3rd & 4th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

3rd & 4th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 3rd & 4th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

3rd & 4th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. நடப்பாண்டுக்கான (2021) பேரிடர் அபாயக் குறைப்பு – வறட்சி குறித்த சிறப்பு அறிக்கையின் உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) FAO

ஆ) UNDRR

இ) WFP

ஈ) UNESCO

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘ICMED 13485 PLUS’ என்றால் என்ன?

அ) தரச்சான்றிதழ் திட்டம்

ஆ) வறுமையொழிப்புத் திட்டம்

இ) சாலை திட்டம்

ஈ) தடுப்பூசி திட்டம்

3. பன்னாட்டு கார்பன் விலை தளத்தை அமைக்கவுள்ள அமைப்பு எது?

அ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஆ) உலக வங்கி

இ) ஆசிய வளர்ச்சி வங்கி

ஈ) ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு வங்கி

4. இந்தியாவில் எத்தனால் உற்பத்திக்கான மாற்றுதீவன ஆதாரமாக அடையாளங்காணப்பட்டுள்ள பயிர் எது?

அ) பருத்தி

ஆ) சணல்

இ) மரவள்ளிக்கிழங்கு

ஈ) உருளைக்கிழங்கு

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பெருந்தடுப்புப்பவளத்திட்டு அமைந்துள்ள நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) ஆஸ்திரேலியா

இ) ஜப்பான்

ஈ) இந்தியா

6. சமீபத்தில் இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்ட M-யோகா செயலி, எந்த அமைப்போடு இணைந்து உருவாக்கப்பட்டது?

அ) ஐநா

ஆ) WHO

இ) CDC

ஈ) ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்

7. ஒலிம்பிக்கில் போட்டியிடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் திருநங்கை விளையாட்டு வீராங்கனையான லாரல் ஹப்பார்ட் சார்ந்த நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) ரஷ்யா

இ) நியூசிலாந்து

ஈ) தென்னாப்பிரிக்கா

8. 100% கச்சா எண்ணெய் / 100% எத்தனால் பயன்படுத்தக்கூடிய எஞ்சினின் பெயர் என்ன?

அ) பல எரிபொருள் எஞ்சின்

ஆ) பிளெக்ஸ் எரிபொருள் எஞ்சின்

இ) மாற்று எஞ்சின்

ஈ) நிலையான எஞ்சின்

9. நடப்பாண்டின் (2021) உலக முதலீட்டு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ) UNCTAD

ஆ) WTO

இ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஈ) உலக வங்கி

10. எஸ்தர் டப்லோ மற்றும் ரகுராம் ராஜன் ஆகியோரைக்கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவை உருவாக்கவுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) மேற்கு வங்கம்

ஈ) ஆந்திர பிரதேசம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கொந்தகை அகழாய்வு: மேலும் ஒரு சமநிலை எலும்புக்கூடு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கொந்தகையில் நடைபெற்றுவரும் அகழாய்வில் வெள்ளிக்கிழமை சமநிலையில் மேலும் ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய பகுதிகளில் கடந்த பிப்.13 முதல் 7ஆம் கட்ட அகழாய்வுப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளின் அடிப்படையில் கொந்தகை பண்டைய காலத்தில் ஈமக் காடாக இருந்தது தெரியவந்துள்ளது.

இங்கு தோண்டப்பட்ட குழிகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், எலும்புக்கூடுகள் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு இப்பகுதியில் சமநிலையில் முழு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதே அகழாய்வுக் குழியில் ஏற்கெனவே கிடைத்த சமநிலை எலும்புக்கூடுக்கு அருகிலேயே, மற்றொரு சமநிலை எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3.5 அடி நீளமுள்ள இந்த எலும்பு -க்கூட்டின் பாலினம் ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

2. உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வு

உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சராக இருந்த தீரத் சிங் ராவத் ராஜிநாமா செய்ததையடுத்து, டேராடூனில் நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1. Which institution released the Global Assessment Report on Disaster Risk Reduction–Special Report on Drought 2021?

A) FAO

B) UNDRR

C) WFP

D) UNESCO

2. What is ‘ICMED 13485 PLUS’, which was seen in the news recently?

A) Quality Certification Scheme

B) Poverty Allevation Scheme

C) Road Project

D) Vaccination Scheme

3. Which organisation has proposed to set up an International Carbon Price Floor?

A) IMF

B) World Bank

C) ADB

D) AIIB

4. Which crop has been identified as an alternate feedstock source for Ethanol production in India?

A) Cotton

B) Jute

C) Cassava

D) Potato

5. Great Barrier Reef, which was seen in the news recently, is a famous coral reef situated in which country?

A) USA

B) Australia

C) Japan

D) India

6. M–Yoga application, launched by India recently, was developed in association with which organisation?

A) UN

B) WHO

C) CDC

D) John Hopkins University

7. Laurel Hubbard, who is selected as the first transgender athlete to compete at the Olympics, is from which country?

A) USA

B) Russia

C) New Zealand

D) South Africa

8. What is the name of the Engine which can be used with 100 percent crude oil or 100 percent ethanol?

A) Multi fuel Engine

B) Flex fuel Engine

C) Alternative Engine

D) Sustainable Engine

9. Which organization has released the World Investment Report 2021?

A) UNCTAD

B) WTO

C) IMF

D) World Bank

10. Which state is set to form an economic advisory council composed of Esther Duflo and Raghuram Rajan?

A) Tamil Nadu

B) Kerala

C) West Bengal

D) Andhra Pradesh

Exit mobile version