இந்தியாவில் கல்வி வளர்ச்சி Book Back Questions 8th Social Science Lesson 5

8th Social Science Lesson 5

5] இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

பண்டைய இந்திய நகரமாக இருந்த தட்சசீலம் தற்போது வடமேற்கு பாகிஸ்தானில் உள்ளது. இது ஒரு முக்கியமான தொல்பொருள் ஆராய்ச்சிப் பகுதியாகும். இதனை 1980இல் யுனெஸ்கோ, உலக பாரம்பரியத் தனமாக அறிவித்தது. சாண்கியர், தனது அர்த்தசாஸ்திரத்தை இப்பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து தொகுத்ததாக கூறப்படுவது இதன் சிறப்பாகும். 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இப்பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் கன்னிங்காம் கண்டுபிடித்தார்.

பண்டைய காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் கி. பி. (பொ. ஆ) 5ஆம் நூற்றாண்டு முதல் கி. பி. (பொ. ஆ) 12ஆம் நூற்றாண்டு வரை கற்றலின் மையமாக இருந்தது. தற்போதைய பீகாரில் உள்ள ராஜகிருகத்தில் அமைந்துள்ள நாளந்தா பல்கலைக்கழகம் உலகின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். நாளந்தா மகா விகாராவின் இடிபாடுகளை ஐ. நா. சபையின் யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது. தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள நாளந்தா பல்கலைக்கழகம் நாகரிகங்களுக்கிடையிலான தொடர்பு மையமாக கருதப்படுகிறது.

இடைக்காலத்தில் பல சமய மடங்களும் மடாலயங்களும் கல்வி வளர்ச்சிக்காக நிறுவப்பட்டன. ஸ்ரீரங்கத்தில் உள்ள அஹோபில மடம் அவற்றுள் ஒன்றாகும். அங்கு ஸ்ரீராமானுஜர் கல்விக்காக தன்னுடைய குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். மடாலயக் கல்வி தவிர, சமணப் பள்ளிகளும் மற்றும் பௌத்த விகாரங்களும் மக்களுக்குக் கல்வி வழங்குவதில் முக்கிய பங்காற்றின. அனைத்துத் துறைகளைச் சார்ந்த புத்தகங்கள் கொண்ட நூலகத்தினை அவைகள் பெற்றிருந்தன.

1813இல் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை உறுதிப்படுத்த நிர்பந்திக்கப்பட்டது. 1813ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம், இந்தியாவில் கல்வியை மேம்படுத்துவதற்காக ஆண்டு தோறும் 1 இலட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்தது.

உட்ஸ் கல்வி அறிக்கை (1854) இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் “மகாசாசனம்” என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அனைத்து நிலைகளில் உள்ள மக்களுக்கும் கல்வியை வழங்கும், ஆங்கில கல்விக் கொள்கையின் முதல் அறிக்கை இதுவாகும். ஆனால் இது இந்தியர்களின் கொள்கைகளையும் கலாச்சாரத்தையும் விலக்கி வைத்து மாநிலக் கல்வியின் மீது முழுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தியது.

வார்தா கல்வித் திட்டம் (1937): 1937ஆம் ஆண்டு பிரபலமான அடிப்படைக் கல்வித் திட்டமான வார்தா கல்வித் திட்டத்தை காந்தியடிகள் உருவாக்கினார். காந்தியடிகளின் அடிப்படைக் கல்வித் திட்டத்தின் அச்சாணியாக அகிம்சை கொள்கை இருந்தது. அக்கல்வித் திட்டத்தின் மூலம் அகிம்சைக் கொள்கையை எதிர்கால குடிமக்களிடையே மேம்படுத்த அவர் விரும்பினார். அதன் மூலம் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்குவது அவசியமென கருதினார். காந்தியடிகள் இத்திட்டத்தின் மூலம் சுரண்டலையும், சமூக மையப்படுத்துதலையும் நீக்கிவிட்டு வன்முறையற்ற சமூக நிலையை உருவாக்க விரும்பினார்.

1976ஆம் ஆண்டு டிசம்பர் வரை கல்வித்துறை மாநிலப் பட்டியலில் இருந்தது. ஆனால் தற்போது கல்வித்துறை பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வேதம் என்ற சொல் __________ லிருந்து வந்தது.

(அ) சமஸ்கிருதம்

(ஆ) இலத்தீன்

(இ) பிராகிருதம்

(ஈ) பாலி

2. பின்வருவனவற்றுள் எது பண்டைய காலத்தில் கற்றலுக்கான முக்கிய மையமாக இருந்தது?

(அ) குருகுலம்

(ஆ) விகாரங்கள்

(இ) பள்ளிகள்

(ஈ) இவையனைத்தும்

3. இந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்

(அ) உத்திரப்பிரதேசம்

(ஆ) மகாராஷ்டிரம்

(இ) பீகார்

(ஈ) பஞ்சாப்

4. தட்சசீலத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய தளமாக எப்போது அறிவித்தது?

(அ) 1970

(ஆ) 1975

(இ) 1980

(ஈ) 1985

5. இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது?

(அ) இங்கிலாந்து

(ஆ) டென்மார்க்

(இ) பிரான்சு

(ஈ) போர்ச்சுக்கல்

6. இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் மானியமாக 1 இலட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டினைச் செய்த பட்டய சட்டம் எது?

(அ) 1813 ஆம் ஆண்டு பட்டய சட்டம்

(ஆ) 1833ஆம் ஆண்டு பட்டய சட்டம்

(இ) 1853ஆம் ஆண்டு பட்டய சட்டம்

(ஈ) 1858ஆம் ஆண்டு சட்டம்

7. பின்வரும் குழுக்களில் எந்தக் குழு பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப் பரிந்துரைத்தது?

(அ) சார்ஜண்ட் அறிக்கை, 1944

(ஆ) இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948

(இ) கோத்தாரி கல்விக்குழு, 1964

(ஈ) தேசியக் கல்விக் கொள்கை, 1968

8. இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

(அ) 1992

(ஆ) 2009

(இ) 1986

(ஈ) 1968

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வேதம் என்ற சொல்லின் பொருள் ____________

2. தட்சசீல இடிபாடுகளை கண்டறிந்தவர் ___________

3. டில்லியில் மதரஸாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் __________ ஆவார்.

4. புதிய கல்விக் கொள்கை திருத்தப்பட்ட ஆண்டு ____________

5. 2009ஆம் ஆண்டு இலவசக் கட்டாய கல்வி சட்டத்தின் விதிகளை அமல்படுத்துகின்ற முதன்மையான அமைப்பு _________ ஆகும்.

6. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ___________

பொருத்துக:

1. இட்சிங் – சரஸ்வதி மகால்

2. பிரான்சிஸ் சேவியர் – இந்திய கல்வியின் மகா சாசனம்

3. உட்ஸ் கல்வி அறிக்கை – மதராஸில் மேற்கத்திய கல்வி

4. இரண்டாம் சரபோஜி – கொச்சி பல்கலைக்கழகம்

5. சர் தாமஸ் மன்றோ – சீன அறிஞர்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியோரின் குறிப்புகள் மருத்துவத்தைக் கற்றுக் கொள்ள ஆதாரங்களாக இருந்தன.

2. கோயில்கள் கற்றல் மையங்களாக திகழ்ந்ததோடு அறிவைப் பெருக்கி கொள்ளும் இடமாகவும் இருந்தது.

3. கல்வியை ஊக்குவிப்பதில் அரசர்களும், சமூகமும் தீவிர அக்கறை காட்டியதாக ஜாதகக் கதைகள் குறிப்பிடுகின்றன.

4. இடைக்கால இந்தியாவில் பெண் கல்வி நடைமுறையில் இல்லை.

5. RMSA திட்டமானது பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்டது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. i) நாளந்தா பல்கலைக்கழகம் கி. பி. (பொ. ஆ) ஐந்தாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது.

ii) பண்டைய இந்தியாவில் மாணவர்களை தேர்ந்தெடுப்பது முதல் அவர்களின் பாடத்திட்டத்தினை வடிவமைப்பது வரை அனைத்து அம்சங்களிலும் ஆசிரியர்கள் முழுமையான சுயாட்சி கொண்டிருந்தனர்.

iii) பண்டைய காலத்தில் ஆசிரியர்கள் கணக்காயர் என்று அழைக்கப்பட்டனர்.

iv) சோழர்கள் காலத்தில் புகழ்பெற்ற கல்லூரியாக காந்தளுர் சாலை இருந்தது.

(அ) i மற்றும் ii சரி

(ஆ) ii மற்றும் iv சரி

(இ) iii மற்றும் iv சரி

(ஈ) i, ii மற்றும் iii சரி

சரியான இணையைக் கண்டுபிடி:

1. மக்தப்கள் – இடைநிலைப்பள்ளி

2. 1835ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு – ஆங்கிலக்கல்வி

3. கரும்பலகைத் திட்டம் – இடைநிலைக் கல்வி குழு

4. சாலபோகம் – கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. சமஸ்கிருதம் 2. இவையனைத்தும் 3. பீகார் 4. (1980) 5. போர்ச்சுக்கல்

6. (1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்) 7. இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948 8. (1986)

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. அறிதல் 2. அலெக்சாண்டர் கன்னிங்காம் 3. இல்துத்மிஷ் 4. (1992)

5. அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) 6. 1956

பொருத்துக: (விடைகள்)

1. இட்சிங் – சீன அறிஞர்

2. பிரான்சிஸ் சேவியர் – கொச்சி பல்கலைக்கழகம்

3. உட்ஸ் கல்வி அறிக்கை – இந்திய கல்வியின் மகா சாசனம்

4. இரண்டாம் சரபோஜி – சரஸ்வதி மகால்

5. சர் தாமஸ் மன்றோ – மதராஸில் மேற்கத்திய கல்வி

சரியா தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. சரி

2. சரி

3. சரி

4. தவறு

சரியான விடை: இடைக்கால இந்தியாவில் பெண் கல்வி பரவலாக இல்லை.

5. தவறு

சரியான விடை: RMSA திட்டமானது பதினொன்றாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்டது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. i ii மற்றும் iii சரி

சரியான இணையைக் கண்டுபிடி: (விடை)

2. 1835 ஆம் ஆண்டின் மெக்காலேயின் குறிப்பு – ஆங்கிலக் கல்வி

Exit mobile version