29th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

29th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 29th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக மாற்றிப் பொருத்தி சாதனை படைத்துள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) அமெரிக்கா 

இ) ரஷ்யா

ஈ) சீனா

2. நடப்பாண்டின் (2021) உலகளாவிய உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில், இந்தியாவின் தரநிலை என்ன?

அ) 62

ஆ) 71 

இ) 83

ஈ) 94

3. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ‘காவலர் நினைவு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) அக்டோபர்.21 

ஆ) அக்டோபர்.23

இ) அக்டோபர்.24

ஈ) அக்டோபர்.26

4. 2021 – உலகளாவிய வேளாண் உற்பத்தி அறிக்கையின்படி, மொத்த காரணி உற்பத்தித்திறனின் ஆண்டு விகிதம் என்ன?

அ) 0.50 %

ஆ) 1.36 % 

இ) 2.50 %

ஈ) 4.00 %

5. மாற்றப்படவுள்ள வனப் பாதுகாப்புச் சட்டமானது எந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்டது?

அ) 1972

ஆ) 1980 

இ) 1992

ஈ) 2000

6. பதுகம்மா என்பது எந்த இந்திய மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு மலர் திருவிழாவாகும்?

அ) கேரளா

ஆ) தெலுங்கானா 

இ) மேற்கு வங்காளம்

ஈ) பஞ்சாப்

7. இந்திய குடிமைப் பணிகளைப் பொறுத்தவரை, அக்.9ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிற நாள் எது?

அ) இந்திய காவல்துறை சேவைகள் நாள்

ஆ) இந்திய நிர்வாக சேவைகள் நாள்

இ) இந்திய வெளியுறவு சேவை நாள் 

ஈ) இந்திய வருவாய் சேவைகள் நாள்

8. ‘Safe food now for a healthy tomorrow’ என்பது, அக்.16 அன்று அனுசரிக்கப்பட்ட எந்த நாளின் கருப்பொருளாகும்?

அ) உலக உணவு நாள் 

ஆ) உலக உழவர்கள் நாள்

இ) உலக உழவு நாள்

ஈ) உலக நலவாழ்வு மற்றும் சுகாதார நாள்

9. மாலேயில் நடந்த SAFF கால்பந்து சாம்பியன்ஷிப்பை வென்ற நாடு எது?

அ) நேபாளம்

ஆ) இந்தியா 

இ) இலங்கை

ஈ) வங்காளதேசம்

10. தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தின் புதிய தலைவர் & நிர்வாக இயக்குநர் யார்?

அ) அமித் ரஸ்தோகி 

ஆ) கஸ்தூரி ரங்கன்

இ) மயில்சாமி அண்ணாதுரை

ஈ) K சிவன்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆசியான் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இந்தியா: உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தகவல்

ஆசியான் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கும், அதன் முன்னிலைக்கும் இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் 18ஆவது ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு காணொலி முறையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ஆசியான் நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவானது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டது. நமது கலாச்சாரம், பழக்க வழக்கம், மொழிகள், எழுத்துகள், கட்டிட வடிவமைப்பு ஆகியவற்றில் இருந்தே நாம் இதனை அறிந்து கொள்ளலாம். எனவேதான், ஆசியான் நாடுகளுடனான உறவுக்கு இந்தியா முன்னுரிமை வழங்குகிறது. அதேபோல, இந்தியாவின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஆசியான் கூட்டமைப்பு பெரும் உறுதுணையாக இருந்து வருகிறது.

குறிப்பாக, இந்தியாவின் கிழக்கை நோக்கிய கொள்கைக்கு ஆசியான் கூட்டமைப்பு ஆற்றி வரும் பங்களிப்பு அளப்பரியது. அதுமட்டுமின்றி, இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் மேம்பாட்டுக்கும் அக்கூட்டமைப்பு உதவியாக உள்ளது. இதற்காக, இந்த தருணத்தில் ஆசியான் நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரும் 2022-ம் வருடமானது ஆசியான் நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான 30-வது ஆண்டு உறவை குறிக்கிறது. அதே வேளையில், இந்தியாவும் தனது 75-வது ஆண்டு சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளது. இதனை நினைவுகூரும் விதமாக, 2022-ம் ஆண்டினை ஆசியான் – இந்தியா நட்பு ஆண்டாக கொண்டாட முடிவு செய்துள்ளோம்.

தற்போது கரோனா பரவலால் எழுந்துள்ள சவால்களை நாம் அனைவரும் எதிர்கொண்டு வருகிறோம். அதே சமயத்தில், இந்தியா – ஆசியான் கூட்டமைப்புக்கு இடையேயான உறவுக்கும் கரோனா சூழல் சில சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாம் ஒன்றிணைந்து வெற்றிக் கொள்ள வேண்டும். நமது உறவை எதிர்காலத்திலும் வலுப்படுத்துவற்கான நடவடிக்கையை நாம் மேற்கொள்ள வேண்டும். ஆசியான் நாடுகளின் ஒற்றுமைக்கும், அதன் முன்னிலைக்கும் இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவ்வாறு மோடி பேசினார்.

ஆசியான் கூட்டமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்டவை இக்கூட்டமைப்பில் நட்பு நாடுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

2. சரக்கு கையாளுதல், வேளாண் ஏற்றுமதியை மேம்படுத்த தலைமைச் செயலர் தலைமையில் குழு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சரக்கு கையாளுதல், வேளாண் மற்றும் சேவை ஏற்றுமதியை மேம்படுத்த மாநில அளவில் தலைமைச் செயலர் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

2019ஆம் ஆண்டு, மாநிலத்தின் அனைத்து சரக்குகளையும் கையாளுத -ல், வேளாண் மற்றும் சேவை ஏற்றுமதி தொடர்பானவற்றை கண்கா
-ணிக்கவும், வர்த்தகம் தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்யவும் தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த செப்டம்பரில், தமிழ்நாடு ஏற்றுமதி வளர்ச்சிக் கொள்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாநில ஏற்றுமதி வளர்ச்சிக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தலைமைச் செயலர் வெ இறையன்பு தலைமையில் தற்போது குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் குழுவில் தொழில், நிதி, கால்நடை பராமரிப்பு, கைத்தறி, குறு, சிறு நடுத்தரதொழில்கள், வேளாண்மை ஆகியதுறைகளின் செயலர்கள் மற்றும் ஏற்றுமதி கவுன்சில் அல்லது ஏற்றுமதியாளர்கள் சங்க பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி அமைப்பின் மேலாண் இயக்குநர் அமைப்பாளராகவும், அயல்நாடு வர்த்தக தென்மண்டல கூடுதல் இயக்குநர் ஜெனரல் துணை அமைப்பாளராக செயல்படுவர்.

மேலும், இந்திய ஏற்றுமதி சங்கத்தின் தலைவர் ஏ சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், ஆட்டோமேட்டிவ் காம்போனன்ட் தயாரிப்பாளர்கள் சங்க மண்டல தலைவர் சுபகுமார், சிஐஐ தமிழ்நாடு துணைத் தலைவர் சத்யகம் ஆர்யா, மோகிப் ஷூ நிறுவன மேலாண் இயக்குநர் முகமது மொகிபுல்லா கொட்டாய், பாக்ஸ்கான் நிறுவன மேலாண் இயக்குநர் ஜோஷ் பவுல்கர், கேவிஎம் ஏற்றுமதி நிறுவன மேலாண் இயக்குநர் கேவிவி மோகனன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக் குழுவானது குறைந்தபட்சம் 6 மாதத்துக்கு ஒருமுறை கூடி, ஏற்றுமதி கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முன்னேற்றம்குறித்து விவாதிக்கும். தேவைப்பட்டால் வேறு துறைகளையும் இந்தஆய்வின்போது சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த துறைகளிடையே ஏற்றுமதி தொடர்பான சிக்கல்களை பரிமாறி அவற்றுக்கு இக்குழு தீர்வு காணும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3. வாலாஜாபாத் அருகே – 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதி கற்கள் கண்டுபிடிப்பு: உத்திரமேரூர் வரலாற்று ஆய்வுமையத்தலைவர் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள உள்ளாவூர் கிராமத்தில், 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர மன்னர்கள் காலத்தை சேர்ந்த 4 சதி கற்களும், உடைந்த நிலையில் ஒரு சிலையும் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள -ன. இதில் மூன்று சதி கற்களில் ஒரு பெண், ஓர் ஆண் உருவமும், 4ஆவது சதிகல்லில் ஓர் ஆண், மூன்று பெண் உருவங்களும் உள்ளன.

இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கூறியது:

காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் உள்ளது உள்ளாவூர் கிராமம். இந்த கிராமத்தில் தீப்பாஞ்சி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 50 ஆண்டுகளாக வழிபாடு இல்லாமல் உள்ளது. இந்தக் கோயிலை உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் சீரமைத்து பார்த்தபோது இந்த சதி கற்களைக் கண்டறிந்தோம். இவற்றில் சில கற்கள் மண்ணில் பாதி புதைந்த நிலையில் காணப்பட்டன.

ஒரு வீரன் இறந்தால் அந்த வீரனின் மனைவியும் தீயில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்வார். இந்தப் பழக்கத்துக்கு சதி பழக்கம் என்று பெயர். இதனைத் தொடர்ந்து இறந்த அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்கள் உருவம் பொதித்த கற்களை உருவாக்கி ஊர்பொது வெளியில் நட்டுவைத்து வழிபாடு நடத்துவர். இதற்கு ‘சதிக்கல் வழிபாடு’ எனறு பெயர்.

நாங்கள் கண்டறிந்த இந்த சதி கற்களில், 3 சதி கற்களில் கணவன் மனைவியும், ஒரு சதிக்கல்லில் ஒரு கணவன் 3 மனைவிமார்களும் உள்ளனர். தீயில் பார்ந்து உயிரை விட்ட இப்பெண்களின் நினைவைப் போற்றும் வகையில் தீப்பாஞ்சி அம்மனாக வழிபட்டுள்ளனர்.

இந்த கிராமத்தில் இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட சதி கற்கள் உள்ளன. விஜயநகர மன்னர்கள் காலத்தில் இந்த கிராமம் முக்கிய ஊராக இருந்துள்ளது. அந்தக் காலத்தில் இந்த முறை பின்பற்றப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்துக்கு பறைசாற்றும். இதுபோன்ற வரலாற்று ஆவணங்களைக் காப்பது காலத்தின் கட்டாயம் என்றார்.

4. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலராக தமிழகத்தை சேர்ந்த எம் ரவிச்சந்திரன் நியமனம்: இயற்கை பேரிடரால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை

இயற்கை பேரிடர்களான மழை, வெள்ளம், புயல், சுனாமி, அதிக வெப்பத்தை கண்காணித்து மாநில அரசுகளுக்கு தெரிவித்து, இந்தப் பாதிப்புகளிலிருந்து மக்களை காக்கும் பணிகளில் மத்திய புவி அறிவியல் அமைச்சகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அமைச்சகத்தின் செயலராக, தமிழகத்தைச் சேர்ந்த எம் ரவிச்சந்திரனை மத்திய அரசு நியமித்துள்ளது.

தேனி மாவட்டம், பத்திரகாளிபுரத்தில் பிறந்தவர் எம் இரவிச்சந்திரன். அழகப்பா பல்கலையில் இயற்பியலில் முதுநிலை பட்டமும், புனே பல்கலையின் இந்திய வெப்பமண்டல வானிலை மையத்தில் இயற்பியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

அதே மையத்தில் 1988-1997 காலகட்டத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்தார். பின்னர் சென்னையில் தேசிய பெருங்கடல்சார் தொழில்நுட்ப நிறுவன (NIOT) முதுநிலை திட்ட பொறியாளராகவும், இந்திய தேசிய பெருங்கடல்சார் தகவல் மையத்தில் (INCOIS) விஞ்ஞானியாகவும், தேசிய துருவம் மற்றும் பெருங்கடல்சார் ஆராய்ச்சி மைய (NCPOR) இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் இவர் மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகச் செயலராக நியமிக்கப்ப -ட்டுள்ளார்.

5. ஜி-20 மாநாடு: ரோம் சென்றடைந்தார் பிரதமர் மோடி

ஜி-20 மற்றும் சிஓபி-26 மாநாடுகளில் பங்கேற்பதற்காக இத்தாலி தலைநகர் ரோமிற்கு பிரதமர் மோடி இன்று சென்றடைந்தார்.

வருகிற அக்.30,31 தேதிகளில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்று விட்டு, கிளாஸ்கோவுக்கு சென்று உலக நாடுகளின் முக்கிய தலைவர்க -ள் பங்கேற்கும் சிஓபி-26 மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

இந்தப் பயணத்தின்போது உலக நாடுகளின் முக்கியத் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடி ரோமிற்கு புறப்படுவதற்கு முன்பு தில்லியில் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிக்கையில், ‘இத்தாலி பிரதமர் மேரியோ திராகியின் அழைப்பின் பேரில் அக்டோபர் 29 முதல் 31ஆம் தேதி வரையில் ரோம் நகரத்துக்கு பிரதமர் மோடி சென்று அங்கு நடைபெறும் 16ஆவது ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறார்.

அப்போது, ஜி-20 மாநாட்டு தலைவர்களுடன் கரோனா பெருந்தொற்றுக் -குப் பிறகு சர்வதேச பொருளாதாரம், சுகாதார மீட்சி, பருநிலை மாற்றம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். கரோனா பெருந்தொ -ற்றுக்குப் பிறகு ஜி-20 மாநாட்டுத் தலைவர்கள் நேரில் பங்கேற்கும் முதல் கூட்டம் இதுவாகும். இதில் பிறநாட்டுத் தலைவர்களுடன் இந்தியா மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து இச்சந்திப்பின் போது பிரதமர் மோடி ஆலோசிப்பார்.

6. தமிழ் மரபு வழி வந்த கனடா நாட்டு பாதுகாப்பு அமைச்சருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து

தமிழ் மரபு வழி வந்த அனிதா ஆனந்த், கனடா நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

7. சென்னை வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு ரூ.1,877 கோடி கடன்: இந்தியா-ஆசிய வளர்ச்சி வங்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்து

சென்னையில் வெள்ளத் தடுப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.1,877 கோடி (251 மில்லியன்டாலர்) கடனுதவி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஆசிய வளர்ச்சி வங்கியும் வியாழக்கிழம கையெழுத்திட்டன.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பாதவது:

சென்னை நகரை வெள்ள பாதிப்பு ஏற்படுவதில் இருந்து தடுப்பதற்காக, கொசஸ்தலை ஆறு பாயும் பகுதிகளில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன. இந்தத் திட்டப் பணிகளுக்கு ரூ.1,877 கோடி கடனுதவி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஆசிய வளர்ச்சி வங்கியும் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தில் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலர் ரஜத்குமார் மிஸ்ராவும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியத்திட்ட இயக்குநர் டேக்கியோ கோஷினியும் கையெழுத்திட்டனர்.

சென்னையின் அசுரவேக நகரமய வளர்ச்சியால் நிலங்கள் ஆக்கிரமிக்க -ப்பட்டதால் நீர்நிலைகளில் கொள்ளளவு குறைந்துவிட்டது. இதனால், சென்னை நகரம் எளிதில் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளது. இந்தத்திட்டத்தின்மூலம், வெள்ள பாதிப்பிலிருந்து நகரத்தைப் பாதுகாக்கும்வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் ‘மெட்டா’ என மாற்றம்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் ‘மெட்டா’ என மாற்றப்படுவதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகம் என்பதைத் தாண்டி ‘மெட்டாவெர்ஸ்’ என்னும் மெய்நிகர் உலகத்தை உருவாக்குவதில் ஃபேஸ்புக் நிறுவனம் தீவிரம்காட்டி வருகிறது. அதற்கு வசதியாக நிறுவனத்தின் பெயர் ‘ஃபேஸ்புக் இன்கார்ப்பரேட்டட்’ என்பதிலிருந்து ‘மெட்டா-Meta’ என மாற்றப்படுகிறது.

இனி, ஃபேஸ்புக் சமூக வலைதளத்துடன் இன்ஸ்டாகிராம், மெசஞ்சர், அதன் குவெஸ்ட் VR ஹெட்செட், VR பிளாட்ஃபார்ம் ஆகியவை இணைக் -கப்படும். ‘மெட்டா’ என்ற சொல் ‘அப்பால்’ என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்ததாகும். இந்தப் பெயர்மாற்றம் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ் -டாகிராம் போன்ற தனித்தளங்களுக்குப் பொருந்தாது. அதன் தாய் நிறுவனத்தின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.

1. Which country has successfully transplanted a pig’s kidney onto a human?

A) India

B) USA 

C) Russia

D) China

2. What is the rank of India in the Global Food Security Index 2021?

A) 62

B) 71 

C) 83

D) 94

3. When is the ‘Police Commemoration Day’ observed every year in India?

A) October 21 

B) October 23

C) October 24

D) October 26

4. As per the 2021 Global Agricultural Productivity Report, what is the annual rate of Total factor productivity (TFP)?

A) 0.50 %

B) 1.36 % 

C) 2.50 %

D) 4.00 %

5. The Forest Conservation Act, to which changed are proposed, was passed in which year?

A) 1972

B) 1980 

C) 1992

D) 2000

6. Bathukamma is a floral festival celebrated in which Indian state?

A) Kerala

B) Telangana 

C) West Bengal

D) Punjab

7. With regard to the Indian Civil Services, Oct.9th is celebrated as?

A) Indian Police Services Day

B) Indian Administrative Services Day

C) Indian Foreign Services Day 

D) Indian Revenue Services Day

8. ‘Safe food now for a healthy tomorrow’ is the theme of which international observance on October 16?

A) World Food Day 

B) World Farmers Day

C) World Agriculture Day

D) World Health and Hygiene Day

9. Which country won the SAFF Football Championship held in Male?

A) Nepal

B) India 

C) Sri Lanka

D) Bangladesh

10. Who is the new Chairman and Managing Director of the National Research Development Corporation?

A) Amit Rastogi 

B) Kasturi Rangan

C) Mayilsamy Annadurai

D) K Sivan

Exit mobile version