்நெறி அறிவைத் தரும் என்றும் உரைக்கிறார்.

7) தவறானதைத் தேர்க.

a) ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்

b) குறி – குறிக்கோள்

c) நோன்பு – மனநோய்

d) பொழிகிற – தருகின்ற

விளக்கம்: ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்

குறி – குறிக்கோள், நோன்பு – விரதம், பொழிகிற – தருகின்ற

8) “காந்தியக்கவிஞர்” என அழைக்கப்படுபவர் யார்?

a) கவிமணி

b) நாமக்கல் கவிஞர்

c) விவேகானந்தர்

d) பாரதியார்

விளக்கம்: காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியத்தைப் பின்பற்றியதால் நாமக்கல் கவிஞர் வெ. இராலிங்கனார் “கந்தியக் கவிஞர்”என்றும் அழைக்கப்படுகிறார்.

9) கூற்றுகளை ஆராய்க.

1. நாமக்கல் கவிஞர், தமிழறிஞர், கவிஞர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்

2. இவர் தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கினார்

a) 1 மட்டும் சரி

b) 2 மட்டும் சரி

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: நாமக்கல் கவிஞர் எனப் பெயர் பெற்ற வெ.இராமலிங்கனார் தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர், தமிழஞர் மற்றும் விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்கிறார்.

10) “எங்கள் தமிழ்” என்னும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

a) மலைக்கள்ளன்

b) என்கதை

c) சங்கொலி

d) நாமக்கல் கவிஞர் பாடல்கள்

விளக்கம்: நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டதே “எங்கள் தமிழ்”என்னும் பாடல். மலைக்கள்ளன், என்கதை, சங்கொலி ஆகியவை நாமக்கல் கவிஞரின் பிற நூல்களாகும்.

11) “கத்தி யின்றி ரத்த மின்றி

யுத்த மொன்று வருகுது……” என்னும் பாடலை இயற்றியவர் யார்?

a) பாரதியார்

b) பாரதிதாசன்

c) கவிமணி

d) வெ. இராமலிங்கனார்

விளக்கம்: விடுதலைப்போராட்ட வீரரான வெ. இராலிங்கனார் பல முறை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டணை பெற்றுள்ளார். இவர் இயற்றியதே “கத்தி யின்றி ரத்த மின்றி” எனத் தொடங்கும் பாடல்.

12) “குரலாகும்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.

a) குரல் + யாகும்

b) குரல் + ஆகும்

c) குரல் + லாகும்

d) கு + ஆகும்

விளக்கம்: குரல் + ஆகும் = குரலாகும். “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் புணர்ச்சி விதிப்படி “ல்” மற்றும் “ஆ” புணர்ந்து “லா” என மாறியது.

13) வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதுக.

a) வான்ஒலி

b) வானொலி

c) வாவொலி

d) வானொலி

விளக்கம்: வான் + ஒலி = வானொலி. “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் புணர்ச்சி விதிப்படி “ன்” மற்றும் “ஞ” புணர்ந்து “னொ” என மாறியது.

14) “நெறி” என்னும் சொல்லின் பொருள் என்ன?

a) வழி

b) குறிக்கோள்

c) கொள்கை

d) அறம்

விளக்கம்: “நெறி” என்பதன் பொருள் “வழி” ஆகும்.

15) தவறான கூற்றைத் தேர்க.

a) பாடலின் முதல் எழுத்து ஒன்றிவருவது – மோனை

b) பாடலின் இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது – எதுகை

c) பாடலின் இறுதி எழுத்து ஒன்றிவருவது – இயைபு

d) பாடலின் இறுதி எழுத்து ஒன்றிவருவது – அந்தாதி

விளக்கம்: ஒரு பாடலின் முடிவிலுள்ள எழுத்து, அசை, சீர் அல்லது அடி ஆனது அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமைந்தால் அது “அந்தாதி” எனப்படும்.

16) சரியானதை தேர்வு செய்க.

a) ஒப்புமை – ஒப்புதல்

b) முகில் – மோதிரம்

c) அற்புதம் – வியப்பு

d) உபகாரி – உதவி

விளக்கம்: ஒப்புமை – இணை, முகில் – மேகம், அற்புதம் – வியப்பு, உபகாரி – வள்ளல்

17) “ஒன்றல்ல இரண்டல்ல” என்னும் பாடலின் ஆசியரியர் யார்?

a) மருதகாசி

b) உடுமலை நாராயணகவி

c) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

d) முடியரசன்

விளக்கம்: தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமின்றிப் பொருள்வளமும் அருள்வளமும் நிறைந்தது. அதேபோல் இலக்கிய வளமும், இலக்கண வளமும் நிறைந்தது. இதுபோல தமிழ்நாட்டின் பெருமைகள் ஒன்றிரண்டல்ல பலவாகும் என்பதை உணர்த்தும் “ஒன்றல்ல இரண்டல்ல” என்னும் பாடலை உடுமலை நாராயணக் கவி இயற்றினார்.

18) “முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி – வான்

முகிலினும் புகழ்படைத்த உபகாரி……” என்னும் வரிகளுக்கு சொந்தக்காரர் யார்?

a) உடுமலை நாராயணக்கவி

b) மருதகாசி

c) கல்யாணசுந்தரம்

d) பாரதிதாசன்

விளக்கம்: முல்லைக்குத் தேர் தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்றான்வள்ளல் வேள்பாரி. புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல். இக்கருத்தை கொண்ட இப்பாடல் வரிகள் உடுமலை நாராணயக்கவி இயற்றிய ஒன்றல்ல இரண்டல்ல பாடலில் இடம்பெற்றுள்ளது.

19) “ஒன்றல்ல இரண்டல்ல” பாடலின் கருத்துப்படி தவறான இணையைத் தேர்க

a) தேன்மணம் கமழுவது – தென்றல்

b) சுவை மிகுந்தது – அமுதம்

c) பொன் போன்றது – தானியக் கதிர்கள்

d) பகைவரை வென்றதைப் பாடுவது – பரணி

விளக்கம்: தேன் மணம் கமழுவது – தென்றது, சுவை மிகுந்தது – கனிகள், பொன் போன்றது – கனிகள், பொன் போன்றது – தானியக் கதிர்கள், பகைவரை வென்றதைப் பாடுவது – பரணி இலக்கியம்.

20) பின்வருவனவற்றுள் எது இசைப்பாடல்?

a) திருக்குறள்

b) பரணி

c) பரிபாடல்

d) அகநானூறு

விளக்கம்: திருக்குறள் – பொதுமை கருத்துக்களை கூறும் நூல்

பரணி – பகைவரை வென்றதைப் பாடுவது

பரிபாடல் – ஓர் இசை பாடல் வடிவிலான நூல்

அகநானூறு – எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

21) “பகுத்தறிவுக் கவிராயர்” என்று புகழப்படுபவர் யார்?

a) பாரதியார்

b) பாரதிதாசன்

c) உடுமலை நாரயணகவி

d) கல்யாணசுந்தரம்

விளக்கம்: தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்பியதால் உடுமலை நாராயணக் கவி “பகுத்தறிவுக் கவிராயர்” எனப் போற்றப்படுகிறார்.

22) நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர் யார்?

a) முடியரசன்

b) சி.மணி

c) சி.சு. செல்லப்பா

d) உடுமலை நாரயணக்கவி

விளக்கம்: இவர் தமிழ்த் திரைப்பட பாடாலாசிரியராகவும், நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகளை எழுதிய பெருமை இவரையே சாரும்.

23) வானில் கீழ்க்கண்ட எது திரண்டால் மழை பொழியும்?

a) அகில்

b) முகில்

c) துயில்

d) துகில்

விளக்கம்: வானில் மேகக்கூட்டங்கள் திரண்டால் மழை பொழியும். மேகத்தை குறிக்கும் மற்றொரு சொல் முகில்.

24) “இரண்டல்ல” என்னும் செல்லைப் பிரித்து எழுதுக.

a) இரண்டு + டல்ல

b) இரண் + அல்ல

c) இரண்டு + இல்ல

d) இரண்டு + அல்ல

விளக்கம்: இரண்டல்ல = இரண்டு + அல்ல. “உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்” மற்றும் “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிகளின் படி, இரண்டு + அல்ல என்பது இரண்டல்ல என புணருகிறது.

25) “தந்துதவும்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.

a) தந்து + உதவும்

b) தா + உதவும்

c) தந்து + தவும்

d) தந்தூ + உதவும்

விளக்கம்: தந்துதவும் = தந்து + உதவும். தந்து + உதவும் என்பது “உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்” மற்றும் “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிகளின் படி, என்பது தந்துதவும் என புணரும்.

26) ஒப்புமை + இல்லாத என்பதைச் சேர்த்தெழுதுக.

a) ஒப்புமைஇல்லாத

b) ஒப்பில்லாத

c) ஒப்புமையில்லாத

d) ஒப்புஇல்லாத

விளக்கம்: ஒப்புமை + இல்லாத = ஒப்பில்லாத. “ஈறு போதல்” விதிப்படி ‘மை’ விதி கெட்டு ஒப்பு இல்லாத என்றானது. பின் “உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்” என்னும் விதிப்படி ஒப்(ப் + உ) + இல்லாத என்பது ஒப்ப் + இல்லாத என்றாது. இறுதியாக “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிப்படி, ஒப்பில்லாத என்றானது.

27) எதன் மூலம் மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகிறது?

a) ஓலைச்சுவடி

b) இலக்கியங்கள்

c) மொழி

d) நூலகம்

விளக்கம்: தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழி. அதுவே மனிதரின் சிந்தனையை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது.

28) தமிழ்மொழி எத்தனை கூறுகளைக் கொண்டது?

a) 2

b) 3

c) 4

d) 5

விளக்கம்: தமிழ்மொழி பழமையும் புதுமையும் நிறைந்த சிறந்த மொழி. இது பேச்சுமொழி, எழுத்துமொழி என இரு கூறுகளைக் கொண்டது. இவ்விரண்டு கூறுகளுக்கும் இடையே பல ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் உள்ளன.

29) கூற்று: தற்போது பல மொழிகள் உலகில் உள்ளன.

காரணம்: தொடக்க காலத்தில் மனிதர்கள் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்தனர். அவர்கள் தங்களுக்குள் தனித்தனியாக ஒலிக்குறியீடுகளை உருவாக்கினர்.

a) கூற்று சரி, காரணம் தவறு.

b) கூற்று தவறு, காரணம் சரி

c) கூற்று, காரணம் இரண்டும் சரி, மேலும் கூற்றுக்கு காரணம் சரியான விளக்கம்

d) கூற்று, காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: பல குழுக்களாக வாழ்ந்த மக்கள் அவர்களுக்குள் தனித்தனியான ஒலிக் குறியீடுகளை உருவாக்கிக் கொண்டனர். இதன் காரணமாகவே மொழிகள் பல தோன்றின.

30) மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு காரணமானது எது?

a) மொழி

b) பேச்சு மொழி

c) இலக்கியம்

d) எழுத்துமொழி

விளக்கம்: நேரில் காண இயலாத நிலையில் செய்திகளைத் தெரிவிக்க எழுத்துமொழி உதவுகிறது. மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு எழுத்து மொழியே காரணமாகிறது.

31) மொழியின் முதல்நிலை எனப்படுவது எது?

a) கேட்பது

b) பேசுவது

c) எழுதுவதும், படிப்பதும்

d) பேசுவதும், கேட்பதும்

விளக்கம்: வாயினால் பேசப்பட்டு பிறரால் கேட்டு உணரப்படுவதே பேச்சு மொழியாகும். இவ்வாறு பேசுவதும் கேட்பதும் மொழியில் முதல் நிலை. கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது எழுத்துமொழி.எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் 2ம் நிலை ஆகும்.

32) எந்த வடிவில் அமையும் பேச்சுமொழியானது உடனடி பயன்பாட்டிற்கு உரியது?

a) பாடல்

b) இசை

d) வரி

d) ஒலி

விளக்கம்: வரிவடிவில் அமையும் எழுத்து மொழியானது நீண்டகாலப் பயன்பாட்டிற்கு உரியது. இதேபோல், ஒலி வடிவில் அமையும் பேச்சுமொழி உடனடி பயன்பாட்டிற்கு உரியது.

33) மொழியின் உயிர்நாடியாக விளங்குவது எது?

a) எழுத்து

b) கருத்து

c) பேச்சு மொழி

d) எழுத்துமொழி

விளக்கம்: மொழியின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழி ஆகும். இது உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தும். பேச்சுமொழி, அதன் கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது.

34) சரியான விடையை தேர்வு செய்க.

1. பேச்சுமொழி மொழியின் உயிர்நாடி ஆகும்.

2. பேசப்படும் சொற்கள் மட்டுமின்றிப் பேசுபவரின் உடல்மொழி ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சுமொழியின் சிறப்பு கூறுகள்.

a) 1 மட்டும் சரி

b) 2 மட்டும் சரி

c) இரண்டும் தவறு

d) இரண்டும் சரி

விளக்கம்: பேச்சுமொழியில் ஒரு சொல்லை அழுத்திக் கூறும்போது ஒரு பொருளையும், சாராணமாக கூறும் போது வேறு பொருளையும் உணர்த்துகிறது. அதே போல் பேசுபவரின் உடல்மொழி மற்றும் முகப்பாவனை போன்றவை நினைத்த கருத்தை சரியாக உணர்த்த உதவுகிறது.

35) “குழந்தையை நல்லா கவனிங்க” என்னும் கூற்றிலுள்ள “கவனி” என்னும் சொல்லின் பொருள் என்ன?

a) பார்

b) பேணுதல்

c) உதவு

d) பாதுகாப்பு

விளக்கம்: இதேபோல் “நில் கவனி செல்” என்ற கூற்றில் “கவனி” என்பது கவனித்துச் செல் என்னும் “பாதுகாப்பு பொருளை உணத்துகிறது”.

36) “என்னால் போக முடியாது” என்னும் தொடரை ஓங்கி ஒலிக்கும் போது அது உணர்த்துவது என்ன?

a) மறுப்பு

b) இயலாமை

c) அறியாமை

d) அ மற்றும் ஆ

விளக்கம்: இதை மென்மையாக “என்னால் போக முடியாது” என்று கூறும் போது அது இயலாமையை உணர்த்துகிறது. ஒலியின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப அதன் பொருள் மாறுபடுகிறது.

37) “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?

a) புறநானூறு

b) திருக்குறள்

c) அகநானூறு

d) நன்னூல்

விளக்கம்: இவ்வரிகள் நன்னூல் நூற்பாவில் இடம்பெற்றுள்ளன. இதன் பொருள், சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால், பொருள் வேறுபடும் என்பதாகும்.

38) எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காண்பது ஆகியனவும் மொழியே எனக் கூறியவர் யார்?

a) சி.சு. செல்லப்பா

b) துரை ராசு

c) நா. பிச்சமூர்த்தி

d) மு. வரதராசனார்

விளக்கம்: “பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி, எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அந்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவை அன்றி வேறுவகையான மொழிநிலைகளும் உண்டு. எண்ணப்படுவது , நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியனவும் மொழியே” என மு. வரதராசனார் கூறுகிறார்.

39) பேச்சு வழக்கில் மாறுபடக்கூடிய ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

a) கிளைமொழி

b) வட்டார மொழி

c) எழுத்துமொழி

d) a மற்றும் b

விளக்கம்: பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். (எ.கா) “இருக்கிறது” என்னும் சொல்லை ‘இருக்கு’, ‘இருக்குது’இ ‘கீது’ என்று தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் பேசப்படுகிறது.

40) வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கை தடைகள் போன்றவற்றால் பேசும் மொழியில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டு பதிய மொழி உருவாதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) கிளை மொழி

b) வட்டார மொழி

c) மூலமொழி

d) எழுத்துமொழி

விளக்கம்: ஒரே மொழியை பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்வதுண்டு. வாழும் இடத்தில் நில அமைப்பு, இயற்கைத் தடைகள் போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்படும். அவ்வாறு உருவாகும் புதிய மொழிகள் கிளைமொழிகள் எனப்படும்.

41) தமிழின் கிளைமொழிகளில் பொருந்தாது எது?

a) மலையாளம்

b) கன்னடம்

c) தெலுங்கு

d) மராத்தி

விளக்கம்: கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகளாகும்.

42) ஒரு மொழி நீண்ட காலம் நிலைபெறுவதற்கு எது இன்றியமையாதது?

a) வரி வடிவம்

b) எழுத்து வடிவம்

c) ஒலி வடிவம்

d) அனைத்தும்

விளக்கம்: பேச்சு மொழிக்கு நாம் தந்த வரி வடிவமே எழுத்து மொழியாகும். ஒரு மொழியானது நீண்ட காலம் நிலைபெறுவதற்கு எழுத்து வடிவம் இன்றியமையாதது. பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்கள் எழுத்து வடிவில் இருப்பதால் தான் நம்மால் இன்றும் படிக்க முடிகிறது.

43) எழுத்து மொழியில் காலம், இடம் ஆகியவற்றிற்கு ஏற்ப சொற்கள் சிதைவதில்லை. ஆனால் எது மாறுபடும்?

a) பேச்சு வழக்கு

b) கருத்து

c) சொல்

d) வரி வடிவம்

விளக்கம்: எழுத்துமொழியில் காலம், இடம் ஆகியவற்றுக்கு ஏற்ப சொற்கள் சிதைவதில்லை. ஆனால் அதன் வரி வடிவம் மாறுபடும்.

44) தவறானதைத் தேர்க

a) பேச்சுமொழியில் சொற்கள் குறுகி ஒலிக்கும். எழுத்துமொழியில் சொற்கள் முழுமையாக எழுதப்படும்

b) பேச்சுமொழியில் உணர்ச்சிக்கூறுகள் அதிகம். எழுத்துமொழியில் உணரச்சிக்கூறுகள் குறைவு.

c) பேச்சுமொழியில் உடல்மொழியும் குரல் ஏற்றத்தாழ்வும் இணைவதால் அல்லது எழுத்துமொழியை விட எளிமையாகக் கருத்தை உணர்த்துகிறது.

d) பேச்சுமொழி திருக்குறளை மொழிநடையில் அமைக்கிறது.

விளக்கம்: எழுத்துமொழி சிந்தித்து எழுதப்படுவதாலும் பிழைகள் ஏற்பட்டால் திருத்திக்கொள்ள வாய்ப்பு இருப்பதாலும் திருத்தமான மொழிநடையில் அமைகிறது. ஆனால் பேச்சுமொழியில் சிந்திக்க நேரம் குறைவு மற்றும் திருத்த இயலாததால் திருத்தமான இலக்கிய நடையில் அமைவதில்லை.

45) இரட்டை வழக்கு மொழி என்றால் என்ன?

1. பேச்சு மொழிக்கும் மற்றும் எழுத்து மொழிக்கும் இடையே சிறிய வேறுபாடு இருக்கும்.

2. பேச்சு மொழிக்கும் மற்றும் எழுத்து மொழிக்கும் இடையேயான பெரிய வேறுபாடு இருக்கும்.

a) 1 சரி

b) 2 சரி

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி (Diglossic Language) எனப்படும்.

46) இரட்டை வழக்கு மொழியை, “உலக வழக்கு” எனக் கூறியவர் யார்?

a) தொல்காப்பியர்

b) அகத்தியர்

c) திருவள்ளுவர்

d) நக்கீரர்

விளக்கம்: இரட்டை வழக்கு மொழியை உலக வழக்கு செய்யுள் வழக்கு என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்

47) குழந்தைகளுக்குத் தாய்மொழி எப்போது அறிமுகமாகிறது?

a) கேட்டல், பேசுதல்

b) பேசுதல், எழுதுதல்

c) படித்தல், எழுதுதல்

d) கேட்டல், எழுதுதல்

விளக்கம்: கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையில் குழந்தைகளுக்கு தாய்மொழி அறிமுகமாகிறது. படித்தல், எழுதுதல் என்னும் இரண்டாம் நிலையில் பிற மொழிகள் அறிமாகின்றன.

48) மொழித்தூய்மை எதில் பேணப்படுகிறது?

a) பேச்சுமொழி

b) வட்டார மொழி

c) கிளைமொழி

d) எழுத்துமொழி

விளக்கம்: பேச்சுமொழி மக்களின் மனநிலைக்கு ஏற்ப அமைவதால் விரைந்து மாற்றமடைகிறது. எழுத்துமொhழி பெரும்பாலும் மாறுவதில்லை. மேலும், பேச்சுமொழியில் பிறமொழிச் சொற்கள் மிகுதியாக இடம்பெறுகின்றன.

49) பேச்சுமொழியில் ‘இ’ என்பது எவ்வாறு மாற்றி ஒலிக்கப்படுகிறது?

a) ஈ

b) ஐ

c) எ

d) a மற்றும் b

விளக்கம்: பேச்சுமொழியில் ‘இ’ என்பதை ‘எ’ என்றும் ‘உ’ என்பதை ‘ஒ’ என்றும் ஒலிப்பர்.

(எ.கா) ‘இலை’ என்பதை ‘எல’ என்றும் ‘உலகம்’ என்பதை ‘ஒலகம்’ என்றும் ஒலிப்பர்.

50) ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்கு எது தேவை?

a) ஒலி வடிவம்

b) வரி வடிவம்

c) எழுத்து வடிவம்

d) பேச்சு மொழி

விளக்கம்: ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்கு பேச்சு மொழியும், காலம் கடந்து வாழ்வதற்கு எழுத்து மொழியும் தேவைப்படுகிறது.

51) தமிழ் எவ்வகை மொழி?

a) இரட்டை வழக்கு மொழி

b) உலக வழக்கு மொழி

c) செய்யுள் வழக்கு மொழி

d) அனைத்தும்

விளக்கம்: மேடைப்பேச்சு, வானொலி, ஊடகம் போன்றவற்றில் தமிழ் பேச்சு மொழியாகவும், நாளேடுகள், பருவ இதழ்கள் போன்றவற்றில் எழுத்து மொழியாகவும் செயல்பட்டு வருவதால் தமிழ் இரட்டை வழக்கு மொழி ஆகும்.

52) மேடைப்பேச்சிலும், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் எது அக்காலத்தில் பயன்பட்டு வந்தது?

a) இயற்றமிழ்

b) இசைத்தமிழ்

c) நாடகத் தமிழ்

d) இலக்கியத் தமிழ்

விளக்கம்: அக்காலத்தில் மேடைப் பேச்சிலும், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் எழுத்துமொழியாகிய இலக்கியத்தமிழே பயன்பட்டு வந்தது. ஆனால் இக்காலத்தில் அந்நிலை பெரும்பாலும் மாறி பேச்சுத் தமிழே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

53) பேச்சுமொழி நீண்ட காலம் நிலைத்து நிற்க காரணமாக அமைவது எது?

a) ஒலிப்பதிவு

b) ஒளிப்பதிவு

c) a மற்றும் b

d) பேச்சுமொழி நீண்ட காலம் நிலைக்காது

விளக்கம்: இக்காலத்தில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் சான்றோர்களின் உரைகள் ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன. இதன் காரணமாக பேச்சுமொழியும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

54) “எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்

இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்” என்பது யாருடைய ஆசை?

a) பாரதியார்

b) பாவேந்தர் பாரதிதாசன்

c) முடியரசன்

d) வாணிதாசன்

விளக்கம்: எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும், இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும், வெளியுலகில் சிந்தனையில் புதிதுபுதிதாக விளைந்துள்ள அனைத்திற்கும் தமிழில் பெயர்கள் காணவும், செந்தமிழைச் செழுந்தமிழாய் செய்வதுவும் வேண்டும் என பாரதிதாசன் ஆசை கொண்டார்.

55) மொழியின் முதல் நிலை பேசுதல் மற்றும் _________ ஆகியனவாகும்?

a) படித்தல்

b) கேட்டல்

c) எழுதுதல்

d) வரைதல்

விளக்கம்: மொழியின் முதல் நிலை, பேசுதல், கேட்டல் மொழியின் இரண்டாம் நிலை, படித்தல், எழுதுதல்

56) சிறு சிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை எவை?

a) கிளை மொழிகள்

b) எழுத்து மொழி

c) பேச்சு மொழி

d) சொலவடைகள்

விளக்கம்: சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வருபவை. இவை பேச்சுமொழியின் அழகியலையும் பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிருக்கும்.

57) பொருட்செறிவுமிக்கச் சொலவடைகளை யார் தம் பேச்சில் இயல்பாய் பயன்படுத்துகின்றனர்?

a) மருத நில மக்கள்

b) நகர்புற மக்கள்

c) தேவர்கள்

d) நாட்டுப்புற மக்கள்

விளக்கம்: பொருட்செறிவுமிக்க சொலடைகளை நாட்டுப்புற மக்கள தம் பேச்சில் இயல்பாகப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயன்படுத்துவது தொன்மை வாய்ந்த மொழிகளுக்கே உரிய சிறப்பாகும்.

58) பொருத்துக.

a. அணை உடைஞ்சு போனாலும் வெள்ளம் அழுதாலும் வராது – 1. எதிர்ப்பு

b. வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் ஜென்ம பகை – 2. ஓட்டம் பிடித்தல்

c. உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும் – 3. திரும்பி வராது

d. நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டம் – 4. மதிப்பு

a) 3, 1, 4, 2

b) 1, 3, 4, 2

c) 3, 1, 2, 4

d) 3, 4, 1, 2

விளக்கம்: 1. அணை உடைஞ்சு போனாலும் வெள்ளம் அழுதாலும் வராது – திரும்பி வராது

2. வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் ஜென்ம பகை – எதிர்ப்பு

3. உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும் – மதிப்பு

4. நினைச்சதாம் கழுதை எழுத்ததாம் ஓட்டம் – ஓட்டம் பிடித்தல்

59) “ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்” என்ற சொலவடை கூறும் கருத்து என்ன?

a) வேகம்

b) கெட்டுபோதல்

c) பதுங்குதல்

d) நஷ்டம்

விளக்கம்: ஒரு அந்துப்பூச்சி இருந்தால் போதும், அது பல்கி பெருகி மொத்த நெல்லையும் கெடுத்துவிடும் என்பதே இதன் பொருள்.

60) தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

a) 2

b) 3

c) 4

d) 10

விளக்கம்: தமிழ் எழுத்து முதலெழுத்து சார்பெழுத்து என இருவகைப்படும். முதலெழுத்தில் 30 எழுத்துக்களும், சார்பெழுத்தில் 10 வகையும் உள்ளன.

61) முதலெழுத்துகள் என்பவை எவை?

a) உயிரெழுத்து, உயிர்மெய் எழுத்து

b) உயிர்மெய் எழுத்து, மெய் எழுத்து

c) உயிரெழுத்து, ஆயுத எழுத்து

d) உயிரெழுத்து, மெய்யெழுத்து

விளக்கம்: உயிரெழுத்துக்கள் 12 மற்றும் மெய்யெழுத்துகள் 18 ஆகிய முப்பது எழுத்துக்களும் முதலெழுத்துகள் எனப்படுகின்றன.

62) வல்லின உகரங்கள் சொல்லின் இறுதியில் வரும்போது, தனக்குரிய ஓசையிலிருந்து

குறைந்து ஒலிக்கும் உகரம் எவ்வாறு அழைக்கப்படும்?

a) குற்றியலிகரம்

b) குற்றியலுகரம்

c) உயிர்த்தொடர் குற்றியலுகரம்

d) நெடில்தொடர் குற்றியலுகரம்

விளக்கம்: கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, தனக்குரிய ஓசையிலிருந்து குறைந்து ஒலித்தால் அது குற்றியலுகரம் எனப்படும்.

63) குற்றியலுகரம் – பிரித்தெழுதுக.

a) குற்றம் + இகரம்

b) குறுமை + உகரம்

c) குறுமை + இயல் + உகரம்

d) குறுமை + உகரம்

விளக்கம்: குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம். ஈறுபோதல் விதிப்படி “மை விகுதி கெட்டு குறு + இயல் + உகரம் என்றானது. பின் “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி, குற் + இயல் + உகரம் என்றானது. “தன்னொற்றிரட்டல்” என்னும் விதிப்படி குற்(ற்) + இயல் + உகரம் என்றானது. இறுதியாக உடல்மேல் “உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிப்படி குற்றியலுகரம் என்றானது.

64) கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது,

ஒரு மாத்திரை அளவிலிருந்து எவ்வாறு மாறி ஒலிக்கும்?

a) 1 மாத்திரையாகவே ஒலிக்கும்

b) 2 மாத்திரையாக உயர்ந்து ஒலிக்கும்

c) 1½ மாத்திரையாக உயர்ந்து ஒலிக்கும்

d) ½ மாத்திரையாக குறைந்து ஒலிக்கும்

விளக்கம்: கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து ½ மாத்திரையாக ஒலிக்கும். இது குற்றியலுகம் எனப்படும்.

65) தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் எத்தனை மாத்திரை அளவுக்கு

ஒலிக்கும்?

a) 1

b) 2

c) ½

d) a மற்றும் b

விளக்கம்: தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும். இதே போல், வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும்

66) பொருந்தாததைத் தேர்வு செய்க.

a) காசு

b) பயறு

c) சால்பு

d) மாவு

விளக்கம்: காசு, பயறு, சால்பு ஆகியவை குற்றிலுகரச் சொற்கள். மாவு என்பது முற்றியலுகரம் ஆகும். வு என்பது வல்லின உகரமல்ல. அதனால் அது தனது ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

67) தமிழில் எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்கு எத்தனை எழுத்துச் சாரியைப் பயன்படுத்தலாம்?

a) 3

b) 2

c) 4

d) 7

விளக்கம்: தமிழில் எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்கு கரம், கான், காரம், கேனம் ஆகிய 4 எழுத்து சாரியைப் பயன்படுத்துகிறோம்.

68) தமிழ் எழுத்துக்களை அதன் எழுத்து சாரியையுடன் பொருத்துக.

a. குறில் – 1. கேனம்

b. நெடில் – 2. காரம்

c. குறில், நெடில் – 3. கான்

d. ஆயுதம் – 4. கரம்

a) 3, 4, 2, 1

b) 2, 3, 4, 1

c) 4, 3, 2, 1

d) 4, 3, 1, 2

விளக்கம்: 1. குறில் – கரம்

2. நெடில் – கான்

3. குறில், நெடில் – காரம்

4. ஆயுதம் – கேனம்

69) பொருத்துக.

a. அகரம், இகரம், உகரம், ககரம், மகரம் – 1. நெடில்

b. ஐகான், ஒளகான் – 2. ஆயுதம்

c. மகாரம், ஏகாரம், ஐகாரம், ஒளகாரம் – 3. குறில்

d. அஃகேனம் – 4. குறில், நெடில்

a) 3, 1, 4, 2

b) 1, 3, 4, 2

c) 3, 1, 2, 4

d) 3, 2, 4, 1

விளக்கம்: அகரம், இகரம், உகரம், ககரம், மகரம் – குறில்

ஐகான், ஒளகான்- நெடில்

மகாரம், ஏகாரம், ஐகாரம், ஒளகாரம் – குறில், நெடில்

அஃகேனம் – ஆயுதம்

70) குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

a) 4

b) 2

c) 5

d) 6

விளக்கம்: குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு ஆறு வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. நெடில் தொடர் குற்றியலுகரம் 2. ஆய்தத் தொடர் குற்றியலுகரம் 3. உயிர்த் தொடர் குற்றியலுகரம் 4. வன் தொடர் குற்றியலுகரம் 5. மென் தொடர் குற்றியலுகரம் 6. இடைத் தொடர் குற்றியலுகரம்

71) சரியான கூற்றை தேர்வு செய்க.

1. தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் நெடில் தொடர் குற்றிலுகரம்

2. இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டுமே அமையும் (எ.கா) பாகு, மாசு, பாடு, காடு, ஆறு.

a) 1 மட்டும் சரி

b) 2 மட்டும் சரி

c) இரண்டும் தவறு

d) இரண்டும் சரி

விளக்கம்: எப்போதும் நெடில் தொடர்க் குற்றியலுகரம் ஈரெழுத்துச் சொல்லாகவே மட்டுமே அமையும். அவை தனிநெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உதாரணமாக காது என்ற சொல்லில் கா என்ற தனிநெடிலைத் தொடர்ந்து து என்ற குற்றியலுகரச் சொல் வருகிறது.

72) முப்பாற் புள்ளியைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படும்?

a) உயிர்த் தொடர் குற்றியலுகரம்

b) இடைத் தொடர் குற்றியலுகரம்

c) ஆய்தத் தொடர் குற்றியலுகரம்

d) வன் தொடர் குற்றியலுகரம்

விளக்கம்: முப்பாற்புள்ளி அல்லது அஃகேனம் அல்லது தனிநிலை எனப்படும். ஃ என்ற ஆயுத எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆய்தத் தொடர் குற்றியலுகரம் எனப்படும். உதாரணம்: எஃகு, அஃது.

73) தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எது?

a) உயிர்த் தொடர் குற்றியலுகரம்

b) நெடில் தொடர் குற்றியலுகரம்

c) மென் தொடர் குற்றியலுகரம்

d) இடைத் தொடர் குற்றியலுகரம்

விளக்கம்: தனி நெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த் தொடர் குற்றியலுகரம் எனப்படும் (எ.கா) அரசு (ர=ர் + அ)

74) க், ச், ட், த், ப், ற் ஆகிய 6 மெய் எழுத்தைத் தொடர்ந்து வருவது எது?

a) மென் தொடர் குற்றியலுகரம்

b) வன் தொடர் குற்றியலுகரம்

c) இடைத் தொடர் குற்றியலுகரம்

d) ஆய்தத் தொடர் குற்றியலுகரம்

விளக்கம்: வல்லின மெய்யெழுத்துக்களான க், ச், ட், த், ப், ற் ஆகிய 6 எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் வன் தொடர் குற்றியலுகரம் ஆகும். (எ.கா) . பாக்கு, பேச்சு

75) மென் தொடர் குற்றியலுகரத்தில் வரும் மெய்யெழுத்துகள் எவை?

a) க், ச், ட், த், ப், ற்

b) கு, சு, டு, து, பு, று

c) ய், ர், ல், வ், ழ், ள்

d) ங், ஞ், ண், ந், ம், ன்

விளக்கம்: மெல்லின மெய்யழுத்துக்களான ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய 6 எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் மென் தொடர் குற்றியலுகரம் ஆகும்.

76) இடைத் தொடர் குற்றியலுகரம் என்பது என்ன?

a) க், ச், ட், த், ப், ற் எழுத்துக்களை தொடர்ந்து வருவது.

b) கு, சு, டு, து, பு, று எழுத்துக்களை தொடர்ந்து வருவது.

c) ய், ர், ல், வ், ழ், ள் எழுத்துக்களை தொடர்ந்து வருவது.

d) ங், ஞ், ண், ந், ம், ன் எழுத்துக்களை தொடர்ந்து வருவது.

விளக்கம்: இடையின (ய், ர், ல், வ், ழ், ள) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத் தொடர் குற்றியலுகரம் எனப்படும் (எ.கா) எய்து, மார்பு

77) பொருத்தமற்றதை தேர்வு செய்க.

a) ஒன்பது

b) வரலாறு

c) உப்பு

d) கயிறு

விளக்கம்: ஒன்பது, வரலாறு, கயிறு ஆகியவை உயிர்த் தொடர் குற்றியலுகரச் சொற்கள். உப்பு என்பது வன் தொடர் குற்றியலுகரச் சொல்லாகும்.

78) சரியான விடையை தேர்வு செய்க.

1. வ என்னும் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.

2. ந் என்னும் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.

a) 1 சரி

b) 2 சரி

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு

விளக்கம்: வ் என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை. மேலும் ந்-ஐ தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் உண்டு (எ.கா) பந்து

79) எந்த எழுத்துகள் இறுதியாக அமையும் இடைத் தொடர் குற்றியலுகரச் சொற்கள் இல்லை?

a) கு, சு, டு

b) து, பு, று

c) சு, டு, று

d) சு, டு, கு

விளக்கம்: சு, டு, று ஆகியவை இறுதியாக அடையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்கள் இல்லை. அதேபோல், கு, து, பு ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச்சொற்கள் உண்டு

80) பிரித்தெழுதுக – வரகியாது

a) வர + கியாது

b) வரகி + யாது

c) வரம் + யாது

d) வரகு + யாது

விளக்கம்: வரகியாது = வரகு + யாது. வரகு + யாது-இதில் முதல் சொல்லின் இறுதியிலுள்ள ‘கு’ என்றும் ‘கி’ என்று ஒலிக்கிறது. அதாவது, உகரமானது இகரமாக திரிந்து ஒலிக்கிறது. குற்றியலிகரத்தின் படி வரகு + யாது என்பது வரகியாது என புணரும்.

81) குற்றியலிகரம் – பிரித்தெழுதுக.

a) குறு + இயல் + இகரம்

b) குறுமை + இயல் + இகரம்

c) குறுமை + இயல் + உகரம்

d) குறுமை + இயல் + உகரம்

விளக்கம்: குற்றியலிகரம் = குறுமை + இயல் + கரம் ஈறுபோதல் விதிப்படி மை விகுதி கெட்டு குறு + இயல் + இகரம் என்றானது. பின் உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி. கு(ற் + உ) + இயல் + இகரம் = குற் + இயல் + இகரம் என்றானது. பின் தன்றொட்டிரட்டல் என்னும் விதிப்படி குற்(ற்) + இயல் + இகரம் என்றானது. இறுதியாக உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி குற்றியலிகரம் என்றானது.

82) குற்றியலுகரம் தனது ஒரு மாத்திரைலிருந்து எத்தனை மாத்திரையாக மாறி ஒலிக்கும்?

a) 2 மாத்திரை

b) 1½ மாத்திரை

c) ½ மாத்திரை

d) 1 மாத்திரை

விளக்கம்: குற்றியலிகரம் தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறுகி அரை மாத்தரை அளவில் ஒலிக்கும். இங்கு உகரம் ஆனது இகரமாக மாறி குறைந்து ஒலிக்கிறது.

83) தவறானதைத் தேர்க.

a) நாடியாது

b) கேண்மியா

c) சென்மியா

d) சால்பு

விளக்கம்: நாடியாது, கேண்மியா, சென்மியா ஆகியவை குற்றியலிகரச் சொற்கள், சால்பு என்பது குற்றியலுகரச் சொல்

84) எந்த சார்பெழுத்து தற்போது உரைநடை வழக்கில் இல்லை. ஆனால் இலக்கியங்களில் மட்டுமே உள்ளது?

a) குற்றியலுகரம்

b) குற்றியலிகரம்

c) ஐகாரகுறுக்கம்

d) ஒளகாரக் குறுக்கம்

விளக்கம்: குற்றியலிகரத்தில் பயன்படுத்தப்படும் சார்பெழுத்தானது தற்போது உரைநடை வழக்கிழந்து இலக்கிய வழக்கில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

85) தவறானதைத் தேர்க.

a) கேண்மியா = கேள் + மியா

b) செல்மியா = செல் + மியா

c) குற்றியலிகரம் = குறுமை + இயல் + இகரம்

d) குற்றியலுகரம் = குறு + இயல் + உகரம்

விளக்கம்: குற்றியலுகரம் = குறு + இயல் + உகரம் எனப்பிரியும்.

86) திணை எத்தனை வகைப்படும்?

a) 2

b) 3

c) 4

d) 6

விளக்கம்: திணை 2 வகைப்படும். அவை உயர்திணை மற்றும் அஃறிணை. ஆறு அறிவுடைய மனிதர்களை உயர்திணை என்பர். பறவைகள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருள்களை அஃறிணை என்பர்

87) முக்கனிகள் எனப்படுபவை யாவை?

a) மா, பலா, தென்னை

b) பலா, வாழை, ஆப்பிள்

c) திராட்சை, பலா, மா

d) மா, வாழை, பலா

விளக்கம்: மா, பலா, வாழை ஆகிய மூன்று கனிகளும் முக்கனிகள் எனப்படுகின்றன.

88) பொருந்தாததை தேர்க

a) முத்தமிழ் – இயற்றமிழ், இசைத்தமிழ், பைந்தமிழ்

b) நாற்றிசை – கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு

c) ஐவகை நிலம் – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

d) அறுசுவை – இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, கசப்பு, துவர்ப்பு

விளக்கம்: முத்தமிழ் எனப்படுபவை இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகியவை ஆகும்.

89) ஒலியியல் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் எது?

a) Journalism

b) Puppetry

c) Orthography

d) Phonology

விளக்கம்: Journalism – இதழியல்

Puppetry – பொம்மலாட்டம்

Orthography – எழுத்திலக்கணம்

90) “Linguistics” என்பதன் பொருள் என்ன?

a) ஊடகம்

b) பருவ இதழ்

c) உரையாடல்

d) மொழியியல்

விளக்கம்: ஊடகம் – Media, பருவ இதழ் – Magazine, உரையாடல் – Dialogue, மொழியியல் – Linguistics

91) பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.

a) பசு

b) வீடு

c) ஆறு

d) கரு

விளக்கம்: ஆறு என்பது நெடில் தொடர்க் குற்றியலுகரம் பசு, விடு, கரு ஆகியவை முற்றிலுகரச் சொற்கள் ஆகும்.

92) பொருந்தாத சொற்களை எழுதுக.

a) பாக்கு

b) பஞ்சு

c) பாட்டு

d) பத்து

விளக்கம்: பாக்கு, பாட்டு, பத்து ஆகியவை வன்தொடர்க் குற்றிலுகரம். பஞ்சு என்பது மென்தொடர் குற்றியலுகரமாகும்.

93) பொருந்தாத சொற்களை எழுதுக.

a) ஆறு

b) மாசு

c) பாகு

d) அது

விளக்கம்: ஆறு, மாசு, பாகு ஆகியவை நெடில்தொடர்க் குற்றியலுகரங்கள். அது என்பது முற்றியலுகரம் ஆகும்.

94) பொருந்தாத சொல்லை எழுதுக

a) அரசு

b) எய்து

c) மூழ்கு

d) மார்பு

விளக்கம்: அரசு என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் எய்து, மூழ்கு, மார்பு ஆகியவை இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

95) பொருந்தாத சொல்லை எழுதுக.

a) பண்பு

b) மஞ்சு

c) கண்டு

d) எஃகு

விளக்கம்: பண்பு, மஞ்சு, கண்டு மென்தொடர்க் குற்றிலுகரச் சொற்கள். எஃகு என்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரமாகும்.

96) கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துக்கள் சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்போது எவ்வாறு ஒலிக்கும்?

a) ½ மாத்திரை

b) 1 மாத்திரை

c) 1 ½மாத்திரை

d) 2 மாத்திரை

விளக்கம்: கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துக்கள் சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்போது முழுமையாக 1 மாத்திரை அளவில் ஒலிக்கும். சொல்லின் இறுதியில் வரும்போது ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரையாகவே ஒலிக்கிறது.

97) ஒன்று என்று குற்றியலுகரச் சொல்லின் மாத்திரை அளவைக் கண்டுபிடியுங்கள்?

a) 1 ½

b) 2 ½

c) 3

d) 2

விளக்கம்: ஒன்று என்ற குற்றியலுகரச் சொல்லின் மாத்திரை அளவு 2. ஒ-1 மாத்திரை. ன்-½ மாத்திரை று-½ மாத்திரை (சொல்லின் இறுதியில் வருவதால று தனது 1 மாத்திரை அளவிலிருந்து ½ மாத்திரையாக குறைந்து ஒலிக்கும்)

98) பொருந்தாததைத் தேர்க.

a) கழுகு

b) சிங்கம்

c) மலை

d) ஆண்

விளக்கம்: கழுகு, சிங்கம், மலை ஆகியவை அஃறிணை ஆண் என்பது ஆறறிவுக் கொண்ட மனிதனைக் குறிப்பதால் அது உயர்திணை

99) தவறானைத் தேர்க.

a) மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது.

b) எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.

c) பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி

d) பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம்.

விளக்கம்: பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது பேச்சுமொழி. மேலும், பேச்சுமொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.

100) எனப்படுவது + யாது என்பது எவ்வாறு புணரும்?

a) எனப்படுவதுயாது

b) எனப்படுவதியாது

c) எனப்படுவதாது

d) எனப்படுவதுதியாது

விளக்கம்: எனப்படுவது + யாது = எனப்படுவதியாது. எனப்படுவது என்பதிலுள்ள உகரமானது இகரமாக திரிந்து எனப்படுவதியாது என மாறுகிறது.

Exit mobile version