6th Tamil Unit 9 Questions

6th Tamil Unit 9 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 6th Tamil Unit 9 Questions With Answers Uploaded Below.

1. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. இரக்கம் என்பது தலைசிறந்த பண்பு. மனிதரிடம் மட்டுமன்று, மற்ற எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொள்ள வேண்டும்.

II. பிற உயிர்களைத் தம்முயிர் போல் எண்ணிக் காக்க வேண்டும். அதுவே சான்றோர் போற்றும் உயிர் இரக்கம் ஆகும்.

III. அவ்விரக்கமே மனித குலத்தை வாழ வைக்கிறது. உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் புத்தர்.

A) I, II, III அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

2. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் புத்தர்பிரான்.

II. பிம்பிசார மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன.

III. அவற்றின் நடுவில் அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியைப் புத்தர் தம் தோளில் சுமந்து சென்றார். யாகசாலையை அடைந்தார்.

IV. மன்னனுக்கு அறவுரை கூறினார். நாடெங்கும் உயிர்க்கொலையைத் தடுத்து நிறுத்தினார்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

3. நின்றவர் கண்டு நடுங்கினாரே – ஐயன் நேரிலே நிற்கவும் அஞ்சினாரே; துன்று கருணை நிறைந்த வள்ளல் – அங்கு சொன்ன மொழிகளைக் கேளும் ஐயா! வாழும் உயிரை வாங்கிவிடல் – இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும்; வீழும் உடலை எழுப்புதலோ – ஒரு வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா! – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தொடுவானம், வாணிதாசன்

B) ஆசிய ஜோதி, கவிமணி தேசிக விநாயகனார்

C) மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

D) பாரதி அறுபத்தாறு, பாரதியார்

4. யாரும் விரும்புவது இன்னுயிராம்; – அவர் என்றுமே காப்பதும் அன்னதேயாம்; பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப் – படும் பாடு முழுதும் அறிந்திலீரோ? நேரிய உள்ளம் இரங்கிடுமேல் – இந்த நீள்நிலம் முற்றுமே ஆண்டிடலாம்; பாரினில் மாரி பொழிந்திடவே – வயல் பக்குவ மாவது அறிந்திலீரோ? – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தொடுவானம், வாணிதாசன்

B) ஆசிய ஜோதி, கவிமணி தேசிக விநாயகனார்

C) மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

D) பாரதி அறுபத்தாறு, பாரதியார்

5. காட்டும் கருணை உடையவரே – என்றும் கண்ணிய வாழ்வை உடையவராம்; வாட்டும் உலகில் வருந்திடுவார்- இந்த மர்மம் அறியாத மூடரையா! காடு மலையெலாம் மேய்ந்துவந்து – ஆடுதன் கன்று வருந்திடப் பாலையெல்லாம் தேடிஉம் மக்களை ஊட்டுவதும் – ஒரு தீய செயலென எண்ணினீரோ? – என்ற பாடலை கவிமணி தேசிக விநாயகனார் எந்த நூலைத் தழுவி எழுதினார்?

A) லீவ்ஸ் ஆஃப் கிராஸ், வால்ட் விட்மன்

B) த ட்ரேஜடி ஆஃப் மக்பெத், வில்லியம் சேக்சுபியர்

C) லைட் ஆஃப் ஆசியா, எட்வின் அர்னால்டு

D) இவற்றில் ஏதுமில்லை

6. அம்புவி மீதில்இவ் ஆடுகளும் – உம்மை அண்டிப் பிழைக்கும் உயிரலவோ? நம்பி இருப்பவர் கும்பி எரிந்திடில் நன்மை உமக்கு வருமோ ஐயா? ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் – ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ? தீயவும் நல்லவும் செய்தவரை – விட்டுச் செல்வது ஒருநாளும் இல்லைஐயா! – என்ற பாடலை கவிமணி தேசிக விநாயகனார் எந்த நூலைத் தழுவி எழுதினார்?

A) லீவ்ஸ் ஆஃப் கிராஸ், வால்ட் விட்மன்

B) த ட்ரேஜடி ஆஃப் மக்பெத், வில்லியம் சேக்சுபியர்

C) லைட் ஆஃப் ஆசியா, எட்வின் அர்னால்டு

D) இவற்றில் ஏதுமில்லை

7. ஆதலால் தீவினை செய்யவேண்டா – ஏழை ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டா; பூதலந் தன்னை நரகம்அது ஆக்கிடும் புத்தியை விட்டுப் பிழையும்ஐயா! – ஆசிய ஜோதி என்னும் இந்நூலின் ஆசிரியர் கவிமணி தேசிக விநாயகனார். ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி இந்நூல் எழுதப்பட்டது. இந்நூல் _____________ அவர்களின் வரலாற்றைக் கூறுகிறது.

A) சமண முனிவர்

B) புத்தர்

C) சிவன்

D) இயேசு கிறிஸ்து

8. சொல்லும் பொருளும் – சரியாகப் பொருந்தியது எது?

I. அஞ்சினர் – பயந்தனர்

II. வீழும் – விழும்

III. நீள்நிலம் – பரந்த உலகம்

IV. முற்றும் – முழுவதும்

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

9. சொல்லும் பொருளும் – சரியாகப் பொருந்தியது எது?

I. மாரி – மழை

II. கும்பி – வயிறு

III. பூதலம் – பூமி

IV. பார் – உலகம்

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

10. வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லார்க்கும் எளிய செயல். ஆனால், இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல். எல்லாரும் தம் உயிரைப் பெரிதாக மதித்துப் பாதுகாக்கின்றனர். எறும்பு கூடத் தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுவதை அறியாதவர் உண்டோ? – என்று கூறியவர் யார்?

A) சமணத் துறவி

B) புத்தர்

C) பாண்டிய மன்னன்

D) அசோகர்

11. நேர்மையான இரக்க மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையையும் ஆட்சி செய்ய முடியும். உலகில் மழை பெய்வதால் வயல் பக்குவம் அடைவதை அறியாதவர் உண்டோ? எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர். இந்த மறைபொருளை அறியாதவர் பிற உயிர்களை வருத்தித் தாமும் துன்புறுவர். – என்று கூறியவர் யார்?

A) சமணத் துறவி

B) புத்தர்

C) பாண்டிய மன்னன்

D) அசோகர்

12. காடுமலை எல்லாம் மேய்ந்து வருகிறது ஆடு. அது தன் குட்டி வருந்திடும் வகையில் பாலை எல்லாம் மக்களுக்குத் தருகிறது. இதனைத் தீயசெயல் என்று நீங்கள் கருதுகிறீர்களா? இந்த உலகில் ஆடுகளும் உங்களை நம்பி இருக்கும் உயிர்கள் அன்றோ? நம்மை நம்பி இருப்பவரின் வயிறு எரியும்வகையில் நடந்து கொள்வதால் உங்களுக்கு நன்மை கிடைக்குமா? – என்று கூறியவர் யார்?

A) இளங்கோவடிகள்

B) வள்ளலார்

C) பாரதியார்

D) புத்தர்

13. ஆயிரம் பாவங்கள் செய்துவிட்டு, ஆட்டின் உயிரை எடுப்பதால் பாவங்கள் நீங்கி விடுமா? ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது. ஆகையால், தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள். இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள். – என்று கூறியவர் யார்?

A) இளங்கோவடிகள்

B) வள்ளலார்

C) பாரதியார்

D) புத்தர்

14. தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். ___________ ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

A) 15

B) 28

C) 33

D) 40

15. கீழ்க்கண்டவர்களுள் கவிமணி என்னும் பட்டம் பெற்றவர் யார்?

A) பாரதியார்

B) தேசிக விநாயகனார்

C) இராமலிங்கனார்

D) வாணிதாசன்

16. ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் __________ என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

A) வில்லியம் சேக்சுபியர்

B) வால்ட் விட்மன்

C) எட்வின் அர்னால்டு

D) இவர்களில் யாருமில்லை

17. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் _____________?

A) ஜீவ ஜோதி

B) ஆசிய ஜோதி

C) நவ ஜோதி

D) ஜீவன் ஜோதி

18. நேர்மையான வாழ்வை வாழ்பவர் _____________?

A) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

B) உயிர்களைத் துன்புறுத்துபவர்

C) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்

D) தம் குடும்பத்தையே எண்ணிவாழ்பவர்

19. ஒருவர் செய்யக் கூடாதது ______________?

A) நல்வினை

B) தீவினை

C) பிறவினை

D) தன்வினை

20. ‘எளிதாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________?

A) எளிது + தாகும்

B) எளி + தாகும்

C) எளிது + ஆகும்

D) எளிதா + ஆகும்

21. ‘பாலையெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________?

A) பாலை + யெல்லாம்

B) பாலை + எல்லாம்

C) பாலை + எலாம்

D) பா + எல்லாம்

22. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________?

A) இன்உயிர்

B) இனியஉயிர்

C) இன்னுயிர்

D) இனிமைஉயிர்

23. மலை + எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________?

A) மலைஎலாம்

B) மலையெலாம்

C) மலையெல்லாம்

D) மலைஎல்லாம்

24. எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துதல் வேண்டும். அதுவே மனிதநேயம் ஆகும். மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை, “தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென முயலுநர் உண்மையானே” என்று கூறும் பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) அகநானூறு

B) கலித்தொகை

C) புறநானூறு

D) நளவெண்பா

25. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” – என்று கூறியவர் யார்?

A) திரு.வி.க

B) இளங்கோவடிகள்

C) சயம்கொண்டார்

D) வள்ளலார்

26. வள்ளலார் வாழ்வில் நடந்ததாக கூறப்படும் நிகழ்வில் சரியானது எது?

I. வள்ளலார் தம் இளம் வயதில் ஒருநாள் நடந்து வந்து கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்ததால் களைப்பு ஏற்பட்டது. எனவே ஓய்வெடுக்க விரும்பினார். வழியில் சத்திரம் ஒன்று இருந்தது. அதன் திண்ணையில் படுத்து உறங்கினார்.

II. அப்போது ஒருவன் அங்கு வந்தான். படுத்திருந்த வள்ளலாரின் காதில் கடுக்கன் இருப்பதைக் கண்டான். அதனைத் தனதாக்கிக் கொள்ள முடிவெடுத்தான். தங்கக்கடுக்கனை மெதுவாகக் கழற்றினான். அவனது செயலை அறிந்தும் வள்ளலார் கண் மூடியபடியே படுத்திருந்தார்.

III. ஒரு கடுக்கனைக் கழற்றியவுடன், மறுகாதில் உள்ள கடுக்கனை அவன் கழற்றுவதற்கு ஏதுவாகத் திரும்பிப் படுத்தார். அவன் அதையும் கழற்றிக் கொண்டு, அந்த இடத்தைவிட்டு அகன்று செல்ல முற்பட்டான்.

IV. அப்போது வள்ளலார் மென்மையான குரலில், “அப்பா, இவை இரண்டும் தங்கக்கடுக்கன்கள். குறைந்த விலைக்கு விற்றுவிடாதே! மேலும், ஒரு கடுக்கனுடன் சென்றால் உன்னைத் திருடன் என எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள். எனவேதான் இரண்டு கடுக்கன்களையும் நீ எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பாகத் திரும்பிப் படுத்தேன்” என்றார். வள்ளலார் கூறியதைக் கேட்ட அவன் வெட்கித் தலைகுனிந்தான். இவ்வாறு தம்பொருளைக் கவர்ந்தவரிடம் கூட அன்பு காட்டியவர் வள்ளலார்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) I, II, III, IV அனைத்தும் தவறு

27. வள்ளலார் மக்களின் பசிப்பிணியைக் கண்டு உள்ளம் வாடினார். அதனை நீக்க விரும்பினார். தம் பெருமுயற்சியால் _____________ என்ற இடத்தில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார்.

A) அரியலூர்

B) பெரம்பலூர்

C) வடலூர்

D) வண்டலூர்

28. பசித்தோருக்கு உணவு வழங்கும் வள்ளலாரின் மனிதநேயச் செயல் இன்றும் _____________ என்ற இடத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

A) அரியலூர்

B) பெரம்பலூர்

C) வடலூர்

D) வண்டலூர்

29. கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது?

மக்களுக்குச் செய்யும் பணியே இறைவனுக்குச் செய்யும் பணி என்று வாழ்ந்தார். அதனால் அமைதிக்கான நோபல் பரிசு அவரைத் தேடி வந்தது. இவர் தொழுநோய் பாதித்தவர்களுடன் இருந்து அவர்களுக்கு உதவிகள் பல செய்துள்ளார்.

A) மலாலா யூசப்சையி

B) கைலாஷ் சத்யார்த்தி

C) அன்னை தெரசா

D) இவர்களில் யாருமில்லை

30. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை – என்று கூறியவர் யார்?

A) அன்னை தெரசா

B) கைலாஷ் சத்யார்த்தி

C) பாரதியார்

D) காந்தியடிகள்

31. குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது – என்று கூறியவர் யார்?

A) கைலாஷ் சத்யார்த்தி

B) விவேகானந்தர்

C) ஜவஹர்லால் நேரு

D) இவர்களில் யாருமில்லை

32. கைலாஷ் சத்யார்த்தி அவர்களைப்பற்றிய சரியான கூற்று எது?

I. அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி.

II. குழந்தைகளைப் பாதுகாப்போம் என்னும் இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்தின் மூலம் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கப் பாடுபட்டு வருகிறார். கடந்த முப்பது ஆண்டுகளில் எண்பத்து ஆறாயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார்.

III. உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் 80,000 கி.மீ தூரம் நடைப்பயணம் சென்றுள்ளார். குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைக்காக நாடு கடந்து பரப்புரை ஆற்றி வருகிறார்.

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

33. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் ____________?

A) மனித வாழ்க்கை

B) மனித உரிமை

C) மனித நேயம்

D) மனித உடைமை

34. தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் ____________ காட்டியவர் வள்ளலார்.

A) கோபம்

B) வெறுப்பு

C) கவலை

D) அன்பு

35. அன்னை தெரசாவிற்கு ____________ க்கான ‘நோபல் பரிசு’ கிடைத்தது.

A) பொருளாதாரம்

B) இயற்பியல்

C) மருத்துவம்

D) அமைதி

36. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ___________?

A) குழந்தைகளைப் பாதுகாப்போம்

B) குழந்தைகளை நேசிப்போம்

C) குழந்தைகளை வளர்ப்போம்

D) குழந்தைகள் உதவி மையம்

37. சரியாகப் பொருந்தியது எது?

I. வள்ளலார் – பசிப்பிணி போக்கியவர்

II. கைலாஷ் சத்யார்த்தி – குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்

III. அன்னை தெரசா – நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்

A) I, II, III அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

38. முடிவில் ஒரு தொடக்கம் என்ற கதை தொடர்பான சரியான கூற்று எது?

I. மனித நேயத்தின் மகத்தான சாதனையாகத் தம் மகனின் துடிக்கும் இதயத்தையே கொடையாகத் தந்த இக்கால வள்ளல்கள் தாம் அசோகன் – புஷ்பாஞ்சலி என்ற மருத்துவத் தம்பதியினர். சிறுமிக்குப் பொருத்தப்பட்ட இதயத்திற்குரிய அந்த இளைஞனின் பெயர் ஹிதேந்திரன்.

II. பிறந்த போது பெற்றோரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதால் ஹிதேந்திரன் என்று பெயரிடப்பட்டான்.

III. அவன் இறந்த போது உலகத்தார் இதயங்களை எல்லாம் கொள்ளை கொண்டான். இதயம் கொடுத்து இதயங்களை வென்ற ஹிதேந்திரனை இவ்வுலகம் என்றென்றும் நினைவில் கொள்ளும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

39. கவிஞர்கள் தங்கள் கற்பனைத் திறத்தாலும் புலமையாலும் தாங்கள் இயற்றும் பாடல்களில் அழகைச் சேர்க்கின்றனர். இதனை விளக்குவது அணி இலக்கணம் ஆகும். அணி என்பதற்கு _____________ என்பது பொருள்.

A) அழகு

B) அன்பு

C) வரிசை

D) இவற்றில் ஏதுமில்லை

40. கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது ____________ ஆகும்.

A) அழகு

B) அன்பு

C) வரிசை

D) அணி

41. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும். இதனைத் ____________ என்றும் கூறுவர்.

A) குணம் நவிற்சி அணி

B) தன்மை நவிற்சி அணி

C) இலக்கண நவிற்சி அணி

D) இவற்றில் ஏதுமில்லை

42. தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்? மற்றும் பாடலில் பயின்று வரும் அணி எது?

A) கவிமணி தேசிக விநாயகனார், இயல்பு நவிற்சி அணி

B) பாரதியார், ஏகதேச உருவாக அணி

C) பாரதிதாசன், உவமை அணி

D) வாணிதாசன், வஞ்சப் புகழ்ச்சி அணி

43. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது _________ ஆகும்.

A) வஞ்சப் புகழ்ச்சி அணி

B) உவமை அணி

C) உயர்வு நவிற்சி அணி

D) ஏகதேச உருவாக அணி

44. குளிர்நீரில் குளித்தால் கூதல் அடிக்குமென்று வெந்நீரில் குளித்தால் மேல கருக்குமென்று ஆகாச கங்கை அனல் உறைக்குமென்று பாதாள கங்கையைப் பாடி அழைத்தார் உன் தாத்தா – இந்த பாடலில் பயின்று வரும் அணி எது?

A) இயல்பு நவிற்சி அணி

B) ஏகதேச உருவாக அணி

C) உவமை அணி

D) உயர்வு நவிற்சி அணி

45. ஆறு சக்கரம் நூறு வண்டி, அழகான ரயிலு வண்டி, மாடு கன்னு இல்லாமத்தான் மாயமாத்தான் ஓடுது உப்புப் பாரம் ஏத்தும் வண்டி உப்பிலிப் பாளையம் போகும் வண்டி – இந்த பாடலில் பயின்று வரும் அணி எது?

A) இயல்பு நவிற்சி அணி

B) ஏகதேச உருவாக அணி

C) உவமை அணி

D) உயர்வு நவிற்சி அணி

46. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. மனிதநேயம் – Humanity

II. கருணை – Mercy

III. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை – Transplantation

IV. சரக்குந்து – Lorry

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) IV மட்டும் சரி

47. முடிவில் ஒரு தொடக்கம் என்னும் கதையானது எதனைப் பற்றி விவரிக்கிறது?

A) வாழ்க்கையின் துன்பம்

B) இரத்ததானம்

C) உடல் உறுப்புதானம்

D) கண் தானம்

48. மனித நேயத்தின் மகத்தான சாதனையாக கருதுவது எதனை?

A) இரத்த தானம்

B) நன்கொடை

C) கண் தானம்

D) உடல் உறுப்புதானம்

49. மனித நேயத்தின் மகத்தான சாதனையாக கருதப்படும் உடல் உறுப்பு தானத்துக்கு தம் மகனின் துடிக்கும் இதயத்தையே கொடையாகத் கொடுத்த தம்பதியினரின் பெயர் என்ன?

A) அசோகன் – புஷ்பாஞ்சலி

B) கணேசன் – ராதா

C) ராம்கி – கல்யாணி

D) சுரேந்தர் – நித்யா

50. முடிவில் தொடக்கம் கதையில் யாருக்கு இதயம் தேவைப்பட்டது?

A) இளைஞனுக்கு

B) பெண்ணுக்கு

C) சிறுமிக்கு

D) பெரியவருக்கு

51. முடிவில் தொடக்கம் என்ற கதையில் யாருடைய இதயம் சிறுமிக்கு பொருத்தப்பட்டது?

A) சிறுமியின்

B) பெரியவரின்

C) இளைஞனின்

D) சகோதரனின்

52. சிறுமிக்கு பொறுத்தப்பட்ட இதயத்தை வழங்கிய இளைஞனின் பெயர் என்ன?

A) அசோகன்

B) ஹிதேந்திரன்

C) விஜயேந்திரன்

D) சுரேந்திரன்

53. முடிவில் ஒரு தொடக்கம் கதையில் பாதிக்கப்பட்ட சிறுமி எந்த ஊரை சேர்ந்தவள்?

A) சென்னை

B) திருக்கழுக்குன்றம்

C) பெங்களூரு

D) மும்பை

54. உலகத்தாரின் இதயங்களை கொள்ளை கொண்ட ஹிதேந்திரன் எந்த ஊரினை சார்ந்தவர்?

A) மும்பை

B) திருக்கழுக்குன்றம்

C) மதுரை

D) திருநெல்வேலி

Exit mobile version