6th Tamil Unit 4 Questions

6th Tamil Unit 4 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 6th Tamil Unit 4 Questions With Answers Uploaded Below.

1. கல்வி பற்றிய சரியான கூற்று எது?

I. கல்விக்கு எல்லை இல்லை. மனிதன் பிறந்தது முதல் இறுதிவரை கற்றுக்கொண்டே இருக்கிறான்.

II. கல்வி மனிதனை உயர்த்துகிறது. கல்வியும் செல்வமாகக் கருதத்தக்கது. அது பிறருக்குத் தந்தாலும் குறையாமல் வளரும்.

III. கல்வியைப் பிறரால் கைப்பற்றவோ அழிக்கவோ முடியாது. அழியாச் செல்வமாகிய கல்வியைக் கற்றவன் எங்கும் எப்போதும் சிறப்புப் பெறுவான்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

2. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – என்ற பாடல் இடம்பெற்ற நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) திருமுருகாற்றுப்படை, நக்கீரர்

B) மூதுரை, ஒளவையார்

C) சிறுபாணாற்றுப்படை, நல்லூர் நத்தத்தனார்

D) குறிஞ்சிப் பாட்டு, கபிலர்

3. மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு – என்ற பாடல் இடம்பெற்ற நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?

A) திருமுருகாற்றுப்படை, நக்கீரர்

B) மூதுரை, ஒளவையார்

C) சிறுபாணாற்றுப்படை, நல்லூர் நத்தத்தனார்

D) குறிஞ்சிப் பாட்டு, கபிலர்

4. சொல்லும் பொருளும் – சரியாகப் பொருந்தியது எது?

I. மாசற – குற்றம் இல்லாமல்

II. சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்தால்

III. தேசம் – நாடு

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III அனைத்தும் சரி

D) III மட்டும் சரி

5. மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனை விடக் கற்றவரே சிறந்தவர். மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு – என்று கூறியவர் யார்?

A) மாங்குடி மருதனார்

B) கபிலர்

C) திருத்தக்கத்தேவர்

D) ஒளவையார்

6. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களை இயற்றியவர் யார்?

A) மாங்குடி மருதனார்

B) கபிலர்

C) திருத்தக்கத்தேவர்

D) ஒளவையார்

7. மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது. இந்நூலில் ___________ பாடல்கள் உள்ளன.

A) 11

B) 101

C) 31

D) 301

8. மாணவர்கள் நூல்களை _____________ கற்க வேண்டும்.

A) மேலோட்டமாக

B) மாசுற

C) மாசற

D) மயக்கமுற

9. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.

A) இடம் + மெல்லாம்

B) இடம் + எல்லாம்

C) இட + எல்லாம்

D) இட + மெல்லாம்

10. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________.

A) மாச + அற

B) மாசு + அற

C) மாச + உற

D) மாசு + உற

11. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ____________.

A) குற்றமில்லாதவர்

B) குற்றம்இல்லாதவர்

C) குற்றமல்லாதவர்

D) குற்றம்அல்லாதவர்

12. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________.

A) சிறப்புஉடையார்

B) சிறப்புடையார்

C) சிறப்படையார்

D) சிறப்பிடையார்

13. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

I. “கல்வி அழகே அழகு” என்பர் பெரியோர். கற்றபடி நிற்பதே அந்த அழகைப் பெறுவதற்கான வழி.

II. கல்வி, அறிவை வளர்ப்பதோடு பண்படுத்தவும் செய்யும். எவ்வளவுதான் கற்றிருந்தாலும் பண்பாடு இல்லாவிட்டால் அந்தக் கல்வி பயனற்றுப் போகும்.

III. பண்பட்ட மனிதரின் புகழே பல்லாண்டு நிலைத்திருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III அனைத்தும் சரி

14. ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே – நம் நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) திரு.வி.க (தமிழ்தென்றல்)

B) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (துன்பம் வெல்லும் கல்வி)

C) சிற்பி பாலசுப்பிரமணியம் (சூரிய நிழல்)

D) நா.காமராசன் (கருப்பு மலர்கள்)

15. சொல்லும் பொருளும் – சரியானது எது?

I. தூற்றும் படி – இகழும்படி

II. மூத்தோர் – பெரியோர்

III. மாற்றார் – மற்றவர்

IV. நெறி – வழி

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

16. நாம் நூல்களைக் கற்றதோடு இருந்து விடக் கூடாது. கற்றதன் பயனை மறக்கக் கூடாது. நம் நாட்டின் நெறி தவறி நடக்கக் கூடாது. நல்லவர்கள் குறை சொல்லும் படி வளரக் கூடாது – என்று கூறியவர் யார்?

A) பாரதியார்

B) உ.வே.சா

C) திரு.வி.க

D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

17. பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்புநெறி மாறக் கூடாது. பிறர் உழைப்பை நம்பி வாழக் கூடாது – என்று கூறியவர் யார்?

A) பாரதியார்

B) உ.வே.சா

C) திரு.வி.க

D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

18. மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது – பண்பு முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன் மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) திரு.வி.க (தமிழ்தென்றல்)

B) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (துன்பம் வெல்லும் கல்வி)

C) சிற்பி பாலசுப்பிரமணியம் (சூரிய நிழல்)

D) நா.காமராசன் (கருப்பு மலர்கள்)

19. துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் – நீ சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும் வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் – அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும் – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) திரு.வி.க (தமிழ்தென்றல்)

B) நா.காமராசன் (கருப்பு மலர்கள்)

C) சிற்பி பாலசுப்பிரமணியம் (சூரிய நிழல்)

D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (துன்பம் வெல்லும் கல்வி)

20. வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும் பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும் – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?

A) திரு.வி.க (தமிழ்தென்றல்)

B) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (துன்பம் வெல்லும் கல்வி)

C) சிற்பி பாலசுப்பிரமணியம் (சூரிய நிழல்)

D) நா.காமராசன் (கருப்பு மலர்கள்)

21. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் இவர். திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர். மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் – இவர் யார்?

A) நாமக்கல் கவிஞர்

B) வாலி

C) கண்ணதாசன்

D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

22. மாணவர் பிறர் ______________ நடக்கக் கூடாது.

A) போற்றும்படி

B) தூற்றும்படி

C) பார்க்கும்படி

D) வியக்கும்படி

23. நாம் _____________ சொல்படி நடக்க வேண்டும்.

A) இளையோர்

B) ஊரார்

C) மூத்தோர்

D) வழிப்போக்கர்

24. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.

A) கையில் + பொருள்

B) கைப் + பொருள்

C) கை + பொருள்

D) கைப்பு + பொருள்

25. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________.

A) மானம்இல்லா

B) மானமில்லா

C) மானமல்லா

D) மானம்மில

26. ஒரு மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி, மூன்று மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி, ஐந்து மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி – இது யாருடைய திட்டம்?

A) அண்ணா

B) எம்.ஜி.ஆர்

C) பெரியார்

D) காமராஜர்

27. ஆடு மேய்க்கும் சிறுவர்களையும் பள்ளிக்கூடம் செல்ல வழி செய்தவர் யார் தெரியுமா? குழந்தைகள் பள்ளி செல்வதற்காக நீண்ட தூரம் நடக்கக்கூடாது என்று எண்ணியவர் யார் தெரியுமா? பள்ளிக்குப் படிக்க வரும் மாணவர்களுக்கு ஒருவேளை உணவாவது வழங்க வேண்டும் என்று நினைத்தவர் யார் தெரியுமா? – இந்த வினாக்கள் யாருடன் தொடர்புடையது?

A) அண்ணா

B) எம்.ஜி.ஆர்

C) பெரியார்

D) காமராஜர்

28. கல்விக் கண் திறந்தவர் என்று ________________ அவர்களால் மனதாரப் பாராட்டப்பட்டவர் மறைந்த மேனாள் முதல்வர் காமராசர் ஆவார்.

A) திரு.வி.க

B) தந்தை பெரியார்

C) அண்ணா

D) நேரு

29. பெருந்தலைவர், படிக்காத மேதை, கர்மவீரர், கருப்புக் காந்தி, ஏழைப்பங்காளர், தலைவர்களை உருவாக்குபவர் – என்ற சிறப்புப் பெயர்களை கொண்டவர் யார்?

A) பெரியார்

B) நேரு

C) காமராசர்

D) அண்ணா

30. காமராசரின் கல்விப்பணிகள் – சரியானது எது?

I. காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.

II. மாநிலம் முழுவதும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

III. பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார். பள்ளிகளின் வசதிகளைப் பெருக்கப் பள்ளிச்சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார்.

A) I, II மட்டும் சரி

B) I, II, III அனைத்தும் சரி

C) II, III மட்டும் சரி

D) III மட்டும் சரி

31. மாணவர்கள் உயர்கல்வி பெறப் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால் நடைமருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் புதிதாகத் தொடங்கினார். தமிழ்நாட்டில் பல கிளை நூலகங்களைத் தொடங்கினார். இவ்வாறு கல்விப்புரட்சிக்கு வித்திட்டவர் இவர் ஆவார் – இந்த கூற்று யாரைப்பற்றியது?

A) காமராசர்

B) அண்ணா

C) எம்.ஜி.ஆர்

D) பக்தவச்சலம்

32. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது. நடுவண் அரசு ____________ இல் பாரதரத்னா விருது வழங்கியது.

A) 1956

B) 1966

C) 1976

D) 1986

33. இவர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையில் இவரது சிலை நிறுவப்பட்டது. சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது – இந்த கூற்று யாருடன் தொடர்புடையது?

A) காமராசர்

B) அண்ணா

C) எம்.ஜி.ஆர்

D) பக்தவச்சலம்

34. கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் ___________ ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

A) 02.10.2000

B) 10.02.2000

C) 11.11.2000

D) 02.12.2000

35. ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ______________ கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

A) ஜூன் பதினைந்தாம் நாள்

B) ஜூலை பதினைந்தாம் நாள்

C) ஆகஸ்டு பதினைந்தாம் நாள்

D) மே பதினைந்தாம் நாள்

36. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் _________________.

A) ஆடு மேய்க்க ஆள் இல்லை

B) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

C) வழி தெரியவில்லை

D) பேருந்து வசதியில்லை

37. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________.

A) பசி + இன்றி

B) பசி + யின்றி

C) பசு + இன்றி

D) பசு + யின்றி

38. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________.

A) படி + அறிவு

B) படிப்பு + அறிவு

C) படி + வறிவு

D) படிப்பு + வறிவு

39. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________.

A) காட்டாறு

B) காடாறு

C) காட்டுஆறு

D) காடுஆற

40. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் இந்தியாவின் _____________ மாநிலத்தில் உள்ளது.

A) டெல்லி

B) ஆந்திரா

C) தமிழ்நாடு (அண்ணா நூற்றாண்டு நூலகம்)

D) கேரளா

(குறிப்பு – ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம். தரைத்தளத்தோடு எட்டு அடுக்குகளைக் கொண்டது. இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர்)

41. ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் __________ நாட்டில் உள்ளது.

A) சீனா

B) வியட்நாம்

C) மலேசியா

D) சிங்கப்பூர்

42. கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது?

நூலக விதிகளை உருவாக்கியவர். இவர் இந்திய நூலகவியலின் தந்தை (Father of Indian library science) என்றும் அழைக்கப்படுகிறார்.

A) தாமோதரன்

B) முனைவர் இரா. அரங்கநாதன்

C) சீர்காழி ராமசாமி

D) இவர்களில் யாருமில்லை

43. பார்வைத் திறன் குறைபாடு உடையோர் தொட்டுப் பார்த்துப் படிக்கும் முறையின் பெயர் என்ன?

A) வரி வடிவம்

B) ஐரீன்

C) பிரெய்லி

D) இவற்றில் ஏதுமில்லை

44. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானது எது?

I. தமிழக அரசு நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

II. சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II இரண்டுமே சரி

D) I, II இரண்டுமே தவறு

45. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

I. சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.

II. ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும்.

III. சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும். (எ.கா.) திங்கள், மஞ்சள், மண்டபம், சந்தனம், அம்பு, தென்றல்.

IV. இடையின எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) ஒரே இனமாகும்.

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) I, IV மட்டும் சரி

46. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

I. மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு. உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.

II. குறில் எழுத்து இல்லாத ‘ஐ’ என்னும் எழுத்துக்கு ‘இ’ என்பது இன எழுத்தாகும். ‘ஔ’ என்னும் எழுத்துக்கு ‘உ’ என்பது இன எழுத்தாகும்.

III. சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை. அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும். (எ. கா.) ஓஒதல், தூஉம், தழீஇ

IV. தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.

A) I, II, III மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) I, II, III, IV அனைத்தும் சரி

D) I, IV மட்டும் சரி

47. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?

A) மஞ்சள்

B) வந்தான்

C) கண்ணில்

D) தம்பி

48. தவறான (பொருந்தாத) சொல்லை வட்டமிடுக.

A) கண்டான்

B) வென்ரான்

C) நண்டு

D) வண்டு

49. ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை- அந்நாடு வேற்றுநாடு ஆகா தமவேஆம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) புதிய ஆத்திச்சூடி

B) குறுந்தொகை

C) பழமொழி நானூறு

D) நற்றிணை

50. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A) புதிய ஆத்திச்சூடி

B) திருக்குறள்

C) பழமொழி நானூறு

D) நற்றிணை

51. கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. சரியானது எது?

I. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் – குழந்தைகள் நாள்

II. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் – ஆசிரியர் நாள்

III. அப்துல்கலாம் பிறந்த நாள் – மாணவர் நாள்

IV. விவேகானந்தர் பிறந்த நாள் – தேசிய இளைஞர் நாள்

V. காமராசர் பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாள்

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) III, IV, V மட்டும் சரி

D) I, II, III, IV, V அனைத்தும் சரி

52. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல்?

A) மஞ்சள்

B) வந்தான்

C) கல்வி

D) தம்பி

53. தமிழ் எழுத்துகளில் எந்த எழுத்துக்கு மட்டும் இன எழுத்து இல்லை?

A) உயிரெழுத்து

B) ஆயுத எழுத்து

C) மெய் எழுத்து

D) இவற்றில் எதுவுமில்லை

54. கீழ்காணும் கூற்றை கவனி:

கூற்று (A): மெய்யெழுத்துக்களைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.

காரணம் (R): உயிர் எழுத்துக்களில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்கு குறிலும் இன எழுத்துகளாக வரும்.

A) கூற்று A சரி, காரணம் R தவறு

B) கூற்று A சரி, காரணம் R சரி

C) கூற்று A தவறு, காரணம் R தவறு

D) கூற்று A தவறு, காரணம் R சரி

55. இன எழுத்துக்கள் அமையாத சொற்களை கண்டறிக.

A) கங்கை, வண்டு, மண்டபம், மங்கை

B) வெந்தயம், தந்தம், பஞ்சு, மஞ்சள்

C) கம்பளம், குன்று, செங்கடல், தேங்காய்

D) பக்கம், பச்சை, தக்காளி, காக்கை

56. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. கல்வி – Education

II. தொடக்கப் பள்ளி – Primary School

III. மேல்நிலைப் பள்ளி – Higher Secondary School

IV. நூலகம் – Library

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

57. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. மின்படிக்கட்டு – Escalator

II. மின்தூக்கி – Lift

III. மின்னஞ்சல் – E – Mail

IV. குறுந்தகடு – Compact Disk (CD)

A) I, II, III, IV அனைத்தும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) IV மட்டும் சரி

58. கலைச்சொல் அறிவோம் – சரியானது எது?

I. குறுந்தகடு – Compact Disk (CD)

II. மின்நூலகம் – E – Library

III. மின்நூல் – E – Book

IV. மின் இதழ்கள் – E – Magazine

A) I மட்டும் சரி

B) I, II மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) I, II, III, IV அனைத்தும் சரி

Exit mobile version