5th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

5th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 5th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மையில் வெளியிடப்பட்ட ‘பாலி பிரகடனம்’ எதன் சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுப்பதை நோக்கமெனக் கொண்டுள்ளது?

அ) தங்கம்

ஆ) பாதரசம் 

இ) வனவுயிரிகள்

ஈ) மனித உடலுறுப்புகள்

2. ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் என்பார் எந்த அமைப்பின் பொதுச்செயலாளராக உள்ளார்?

அ) ஐரோப்பிய ஒன்றியம்

ஆ) NATO 

இ) G20

ஈ) G7

3. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையமானது (AAI), உள்நாட்டு விமானப் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளை உருவாக்குவதற்காக எந்நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது?

அ) ISRO

ஆ) DRDO

இ) BEL 

ஈ) HAL

4. ‘பிரஸ்தான்’ என்பது எந்த இந்திய ஆயுதப்படையால் நடத்தப்படும் ஒரு கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியாகும்?

அ) இந்திய இராணுவம்

ஆ) இந்திய கடற்படை 

இ) இந்திய வான்படை

ஈ) இந்திய கடலோர காவல்படை

5. இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிதியத்தைத் தொடங்க முடிவு செய்துள்ள பரஸ்பர நிதியம் எது?

அ) ஐசிஐசிஐ புருடென்ஷியல் பரஸ்பர நிதியம்

ஆ) HDFC பரஸ்பர நிதியம் 

இ) SBI பரஸ்பர நிதியம்

ஈ) கனரா ரோபெகோ பரஸ்பர நிதியம்

6. 2021-22 நிதியாண்டில் தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் 3ஆமிடத்திலுள்ள இந்திய மாநிலம் எது?

அ) மும்பை

ஆ) புது தில்லி 

இ) சண்டிகர்

ஈ) புதுச்சேரி

7. ‘MSME செயல்திறனை உயர்த்துதல் மற்றும் விரைவுப் -படுத்துதலை’ (RAMP) ஆதரிக்கின்ற நிறுவனம் எது?

அ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஆ) உலக வங்கி 

இ) UNICEF

ஈ) உலக பொருளாதார மன்றம்

8. மண்டலம் முழுவதும் 100 சதவீத மின்மயமாக்கலை நிறைவுசெய்துள்ள இரயில்வே பிரிவு எது?

அ) கொங்கன் இரயில்வே 

ஆ) வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே

இ) கிழக்குக் கடற்கரை இரயில்வே

ஈ) தெற்கு மத்திய இரயில்வே

9. இந்தியாவின் எந்த ஆற்றின் கரையில் காசிரங்கா தேசியப் பூங்கா எந்த அமைந்துள்ளது?

அ) கங்கை

ஆ) யமுனா

இ) பிரம்மபுத்திரா 

ஈ) சட்லெஜ்

10. சிட்டி வங்கியின் இந்திய வாடிக்கையாளர் வங்கிசார் வணிகங்களை கையகப்படுத்திய வங்கி எது?

அ) HDFC வங்கி

ஆ) ஆக்சிஸ் வங்கி 

இ) ஐசிஐசிஐ வங்கி

ஈ) YES வங்கி

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பெண்கள், பொதுமக்களுக்கான ‘காவல் உதவி’ செயலி அறிமுகம்

காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாக பெண்கள், பொதுமக்களுக்கான சேவை, ‘காவல் உதவி’ செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் பொருட்டு, 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் ‘காவல் உதவி’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியானது இந்திய மாநில காவல்துறையில் உருவாக் -கப்பட்டுள்ள செயலிகளில் முதன்மையாக விளங்கும்.

‘காவல் உதவி’ செயலியின் சிறப்பம்சங்கள்: ‘அவசரம்’ உதவி பொத்தான் – பொது மக்கள் குறிப்பாக பெண்கள் அவசர காலங்களில் சிவப்பு நிற ‘அவசரம்’ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல் துறையின் அவசர சேவை வழங்கப்படும். அவசரகால அலைபேசி அழைப்பு வசதி (Dial-112/100/101) – பயனாளர்கள் அலைபேசியில் நேரடி புகார்களை தெரிவிக்க ‘Dial-100’ என்ற செயலி ‘காவல் உதவி’ செயலி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிலிருந்து அழைப்பதால், பயனாளர் விவரம் மற்றும் தற்போதைய இருப்பிட விவரம் அறியப்பட்டு துரித சேவை வழங்கப்படும்.

அலைபேசி வழி / புகாரளித்தல் (Mobile Based Complaint) – பயனாளர்கள், குறிப்பாக மகளிர், சிறார், முதியோர் ஆகியோர் அவசர கால புகார்களை, படங்கள் / குறுகிய அளவிலான வீடியோவை பதிவேற்றம் செய்து, புகாரை பதிவு செய்யலாம். இருப்பிட விவர பரிமாற்ற சேவைவசதி (Location sharing) – பயணங்கள் மேற்கொள்ளும் போது, அவசர காலத்தில் பயனாளர்கள், Whatsapp / Google Map வாயிலாக, நேரடி இருப்பிட விவரங்களை நண்பர் அல்லது உறவினருடன் பரிமாறும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் பயனாளர்களின் உறவினர் / நண்பர் வாயிலாக செல்லும் இருப்பிடம் அறியப்பட்டு, காவலர் விரைந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், காவல் நிலைய இருப்பிடம் மற்றும் நேரடி அழைப்பு வசதி (Police Station Locator), காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி விவரம் அறிதல் (Control Room Directory), இணைய வழி பொருளாதார குற்றம் தொடர்பான புகார்கள் (Cyber Financial Related Complaint), இதர அவசர / புகார் உதவி எண் அழைக்கும் வசதி (Other Emergency Helplines), அவசர கால அறிவிப்புகள் / இதர தகவல்கள் அறியும் வசதி (Alert / Notification messages), வாகன விவரம் அறிதல் (Vehicle Verification), போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்தும் வசதி (e-Payment), தனிநபர் குறித்த சரிபார்ப்பு சேவை (Police Verification Services), தொலைந்த ஆவணங்கள் குறித்த புகார் (Lost Document Report), CSR / FIR –குறித்த விவரம், காவல்துறையின் சமூக ஊடக சேவைகள் (Social Media Connect), காவல்துறையின் குடிமக்கள் சேவை செயலி (TN Police Citizen App) / 112 இந்தியா (112-India App) ஆகிய வசதிகளையும் இச்செயலி மூலம் பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம்.

2. வெளியுறவுச் செயலராக வினய் மோகன் குவாத்ரா நியமனம்

மத்திய வெளியுறவு செயலராக வினய் மோகன் குவாத்ரா நியமிக்கப்படுவதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்தது.

தற்போது மத்திய வெளியுறவுச் செயலராக பதவி வகிக்கும் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா ஏப்.30-ஆம் தேதி பணி ஓய்வு பெறும் நிலையில், வினய் மோகன் குவாத்ரா அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுகிறார்.

3. ஏப்.11-இல் இந்தியா-அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை

இந்தியா, அமெரிக்கா இடையே ஏப்ரல் 11-ஆம் தேதி 2+2 பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத்சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்கா செல்லவுள்ளனர். அந்நாட்டுத் தலைநகர் வாஷிங்டனில் ஏப்ரல் 11-ஆம் தேதி அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் ஆகியோருடன் இருவரும் 2+2 பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். அப்போது இந்தியா-அமெரிக்கா இடையிலான வெளியுறவு, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து இம்மாத மத்தியில் இந்தியா-ஜப்பான் இடையே 2+2 பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா, ஜப்பான் இடையே பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் தற்போதைய நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. QUAD கூட்டமைப்பில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

4. இந்தியர்கள் இருவருக்கு ‘கிராமி’ விருது!

பிரபல இசை விருதுகளில் ஒன்றான ‘கிராமி’ விருது இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

64-ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரத்தில் நடைபெற்றது. அதில், ‘டிவைன் டைட்ஸ்’ என்ற பாடல் தொகுப்புக்காக பெங்களூரைச் சேர்ந்த ரிக்கி கெஜ், ‘சிறந்த புதிய ஆல்பம்’ என்ற பிரிவில் கிராமி விருதை வென்றார்.

ரிக்கி கெஜ் பெறும் இரண்டாவது கிராமி விருது இதுவாகும். அவர் ஏற்கெனவே ‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ என்ற பாடலுக்காக 2015-இல் கிராமி விருதைப் பெற்றுள்ளார்.

மும்பையில் பிறந்த பாடகியான பால்குனி ஷா, ‘சிறார்களுக்கான சிறந்த ஆல்பம்’ என்ற பிரிவில், ‘எ கலர் புல் வேர்ல்டு’ பாடலுக்காக கிராமி விருதைப் பெற்றார். அவர் வெல்லும் முதல் கிராமி விருது இதுவாகும்.

1. ‘Bali Declaration’ which was unveiled recently, aims to prevent illegal trade of which product?

A) Gold

B) Mercury 

C) Wildlife

D) Human Organs

2. Jens Stoltenberg is the Secretary–General of which organisation?

A) EU

B) NATO 

C) G20

D) G7

3. Airports Authority of India (AAI), partnered with which institution to develop indigenous Air Traffic Management Systems?

A) ISRO

B) DRDO

C) BEL 

D) HAL

4. ‘Prasthan’ is an offshore security exercise, conducted by which Indian Armed Force?

A) Indian Army

B) Indian Navy 

C) Indian Air Force

D) Indian Coast Guard

5. Which Mutual fund House has filed for launching India’s first Defence Fund?

A) ICICI Prudential Mutual Fund

B) HDFC Mutual Fund 

C) SBI Mutual Fund

D) Canara Robeco Mutual Fund

6. Which Indian state was ranked third in terms of per capita income in the fiscal year 2021–22?

A) Mumbai

B) New Delhi 

C) Chandigarh

D) Puducherry

7. ‘Raising and Accelerating MSME Performance’ (RAMP) is supported by which global institution?

A) International Monetary Fund

B) World Bank 

C) UNICEF

D) World Economic Forum

8. Which section of Railways has completed 100 per cent electrification across the zone?

A) Konkan Railway 

B) North East Frontier Railway

C) East Coast Railway

D) South Central Railway

9. Kaziranga National Park is located along which Indian River?

A) Ganga

B) Yamuna

C) Brahmaputra 

D) Sutlej

10. Which bank acquired the Indian consumer banking businesses of Citibank?

A) HDFC Bank

B) Axis Bank 

C) ICICI Bank

D) Yes Bank

Exit mobile version