4th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

4th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 4th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2022 – தேசிய அறிவியல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Integrated Approach in Science and Technology for Sustainable Future 

ஆ) Science and Technology for Atmanirbhar Bharat

இ) Vigyan Sarvatra Pujyate

ஈ) Amrut Kaal Vigyan

2. இந்தியாவில் விளையும் அனைத்து பசுமை உணவு வகைகளிலும் அதிகமாக ஏற்றுமதியான பொருள் எது?

அ) பசுந்திராட்சை 

ஆ) கொய்யா

இ) பசுமையான மாம்பழங்கள்

ஈ) வெற்றிலை & பாக்கு

3. 2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளர் யார்?

அ) ஆரிப் கான் 

ஆ) நீரஜ் சோப்ரா

இ) சிவ கேசவன்

ஈ) ஜெகதீஷ் சிங்

4. CPEC என்பது சீனாவின் சிஞ்சியாங் பகுதியையும் எந்த நாட்டின் குவாடர் துறைமுகத்தையும் இணைக்கும் ஒரு பொருளாதார வழித்தடமாக உள்ளது?

அ) ஈரான்

ஆ) பாகிஸ்தான் 

இ) ஆப்கானிஸ்தான்

ஈ) கஜகஸ்தான்

5. ‘பால சுவராஜ்’ தளத்துடன் தொடர்புடையது எது?

அ) பிரதம் அறக்கட்டளை

ஆ) தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் 

இ) பன்னாட்டு மன்னிப்பு அவை

ஈ) தேசிய மனித உரிமைகள் ஆணையம்

6. ‘SWIFT’ நிதிச்செய்தியிடல் சேவையில் ‘S’ என்பது எதைக் குறிக்கிறது?

அ) Secure

ஆ) Society 

இ) Simple

ஈ) Service

7. ‘மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன்’ என்பது எந்த நாட்டின் முன்முயற்சியாகும்?

அ) அமெரிக்கா 

ஆ) ரஷ்யா

இ) சீனா

ஈ) ஜப்பான்

8. பன்னாட்டு அணுசக்தி முகமையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) ஜெனீவா

ஆ) வியன்னா 

இ) நியூயார்க்

ஈ) மாஸ்கோ

9. InDEA 2.0 பற்றிய வரைவு அறிக்கையை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ) மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 

ஆ) அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

இ) நிதி அமைச்சகம்

ஈ) கார்ப்பரேட் விவகார அமைச்சகம்

10. இந்தியாவில் எந்தத் தேதியில் தேசிய பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது?

அ) மார்ச் 4 

ஆ) மார்ச் 3

இ) மார்ச் 1

ஈ) மார்ச் 2

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 28 ஆண்டுக்கு பிறகு மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு; வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் எஸ் பாலச்சந்திரன் தகவல்

வங்கக்கடலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இவ்வாறு பருவம் தவறி மழை பெய்வது குறித்து இந்திய வானிலை ஆய்வுமையத்தின் தென்மண்டல தலைவர் எஸ் பாலச்சந்திரன் கூறும்போது,

“மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவது அரிதானது தான். இதுவரை 1938, 1994 ஆகிய இரு ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலங்கள் ஏற்பட்டுள்ளன. இவையிரண்டும் தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகர்ந்து கரையை வந்து அடைவதற்குள் வலுவிழந்துவிட்டன. 28 ஆண்டுகட்குப் பிறகு மீண்டும் மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.

2. 16 ஆண்டுகளுக்குப் பிறகு நகர்ப்புற உள்ளாட்சிகளில் இன்று மறைமுகத் தேர்தல்

தமிழ்நாட்டில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நகர்ப்புற உள்ளாட்சிகளில் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2006இலும் இதுபோன்றே மறைமுகத் தேர்தல் நடந்தது.

3. துப்பாக்கி சுடுதல்: இந்திய மகளிரணிக்கு தங்கம்

எகிப்தில் நடைபெறும் ISSF உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது.

இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஸ்ரீநிவேதா, ஈஷா சிங், ருசிதா வினெர்கர் ஆகியோர் கூட்டணி 16-6 புள்ளிகள் கணக்கில் ஜெர்மனியின் ஆண்ட்ரியா கேத்ரினா எக்னர், சாண்ட்ரா ரீட்ஸ், கேரினா விம்மர் கூட்டணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.

வியாழக்கிழமை நிலவரப்படி, இப்போட்டியில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி என 3 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

3. இன்றுமுதல் மகளிர் உலகக்கோப்பை

ஐசிசியின் மகளிர் ஒன்டே கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி நியூஸிலாந்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 6ஆம் தேதி பாகிஸ்தானைச் சந்திக்கிறது.

பின்னர் நியூஸிலாந்தை 10ஆம் தேதியும், மேற்கிந்தியத் தீவுகளை 12ஆம் தேதியும், இங்கிலாந்தை 16ஆம் தேதியும் எதிர்கொள்கிறது. அடுத்து ஆஸ்திரேலியாவுடன் 19ஆம் தேதியும், வங்கதேசத்துடன் 22ஆம் தேதியும், தென்னாப்பி -ரிக்காவுடன் 27ஆம் தேதியும் விளையாடுகிறது.

கரோனா சூழல்காரணமாக ஓராண்டு தாமதமாக நடக்கும் இப்போட்டியின் ஆட்டங்கள், நியூஸிலாந்தின் 6 நகரங்களி -ல் நடைபெறவுள்ளன. 8 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் அணியும், மற்றொரு அணி -யுடன் தலா ஒருமுறை மோதும். லீக் ஆட்டங்கள் முடிவில் இருபிரிவுகளிலும் முதலிரு இடங்களில் இருக்கும் அணிகள் அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதிபெறும்.

4. நீர்மின்திட்டங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள்: பாகிஸ்தானுக்கு அளிக்க இந்தியா ஒப்புதல்

சிந்து நதி மற்றும் அதன் கிளையாறுகளில் கட்டப்பட்டு வரும் நீர்மின்திட்டங்கள் பற்றிய கூடுதல் விவரங்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்துகொள்வதற்கு இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.

சிந்து, ஜீலம், சீனாப் ஆகிய நதிகளின் நீரை பாகிஸ்தானும், சட்லெஜ், பியாஸ், ரவி ஆகிய நதிகளின் நீரை இந்தியாவும் தடையின்றி பயன்படுத்திக்கொள்ள இருநாடுகளுக்கு இடையே 1960இல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தப்படி, சிந்து நதி நீர் நிரந்தர ஆணையத்தின் கூட்டம், ஆண்டுக்கு ஒரு முறை பாகிஸ்தானில் அல்லது இந்தியாவில் நடைபெற வேண்டும். கடந்த ஆண்டு இந்தியாவில் கூட்டம் நடைபெற்றதால், இந்த ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் மார்ச்.1ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது.

அதில், பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டு சிந்து நதி நீர் ஆணையர் மெஹர் அலி ஷா தலைமையிலான குழுவும் இந்தியத் தரப்பில் சிந்து நதி நீர் ஆணையர் பிரதீப் குமார் சக்சேனா தலைமையிலான குழுவும் கலந்துகொண்டு விவாதித்தன.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து கூறியிருப்பதாவது:

“சிந்து நதி நீர் ஆணைய ஒப்பந்தப்படி, அந்த நதிகளில் இந்தியா நீர்மின் திட்டங்களைத் தொடங்கலாம். அந்தத் திட்டத்தால் தங்களுக்கு பாதிப்பு இருப்பதாகக் கருதினால் பாகிஸ்தான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்.

சிந்து மற்றும் அதன் கிளையாறுகளில் 10 நீர்மின் திட்டங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது. அவற்றில் 9 திட்டங்கள் 25 மெகாவாட் மற்றும் அதற்குக் குறைவான மின்னுற்பத்தித் திறன் கொண்டவை. இந்த நீர்மின் திட்டங்கள்பற்றிய விவரங்களை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதன் பேரில், அந்நாட்டு குழுவிடம் இந்தியத் தரப்பு அளித்தது. ஆனால், அந்த விவரங்கள் தெளிவின்றி இருப்பதாக பாகிஸ்தான் தரப்பு கூறியுள்ளது.

அதற்கு, ‘சிறிய நீர்மின் திட்டங்களின் வரைபடங்கள், தொழில்நுட்பங்கள்பற்றிய விவரங்கள் மாநில அரசுகளிடம் போதிய அளவில் இருக்காது. எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்களைத் தொடர்புகொண்டு கூடுதல் விவரங்களைப் பெற்றுத்தரப்படும்’ என இந்தியா தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும், பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்படும் ஆட்சேபங்களை திறந்த மனதுடன் பரிசீலிக்கவும் இந்திய தரப்பு ஒப்புக்கொண்டது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனக்கூறப்பட்டுள்ளது.

5. தேசிய செஸ்: அர்ஜூன் சாம்பியன்

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற 58ஆவது சீனியர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் தெலங்கானாவின் அர்ஜூன் எரிகாய்சி வாகை சூடினார்.

11 சுற்றுகளின் முடிவில் அர்ஜூன், தமிழகத்தைச் சேர்ந்த டி குகேஷ், பி இனியன் ஆகிய மூவருமே 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட ‘டை-பிரேக்கரில்’ வெற்றி பெற்று அர்ஜூன் சாம்பியன் ஆனார். அவருக்கு `6 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

குகேஷ் 2ஆம் இடமும், இனியன் மூன்றாமிடமும் பிடிக்க, நடப்பு சாம்பியனாக இருந்த மற்றொரு தமிழரான அரவிந்த் சிதம்பரம் 8 புள்ளிகளுடன் 4ஆம் இடம் பிடித்தார்.

திவ்யா முதலிடம்: முன்னதாக, இப்போட்டியன் மகளிர் பிரிவில் மகாராஷ்டிரத்தின் திவ்யா தேஷ்முக் சாம்பியன் ஆக, சாக்ஷி சித்லாங்கே 2ஆம் இடமும், ஆந்திரத்தின் பிரியங்கா நுடாகி 3ஆம் இடமும் பிடித்தனர்.

6. இன்று தேசிய பாதுகாப்பு தினம்

“இளம்தலைமுறையினருக்கு பாதுகாப்பு கலாசாரத்தினை மேம்படுத்த புகட்டுவோம்” என்ற கருவுடன் இன்று 51ஆவது தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய பாதுகாப்பு குழுமம் தொடங்கப்பட்ட மார்ச்.4ஆம் தேதி ஒவ்வோர் ஆண்டும் தேசிய பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1. What is the theme of the ‘National Science Day 2022’?

A) Integrated Approach in Science and Technology for Sustainable Future 

B) Science and Technology for Atmanirbhar Bharat

C) Vigyan Sarvatra Pujyate

D) Amrut Kaal Vigyan

2. Which is the largest exported items among all fresh food category from India?

A) Fresh Grapes 

B) Guava

C) Fresh Mangoes

D) Betel Leaves & Nuts

3. Who is the only contestant from India, in the Beijing Winter Olympics 2022?

A) Arif Khan 

B) Neeraj Chopra

C) Shiva Keshavan

D) Jagdish Singh

4. CPEC is an Economic Corridor connecting Xinjiang region of China and Gwadar Port of which country?

A) Iran

B) Pakistan 

C) Afghanistan

D) Kazakhstan

5. ‘Baal Swaraj portal’ is associated with which institution?

A) Pratham Foundation

B) National Commission for Protection of Child Rights 

C) Amnesty International

D) National Human Rights Commission

6. What does ‘S’ stand for in ‘SWIFT’ financial messaging service?

A) Secure

B) Society 

C) Simple

D) Service

7. ‘Millennium Challenge Corporation (MCC)’ is an initiative of which country?

A) USA 

B) Russia

C) China

D) Japan

8. Which is the headquarters of the International Atomic Energy Agency (IAEA)?

A) Geneva

B) Vienna 

C) New York

D) Moscow

9. Which Union Ministry released a Draft Report on InDEA 2.0?

A) Ministry of Electronics and Information and Technology 

B) Ministry of Science and Technology

C) Ministry of Finance

D) Ministry of Corporate Affairs

10. The National Safety Day is observed on which date in India?

A) March 4 

B) March 3

C) March 1

D) March 2

Exit mobile version