4th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

4th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 4th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சர்வதேச சுங்க நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜனவரி 25

ஆ) ஜனவரி 26 

இ) ஜனவரி 27

ஈ) ஜனவரி 28

2. 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) சீனா 

இ) இரஷ்யா

ஈ) அமெரிக்கா

3. எந்த உலக அமைப்பு 2022ஆம் ஆண்டிற்கான ‘Five-alarm global fire’ என முன்னுரிமைகளை வழங்கியது?

அ) உலக வங்கி

ஆ) உலக பொருளாதார மன்றம்

இ) ஐக்கிய நாடுகள் 

ஈ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

4. எந்த நகரத்தில் நெகிழிப்பூங்கா அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?

அ) சென்னை

ஆ) மங்களூரு 

இ) பெங்களூரு

ஈ) திருநெல்வேலி

5. ‘வாழும் வேர்ப்பாலங்கள்’ என்பது எந்த மாநிலத்தில் காணப்படும் ஒரு தனித்துவமிக்க கட்டமைப்பாகும்?

அ) மேற்கு வங்காளம்

ஆ) மேகாலயா 

இ) ஹிமாச்சல பிரதேசம்

ஈ) மத்திய பிரதேசம்

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற கிரிபட்டி அமைந்துள்ள கண்டம் எது?

அ) ஆசியா

ஆ) ஓசியானியா 

இ) ஐரோப்பா

ஈ) ஆப்பிரிக்கா

7. இந்தியாவில் ‘அமர் ஜவான் ஜோதி’ கட்டப்பட்ட ஆண்டு எது?

அ) 1947

ஆ) 1950

இ) 1972 

ஈ) 1958

8. ஆதி பத்ரா அணையைக் கட்டுவதன்மூலம் சரஸ்வதி ஆற்றை புதுப்பிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரு மாநில அரசுகள் எவை?

அ) ஹரியானா-ஹிமாச்சல பிரதேசம் 

ஆ) குஜராத்-ராஜஸ்தான்

இ) ஹரியானா-பஞ்சாப்

ஈ) ஹிமாச்சல பிரதேசம்-தில்லி

9. தேலிநீலாபுரம் பறவைகள் புகலிடம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) ஆந்திர பிரதேசம் 

இ) ஒடிஸா

ஈ) மேற்கு வங்கம்

10. சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘நியோகோவ்’, முதலில் எந்த உயிரினத்தில் கண்டறியப்பட்டது?

அ) குரங்கு

ஆ) வௌவால் 

இ) ஆந்தை

ஈ) கொறித்துண்ணி

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பிப்ரவரி 4 – உலக புற்றுநோய் நாள்

கருப்பொருள்: “Close the Care Gap”.

2. இன்று தொடங்குகிறது குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள்

24ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பெய்ஜிங் நகரில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

பெய்ஜிங்கில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருசில விளையாட்டுகளின் முதல்கட்ட சுற்றுகள் கடந்த 2ஆம் தேதியே தொடங்கிவிட்டாலும், ஒலிம்பிக் தீபமேற்றிய பிறகே, ஒலிம்பிக்ஸ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியதாக அறிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்.18 அன்று, ஒலிம்பிக்ஸின் பிறப்பிடமான கிரீஸில் தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி ஓட்டம், வெள்ளிக்கிழமை போட்டியின் தொடக்க நிகழ்ச்சி நடக்கும் மைதானத்தில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றுவதுடன் நிறைவடைகிறது. கரோனா தொற்று அச்சம் காரணமாக பெய்ஜிங் நகரில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தின் கால அளவு குறைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு சூழலில் டோக்கியோ ஒலிம்பிக் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அதேபோல் நடத்தி முடிக்கப்படும் நோக்குடன் தொடங்குகிறது இந்த குளிர்கால ஒலிம்பிக். உலகெங்கும் கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமாகியிருக்கும் நிலையில் இந்தப் போட்டியை ஒத்திவைப்பதற்கு கோரிக்கைகளும், பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

அவற்றைக் கடந்த வகையில் உரிய பாதுகாப்பு முன்னெச் -சரிக்கை நடவடிக்கைகளுடன் போட்டியை நடத்துவதற் -கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ‘பயோ பபுள்’ பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், போட்டியா -ளர்கள் உள்பட ஒலிம்பிக்குடன் தொடர்புடைய அனைவருக்கும் அவ்வப்போது கரோனா பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும், போட்டியில் பங்கேற்க வந்துள்ள வீரர், வீராங்க -னைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர்.

இதனிடையே, மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ராஜ்ஜீய ரீதியிலாக இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை தவிர்த்துள்ளன. எனினும், அந்த நாடுகளின் சார்பில் போட்டியாளர்கள் களம் காண்கின்றனர்.

இந்தியாவின் பங்கேற்பு:

இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஒரேயொரு வீரர் மட்டும் பங்கேற்கிறார். பனிச் சறுக்கு வீரரான ஆரிப்கான், ‘ஸ்லாலம்’, ‘ஜயன்ட் ஸ்லாலம்’ ஆகிய இரு பிரிவுகளில் களம் காண்கிறார். அவரோடு 6 பேர்கொண்ட இந்திய குழு பெய்ஜிங் சென்றுள்ளது.

தொடக்கம் – பிப்ரவரி 4

நிறைவு – பிப்ரவரி 20

விளையாட்டுகள் – 15 விளையாட்டுகள்/109 போட்டிகள்

பங்கேற்பு – 91 நாடுகள்

போட்டியாளர்கள் (சுமார்) – 2,871

ஆடவர் – 1,581

மகளிர் – 1,290

3. கடலூர் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலை பூங்கா அமைக்க `1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கடலூர் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலை பூங்கா அமைக்க `1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 3.20 ஏக்கரில் அமைக்கப்ப -டும் இப்பூங்காவில் நடைபாதைகள், மூலிகைச் செடிகள், குளம், பார்வையாளர் இருக்கை வசதி, சிறுவர் பூங்கா ஆகியவை இடம்பெறவுள்ளன.

1. When is the ‘International Customs Day’ observed every year?

A) January 25

B) January 26 

C) January 27

D) January 28

2. Which country is the host of the 2022 Winter Olympics?

A) Japan

B) China 

C) Russia

D) USA

3. Which global institution laid out priorities for 2022 as ‘Five–alarm global fire’?

A) World Bank

B) World Economic Forum

C) United Nations 

D) International Monetary Fund

4. Union Government has approved to set up a Plastic Park in which city?

A) Chennai

B) Mangaluru 

C) Bengaluru

D) Tirunelveli

5. ‘Living root bridges’ is an iconic structure, found in which Indian state?

A) West Bengal

B) Meghalaya 

C) Himachal Pradesh

D) Madhya Pradesh

6. Kiribati, which was seen in the news recently, is a country located in which continent?

A) Asia

B) Oceania 

C) Europe

D) Africa

7. When was the ‘Amar Jawan Jyoti’ established in India?

A) 1947

B) 1950

C) 1972 

D) 1958

8. Which state governments signed agreement to rejuvenate the Saraswati River by constructing Adi Badra Dam?

A) Haryana–Himachal Pradesh 

B) Gujarat–Rajasthan

C) Haryana–Punjab

D) Himachal Pradesh–Delhi

9. Telineelapuram Bird Sanctuary is located in which state?

A) Tamil Nadu

B) Andhra Pradesh 

C) Odisha

D) West Bengal

10. ‘NeoCov’, which was seen in the news, was first identified in which species?

A) Monkey

B) Bat 

C) Owl

D) Rodent

Exit mobile version