6th Tamil Unit 5 Questions

6th Tamil Unit 5 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 6th Tamil Unit 5 Questions With Answers Uploaded Below.

1. நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?

A) திருக்குறள், திருவள்ளுவர்

B) பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்

C) திரிகடுகம், நல்லாதனார்

D) ஆசாரக்கோவை, பெருவாயின் முள்ளியார்

2. ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை நல்லினத் தாரோடு நட்டல் – இவையெட்டும் சொல்லிய ஆசார வித்து – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?

A) திருக்குறள், திருவள்ளுவர்

B) பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்

C) திரிகடுகம், நல்லாதனார்

D) ஆசாரக்கோவை, பெருவாயின் முள்ளியார்

3. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. நன்றியறிதல் – பிறர் செய்த உதவியை மறவாமை

II. ஒப்புரவு – எல்லோரையும் சமமாகப் பேணுதல்

III. நட்டல் – நட்புக் கொள்ளுதல்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

4. பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்; பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்; இனிய சொற்களைப் பேசுதல்; எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்; கல்வி அறிவு பெறுதல்; எல்லோரையும் சமமாகப் பேணுதல்; அறிவுடையவராய் இருத்தல்; நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல் ஆகிய எட்டும் நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் ஆகும் – என்று கூறும் நூல் எது?

A) திருக்குறள், திருவள்ளுவர்

B) பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்

C) திரிகடுகம், நல்லாதனார்

D) ஆசாரக்கோவை, பெருவாயின் முள்ளியார்

5. ஆசாரக்கோவையின் ஆசிரியர் ____________ ஆவார். இவர் பிறந்த ஊர் கயத்தூர்.

A) இளங்கோவடிகள்

B) சீத்தலைச்சாத்தனார்

C) பெருவாயின் முள்ளியார்

D) நல்லாதனார்

6. ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் ______________ வெண்பாக்களைக் கொண்டது.

A) 100

B) 1000

C) 151

D) 301

7. பிறரிடம் நான் ______________ பேசுவேன்.

A) கடுஞ்சொல்

B) இன்சொல்

C) வன்சொல்

D) கொடுஞ்சொல்

8. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது ____________ ஆகும்.

A) வம்பு

B) அமைதி

C) அடக்கம்

D) பொறை

9. அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________.

A) அறிவுடைமை

B) அறிவுஉடைமை

C) அறியுடைமை

D) அறிஉடைமை

10. இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் ____________.

A) இவைஎட்டும்

B) இவையெட்டும்

C) இவ்வெட்டும்

D) இவ்எட்டும்

11. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________.

A) நன்றி + யறிதல்

B) நன்றி + அறிதல்

C) நன்று + அறிதல்

D) நன்று + யறிதல்

12. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.

A) பொறுமை + உடைமை

B) பொறை + யுடைமை

C) பொறு + யுடைமை

D) பொறை + உடைமை

13. தமிழரின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்விலும் _____________ முதன்மையான இடத்தைப் பெறுகின்றன.

A) செய்திகள்

B) சடங்குகள்

C) நாடகங்கள்

D) பாடல்கள்

14. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. இழைத்து – பதித்து

II. பார் – உலகம்

III. பண் – இசை

IV. நந்தவனம் – பூஞ்சோலை

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

15. தொகைச்சொற்களின் விளக்கம் – சரியானது எது?

I. முத்தேன் – கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்

II. முக்கனி – மா, பலா, வாழை

III. முத்தமிழ் – இயல், இசை, நாடகம்

A) I, II, III அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

16. கூற்றுக்கான காரணத்தை ஆராய்க?

கூற்று : தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று. தால் என்பதற்கு நாக்கு என்று பொருள்.

காரணம் : நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால் + ஆட்டு) என்று பெயர்பெற்றது. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.

A) கூற்று சரி காரணம் தவறு

B) கூற்று சரி கூற்றுக்கான காரணமும் சரி

C) கூற்று தவறு காரணம் தவறு

D) கூற்று தவறு காரணம் சரி

17. ‘பாட்டிசைத்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.

A) பாட்டி + சைத்து

B) பாட்டி + இசைத்து

C) பாட்டு + இசைத்து

D) பாட்டு + சைத்து

18. ‘கண்ணுறங்கு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.

A) கண் + உறங்கு

B) கண்ணு + உறங்கு

C) கண் + றங்கு

D) கண்ணு + றங்கு

19. வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ____________.

A) வாழையிலை

B) வாழை இலை

C) வாழைலை

D) வாழிலை

20. கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____________.

A) கைமர்த்தி

B) கைஅமர்த்தி

C) கையமர்த்தி

D) கையைமர்த்தி

21. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் ____________.

A) மறைந்த

B) நிறைந்த

C) குறைந்த

D) தோன்றிய

22. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. விரும்பிக் கொண்டாடுவது விழா எனப்படும். உறவுகள் ஒன்றுகூடிக் கொண்டாடும் விழாக்கள் மனத்திற்கு மகிழ்வைத்தரும்;

II. மனிதரிடையே ஒற்றுமையை வளர்க்கும். தமிழரின் நாகரிகம், வீரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

III. விழாக்கள் நமது பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கின்றன.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

23. தமிழர் திருநாள் என்று போற்றப்படும் விழா எது?

A) பொங்கல் விழா

B) தீபாவளி

C) புத்தாண்டு விழா

D) இவற்றில் ஏதுமில்லை

24. உழவர்கள் _____________ திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத்திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர்.

A) மாசி

B) ஆடி

C) பங்குனி

D) ஐப்பசி

25. போகித் திருநாள் – சரியான கூற்று எது?

I. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” (நன்னூல் நூற்பா-462) என்பது ஆன்றோர் மொழி.

II. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் (போக்கி) போகித் திருநாள்.

III. இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

26. வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப் பண்டிகை _______________ விழாவாகக் கொண்டாடப்பட்டது.

A) இந்திர

B) அசுரர்

C) சிவ தரிசன

D) இவற்றில் ஏதுமில்லை

27. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

I. தை மாதத்தின் முதல்நாள் பொங்கல் திருநாள் ஆகும்.

II. தை முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது. தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகிறது.

III. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல். மாடுகள் உழவர்களின் செல்வமாக மதிக்கப்படுகின்றன. மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்னும் பொருளும் உண்டு.

IV. மாட்டுப்பொங்கல் நாளிலோ அதற்கு அடுத்த நாளிலோ சில ஊர்களில் மஞ்சுவிரட்டு நடைபெறும். மஞ்சுவிரட்டு என்பது மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டு மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் என்றும் அழைக்கப்படுகிறது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) I, II, III, IV அனைத்தும் தவறு

28. திருவள்ளுவர் கி.மு (பொ.ஆ.மு) _____________ இல் பிறந்தவர்.

A) 101

B) 100

C) 51

D) 31

(குறிப்பு – திருவள்ளுவராண்டைக் கணக்கிட நடைமுறை ஆண்டுடன் 31 ஐக் கூட்டிக்கொள்ள வேண்டும். (எ.கா.) 2021 + 31 = 2052)

29. அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ______________ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

A) லோரி

B) மகரசங்கராந்தி

C) உத்தராயன்

D) பொங்கல்

30. அறுவடைத் திருநாள் பஞ்சாப் மாநிலத்தில் ______________ என்று கொண்டாடப்படுகிறது.

A) லோரி

B) மகரசங்கராந்தி

C) உத்தராயன்

D) பொங்கல்

31. அறுவடைத் திருநாள் குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் ____________ என்று கொண்டாடப்படுகிறது.

A) லோரி

B) மகரசங்கராந்தி

C) உத்தராயன்

D) பொங்கல்

32. கதிர் முற்றியதும் ___________ செய்வர்.

A) அறுவடை

B) உரமிடுதல்

C) நடவு

D) களையெடுத்தல்

33. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர்.

A) செடி

B) கொடி

C) தோரணம்

D) அலங்கார வளைவு

34. பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________.

A) பொங்கலன்று

B) பொங்கல்அன்று

C) பொங்கலென்று

D) பொங்கஅன்று

35. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.

A) போகி + பண்டிகை

B) போ + பண்டிகை

C) போகு + பண்டிகை

D) போகிப் + பண்டிகை

36. பழையன கழிதலும் ____________ புகுதலும்.

A) புதியன

B) புதுமை

C) புதிய

D) புதுமையான

37. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண _____________ தரும்.

A) அயர்வு

B) கனவு

C) துன்பம்

D) சோர்வு

38. ______________ என்பவை ஒரு நாட்டின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் உலகிற்கு உணர்த்துவன.

A) நாட்டியங்கள்

B) ஓவியங்கள்

C) இசைகள்

D) கலைகள் இலக்கியங்கள்

39. பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் மற்போரில் சிறந்தவன் அதனால், அவருக்கு __________ என்னும் பெயரும் உண்டு.

A) சித்திரக்கார புலி

B) அவனி சிம்மன்

C) மாமல்லன்

D) கடாரம் கொண்டான்

40. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. ஒரே பாறையில் செதுக்கிச் செய்யப்பட்ட கோவில் இரதம் (தேர்) போன்ற வடிவத்தில் இருக்கிறது. அதனால் இதனை இரதக் கோவில் என்று அழைக்கிறோம்.

II. ஐந்து இரதங்கள் உள்ளதால் பஞ்சபாண்டவர் இரதம் என்று பெயர்.

III. நரசிம்மவர்மன் (மாமல்லன்) ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

41. கீழ்க்கண்டவற்றுள் மாமல்லபுரத்தில் இல்லாத இடங்கள் எவை?

I. அர்ச்சுனன் தபசு, கடற்கரைக் கோவில், பஞ்சபாண்டவர் ரதம்

II. ஒற்றைக்கல் யானை, குகைக்கோவில், புலிக்குகை

III. திருக்கடல் மல்லை, கண்ணனின் வெண்ணெய்ப் பந்து, கலங்கரை விளக்கம்

IV. வள்ளி குகை, கலங்கரை விளக்கம், துறைமுகம்

A) I மட்டும்

B) II மட்டும்

C) III மட்டும்

D) IV மட்டும்

42. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. பல்லவ நாட்டை ஆட்சி செய்தவர் மகேந்திரவர்ம பல்லவர். அவர் காலத்தில் மாமல்லபுரத்துச் சிற்பப் பணி தொடங்கியது.

II. நான்கு தலைமுறைகளில் உருவாக்கப்பட்டவை இந்த மாமல்லபுரத்துச் சிற்பங்கள்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டும் சரி

D) I, II இரண்டும் தவறு

43. கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?

I. அர்ச்சுனன் தபசுச் சிலைக்கு அருகில் உள்ள பாறையில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

II. இவற்றுக்குப் புடைப்புச் சிற்பங்கள் என்று பெயர். இங்கு நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டும் சரி

D) I, II இரண்டும் தவறு

44. ‘அர்ச்சுனன் தபசு’ இதனை ______________ என்றும் கூறுவர்.

A) தபசு குகை

B) பகீரதன் தவம்

C) கிருஷ்ணன் தபசு

D) இவற்றில் ஏதுமில்லை

45. மாமல்லபுரத்தில், இரண்டு பாறைகளுக்கு இடையில் நீர் வடிந்து வந்த அமைப்பு – கீழ்க்கண்டவற்றுள் தொடர்புடையது எது?

A) கால்வாய்

B) ஆகாய கங்கை

C) கல் அருவி

D) நீர் வீழ்ச்சி

46. தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடம் எங்கு உள்ளது?

A) தஞ்சாவூர்

B) மன்னார்குடி

C) கன்னியாகுமரி

D) மாமல்லபுரம் (மகாபலிபுரம்)

47. சிற்பக் கலை வடிவமைப்புகள் __________ வகைப்படும்.

A) 2

B) 3

C) 4

D) 5

48. குடைவரைக் கோயில்கள், ஒற்றைக் கல் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள், புடைப்புச் சிற்பங்கள் – இந்த நான்கு வகை சிற்பக் கலை வடிவமைப்புகள் காணப்படும் ஒரே இடம் _______.

A) தஞ்சாவூர்

B) மன்னார்குடி

C) கன்னியாகுமரி

D) மாமல்லபுரம் (மகாபலிபுரம்)

49. உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை __________ என்கிறோம்.

A) உச்சகரிப்பு பிழை

B) மயங்கொலிகள்

C) ஒலிப்பிழை

D) இவற்றில் ஏதுமில்லை

50. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I) ண, ன, ந, ல, ழ, ள, ர, ற ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

II) க, ச, ட, த, ப, ற ஆகிய ஆறும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

III) எ, ஐ, ஒ, ஒள ஆகிய நான்கும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

IV) இவற்றில் ஏதுமில்லை

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

51. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. ண – நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.

II. ன – நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.

III. ந – நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.

IV. (ட், ண்) (த், ந்) (ற், ன்) ஆகியவை இன எழுத்துகள். இந்த இன எழுத்துகளைக் கொண்டு டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் என்றும், தகரத்தை அடுத்து வரும் நகரம் தந்நகரம் என்றும், றகரத்தை அடுத்து வரும் னகரம் றன்னகரம் என்றும் அழைக்கப்படுகின்றன.

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

52. சரியானது எது? சொற்களில் ண, ன இடம்பெறும் வகை.

I. ட என்னும் எழுத்துக்கு முன் ‘ண்’ வரும் (எ.கா.) கண்டம், வண்டி, நண்டு

II. ற என்னும் எழுத்துக்கு முன் ‘ன்’ வரும் (எ.கா.) மன்றம், நன்றி, கன்று

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

53. ல, ள, ழ – எழுத்துகள் – சரியானது எது?

I. ல- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம்.

II. ள- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம். இது ‘ன’ போல இருப்பதால் ‘னகர ளகரம்’ என்று கூறுவர்.

III. ழ- நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும். (ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்). ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம். இது ‘ம’ போல இருப்பதால் ‘மகர ழகரம்’ என்று கூறுவது இலக்கண மரபு.

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

54. பொருள் வேறுபாடு உணர்க. சரியானது எது?

I. விலை -பொருளின் மதிப்பு

II. விளை – உண்டாக்குதல்

III. விழை – விரும்பு

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

55. பொருள் வேறுபாடு உணர்க. சரியானது எது?

I. இலை – செடியின் இலை

II. இளை – மெலிந்து போதல்

III. இழை – நூல் இழை

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

56. ர, ற – எழுத்துகள் – சரியானது எது?

I. ர – நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்.

II. ற – நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே தவறு

D) I, II இரண்டுமே சரி

57. பொருள் வேறுபாடு உணர்க – சரியானது எது?

I. ஏரி – நீர்நிலை

II. கூரை – வீட்டின் கூரை

III. ஏறி – மேலே ஏறி

IV. கூறை – புடவை

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II, III, IV அனைத்தும் தவறு

C) I, II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

58. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. Welcome – நல்வரவு

II. Readymade Dress – ஆயத்த ஆடை

III. Sculptures – சிற்பங்கள்

IV. Makeup – ஒப்பனை

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

59. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. Chips – சில்லுகள்

II. Tiffin – சிற்றுண்டி

III. Sculptures – சிற்பங்கள்

IV. Makeup – ஒப்பனை

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

60. விடுபட்டதை தேர்வு செய்க.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா _________ ________ _________?

A) மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று

B) நோக்கக் குழையும் விருந்து

C) கள்ளத்தால் கள்வேம் எனல்

D) ஆவது போலக் கெடும்

61. விடுபட்டதை தேர்வு செய்க.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து _________ ________ _________?

A) மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று

B) நோக்கக் குழையும் விருந்து

C) கள்ளத்தால் கள்வேம் எனல்

D) ஆவது போலக் கெடும்

62. விடுபட்டதை தேர்வு செய்க.

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் _________ ________ _________?

A) மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று

B) நோக்கக் குழையும் விருந்து

C) கள்ளத்தால் கள்வேம் எனல்

D) ஆவது போலக் கெடும்

63. விடுபட்டதை தேர்வு செய்க.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து _________ ________ _________?

A) மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று

B) நோக்கக் குழையும் விருந்து

C) கள்ளத்தால் கள்வேம் எனல்

D) ஆவது போலக் கெடும்

64. விடுபட்டதை தேர்வு செய்க.

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை ___________ __________ ___________?

A) நில்லாது நீங்கி விடும்

B) ஊக்கம் உடையான் உழை

C) உள்ளத்து அனையது உயர்வு

D) தள்ளினும் தள்ளாமை நீர்த்து

65. விடுபட்டதை தேர்வு செய்க.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா ___________ __________ ___________?

A) நில்லாது நீங்கி விடும்

B) ஊக்கம் உடையான் உழை

C) உள்ளத்து அனையது உயர்வு

D) தள்ளினும் தள்ளாமை நீர்த்து

66. விடுபட்டதை தேர்வு செய்க.

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் ___________ __________ ___________?

A) நில்லாது நீங்கி விடும்

B) ஊக்கம் உடையான் உழை

C) உள்ளத்து அனையது உயர்வு

D) தள்ளினும் தள்ளாமை நீர்த்து

67. விடுபட்டதை தேர்வு செய்க.

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது ___________ __________ ___________?

A) நில்லாது நீங்கி விடும்

B) ஊக்கம் உடையான் உழை

C) உள்ளத்து அனையது உயர்வு

D) தள்ளினும் தள்ளாமை நீர்த்து

68. விடுபட்டதை தேர்வு செய்க.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் ___________ __________ ___________?

A) பெரும்பயன் இல்லாத சொல்

B) ஊக்கம் உடையான் உழை

C) உள்ளத்து அனையது உயர்வு

D) தள்ளினும் தள்ளாமை நீர்த்து

69. விடுபட்டதை தேர்வு செய்க.

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க ___________ __________ ___________?

A) பெரும்பயன் இல்லாத சொல்

B) சொல்லில் பயன்இலாச் சொல்

C) உள்ளத்து அனையது உயர்வு

D) தள்ளினும் தள்ளாமை நீர்த்து

70. விருந்தினரின் முகம் எப்போது வாடும்?

A) நம் முகம் மாறினால்

B) நம் வீடு மாறினால்

C) நாம் நன்கு வரவேற்றால்

D) நம் முகவரி மாறினால்

71. நிலையான செல்வம் ______________?

A) தங்கம்

B) பணம்

C) ஊக்கம்

D) ஏக்கம்

72. ஆராயும் அறிவு உடையவர்கள் _________________ சொற்களைப் பேசமாட்டார்கள்.

A) உயர்வான

B) விலையற்ற

C) பயன்தராத

D) பயன்உடைய

73. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) பொருளு + டைமை

B) பொரு + ளுடைமை

C) பொருள் + உடைமை

D) பொருள் + ளுடைமை

74. உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

A) உள்ளுவதுஎல்லாம்

B) உள்ளுவதெல்லாம்

C) உள்ளுவத்தெல்லாம்

D) உள்ளுவதுதெல்லாம்

75. பயன் + இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

A) பயனிலா

B) பயன்னில்லா

C) பயன்இலா

D) பயன்இல்லா

76. “ஊக்கமது கைவிடேல்” என்பது ஔவையாரின் ஆத்திசூடி. இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

A) விருந்து புறத்ததாத் தாணுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் அன்று

B) உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்

C) சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல்

D) மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து

6th Tamil Unit 6 Questions

1. கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான், மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேன்மழை, சுரதா

B) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், மீ. ராசேந்திரன்

C) புதிய விடியல்கள், தாரா பாரதி

D) புதியதொரு விதி செய்வோம், முடியரசன்

2. நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன் அவன், ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான் சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான் முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள் எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேன்மழை, சுரதா

B) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், மீ. ராசேந்திரன்

C) புதிய விடியல்கள், தாரா பாரதி

D) புதியதொரு விதி செய்வோம், முடியரசன்

3. பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால் கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான், அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேன்மழை, சுரதா

B) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், மீ. ராசேந்திரன்

C) புதிய விடியல்கள், தாரா பாரதி

D) புதியதொரு விதி செய்வோம், முடியரசன்

4. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. மல்லெடுத்த – வலிமை பெற்ற

II. சமர் – போர்

III. நல்கும் – தரும்

IV. கழனி – வயல்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

5. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. மறம் – வீரம்

II. எக்களிப்பு – பெருமகிழ்ச்சி

III. கலம் – கப்பல்

IV. ஆழி – கடல்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

6. தமிழன் கற்களும் முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான். தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான். ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான். முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்திய நாகரிக மனிதன் அவன். – என்ற கூற்று யாருடையது?

A) திரு.வி.க

B) தாராபாரதி

C) முடியரசன்

D) பாரதியார்

7. பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான். பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக் கொடியை நாட்டினான். ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான். ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள் தோறும் அனுப்பி வணிகம் செய்தான். கப்பலில் உலகை வலம் வந்தான். அவன் எதற்கும் அஞ்சாதவன். ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுபவன். – என்ற கூற்று யாருடையது?

A) திரு.வி.க

B) தாராபாரதி

C) முடியரசன்

D) பாரதியார்

8. முடியரசனின் இயற்பெயர் ________?

A) துரைராசு

B) ராசேந்திரன்

C) சாமிக்கண்ணு

D) காமராசன்

9. பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களின் ஆசிரியர் யார்?

A) ந.காமராசன்

B) பெருஞ்சித்திரனார்

C) திரு.வி.க

D) முடியரசன்

10. ‘திராவிட நாட்டின் வானம்பாடி’ என்று பாராட்டப்பெற்றவர் யார்?

A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

B) நாமக்கல் கவிஞர்

C) முடியரசன்

D) வாலி

11. வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் – அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம் சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்! – என்ற பாடல் வரியின் ஆசிரியர் பெயர் என்ன?

A) பாரதியார்

B) மீ. ராசேந்திரன்

C) தாரா பாரதி

D) முடியரசன்

12. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் ____________?

A) மகிழ்ச்சி

B) துன்பம்

C) வீரம்

D) அழுகை

13. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________?

A) கல் + அடுத்து

B) கல் + எடுத்து

C) கல் + லடுத்து

D) கல் + லெடுத்து

14. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________?

A) நா + னிலம்

B) நான்கு + நிலம்

C) நா + நிலம்

D) நான் + நிலம்

15. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________?

A) நாடென்ற

B) நாடன்ற

C) நாடுஎன்ற

D) நாடுஅன்ற

16. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________?

A) கலம்ஏறி

B) கலமறி

C) கலன்ஏறி

D) கலமேறி

17. விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா, விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா, அடிக்கும்அலை நம்தோழன் – ஐலசா, அருமைமேகம் நமதுகுடை – ஐலசா, வெண்மணலே பஞ்சுமெத்தை – ஐலசா, விண்ணின்இடி காணும்கூத்து – ஐலசா, பாயும்புயல் நம்ஊஞ்சல் – ஐலசா, பனிமூட்டம் உடல்போர்வை – ஐலசா – என்ற பாடல்வரி பற்றிய சரியான கூற்று எது?

A) இப்பாடல் ஜானகிராமன் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

B) இப்பாடல் க. வைகுண்டம் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

C) இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

D) இப்பாடல் சாமிநாதன் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

18. காயும்கதிர்ச் சுடர்கூரை – ஐலசா, கட்டுமரம் வாழும்வீடு – ஐலசா, மின்னல்வரி அரிச்சுவடி – ஐலசா, பிடிக்கும்மீன்கள் நம்பொருள்கள் – ஐலசா, முழுநிலவே கண்ணாடி – ஐலசா, மூச்சடக்கும்நீச்சல் யோகம் – ஐலசா, தொழும்தலைவன் பெருவானம் – ஐலசா, துணிவோடு தொழில்செய்வோம் – ஐலசா – என்ற பாடல்வரி பற்றிய சரியான கூற்று எது?

A) இப்பாடல் ஜானகிராமன் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

B) இப்பாடல் க. வைகுண்டம் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

C) இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

D) இப்பாடல் சாமிநாதன் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

19. நெய்தல் திணை – பற்றிய சரியான கூற்று எது?

I. நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்

II. மக்கள் : பரதவர், பரத்தியர்

III. தொழில் : மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்

IV. பூ : தாழம்பூ

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

20. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. கதிர்ச்சுடர் – கதிரவனின் ஒளி

II. மின்னல்வரி – மின்னல் கோடு

III. அரிச்சுவடி – அகரவரிசை எழுத்துகள்

A) I, II, III அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) III மட்டும் சரி

21. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.

II. ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும்.

A) I சரி II தவறு

B) I தவறு II சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

22. நானிலம் படைத்தவன் என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

A) பூங்கொடி

B) புதியதொரு விதி செய்வோம்

C) புதிய விதி செய்வோம்

D) காவியப்பாவை

23. மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் ___________ அவர்களுக்கு __________ விளக்குகளாகும்.

A) மீனவர்கள், நிலா ஒளியே

B) மீனவர்கள், எண்ணெய் விளக்கே

C) மீனவர்கள், விண்மீன்களே

D) மீனவர்கள், நட்சத்திரங்களே

24. மீன் பிடிக்கக் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு விரிந்த கடலே ______________கடல் அலையே ____________ வெண்மையான மணலே படுத்துறங்கும் ___________.

A) தோழன், பள்ளிக்கூடம், மெத்தை

B) பள்ளிக்கூடம், மெத்தை, தோழன்

C) பள்ளிக்கூடம், தோழன், பஞ்சு மெத்தை

D) பஞ்சு மெத்தை, தோழன், பள்ளிக்கூடம்

25. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு விண்ணின் இடி அவர்கள் காணும் ___________ சீறிவரும் புயலே விளையாடும் _____________ பனிமூட்டம்தான் உடலை சுற்றும் _____________.

A) ஊஞ்சல், துணி, வேடிக்கை

B) வேடிக்கை, ஊஞ்சல், போர்வை

C) கூத்து, ஊஞ்சல், போர்வை

D) வேடிக்கை, போர்வை, ஊஞ்சல்

26. மீனவர்களுக்கு அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் __________ கட்டுமரம்தான் அவர்களது ___________ மின்னல் கோடுகளே ___________.

A) வெளிச்சம், வேலை, பயம்

B) வெளிச்சம், வீடு, பயம்

C) மேற்கூரை, வாழும் வீடு, அடிப்படை பாடம்

D) மேற்கூரை, அடிப்படை பாடம், பயம்

27. மீனவர்களுக்கு வலைவீசிப் பிடிக்கும் மீன்களே _______________ அவர்களுக்கு தெரிகின்ற முழு நிலவு தான் _________________ மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் ___________ ஆகும்.

A) கண்ணாடி, தவம், செல்வம்

B) தவம், செல்வம், கண்ணாடி

C) செல்வம், கண்ணாடி, தவம்

D) கண்ணாடி, செல்வம், தவம்

28. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.

A) கதிர்ச் + சுடர்

B) கதிரின் + சுடர்

C) கதிரவன் + சுடர்

D) கதிர் + சுடர்

29. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________.

A) மூச்சு + அடக்கி

B) மூச் + அடக்கி

C) மூச் + சடக்கி

D) மூச்சை + அடக்கி

30. பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________.

A) பெருமைவனம்

B) பெருவானம்

C) பெருமானம்

D) பேர்வானம்

31. அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________.

A) அடிக்குமலை

B) அடிக்கும் அலை

C) அடிக்கிலை

D) அடியலை

32. பொருள்களை பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் ____________ ஆகும். பொருளை விற்பவர் _________ என்பர். பொருளை வாங்குவோர் __________ ஆவார்.

A) நுகர்வு, நுகர்வோர், வணிகர்

B) வாணிகம், நுகர்வோர், நுகர்வு

C) வணிகம், வணிகர், நுகர்வோர்

D) நுகர்வோர், நுகர்வு, வணிகர்

33. நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்று கொள்வது __________ ஆகும்.

A) உள்நாட்டு வணிகம்

B) வெளிநாட்டு வணிகம்

C) மொத்த வணிகம்

D) பண்டமாற்று வணிகம்

34. நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக __________ பெற்றனர். ஆட்டின் பாலைக் கொடுத்துத் __________ பெற்றனர். இந்தச் செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

A) காய்கறிகள், பழங்கள்

B) பொன், சர்க்கரை

C) உப்பு, தானியம்

D) இவற்றில் ஏதுமில்லை

35. வணிகத்தின் வகைகள் – சரியான கூற்று எது?

I. வணிகத்தைத் தரைவழி வணிகம், நீர்வழி வணிகம் எனப் பிரிக்கலாம். தரைவழியாகப் பொருள்களைக் கொண்டு செல்ல எருது, கழுதை, குதிரை போன்ற விலங்குகளும் வண்டிகளும் பயன்படுத்தப்ட்டன.

II. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும் போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை வணிகச்சாத்து என்பர்.

III. கடல்வழியாகக் கப்பல்கள் மூலம் பொருள்களை அனுப்புவதும் வரவழைப்பதும் நீர்வழி வணிகம் ஆகும்.

IV. கப்பல்கள் வந்து நின்று போகும் இடங்கள் துறைமுகங்கள் ஆகும். துறைமுக நகரங்கள் பட்டினம் என்றும் பாக்கம் என்றும் குறிக்கப்பட்டன.

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

36. தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் ____________ விளங்கியது. அவ்வூர்த் துறைமுகத்தில் பல்வேறு நாட்டுக் கப்பல்கள் தத்தம் நாட்டுக் கொடிகளோடு வந்து நின்றன. அவற்றின் மூலம் வெளிநாட்டுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தமிழ்நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

A) பூம்புகார்

B) கொற்கை

C) மலபார்

D) இவற்றில் ஏதுமில்லை

37. தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து; பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி; ……….; உமணர் போகலும் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) கலித்தொகை

B) நற்றிணை (183)

C) குறுந்தொகை (23)

D) அகநானூறு (149)

38. பாலொடு வந்து கூழொடு பெயரும் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) கலித்தொகை

B) நற்றிணை (183)

C) குறுந்தொகை (23)

D) அகநானூறு (149)

39. பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) கலித்தொகை

B) நற்றிணை (183)

C) குறுந்தொகை (23)

D) அகநானூறு (149)

40. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

I. பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேக்கு, மயில் தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

II. சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

41. _________ இல் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.

A) அரேபியா

B) ஆபிரிக்கா

C) ஐரோப்பா

D) ஆஸ்திரேலியா

42. அக்கால வணிகர்கள் நேர்மையாகத் தொழில் செய்தனர் என்பதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்” – என்று ________ நூல் வணிகரின் நேர்மையைப் பற்றிக் கூறுகிறது.

A) புறநானூறு – 32

B) திருக்குறள் – 120

C) நற்றிணை – 76

D) பட்டினப்பாலை – 65

43. வணிகர்கள் பொருளை வாங்கும்பொழுது உரிய அளவைவிட அதிகமாக வாங்க மாட்டார்கள். பிறருக்குக் கொடுக்கும் பொழுது அளவைக் குறைத்துக் கொடுக்கமாட்டார்கள். எனவே வணிகரை “நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்று ________________ நூல் பாராட்டுகிறது.

A) புறநானூறு

B) திருக்குறள்

C) நற்றிணை

D) பட்டினப்பாலை

44. “கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது” – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) புறநானூறு

B) திருக்குறள்

C) நற்றிணை

D) பட்டினப்பாலை

45. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) புறநானூறு

B) திருக்குறள்

C) நற்றிணை

D) பட்டினப்பாலை

46. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர் ______________?

A) நுகர்வோர்

B) தொழிலாளி

C) முதலீட்டாளர்

D) நெசவாளி

47. வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________?

A) வணிகசாத்து

B) வணிகம்சாத்து

C) வணிகச்சாத்து

D) வணிகத்துசாத்து

48. பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ____________?

A) பண்டமாற்று

B) பண்டம்மாற்று

C) பண்மாற்று

D) பண்டுமாற்று

49. மின்னணு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________?

A) மின் + னணு

B) மின்ன + அணு

C) மின்னல் + அணு

D) மின் + அணு

50. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________?

A) விரி + வடைந்த

B) விரி + அடைந்த

C) விரிவு + அடைந்த

D) விரிவ் + அடைந்த

51. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக.

I. கரன்சி நோட் – பணத்தாள்

II. செக் – காசோலை

III. டிமாண்ட் டிராஃப்ட் – வரவோலை

IV. டிஜிட்டல் – மின்னணு மயம்

A) I, II, III மட்டும் சரி

B) I, II, III, IV அனைத்தும் சரி

C) II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

52. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக.

I. டெபிட் கார்டு – பற்று அட்டை

II. கிரெடிட் கார்டு – கடன் அட்டை

III. ஆன்லைன் ஷாப்பிங் – இணையத்தள வணிகம்

IV. ஈ-காமர்ஸ் – மின்னணு வணிகம்

A) I, II, III மட்டும் சரி

B) III, IV மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

53. “பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்” என்பது ____________ என்பவரின் அறிவுரை.

A) பாரதியார்

B) ஒளவையார்

C) உ.வே.சா

D) நாமக்கல் கவிஞர்

54. கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க.

I. ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.

II. அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும். ஆனால், இன்று ‘உ’ என்னும் எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

55. இவன், அவன், இது, அது – இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை. இவ்வாறு, சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது ___________ எனப்படும்.

A) அகச்சுட்டு

B) புறச்சுட்டு

C) அண்மைச்சுட்டு

D) சேய்மைச்சுட்டு

56. அவ்வானம்-இம்மலை-இந்நூல்-இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது _____________ எனப்படும்.

A) அகச்சுட்டு

B) புறச்சுட்டு

C) அண்மைச்சுட்டு

D) சேய்மைச்சுட்டு

57. இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு – இச்சொற்கள் நம் அருகில் (அண்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே, இஃது __________ எனப்படும். இச்சுட்டுக்குரிய எழுத்து ‘இ’ ஆகும்.

A) அகச்சுட்டு

B) புறச்சுட்டு

C) அண்மைச்சுட்டு

D) சேய்மைச்சுட்டு

58. அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம் – இச்சொற்கள் தொலைவில் (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே, இது ____________ எனப்படும். இச்சுட்டுக்குரிய எழுத்து ’அ’ ஆகும்.

A) அகச்சுட்டு

B) புறச்சுட்டு

C) அண்மைச்சுட்டு

D) சேய்மைச்சுட்டு

59. அம்மரம், இவ்வீடு ஆகியவை புறச்சுட்டுகள் என்பதை அறிவோம். இச்சொற்களை அந்த மரம், இந்த வீடு என்றும் வழங்குகிறோம். அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று (திரிந்து) அந்த, இந்த என வழங்குகின்றன. இவ்வாறு, அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது ____________ எனப்படும்.

A) அகச்சுட்டு

B) புறச்சுட்டு

C) அண்மைச்சுட்டு

D) சுட்டுத்திரிபு

60. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உ ள்ள வற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ‘உ’ என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (எ.கா.) உது, உவன்

II. வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின்

இறுதியில் இடம்பெறும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

61. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும். எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.

II. மொழியின் முதலில் வருபவை – எ, யா (எங்கு, யாருக்கு)

III. மொழியின் இறுதியில் வருபவை – ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ)

IV. மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை – ஏ (ஏன், நீதானே)

A) I, II, III மட்டும் சரி

B) I, II, III, IV அனைத்தும் சரி

C) II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

62. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. எது, யார், ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை.

II. இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.

III. அவனா? வருவானோ? இச்சொற்களில் உள்ள ஆ, ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.

IV. இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்.

A) I, II, III மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) III, IV மட்டும் சரி

63. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. மனிதர்களுக்குத் தேவையான பொருள்களைக் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கங்களுள் ஒன்று. ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப் பல இடங்களுக்கு அனுப்புவதும் பல இடங்களில் கிடைக்கும் பொருள்களை ஓர் இடத்தில் கிடைக்கச் செய்வதும் வணிகம் ஆகும்.

II. கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும். சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

64. கிடைக்கும் பொருள்களின் _______________ கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.

A) அளவை

B) மதிப்பை

C) எண்ணிக்கையை

D) எடையை

65. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. பண்டம் – Commodity

II. கடற்பயணம் – Voyage

III. பயணப்படகுகள் – Ferries

IV. தொழில் முனைவோர் – Entrepreneur

A) I, II மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) III, IV மட்டும் சரி

66. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. பாரம்பரியம் – Heritage

II. கலப்படம் – Adulteration

III. நுகர்வோர் – Consumer

IV. வணிகர் – Merchant

A) I, II மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

6th Tamil Unit 7 Questions

1. புதுமைகள் செய்த தேசமிது; பூமியின் கிழக்கு வாசலிது! தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான்; தேசம் உடுத்திய நூலாடை! – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) சங்கொலி, நாமக்கல் கவிஞர்

B) தாராபாரதியின் கவிதைகள், தாராபாரதி

C) எழிலோவியம், வாணிதாசன்

D) உலகியல் நூறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார்

2. மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு; மெய்யுணர்வு என்கிற மேலாடை! (புதுமைகள்) காளி தாசனின் தேனிசைப் பாடல்கள் காவிரிக் கரையில் எதிரொலிக்க – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) சங்கொலி, நாமக்கல் கவிஞர்

B) தாராபாரதியின் கவிதைகள், தாராபாரதி

C) எழிலோவியம், வாணிதாசன்

D) உலகியல் நூறு, பாவலரேறு பெருஞ்சித்திரனார்

3. கம்பனின் அமுதக் கவிதை களுக்குக் கங்கை அலைகள் இசையமைக்க (புதுமைகள்) கன்னிக் குமரியின் கூந்த லுக்காகக் காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்! – என்ற பாடல் வரியின் ஆசிரியருடைய இயற்பெயர் என்ன?

A) மீரா (மீ. ராசேந்திரன்)

B) துரைராசு (முடியரசன்)

C) அரங்கசாமி என்ற எத்திராசலு (வாணிதாசன்)

D) இராதாகிருஷ்ணன் (தாராபாரதி)

4. மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக் கிழக்குக் கரையின் நலம்கேட்கும்! (புதுமைகள்) புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப் புன்னகை செய்த பொற்காலம்! – என்ற பாடல் வரியின் ஆசிரியருடைய இயற்பெயர் என்ன?

A) மீரா (மீ. ராசேந்திரன்)

B) துரைராசு (முடியரசன்)

C) அரங்கசாமி என்ற எத்திராசலு (வாணிதாசன்)

D) இராதாகிருஷ்ணன் (தாராபாரதி)

5. கல்லைக் கூட காவிய மாக்கிக் கட்டி நிறுத்திய கலைக்கூடம்! (புதுமைகள்) அன்னை நாட்டின் அமுத சுரபியில் அன்னிய நாடுகள் பசிதீர அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி அறத்தின் ஊன்று கோலாக புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது! – என்ற பாடல் வரியின் ஆசிரியருடைய அடைமொழிப்பெயர் என்ன?

A) நாமக்கல் கவிஞர் (வெ. இராமலிங்கம் பிள்ளை)

B) பாவலரேறு (பெருஞ்சித்திரனார்)

C) கவிஞாயிறு (தாராபாரதி)

D) இவற்றில் ஏதுமில்லை

6. புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலிய நூல்களின் ஆசிரியர் யார்?

A) வாணிதாசன்

B) தாராபாரதி

C) பாரதிதாசன்

D) மீ. ராசேந்திரன்

7. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. தாரா பாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன். கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்.

II. புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

8. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்?

A) திருவாசகம்

B) திருக்குறள்

C) திரிகடுகம்

D) திருப்பாவை

9. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்?

A) காவிரிக்கரை

B) வைகைக்கரை

C) கங்கைக்கரை

D) யமுனைக்கரை

10. கலைக்கூடமாகக் காட்சி தருவது?

A) சிற்பக்கூடம்

B) ஓவியக்கூடம்

C) பள்ளிக்கூடம்

D) சிறைக்கூடம்

11. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) நூல் + ஆடை

B) நூலா + டை

C) நூல் + லாடை

D) நூலா + ஆடை

12. எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

A) எதிரலிக்க

B) எதிர்ஒலிக்க

C) எதிரொலிக்க

D) எதிர்ரொலிக்க

13. பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நமது இந்தியநாடு பல புதுமைகளைச் செய்த நாடு. திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது. உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகின்றது. காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன – என்ற கூற்று யாருடையது?

A) வாணிதாசன்

B) தாராபாரதி

C) பாரதிதாசன்

D) மீ. ராசேந்திரன்

14. கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன. குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன. மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன. புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன – என்ற கூற்று யாருடையது?

A) தாராபாரதி

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) மீ. ராசேந்திரன்

15. கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சி தருகின்றன. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது. நம் நாடு பிறநாட்டு மக்களின் பசியையும் போக்கி வருகின்றது. அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது – என்ற கூற்று யாருடையது?

A) உ.வே.சா

B) திரு.வி.க

C) பாரதிதாசன்

D) தாராபாரதி

16. கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?

பெண்கள் முன்னேற்றம், சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் அவர் பாடுபட்டார். எளிமையை ஓர் அறமாகப் போற்றினார். இந்தியாவில் அவர் காலடிபடாத இடமே இல்லை. தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மொழியின் மீதும் இவர் பற்று வைத்திருந்தார்.

A) அண்ணல் அம்பேத்கர்

B) காந்தியடிகள்

C) நேரு

D) சுபாஷ் சந்திர போஸ்

17. ______________ ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் சென்னைக்கு வந்தார்.

A) 1913

B) 1923

C) 1929

D) 1919

18. காந்தியடிகள் சென்னைக்கு வந்திருந்த போது ஆங்கில அரசு ரௌலட் சட்டம் என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது. அதனை எதிர்த்துப் பெரிய போராட்டத்தை நடத்தக் காந்தியடிகள் திட்டமிட்டார். அதைப் பற்றிய கருத்தாய்வுக் கூட்டம் ____________ அவர்களின் வீட்டில் நடைபெற்றது.

A) பாரதியார்

B) இராஜாஜி

C) சத்யமூர்த்தி

D) இவற்றில் ஏதுமில்லை

19. “திரு. காந்தி அவர்களே! நான் இன்று மாலை ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்குத் தாங்கள் தலைமை தாங்க முடியுமா?” – என்று கேட்டவர் யார்?

A) பாரதியார்

B) இராஜாஜி

C) சத்யமூர்த்தி

D) வ. உ. சிதம்பரம்பிள்ளை

20. “இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது. உங்கள் பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா?” என்று கேட்டார் காந்தியடிகள். “அது முடியாது. திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும். தாங்கள் தொடங்கப்போகும் இயக்கத்துக்கு என் வாழ்த்துகள்” என்று கூறியவர் யார்?

A) வ. உ. சிதம்பரம்பிள்ளை

B) இராஜாஜி

C) சத்யமூர்த்தி

D) பாரதியார்

21. காந்தியடிகளிடம் “இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்று பாரதியாரை கூறியவர் யார்?

A) வ. உ. சிதம்பரம்பிள்ளை

B) இராஜாஜி

C) சத்யமூர்த்தி

D) திரு.வி.க

22. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார்.

II. செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார். அப்போது காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

III. பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா? என்று சிந்தித்தார். அன்றுமுதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.

IV. அவரது தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. அந்தக் கோலத்திலேயே தம் வாழ்நாள் முழுவதும் இருந்தார். உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் இதுவாகும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்துமே சரி

23. காந்தியடிகள் ஒருமுறை _____________ ஊரைச் சுற்றியுள்ள ஊர்களில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது கானாடுகாத்தான் என்னும் ஊரில் அன்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தார்.

A) காரைக்குடி

B) மானாமதுரை

C) தேவகோட்டை

D) இளையான்குடி

24. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. காந்தியடிகள் ஒருமுறை மதுரையில் தங்கி இருந்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வரலாம் என்று தலைவர்கள் அவரை அழைத்தனர். “அந்தக் கோவிலுக்குள் செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி உண்டா?” என்று காந்தியடிகள் கேட்டார். அங்கு இருந்தவர்கள் “இல்லை” என்றனர். “அப்படியானால் அங்கே வரமாட்டேன்” என்று கூறிவிட்டார்.

II. பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கோவிலுக்குள் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மதுரைக்கு வந்த போதுதான் காந்தியடிகள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

25. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. குற்றால அருவியில் நீராட அனைவருக்கும் உரிமை அளிக்கப்பட்டு இருந்தது.

II. ஆனால், அருவிக்குச் செல்லும் வழியில் ஒரு கோவில் இருந்தது. அதன் வழியாகச் செல்ல ஒரு சாராருக்குத் தடை இருந்தது.

III. எனவே அனைவரும் அருவியில் நீராட முடியாத நிலை இருந்தது. அதனை அறிந்த காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட மறுத்துவிட்டார்.

IV. மனிதர்களிடம் உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்ததை இதன்மூலம் அறிய முடிகிறது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்துமே சரி

26. காந்தியடிகள் தமக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பலமுறை கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார். ___________ எழுதிய தமிழ்க் கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். ____________ அவரைப் பெரிதும் கவர்ந்த நூலாகும்.

A) ஜி.யு.போப், திருக்குறள்

B) கால்டுவெல், கலிங்கத்துப்பரணி

C) வீரமாமுனிவர், புறநானூறு

D) இவற்றில் ஏதுமில்லை

27. ______________ ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். ______________ என்பவர் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தார்.

A) 1923, திரு.வி.க

B) 1937, உ.வே.சாமிநாதர்

C) 1940, பாரதியார்

D) 1943, நாமக்கல் கவிஞர்

28. “இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று காந்தியடிகள் யாரைப் பற்றிக் கூறுகிறார்?

A) நாமக்கல் கவிஞர்

B) திரு.வி.க

C) உ.வே.சாமிநாதர்

D) பாரதியார்

29. காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் _____________?

A) கோவை

B) மதுரை

C) தஞ்சாவூர்

D) சிதம்பரம்

30. காந்தியடிகள் ___________ அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.

A) நாமக்கல் கவிஞர்

B) பாரதிதாசன்

C) உ.வே.சாமிநாதர்

D) பாரதியார்

31. கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியவை எவை?

I. இலக்கிய மாநாடு – சென்னை

II. தமிழ்நாட்டுக் கவிஞர் – பாரதியார்

III. குற்றாலம் – அருவி

IV. தமிழ்க் கையேடு – ஜி.யு.போப்

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II, III, IV அனைத்தும் தவறு

C) I, II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

32. இராமநாதபுரத்தை ஆட்சி செய்த _______________ என்ற மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார்.

A) செல்லமுத்து

B) வாஞ்சிநாதன்

C) ஞானதுரை

D) பாரி வேலன்

33. கீழ்க்கண்ட கூற்று யாரைப்பற்றியது?

I. தாய்மொழியாகிய தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளையும் சிறப்பாகக் கற்றார்.

II. சிலம்பம், குதிரையேற்றம், வாட்போர், விற்பயிற்சி ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார்.

III. சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.

A) அம்புஜத்தம்மாள்

B) இராணி இலட்சுமிபாய்

C) வேலுநாச்சியார்

D) இராணி மங்கம்மாள்

34. ________________ என்ற இடத்தில் நடைபெற்ற போரில் வேலுநாச்சியார் அவர்களின் கணவர் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்.

A) பாஞ்சாலங்குறிச்சி

B) மன்னார்குடி

C) ஆவுடையார்கோவில்

D) காளையார்கோவில்

35. வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார். _______________ என்ற இடத்தில் கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்.

A) திருச்சி

B) திண்டுக்கல்

C) மதுரை

D) சிவகங்கை

36. எட்டு ஆண்டுகளுக்குப் பின், திண்டுக்கல் கோட்டையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தின் நடுவே வீரமங்கை வேலுநாச்சியார் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி அமைச்சர் _______________ தளபதிகளாகிய ________________ மற்றும் குறுநில மன்னர்கள் சிலர் இருந்தனர்.

A) நரசப்பையன், வீரபாண்டியன்

B) தாண்டவராயர், பெரிய மருது, சின்ன மருது

C) வேள்பாரி, பூலித்தேவன்

D) இவர்களில் யாருமில்லை

37. வேலுநாச்சியார் அவர்களுக்கு மைசூரில் இருந்து ஐயாயிரம் குதிரைப் படை வீரர்கள் அனுப்பி உதவி செய்த மன்னனின் பெயர்?

A) இரண்டாம் பாஜிராவ்

B) ஒளரங்கசீப்

C) திப்பு சுல்தான்

D) ஐதர்அலி

38. வேலுநாச்சியார் அவர்கள் ஐதர்அலியைச் சந்திக்க மைசூர் சென்ற போது ___________ மொழியில் ஐதர் அலியுடன் உரையாடினார்.

A) இந்தி

B) பாரசீகம்

C) உருது

D) கன்னடம்

39. காளையார்கோவில் நோக்கி வேலுநாச்சியார் படை புறப்பட்டது. ஆண்கள் படைப்பிரிவுக்கு _______________ பெண்கள் படைப்பிரிவுக்குக் ____________ தலைமை ஏற்றனர்.

A) மருது சகோதரர்கள், குயிலி

B) வீரபாண்டிய கட்டபொம்மன், மாதவி

C) வெள்ளையத்தேவன், காந்திமதி

D) இவர்களில் யாருமில்லை

40. “நாம் சிவகங்கையை இழந்து ______________ ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று வேலுநாச்சியார் கவலை நிறைந்த குரலில் கூறினார்.

A) ஆறு

B) பத்து

C) எட்டு

D) ஒன்பது

41. வேலுநாச்சியார் அவர்களின் கணவர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட ஊர்?

A) காளையார்கோவில்

B) புதுக்கோட்டை

C) காரைக்குடி

D) பாஞ்சாலங்குறிச்சி

42. _______________ என்ற இடத்தில் வேலுநாச்சியாரின் படைக்கும் ஆங்கிலேயரின் படைக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. இறுதியில் ஆங்கிலேயரின் படை தோற்று ஓடியது.

A) காளையார்கோவில்

B) புதுக்கோட்டை

C) காரைக்குடி

D) பாஞ்சாலங்குறிச்சி

43. ______________ திருநாள் அன்று சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் திறக்கப்படும். அப்போது நமது படைகள் உள்ளே நுழையலாம், என்றார் வேலுநாச்சியார்.

A) பொங்கல்

B) தீபாவளி

C) உழைப்பாளர் தினம்

D) விசயதசமி

44. ______________ திருநாள் அன்று சிவகங்கைக் கோட்டைக்குள் செல்வதற்குப் பெண்களுக்கு மட்டும் அனுமதி உண்டு.

A) பொங்கல்

B) தீபாவளி

C) உழைப்பாளர் தினம்

D) விசயதசமி

45. வேலுநாச்சியார் அவர்களை காட்டிக் கொடுக்குமாறு ____________ என்னும் பெண்ணை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்கள்.

A) கோப்பெருந்தேவி

B) உடையாள்

C) கயல்விழி

D) இவர்களில் யாருமில்லை

46. தம் உடலில் தீ வைத்துக் கொண்டு சிவகங்கைக் கோட்டையில் உள்ள ஆங்கிலேயர் ஆயுதக் கிடங்கில் குதித்து உயிர் நீத்தவர் யார்?

A) கோப்பெருந்தேவி

B) உடையாள்

C) கயல்விழி

D) குயிலி

47. வேலுநாச்சியாரின் காலம்?

A) 1730 – 1796

B) 1740 – 1816

C) 1750 – 1826

D) 1760 – 1836

48. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு ?

A) 1770

B) 1780

C) 1790

D) 1795

49. ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் யார்?

A) குயிலி

B) அம்புஜத்தம்மாள்

C) ராணி மங்கம்மாள்

D) வேலு நாச்சியார்

50. தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை ___________ எனப்படும். (எ.கா.) ஈ, பூ, மை, கல், கடல், தங்கம்.

A) இலக்கணம்

B) யாப்பு

C) சொல்

D) இவற்றில் ஏதுமில்லை

51. இலக்கண அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், _____________, உரிச்சொல் என நான்கு வகைப்படும்.

A) காலச்சொல்

B) இடைச்சொல்

C) இலக்கண சொல்

D) இவற்றில் ஏதுமில்லை

52. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் ___________ எனப்படும். (எ.கா.) பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

53. வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் ______________ எனப்படும். (எ.கா.) வா, போ, எழுது, விளையாடு.

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

54. பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் ____________ ஆகும். இது தனித்து இயங்காது. (எ.கா.) உம் – தந்தையும் தாயும், மற்று – மற்றொருவர், ஐ – திருக்குறளை

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

55. பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது _______________ ஆகும். (எ.கா.) மா – மாநகரம், சால – சாலச்சிறந்தது

A) பெயர்ச்சொல்

B) வினைச்சொல்

C) இடைச்சொல்

D) உரிச்சொல்

56. கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சொல்லை எழுதுக. “மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”?

A) கேட்டல்

B) செவிக்கு

C) அவர்

D) மற்று

57. இடைச்சொல் – பொருந்தாதது எது?

A) மா

B) ஐ

C) உம்

D) மற்ற

58. கீழ்க்கண்ட கூற்று யாருடையது?

I. தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார்.

II. ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்.

A) திருப்பூர் குமரன்

B) பாரதியார்

C) ம.பொ.சிவஞானம்

D) வ.உ.சிதம்பரனார்

59. _______________ ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

A) 1897

B) 1906

C) 1910

D) 1913

60. கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?

I. ஒன்று என்பதைக் குறிக்க ஓர், ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன. உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

II. (எ.கா.) ஓர் ஊர்; ஓர் ஏரி; ஒரு நகரம்; ஒரு கடல்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

61. கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?

I. உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

II. (எ.கா.) அஃது இங்கே உள்ளது; அது நன்றாக உள்ளது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே தவறு

D) I, II இரண்டுமே சரி

62. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I) நாட்டுப்பற்று – Patriotism

II) இலக்கியம் – Literature

III) கலைக்கூடம் – Art Gallery

IV) மெய்யுணர்வு – Knowledge of Reality

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

63. கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.

I. ஓரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.

விடை: ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

II. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒரு நாள்.

விடை: ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.

III. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

விடை: அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

IV. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.

விடை: அது நகரத்திற்குச் செல்லும் சாலை.

V. அது ஒரு இனிய பாடல்.

விடை: அஃது ஒர் இனிய பாடல்.

A) I, II, III மட்டும் சரி

B) III, IV, V மட்டும் சரி

C) I, II, III, IV, V அனைத்துமே சரி

D) I, II, III, IV, V அனைத்துமே தவறு

6th Tamil Unit 8 Questions

1. ____________ நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியவை. அவை வாழ்வியல் நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குபவை.

A) காப்பியங்கள்

B) இலக்கண நூல்கள்

C) அற இலக்கியங்கள்

D) இவற்றில் ஏதுமில்லை

2. தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்; செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே! அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால் – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) பாரதியார் கவிதைகள், பாரதியார்

B) நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாமக்கல் கவிஞர்

C) தாயுமானவர் பாடல்கள், தாயுமானவர்

D) எழிலோவியம், வாணிதாசன்

3. இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே! எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே! – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) பாரதியார் கவிதைகள், பாரதியார்

B) நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாமக்கல் கவிஞர்

C) தாயுமானவர் பாடல்கள், தாயுமானவர்

D) எழிலோவியம், வாணிதாசன்

4. சொல்லும் பொருளும் – சரியாகப் பொருந்தியது எது?

I. தண்டருள் – குளிர்ந்த கருணை

II. பணி – தொண்டு

III. கூர் – மிகுதி

IV. எய்தும் – கிடைக்கும்

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) III, IV மட்டும் சரி

5. சொல்லும் பொருளும் – சரியாகப் பொருந்தியது எது?

I. செம்மையருக்கு – சான்றோருக்கு

II. எல்லாரும் – எல்லா மக்களும்

III. ஏவல் – தொண்டு

IV. அல்லாமல் – அதைத்தவிர

A) III, IV மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

6. கீழ்க்கண்டவற்றுள் “பராபரமே” என்பதன் பொருள் என்ன?

A) சான்றோர்

B) இறைவன்

C) மேலான பொருளே

D) மனிதன்

7. அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும். அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும். எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன். – இந்த கூற்று யாருடையது?

A) வள்ளலார்

B) உ.வே.சாமிநாதர்

C) மீனட்சி சுந்தரம்

D) தாயுமானவர்

8. தாயுமானவர், திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் __________________ ஆக பணி புரிந்தார்.

A) அமைச்சர்

B) தலைமைக் கணக்கர்

C) படைத் தளபதி

D) புலவர்

9. தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றப்படும் நூல் எது?

A) திருக்குறள்

B) நளவெண்பா

C) தாயுமானவர் பாடல்கள்

D) பாரதியார் கவிதைகள்

10. தாயுமானவர் பாடல்கள் ‘பராபரக் கண்ணி’ என்னும் தலைப்பில் உள்ளன. ‘கண்ணி’ என்பது ______________ அடிகளில் பாடப்படும் பாடல்வகை.

A) ஒன்று

B) நான்கு

C) இரண்டு

D) ஆறு

11. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________?

A) தம்முயிர்

B) தமதுயிர்

C) தம்உயிர்

D) தம்முஉயிர்

12. இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________?

A) இன்புற்றிருக்க

B) இன்புறுறிருக்க

C) இன்புற்றுஇருக்க

D) இன்புறு இருக்க

13. ‘தானென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________?

A) தானெ + என்று

B) தான் + என்று

C) தா + னென்று

D) தான் + னென்று

14. ‘சோம்பல்’ என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் ______________?

A) அழிவு

B) துன்பம்

C) சுறுசுறுப்பு

D) சோகம்

15. _______________ மக்களின் வாழ்வை நெறிப்படுத்தி அறவழியில் செலுத்துகின்றன. மனித வாழ்வைச் செம்மைப்படுத்துகின்றன.

A) இலக்கியங்கள்

B) அற நூல்கள்

C) காப்பியங்கள்

D) காவியம்

16. வாழ்க்கை பின்திரும்பிச் செல்லாது நேற்றுடன் ஒத்துப் போகாது கொடுப்பவரின் பரிசுடன் அவருக்குச் சமமாக எழுங்கள் சிறகுகளின் மீது எழுவது போல – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேம்பாவணி, வீரமாமுனிவர்

B) தீர்க்கதரிசி, கலீல் கிப்ரான்

C) தாமரைத் தடாகம், கால்டுவெல்

D) இவற்றில் ஏதுமில்லை

17. உழைக்கும்போது நீங்கள் புல்லாங் குழலாகி விடுகிறீர்கள் அதன் இதயம் காலத்தின் கிசுகிசுப்பை ஓர் இசையாக மாற்றி விடுகிறது உங்களுக்குள் இருக்கும் நன்மையைப் பற்றித்தான் நான் பேச முடியும் தீமையைப் பற்றியல்ல – என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தேம்பாவணி, வீரமாமுனிவர்

B) தீர்க்கதரிசி, கலீல் கிப்ரான்

C) தாமரைத் தடாகம், கால்டுவெல்

D) இவற்றில் ஏதுமில்லை

18. உங்கள்சுயத்துடன் நீங்கள் ஒருமைப்பாடு கொண்டிருக்கும்போது நீங்கள் நல்லவர் என்னைப்போல் இரு பழுத்து உன் உள்ளீடுகளை எல்லாம் முழுசாய்க்கொடு என்று பழம் வேரைப் பார்த்து நிச்சயமாகச் சொல்லாது கொடுப்பது பழத்தின் இயல்பு பெறுவது வேரின் இயல்பு – இப்பாடல் பகுதி கவிஞர் ______________ அவர்கள் மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

A) பிச்சைமூர்த்தி

B) ராஜம் கிருஷ்ணன்

C) அழ. வள்ளியப்பா

D) புவியரசு

19. உங்கள் பேச்சின் போது நீங்கள் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது உறுதியாகக் கால்பதித்து உங்கள் குறிக்கோளை நோக்கி நடக்கையில் நீங்கள் நல்லவர் – இப்பாடல் பகுதி கவிஞர் ______________ அவர்கள் மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

A) பிச்சைமூர்த்தி

B) ராஜம் கிருஷ்ணன்

C) அழ. வள்ளியப்பா

D) புவியரசு

20. கலீல் கிப்ரான் _____________ நாட்டைச் சேர்ந்தவர். கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்.

A) ஆஸ்திரேலியா

B) லெபனான்

C) இலங்கை

D) மலேசியா

21. பரிசு பெறும்போது நம் மனநிலை ___________ஆக இருக்கும்.

A) கவலை

B) துன்பம்

C) மகிழ்ச்சி

D) சோர்வு

22. வாழ்வில் உயர கடினமாக _____________ வேண்டும்.

A) பேச

B) சிரிக்க

C) நடக்க

D) உழைக்க

23. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. சுயம் – தனித்தன்மை

II. உள்ளீடுகள் – உள்ளே இருப்பவை

III. நவ்வி – பெண்மான்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) III மட்டும் சரி

24. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாதது உணவு.

II. உலக உயிர்கள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் உணவு தேடியே உழைக்கின்றன.

III. உணவே உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குகிறது. பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு அளிப்பது உயிர் கொடுப்பதற்கு இணையானது. அதுவே சிறந்த அறமாகும்.

A) I, II மட்டும் சரி

B) I, II, III அனைத்தும் சரி

C) II மட்டும் தவறு

D) III மட்டும் தவறு

25. “தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்” – என்று கூறியவர் யார்?

I. பாரதியார்

II. கண்ணதாசன்

III. பாரதிதாசன்

IV. திரு.வி.க

26. கீழ்க்கண்டவர்களுள் பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் யார்?

A) கண்ணகி

B) மணிமேகலை

C) மாதவி

D) தீவதிலகை

27. மணிமேகலையை, மணிபல்லவத் தீவில் கொண்டு வந்து சேர்த்தது யார்?

A) மணிமேகலா தெய்வம்

B) தீவதிலகை

C) புத்த துறவி

D) சமணத் துறவி

28. நான் இத்தீவையும் இதிலுள்ள புத்த பீடிகையையும் காவல் செய்து வருகிறேன். பெருமை மிக்கவர்கள் மட்டுமே இத்தீவிற்கு வந்து இந்தப் புத்த பீடிகையை வணங்க முடியும் என்று மணிமேகலையிடம் கூறியது யார்?

A) அசரீரி

B) தீவதிலகை

C) புத்த துறவி

D) சமணத் துறவி

29. நம் எதிரில் பூக்கள் நிறைந்து விளங்கும் இந்தப் பொய்கையைப் பார். இதற்குக் கோமுகி என்று பெயர். கோ என்றால் பசு. முகி என்றால் முகம். பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் இப்பொய்கை கோமுகி என்னும் பெயரைப் பெற்றது – என்று தீவதிலகை யாரிடம் கூறினார்?

A) அசரீரி

B) மணிமேகலை

C) கண்ணகி

D) புத்த துறவி

30. கோமுகி பொய்கையில் _____________ முழு நிலவு நாளில் நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம் தோன்றும். அஃது ஆபுத்திரன் கையிலிருந்த ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரம் ஆகும்.

A) சித்திரைத் திங்கள்

B) வைகாசித் திங்கள்

C) ஆனித் திங்கள்

D) ஆடித் திங்கள்

31. கீழ்க்கண்ட கூற்றுடன் தொடர்புடையது எது?

அந்தப் பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.

A) அட்சய பாத்திரம்

B) தங்கத்தட்டு

C) அமுதசுரபி

D) இவற்றில் ஏதுமில்லை

32. கோமுகி பொய்கையின் நீருக்குமேல் தோன்றிய ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரத்தை வணங்கிக் கையில் எடுத்தவர் யார்?

A) புத்த துறவி

B) மணிமேகலை

C) தீவதிலகை

D) இவர்களில் யாருமில்லை

33. மணிமேகலையே! உயிர்களின் பசிபோக்கும் அமுதசுரபியை நீ பெற்றுள்ளாய். இனி இவ்வுலக உயிர்களுக்குப் பசி இல்லாமல் போகும்படி உணவு வழங்கி உயர்வு பெறுவாயாக! – என்று மணிமேகலையிடம் கூறியது யார்?

A) அசரீரி

B) தீவதிலகை

C) புத்த துறவி

D) ஆதிரை

34. உயிர்களுக்குப் பசி இல்லாமல் போகும்படி உணவு வழங்கக் கூடிய திறன்வல்ல அமுதசுரபியை பெற்ற பிறகு, யாரிடம் உணவு பெறச் செல்கிறாள் மணிமேகலை?

A) பூம்புகார் ஊர் மக்களிடம்

B) தீவதிலகை

C) புத்த துறவி

D) ஆதிரை

35. ‘அமுதசுரபி’ முதன்முதலில் யாரிடம் இருந்தது?

A) அறவண அடிகள்

B) தீவதிலகை

C) மணிமேகலா தெய்வம்

D) ஆபுத்திரன்

36. மணிமேகலையின் பெற்றோர் யார்?

A) கோவலன் – கண்ணகி

B) கோவலன் – மாதவி

C) தெய்வக்குழந்தை

D) இவற்றில் ஏதுமில்லை

37. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு __________?

A) இலங்கைத் தீவு

B) இலட்சத் தீவு

C) மணிபல்லவத் தீவு

D) மாலத் தீவு

38. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் ___________?

A) சித்திரை

B) ஆதிரை

C) காயசண்டிகை

D) தீவதிலகை

39. _______________ அமுதசுரபியில் உணவை இடுகிறாள். ______________ அமுதசுரபியைக் கொண்டு, உடல் குறையுற்றோர், பிணியாளர், ஆதரவு அற்றோர் ஆகியோருக்கு உணவு அளிக்கிறாள். பின்னர்ப் பூம்புகாரில் உள்ள சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உள்ளவர்களுக்கும் உணவிடுகிறாள்.

A) சித்திரை, மணிமேகலா தெய்வம்

B) ஆதிரை, மணிமேகலை

C) காயசண்டிகை, அறவண அடிகள்

D) தீவதிலகை, ஆபுத்திரன்

40. அன்பிற்குரிய ஆதிரையே, ஏழை மக்களின் பசியைப் போக்குவதே மேலான அறம். உணவு கொடுத்தவர்களே உயிரைக் கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன். அதனால், இந்தப் பாத்திரத்தில் இருக்கும் உணவைப் பசியால் வாடும் மக்களுக்கு எல்லாம் வழங்கப் போகின்றேன் – என்று கூறியவர் யார்?

A) மணிமேகலை

B) பூம்புகார் மன்னன்

C) காயசண்டிகை

D) தீவதிலகை

41. உங்கள் அறம் செழிக்கட்டும். மக்களின் பசிநோய் ஒழியட்டும். இதோ! இப்போதே அமுதசுரபியில் நான் உணவை இடுகிறேன் – என்று மணிமேகலையிடம் கூறியது யார்?

A) ஆதிரை

B) அறவண அடிகள்

C) காயசண்டிகை

D) ஆபுத்திரன்

42. அன்பால் ஆட்சி செய்யும் அரசே! சிறைச்சாலையில் தண்டனை பெற்றுள்ளவர்கள் திருந்தி வாழ வழிகாண வேண்டும். சிறைக் கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும் – என்று மன்னரிடம் கூறியவர் யார்?

A) மணிமேகலை

B) அறவண அடிகள்

C) ஆதிரை

D) ஆபுத்திரன்

43. மாதவம் செய்தவளே! இந்த உலக மக்களின் பசிப்பிணி தீர்க்கும் பாங்குடைய அறத்தைச் செய்கிறாய். நான் உனக்குச் செய்ய வேண்டிய உதவி ஏதேனும் இருக்கிறதா? – என்று மன்னர் யாரிடம் வினவினார்?

A) ஆதிரை

B) அறவண அடிகள்

C) மணிமேகலை

D) ஆபுத்திரன்

44. வாழ்க்கைக்கு அறம் சொன்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது. புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது. எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும். மேலும் அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும். இதுவே என் வேண்டுகோள் மன்னா! – என்று மன்னரிடம் கூறியவர் யார்?

A) ஆதிரை

B) அறவண அடிகள்

C) மணிமேகலை

D) ஆபுத்திரன்

45. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. கதை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். கதையை

விரும்பாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.

II. அதிலும் நம்ப

முடியாத கற்பனைகளைக் கொண்ட விந்தைக் கதைகள்

அனைவரையும் கவரும்.

III. கதையில் சிறந்த கருத்தும்

கூறப்படுமானால் அது சர்க்கரைப் பந்தலில் தேன்மழை

பொழிந்தது போல மேலும் சுவையாக இருக்கும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி.

46. “பாதம்” – என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) மணல் வீடு, சி.சு.செல்லப்பா

B) தாவரங்களின் உரையாடல், எஸ்.ராமகிருஷ்ணன்

C) கனவு, ராஜம் கிருஷ்ணன்

D) இவர்களில் யாருமில்லை

47. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.

II. நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன.

III. உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) III மட்டும் சரி

48. ‘பாதம்’ என்னும் சிறுகதையில் மாரியிடம், விசித்திரமான காலணியை கொடுத்தது யார்?

A) சினிமா தியேட்டர் உரிமையாளர்

B) சிறுமி

C) தேநீர் கடைக்காரர்

D) வழிப்போக்கன்

49. ‘பாதம்’ என்னும் சிறுகதையில் மாரி செய்த தொழில் என்ன?

A) தேநீர் வியாபாரம்

B) கூலித்தொழில்

C) காலணி தைக்கும் தொழில்

D) இவற்றில் ஏதுமில்லை

50. மரம், பள்ளிக்கூடம், சித்திரை, கிளை, இனிப்பு, பாடுதல் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவை அனைத்தும் பெயரைக் குறிக்கின்றன. இவ்வாறு ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். பெயர்ச்சொல் ____________ வகைப்படும்.

A) 4

B) 5

C) 6

D) 7

51. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

I. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.

II. பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவையாவன: பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II அனைத்தும் தவறு

D) I, II அனைத்தும் சரி

52. பொருளைக் குறிக்கும் பெயர் _______________ எனப்படும். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும். (எ.கா.) மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) பொருட்பெயர்

53. ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் _____________ எனப்படும். (எ.கா.) சென்னை, பள்ளி, பூங்கா, தெரு.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) பொருட்பெயர்

54. காலத்தைக் குறிக்கும் பெயர் ___________ எனப்படும். (எ.கா.) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) காலப்பெயர்

55. பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் ____________ எனப்படும். (எ.கா.) கண், கை, இலை, கிளை.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) காலப்பெயர்

56. பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் ____________ எனப்படும். (எ.கா.) வட்டம், சதுரம், செம்மை, நன்மை.

A) இடப்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) காலப்பெயர்

57. தொழிலைக் குறிக்கும் பெயர் ____________ எனப்படும். (எ.கா.) படித்தல், ஆடுதல், நடித்தல்.

A) தொழிற்பெயர்

B) சினைப்பெயர்

C) பண்புப்பெயர்

D) காலப்பெயர்

58. அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கான சான்றுகளை தொடரில் அமைத்து எழுதுவோம் – சரியானது எது?

I. காவியா புத்தகம் படித்தாள் – பொருட்பெயர்; காவியா பள்ளிக்குச் சென்றாள் – இடப்பெயர்

II. காவியா மாலையில் விளையாடினாள் – காலப்பெயர்; காவியா தலை அசைத்தாள் – சினைப்பெயர்.

III. காவியா இனிமையாகப் பேசுவாள் – பண்புப்பெயர்; காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் – தொழிற்பெயர்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) III மட்டும் சரி

59. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. நம் முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என இருவகைப்படுத்தினர்.

II. இடுகுறிப்பெயர்: நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும். (எ.கா.) மண், மரம், காற்று

III. இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிச் சிறப்புப்பெயர் என இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும்.

A) I, II மட்டும் சரி

B) I, II, III அனைத்தும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

60. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. இடுகுறிப் பொதுப்பெயர்: ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும். (எ.கா.) மரம், காடு.

II. இடுகுறிச் சிறப்புப்பெயர்: ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும். (எ.கா.) மா, கருவேலங்காடு.

A) I, II அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) I, II இரண்டும் தவறு

61. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. காரணப்பெயர்: நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும். (எ.கா.) நாற்காலி, கரும்பலகை

II. காரணப் பொதுப்பெயர், காரணச் சிறப்புப்பெயர் எனக் காரணப் பெயர் இரு வகைப்படும்.

III. காரணப் பொதுப்பெயர்: காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர் எனப்படும். (எ.கா.) பறவை, அணி

IV. காரணச் சிறப்புப்பெயர்: குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர் ஆகும். (எ.கா.) வளையல், மரங்கொத்தி

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) IV மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

62. இடுகுறிப்பெயரை குறிப்பிடுக.

A) பறவை

B) மண்

C) முக்காலி

D) மரங்கொத்தி

63. காரணப்பெயரை குறிப்பிடுக.

A) மரம்

B) வளையல்

C) சுவர்

D) யானை

64. இடுகுறிச்சிறப்புப் பெயரை குறிப்பிடுக.

A) வயல்

B) வாழை

C) மீன்கொத்தி

D) பறவை

65. பறவை, அணி – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) காரணப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

66. நாற்காலி, கரும்பலகை – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) காரணப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

67. வளையல், மரங்கொத்தி – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) காரணப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

68. மா, கருவேலங்காடு – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) காரணப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

69. மரம், காடு – கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?

A) இடுகுறிச் சிறப்புப்பெயர்

B) காரணச் சிறப்புப்பெயர்

C) இடுகுறிப் பொதுப்பெயர்

D) காரணப் பொதுப்பெயர்

70. அன்பினில் இன்பம் காண்போம்; அறத்தினில் நேர்மை காண்போம்; துன்புறும் உயிர்கள் கண்டால்; துரிசறு கனிவு காண்போம்; வன்புகழ் கொடையிற் காண்போம்; வலிமையைப் போரில் காண்போம்; தன்பிறப் புரிமை யாகத் தமிழ்மொழி போற்றக் காண்போம் – என்ற பாடல்வரியின் ஆசிரியர் யார்?

A) அ.முத்தரையனார், மலேசியக் கவிஞர்

B) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

C) நாமக்கல் கவிஞர்

D) கண்ணதாசன்

71. நீதிநூல் பயில் என்கிறார் ________?

A) பாரதியார்

B) திருவள்ளுவர்

C) நாமக்கல் கவிஞர்

D) வாணிதாசன்

72. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. பொருட்பெயர்: பாரதியார், நீதிநூல், புத்தகம்

II. இடப்பெயர்: தெருவில், மதுரை

III. காலப்பெயர்: மாலை, துயில்

IV. சினைப்பெயர்: கைகள்

V. பண்புப்பெயர்: அன்பு, நன்மை

VI. தொழிற்பெயர்: அடைதல், கற்றல்

A) I, II, III மட்டும் சரி

B) III, IV மட்டும் சரி

C) V, VI மட்டும் சரி

D) I, II, III, IV, V, VI அனைத்தும் சரி

73. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. அறக்கட்டளை – Trust

II. தன்னார்வலர் – Volunteer

III. இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross

IV. சாரண சாரணியர் – Scouts & Guides

V. சமூகப் பணியாளர் – Social Worker

A) I, II, III மட்டும் சரி

B) III, IV மட்டும் சரி

C) V மட்டும் சரி

D) I, II, III, IV, V அனைத்தும் சரி

74. விடுபட்டதை நிரப்புக.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் _________ __________ _________?

A) ஆகுல நீர பிற

B) இழுக்கா இயன்றது அறம்

C) குறியெதிர்ப்பை நீரது உடைத்து

D) வைத்திழக்கும் வன்க ணவர்

75. விடுபட்டதை நிரப்புக.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் _________ ________ _________?

A) ஆகுல நீர பிற

B) இழுக்கா இயன்றது அறம்

C) குறியெதிர்ப்பை நீரது உடைத்து

D) வைத்திழக்கும் வன்க ணவர்

76. விடுபட்டதை நிரப்புக.

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம் _______ ________ ________?

A) ஆகுல நீர பிற

B) இழுக்கா இயன்றது அறம்

C) குறியெதிர்ப்பை நீரது உடைத்து

D) வைத்திழக்கும் வன்க ணவர்

77. விடுபட்டதை நிரப்புக.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை ________ _______ ________?

A) ஆகுல நீர பிற

B) இழுக்கா இயன்றது அறம்

C) குறியெதிர்ப்பை நீரது உடைத்து

D) வைத்திழக்கும் வன்க ணவர்

78. விடுபட்டதை நிரப்புக.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண _________ __________ _________?

A) நன்னயம் செய்து விடல்

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

79. விடுபட்டதை நிரப்புக.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் _________ __________ _________?

A) நன்னயம் செய்து விடல்

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

80. விடுபட்டதை நிரப்புக.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் _________ __________ _________?

A) நன்னயம் செய்து விடல்

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

81. விடுபட்டதை நிரப்புக.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் _________ __________ _________?

A) நன்னயம் செய்து விடல்

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

82. விடுபட்டதை நிரப்புக.

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் ________ _________ _________?

A) போற்றலுள் எல்லாம் தலை

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

83. விடுபட்டதை நிரப்புக.

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் _________ _________ _________?

A) பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

B) தந்நோய்போல் போற்றாக் கடை

C) மாணாசெய் யாமை தலை

D) தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

84. ஏழைகளுக்கு உதவி செய்வதே ___________ ஆகும்.

A) பகை

B) ஈகை

C) வறுமை

D) கொடுமை

85. பிற உயிர்களின் ____________ கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.

A) மகிழ்வை

B) செல்வத்தை

C) துன்பத்தைக்

D) பகையை

86. உள்ளத்தில் _____________ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

A) மகிழ்ச்சி

B) மன்னிப்பு

C) துணிவு

D) குற்றம்

87. பின்வரும் நிகழ்வைப் படித்து அதற்குப் பொருத்தமான திருக்குறள் எதுவெனக் காண்க.

நிறைமதி அவளுடைய தோழிகளுடன் பூங்காவிற்குச் சென்றாள். அங்குள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தாள். நண்பகல் நேரத்தில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த உணவைத் தோழிகளுடன் பகிர்ந்து உண்டாள். அவர்களின் அருகே பறவைகள் பறந்து வந்தன. தன்னிடம் இருந்த உணவைப் பறவைகளுக்கும் அளித்தாள்.

A) மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற

B) எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை

C) பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

D) ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை

88. உள்ளத்தில் __________ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரமே.

A) வீரம்

B) குற்றம்

C) அன்பு

D) இவற்றில் ஏதுமில்லை

89. பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் பேசுதல் ஆகிய நான்கும் இல்லாமல் வாழ்வதே __________ ஆகும்.

A) தன்மானம்

B) வீரம்

C) அறம்

D) இவற்றில் ஏதுமில்லை

90. அறநூல்களில் கூறப்படும் அறங்களுள் சிறந்தது எது?

A) நமக்குத் துன்பம் செய்தவர் நாணும்படி அவருக்கு நன்மை செய்வது

B) பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதுவது

C) நம் உள்ளம் ஏற்றுக் கொள்ளாத எச்செயலையும் எக்காலத்திலும் யார்க்கும் சிறிதளவு கூடச் செய்யாதிருத்தல்

D) தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.

91. தம்மைத் தீங்கிலிருந்து காத்துக்கொள்ளும் வழிகளுள் சிறந்த வழி எது?

A) ஆற்றல் உடையவர்களை இகழாமல் இருப்பது

B) நம் உள்ளம் ஏற்றுக் கொள்ளாத எச்செயலையும் எக்காலத்திலும் யார்க்கும் சிறிதளவுகூடச் செய்யாதிருப்பது

C) தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்றுவது

D) பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது

92. எச்செயலை எக்காலத்திலும் யார்க்கும் சிறிதளவு கூடச் செய்யக் கூடாது?

A) ஆற்றல் உடையவர்களை இகழாமல் இருப்பது

B) நம் உள்ளம் ஏற்றுக் கொள்ளாத செயல்

C) தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்றுவது

D) பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது

93. எப்போது, தாம் பெற்றுள்ள அறிவால் எந்தப் பயனும் இல்லை?

A) பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல கருதாத போது

B) நம் உள்ளம் ஏற்றுக் கொள்ளாத செயல்

C) தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்றுவது

D) பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது

94. யார், பொருளைச் சேர்த்து வைத்துப் பின் அதனை இழந்து விடுவார்கள்?

A) பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல கருதாத போது

B) நம் உள்ளம் ஏற்றுக் கொள்ளாத செயல்

C) இல்லாதவர்க்குத் தருவதால் உண்டாகும் இன்பத்தை அறியாதவர்கள்

D) பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது

95. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. உள்ளத்தில் குற்றம் இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரமே

II. பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் பேசுதல் ஆகிய நான்கும் இல்லாமல் வாழ்வதே அறம் ஆகும்

III. இல்லாதவர்க்கு தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்

IV. நமக்குத் துன்பம் செய்தவர் நாணும்படி அவருக்கு நன்மை செய்வதுதான் அவரைத் தண்டிக்கும் வழியாகும்

A) I, II மட்டும் சரி

B) I, II, III, IV அனைத்தும் சரி

C) III மட்டும் சரி

D) IV மட்டும் சரி

6th Tamil Unit 5 Questions

1. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. இரக்கம் என்பது தலைசிறந்த பண்பு. மனிதரிடம் மட்டுமன்று, மற்ற எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொள்ள வேண்டும்.

II. பிற உயிர்களைத் தம்முயிர் போல் எண்ணிக் காக்க வேண்டும். அதுவே சான்றோர் போற்றும் உயிர் இரக்கம் ஆகும்.

III. அவ்விரக்கமே மனித குலத்தை வாழ வைக்கிறது. உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் புத்தர்.

A) I, II, III அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

2. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் புத்தர்பிரான்.

II. பிம்பிசார மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன.

III. அவற்றின் நடுவில் அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியைப் புத்தர் தம் தோளில் சுமந்து சென்றார். யாகசாலையை அடைந்தார்.

IV. மன்னனுக்கு அறவுரை கூறினார். நாடெங்கும் உயிர்க்கொலையைத் தடுத்து நிறுத்தினார்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

3. நின்றவர் கண்டு நடுங்கினாரே – ஐயன் நேரிலே நிற்கவும் அஞ்சினாரே; துன்று கருணை நிறைந்த வள்ளல் – அங்கு சொன்ன மொழிகளைக் கேளும் ஐயா! வாழும் உயிரை வாங்கிவிடல் – இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும்; வீழும் உடலை எழுப்புதலோ – ஒரு வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா! – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தொடுவானம், வாணிதாசன்

B) ஆசிய ஜோதி, கவிமணி தேசிக விநாயகனார்

C) மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

D) பாரதி அறுபத்தாறு, பாரதியார்

4. யாரும் விரும்புவது இன்னுயிராம்; – அவர் என்றுமே காப்பதும் அன்னதேயாம்; பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப் – படும் பாடு முழுதும் அறிந்திலீரோ? நேரிய உள்ளம் இரங்கிடுமேல் – இந்த நீள்நிலம் முற்றுமே ஆண்டிடலாம்; பாரினில் மாரி பொழிந்திடவே – வயல் பக்குவ மாவது அறிந்திலீரோ? – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) தொடுவானம், வாணிதாசன்

B) ஆசிய ஜோதி, கவிமணி தேசிக விநாயகனார்

C) மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

D) பாரதி அறுபத்தாறு, பாரதியார்

5. காட்டும் கருணை உடையவரே – என்றும் கண்ணிய வாழ்வை உடையவராம்; வாட்டும் உலகில் வருந்திடுவார்- இந்த மர்மம் அறியாத மூடரையா! காடு மலையெலாம் மேய்ந்துவந்து – ஆடுதன் கன்று வருந்திடப் பாலையெல்லாம் தேடிஉம் மக்களை ஊட்டுவதும் – ஒரு தீய செயலென எண்ணினீரோ? – என்ற பாடலை கவிமணி தேசிக விநாயகனார் எந்த நூலைத் தழுவி எழுதினார்?

A) லீவ்ஸ் ஆஃப் கிராஸ், வால்ட் விட்மன்

B) த ட்ரேஜடி ஆஃப் மக்பெத், வில்லியம் சேக்சுபியர்

C) லைட் ஆஃப் ஆசியா, எட்வின் அர்னால்டு

D) இவற்றில் ஏதுமில்லை

6. அம்புவி மீதில்இவ் ஆடுகளும் – உம்மை அண்டிப் பிழைக்கும் உயிரலவோ? நம்பி இருப்பவர் கும்பி எரிந்திடில் நன்மை உமக்கு வருமோ ஐயா? ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் – ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ? தீயவும் நல்லவும் செய்தவரை – விட்டுச் செல்வது ஒருநாளும் இல்லைஐயா! – என்ற பாடலை கவிமணி தேசிக விநாயகனார் எந்த நூலைத் தழுவி எழுதினார்?

A) லீவ்ஸ் ஆஃப் கிராஸ், வால்ட் விட்மன்

B) த ட்ரேஜடி ஆஃப் மக்பெத், வில்லியம் சேக்சுபியர்

C) லைட் ஆஃப் ஆசியா, எட்வின் அர்னால்டு

D) இவற்றில் ஏதுமில்லை

7. ஆதலால் தீவினை செய்யவேண்டா – ஏழை ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டா; பூதலந் தன்னை நரகம்அது ஆக்கிடும் புத்தியை விட்டுப் பிழையும்ஐயா! – ஆசிய ஜோதி என்னும் இந்நூலின் ஆசிரியர் கவிமணி தேசிக விநாயகனார். ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி இந்நூல் எழுதப்பட்டது. இந்நூல் _____________ அவர்களின் வரலாற்றைக் கூறுகிறது.

A) சமண முனிவர்

B) புத்தர்

C) சிவன்

D) இயேசு கிறிஸ்து

8. சொல்லும் பொருளும் – சரியாகப் பொருந்தியது எது?

I. அஞ்சினர் – பயந்தனர்

II. வீழும் – விழும்

III. நீள்நிலம் – பரந்த உலகம்

IV. முற்றும் – முழுவதும்

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

9. சொல்லும் பொருளும் – சரியாகப் பொருந்தியது எது?

I. மாரி – மழை

II. கும்பி – வயிறு

III. பூதலம் – பூமி

IV. பார் – உலகம்

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

10. வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லார்க்கும் எளிய செயல். ஆனால், இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல். எல்லாரும் தம் உயிரைப் பெரிதாக மதித்துப் பாதுகாக்கின்றனர். எறும்பு கூடத் தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுவதை அறியாதவர் உண்டோ? – என்று கூறியவர் யார்?

A) சமணத் துறவி

B) புத்தர்

C) பாண்டிய மன்னன்

D) அசோகர்

11. நேர்மையான இரக்க மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையையும் ஆட்சி செய்ய முடியும். உலகில் மழை பெய்வதால் வயல் பக்குவம் அடைவதை அறியாதவர் உண்டோ? எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர். இந்த மறைபொருளை அறியாதவர் பிற உயிர்களை வருத்தித் தாமும் துன்புறுவர். – என்று கூறியவர் யார்?

A) சமணத் துறவி

B) புத்தர்

C) பாண்டிய மன்னன்

D) அசோகர்

12. காடுமலை எல்லாம் மேய்ந்து வருகிறது ஆடு. அது தன் குட்டி வருந்திடும் வகையில் பாலை எல்லாம் மக்களுக்குத் தருகிறது. இதனைத் தீயசெயல் என்று நீங்கள் கருதுகிறீர்களா? இந்த உலகில் ஆடுகளும் உங்களை நம்பி இருக்கும் உயிர்கள் அன்றோ? நம்மை நம்பி இருப்பவரின் வயிறு எரியும்வகையில் நடந்து கொள்வதால் உங்களுக்கு நன்மை கிடைக்குமா? – என்று கூறியவர் யார்?

A) இளங்கோவடிகள்

B) வள்ளலார்

C) பாரதியார்

D) புத்தர்

13. ஆயிரம் பாவங்கள் செய்துவிட்டு, ஆட்டின் உயிரை எடுப்பதால் பாவங்கள் நீங்கி விடுமா? ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது. ஆகையால், தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள். இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள். – என்று கூறியவர் யார்?

A) இளங்கோவடிகள்

B) வள்ளலார்

C) பாரதியார்

D) புத்தர்

14. தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். ___________ ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

A) 15

B) 28

C) 33

D) 40

15. கீழ்க்கண்டவர்களுள் கவிமணி என்னும் பட்டம் பெற்றவர் யார்?

A) பாரதியார்

B) தேசிக விநாயகனார்

C) இராமலிங்கனார்

D) வாணிதாசன்

16. ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் __________ என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

A) வில்லியம் சேக்சுபியர்

B) வால்ட் விட்மன்

C) எட்வின் அர்னால்டு

D) இவர்களில் யாருமில்லை

17. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் _____________?

A) ஜீவ ஜோதி

B) ஆசிய ஜோதி

C) நவ ஜோதி

D) ஜீவன் ஜோதி

18. நேர்மையான வாழ்வை வாழ்பவர் _____________?

A) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

B) உயிர்களைத் துன்புறுத்துபவர்

C) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்

D) தம் குடும்பத்தையே எண்ணிவாழ்பவர்

19. ஒருவர் செய்யக் கூடாதது ______________?

A) நல்வினை

B) தீவினை

C) பிறவினை

D) தன்வினை

20. ‘எளிதாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________?

A) எளிது + தாகும்

B) எளி + தாகும்

C) எளிது + ஆகும்

D) எளிதா + ஆகும்

21. ‘பாலையெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________?

A) பாலை + யெல்லாம்

B) பாலை + எல்லாம்

C) பாலை + எலாம்

D) பா + எல்லாம்

22. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________?

A) இன்உயிர்

B) இனியஉயிர்

C) இன்னுயிர்

D) இனிமைஉயிர்

23. மலை + எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________?

A) மலைஎலாம்

B) மலையெலாம்

C) மலையெல்லாம்

D) மலைஎல்லாம்

24. எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துதல் வேண்டும். அதுவே மனிதநேயம் ஆகும். மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை, “தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென முயலுநர் உண்மையானே” என்று கூறும் பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) அகநானூறு

B) கலித்தொகை

C) புறநானூறு

D) நளவெண்பா

25. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” – என்று கூறியவர் யார்?

A) திரு.வி.க

B) இளங்கோவடிகள்

C) சயம்கொண்டார்

D) வள்ளலார்

26. வள்ளலார் வாழ்வில் நடந்ததாக கூறப்படும் நிகழ்வில் சரியானது எது?

I. வள்ளலார் தம் இளம் வயதில் ஒருநாள் நடந்து வந்து கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்ததால் களைப்பு ஏற்பட்டது. எனவே ஓய்வெடுக்க விரும்பினார். வழியில் சத்திரம் ஒன்று இருந்தது. அதன் திண்ணையில் படுத்து உறங்கினார்.

II. அப்போது ஒருவன் அங்கு வந்தான். படுத்திருந்த வள்ளலாரின் காதில் கடுக்கன் இருப்பதைக் கண்டான். அதனைத் தனதாக்கிக் கொள்ள முடிவெடுத்தான். தங்கக்கடுக்கனை மெதுவாகக் கழற்றினான். அவனது செயலை அறிந்தும் வள்ளலார் கண் மூடியபடியே படுத்திருந்தார்.

III. ஒரு கடுக்கனைக் கழற்றியவுடன், மறுகாதில் உள்ள கடுக்கனை அவன் கழற்றுவதற்கு ஏதுவாகத் திரும்பிப் படுத்தார். அவன் அதையும் கழற்றிக் கொண்டு, அந்த இடத்தைவிட்டு அகன்று செல்ல முற்பட்டான்.

IV. அப்போது வள்ளலார் மென்மையான குரலில், “அப்பா, இவை இரண்டும் தங்கக்கடுக்கன்கள். குறைந்த விலைக்கு விற்றுவிடாதே! மேலும், ஒரு கடுக்கனுடன் சென்றால் உன்னைத் திருடன் என எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள். எனவேதான் இரண்டு கடுக்கன்களையும் நீ எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பாகத் திரும்பிப் படுத்தேன்” என்றார். வள்ளலார் கூறியதைக் கேட்ட அவன் வெட்கித் தலைகுனிந்தான். இவ்வாறு தம்பொருளைக் கவர்ந்தவரிடம் கூட அன்பு காட்டியவர் வள்ளலார்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) I, II, III, IV அனைத்தும் தவறு

27. வள்ளலார் மக்களின் பசிப்பிணியைக் கண்டு உள்ளம் வாடினார். அதனை நீக்க விரும்பினார். தம் பெருமுயற்சியால் _____________ என்ற இடத்தில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார்.

A) அரியலூர்

B) பெரம்பலூர்

C) வடலூர்

D) வண்டலூர்

28. பசித்தோருக்கு உணவு வழங்கும் வள்ளலாரின் மனிதநேயச் செயல் இன்றும் _____________ என்ற இடத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

A) அரியலூர்

B) பெரம்பலூர்

C) வடலூர்

D) வண்டலூர்

29. கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது?

மக்களுக்குச் செய்யும் பணியே இறைவனுக்குச் செய்யும் பணி என்று வாழ்ந்தார். அதனால் அமைதிக்கான நோபல் பரிசு அவரைத் தேடி வந்தது. இவர் தொழுநோய் பாதித்தவர்களுடன் இருந்து அவர்களுக்கு உதவிகள் பல செய்துள்ளார்.

A) மலாலா யூசப்சையி

B) கைலாஷ் சத்யார்த்தி

C) அன்னை தெரசா

D) இவர்களில் யாருமில்லை

30. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை – என்று கூறியவர் யார்?

A) அன்னை தெரசா

B) கைலாஷ் சத்யார்த்தி

C) பாரதியார்

D) காந்தியடிகள்

31. குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது – என்று கூறியவர் யார்?

A) கைலாஷ் சத்யார்த்தி

B) விவேகானந்தர்

C) ஜவஹர்லால் நேரு

D) இவர்களில் யாருமில்லை

32. கைலாஷ் சத்யார்த்தி அவர்களைப்பற்றிய சரியான கூற்று எது?

I. அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி.

II. குழந்தைகளைப் பாதுகாப்போம் என்னும் இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்தின் மூலம் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கப் பாடுபட்டு வருகிறார். கடந்த முப்பது ஆண்டுகளில் எண்பத்து ஆறாயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார்.

III. உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் 80,000 கி.மீ தூரம் நடைப்பயணம் சென்றுள்ளார். குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைக்காக நாடு கடந்து பரப்புரை ஆற்றி வருகிறார்.

A) I மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) I, II, III அனைத்தும் தவறு

33. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் ____________?

A) மனித வாழ்க்கை

B) மனித உரிமை

C) மனித நேயம்

D) மனித உடைமை

34. தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் ____________ காட்டியவர் வள்ளலார்.

A) கோபம்

B) வெறுப்பு

C) கவலை

D) அன்பு

35. அன்னை தெரசாவிற்கு ____________ க்கான ‘நோபல் பரிசு’ கிடைத்தது.

A) பொருளாதாரம்

B) இயற்பியல்

C) மருத்துவம்

D) அமைதி

36. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ___________?

A) குழந்தைகளைப் பாதுகாப்போம்

B) குழந்தைகளை நேசிப்போம்

C) குழந்தைகளை வளர்ப்போம்

D) குழந்தைகள் உதவி மையம்

37. சரியாகப் பொருந்தியது எது?

I. வள்ளலார் – பசிப்பிணி போக்கியவர்

II. கைலாஷ் சத்யார்த்தி – குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்

III. அன்னை தெரசா – நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்

A) I, II, III அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II மட்டும் சரி

D) III மட்டும் சரி

38. முடிவில் ஒரு தொடக்கம் என்ற கதை தொடர்பான சரியான கூற்று எது?

I. மனித நேயத்தின் மகத்தான சாதனையாகத் தம் மகனின் துடிக்கும் இதயத்தையே கொடையாகத் தந்த இக்கால வள்ளல்கள் தாம் அசோகன் – புஷ்பாஞ்சலி என்ற மருத்துவத் தம்பதியினர். சிறுமிக்குப் பொருத்தப்பட்ட இதயத்திற்குரிய அந்த இளைஞனின் பெயர் ஹிதேந்திரன்.

II. பிறந்த போது பெற்றோரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதால் ஹிதேந்திரன் என்று பெயரிடப்பட்டான்.

III. அவன் இறந்த போது உலகத்தார் இதயங்களை எல்லாம் கொள்ளை கொண்டான். இதயம் கொடுத்து இதயங்களை வென்ற ஹிதேந்திரனை இவ்வுலகம் என்றென்றும் நினைவில் கொள்ளும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

39. கவிஞர்கள் தங்கள் கற்பனைத் திறத்தாலும் புலமையாலும் தாங்கள் இயற்றும் பாடல்களில் அழகைச் சேர்க்கின்றனர். இதனை விளக்குவது அணி இலக்கணம் ஆகும். அணி என்பதற்கு _____________ என்பது பொருள்.

A) அழகு

B) அன்பு

C) வரிசை

D) இவற்றில் ஏதுமில்லை

40. கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது ____________ ஆகும்.

A) அழகு

B) அன்பு

C) வரிசை

D) அணி

41. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும். இதனைத் ____________ என்றும் கூறுவர்.

A) குணம் நவிற்சி அணி

B) தன்மை நவிற்சி அணி

C) இலக்கண நவிற்சி அணி

D) இவற்றில் ஏதுமில்லை

42. தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்? மற்றும் பாடலில் பயின்று வரும் அணி எது?

A) கவிமணி தேசிக விநாயகனார், இயல்பு நவிற்சி அணி

B) பாரதியார், ஏகதேச உருவாக அணி

C) பாரதிதாசன், உவமை அணி

D) வாணிதாசன், வஞ்சப் புகழ்ச்சி அணி

43. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது _________ ஆகும்.

A) வஞ்சப் புகழ்ச்சி அணி

B) உவமை அணி

C) உயர்வு நவிற்சி அணி

D) ஏகதேச உருவாக அணி

44. குளிர்நீரில் குளித்தால் கூதல் அடிக்குமென்று வெந்நீரில் குளித்தால் மேல கருக்குமென்று ஆகாச கங்கை அனல் உறைக்குமென்று பாதாள கங்கையைப் பாடி அழைத்தார் உன் தாத்தா – இந்த பாடலில் பயின்று வரும் அணி எது?

A) இயல்பு நவிற்சி அணி

B) ஏகதேச உருவாக அணி

C) உவமை அணி

D) உயர்வு நவிற்சி அணி

45. ஆறு சக்கரம் நூறு வண்டி, அழகான ரயிலு வண்டி, மாடு கன்னு இல்லாமத்தான் மாயமாத்தான் ஓடுது உப்புப் பாரம் ஏத்தும் வண்டி உப்பிலிப் பாளையம் போகும் வண்டி – இந்த பாடலில் பயின்று வரும் அணி எது?

A) இயல்பு நவிற்சி அணி

B) ஏகதேச உருவாக அணி

C) உவமை அணி

D) உயர்வு நவிற்சி அணி

46. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. மனிதநேயம் – Humanity

II. கருணை – Mercy

III. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை – Transplantation

IV. சரக்குந்து – Lorry

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) IV மட்டும் சரி

47. முடிவில் ஒரு தொடக்கம் என்னும் கதையானது எதனைப் பற்றி விவரிக்கிறது?

A) வாழ்க்கையின் துன்பம்

B) இரத்ததானம்

C) உடல் உறுப்புதானம்

D) கண் தானம்

48. மனித நேயத்தின் மகத்தான சாதனையாக கருதுவது எதனை?

A) இரத்த தானம்

B) நன்கொடை

C) கண் தானம்

D) உடல் உறுப்புதானம்

49. மனித நேயத்தின் மகத்தான சாதனையாக கருதப்படும் உடல் உறுப்பு தானத்துக்கு தம் மகனின் துடிக்கும் இதயத்தையே கொடையாகத் கொடுத்த தம்பதியினரின் பெயர் என்ன?

A) அசோகன் – புஷ்பாஞ்சலி

B) கணேசன் – ராதா

C) ராம்கி – கல்யாணி

D) சுரேந்தர் – நித்யா

50. முடிவில் தொடக்கம் கதையில் யாருக்கு இதயம் தேவைப்பட்டது?

A) இளைஞனுக்கு

B) பெண்ணுக்கு

C) சிறுமிக்கு

D) பெரியவருக்கு

51. முடிவில் தொடக்கம் என்ற கதையில் யாருடைய இதயம் சிறுமிக்கு பொருத்தப்பட்டது?

A) சிறுமியின்

B) பெரியவரின்

C) இளைஞனின்

D) சகோதரனின்

52. சிறுமிக்கு பொறுத்தப்பட்ட இதயத்தை வழங்கிய இளைஞனின் பெயர் என்ன?

A) அசோகன்

B) ஹிதேந்திரன்

C) விஜயேந்திரன்

D) சுரேந்திரன்

53. முடிவில் ஒரு தொடக்கம் கதையில் பாதிக்கப்பட்ட சிறுமி எந்த ஊரை சேர்ந்தவள்?

A) சென்னை

B) திருக்கழுக்குன்றம்

C) பெங்களூரு

D) மும்பை

54. உலகத்தாரின் இதயங்களை கொள்ளை கொண்ட ஹிதேந்திரன் எந்த ஊரினை சார்ந்தவர்?

A) மும்பை

B) திருக்கழுக்குன்றம்

C) மதுரை

D) திருநெல்வேலி

Exit mobile version