29th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

29th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 29th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘India’s Booming Gig and Platform Economy’ என்ற தலைப்பில் அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. உலக வங்கி

ஆ. உலக தொழிலாளர் அமைப்பு

இ. NITI ஆயோக் 

ஈ. பன்னாட்டுச் செலவாணி நிதியம்

2. மாவட்டங்களுக்கான செயல்திறன் தர அட்டவணையை (PGI-D) வெளியிட்ட நடுவண் அமைச்சகம் எது?

அ. MSME அமைச்சகம்

ஆ. மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இ. கல்வி அமைச்சகம் 

ஈ. ஜல் சக்தி அமைச்சகம்

3. கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைக்காகமானது கீழ்க்காணும் எந்த நகரத்தில் ‘One Health – ஒரு சுகாதாரம்’ என்ற முன்னோடித் திட்டத்தைத் தொடங்கவுள்ளது?

அ. சென்னை

ஆ. பெங்களூரு 

இ. ஆமதாபாத்

ஈ. மைசூர்

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற T-ஹப் என்பது எந்த மாநிலத்தில் உள்ள துளிர் நிறுவன அடைவகமாம்?

அ. தமிழ்நாடு

ஆ. தெலுங்கானா 

இ. திரிபுரா

ஈ. கர்நாடகா

5. 2023-இல் G20 உச்சிமாநாட்டை நடத்தும் இந்திய மாநிலம்/UT எது?

அ. கேரளா

ஆ. ஜம்மு காஷ்மீர் 

இ. ஒடிஸா

ஈ. சிக்கிம்

6. விரிவான புற்றுநோய் கண்டறியும் சேவைகளுக்காக நாட்டின் முதல் புற்றுநோயியல் ஆய்வகத்தை தொடக்கிய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா 

இ. குஜராத்

ஈ. கர்நாடகா

7. ‘இந்திய இரயில்வேக்கான புதுமைக்கொள்கையின்’படி, கண்டுபிடிப்பாளர்களுக்கு வழங்கப்படும் மானியத்தின் அதிகபட்ச வரம்பு என்ன?

அ. ரூ.10 இலட்சம்

ஆ. ரூ.25 இலட்சம்

இ. ரூ.50 இலட்சம்

ஈ. ரூ 1.5 கோடி 

8. தொற்றுநோய் காலத்தில் இந்தியாவிலிருந்து அரிசியை அதிகம் வாங்கிய நாடு எது?

அ. மாலத்தீவுகள்

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. சீனா

ஈ. தென் கொரியா

9. இந்தியா சமீபத்தில் அந்தமான் கடல் மற்றும் மலாக்கா நீரிணையில் எந்த நாட்டுடன் இணைந்து ஒருங்கிணைந்த ரோந்துப்பயிற்சியை மேற்கொண்டது?

அ. வங்காளதேசம்

ஆ. இந்தோனேசியா 

இ. இலங்கை

ஈ. பிரான்ஸ்

10. ‘பிரதம மந்திரி தேசிய தொழிற்பயிற்சி மேளா’வுடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் 

ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

இ. MSME அமைச்சகம்

ஈ. கல்வி அமைச்சகம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நெகிழி தடை ஜூலை 1 முதல் அமல்

ஒருமுறை மட்டும் பயனபடுத்தக்கூடிய நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடை வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. நெகிழி கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது.

அதன்படி, ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை, பயன்பாட்டிற்கு வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழி குப்பைகளால் நிலப்பரப்பிலும், நீர் நிலைகளிலும், ஆழ்கடல் பரப்பிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

2019-இல் நடைபெற்ற ஐ.நா.வின் நான்காவது சுற்றுச்சூழல் மாநாட்டில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து உலக அளவில் கவனஞ்செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்தியா முன்மொழிந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தடை செய்யப்படும் நெகிழிப் பொருள்கள்: நெகிழி குச்சிகளுடன் கூடிய காது குடையும் பஞ்சு, நெகிழி குச்சிகளுடன் கூடிய பலூன்கள், நெகிழி கொடிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான தெர்மோகோல், நெகிழி தட்டுகள், குவளைகள், நெகிழி கத்தி, ஸ்பூன், போர்க், உறிஞ்சுக்குழல், டிரே, சுவீட் பாக்ஸ், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கும் குறைவான நெகிழி அல்லது பிவிசி பேனர்கள் போன்றவை தடைசெய்யப்பட்ட பொருள்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதில் அரசுக்கு உதவும் வகையில், மக்களுக்கு அதிகாரம் அளிக்க குறைதீர்ப்பு செயலியை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கியுள்ளது என்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘பிரக்ரித்தி’ என்ற இலட்சினை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2. 29-06-2022 – தேசிய புள்ளியியல் நாள்

பொருளாதார திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறைக்கு மறைந்த பேராசிரியர் பிரசந்த சந்திர மகாலனோபிஸ் வழங்கிய மதிப்புமிகு பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவரது பிறந்தநாளான ஜூன்.29 ஒவ்வோர் ஆண்டும் புள்ளியியல் நாளாக ஒன்றிய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.

நாட்டின் சமூக-பொருளாதார திட்டமிடல், வளர்ச்சிக்கான கொள்கை வகுத்தல் ஆகியவற்றில் புள்ளியியலின் பங்களிப்பும், முக்கியத்துவமும் குறித்து பொதுமக்களிடையே குறிப்பாக இளந்தலைமுறையினர் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது புள்ளியியல் நாளின் முக்கிய நோக்கமாகும். ஆண்டுதோறும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கருப்பொருளில் இந்த நாள் கொண்டாடப்படும். இந்த ஆண்டு (2022) “நீடித்த வளர்ச்சிக்கான தரவுகள்” என்பது கருப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

3. தொழில்நுட்ப குளறுபடியை தீர்க்க 50 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி

கல்லுாரி மாணவர்கள் 50 ஆயிரம் பேருக்கு, தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும், ‘நாளைய திறன்’ பயிற்சி திட்டம் விரைவில் தொடக்கப்படும் என, தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை தெரிவித்துள்ளது.

இதன்படி, ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ், ‘நாளைய திறன்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கல்லுாரி மாணவர்கள் 50 ஆயிரம் பேருக்கு, தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது ஏற்படும் கோளாறுகளை சரி செய்வதற்கான பயிற்சியளிக்கப்படும்.

4. தொழிலணங்கு – பெண்களை தொழில்முனைவோராக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம்

தமிழ்நாட்டில் துளிர் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு புத்தொழில்கள் மற்றும் புத்தாக்க இயக்கம் (Tamil Nadu Startup and Innovation Mission) மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தற்போது பெண்களின் மறுமலர்ச்சிக்காக ‘தொழிலணங்கு’ என்ற புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது தமிழ்நாடு புத்தொழில்கள் மற்றும் புத்தாக்க நிறுவனம்.

சுய உதவிக் குழுக்களின் செயல்முறையை முற்றிலுமாக மாற்றி அதன் உறுப்பினர்களை ஆக்கபூர்வமான தொழில் முனைவோர்களாக உருவாக்குவதே இம்முயற்சியின் நோக்கம். இதனடிப்படையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து ‘Smart SHG’ குழுக்களில் இருந்து உருவாகும் தொழிற்முயற்சிகளுக்கு பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து செய்யவிருக்கின்றன.

5. உயர்நீதிமன்றத்தில் முதல் முறை பெண் தபேதார் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக திலானி என்ற பெண் தபேதாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த சென்னை உயர்நீதிமன்ற பணியாளர்கள் நியமனத்தில், இவர் தேர்வு செய்யப்பட்டு, தற்போது தபேதாராக நீதிபதி மஞ்சுளாவிடம் பணிபுரிந்து வருகிறார்.

6. 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சார்ஜாவில் 2023ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெறும்

11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சார்ஜாவில் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு சிகாகோவில் 10ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி ஆனது 1966ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வருகிறது.

1. Which institution recently released a report titled ‘India’s Booming Gig and Platform Economy’?

A. World Bank

B. International Labour Organisation

C. NITI Aayog 

D. International Monetary Fund

2. Which Union Ministry released the ‘Performance Grading Index for Districts (PGI–D)’?

A. Ministry of MSME

B. Ministry of Electronics and IT

C. Ministry of Education 

D. Ministry of Jal Shakti

3. Department of Animal Husbandry and Dairying is set to launch ‘One Health’ Pilot project in which city?

A. Chennai

B. Bengaluru 

C. Ahmedabad

D. Mysuru

4. T–Hub, which was seen in the news, is a start–up incubator based in which state?

A. Tamil Nadu

B. Telangana 

C. Tripura

D. Karnataka

5. Which Indian state/ UT is the host of G–20 summit in 2023?

A. Kerala

B. Jammu and Kashmir 

C. Odisha

D. Sikkim

6. Which state inaugurated the country’s first oncology laboratory for comprehensive cancer diagnostic services?

A. Tamil Nadu

B. Kerala 

C. Gujarat

D. Karnataka

7. As per the ‘Innovation Policy for Indian Railways’, what is the maximum limit of grant provided to innovators?

A. Rs 10 lakh

B. Rs 25 lakh

C. Rs 50 lakh

D. Rs 1.5 Crore 

8. Which country was the top buyer of Indian rice during the pandemic?

A. Maldives

B. UAE

C. China 

D. South Korea

9. India recently conducted a Coordinated Patrol exercise with which country on the Andaman Sea and Straits of Malacca?

A. Bangladesh

B. Indonesia 

C. Sri Lanka

D. France

10. ‘Pradhan Mantri National Apprenticeship Mela’ is associated with which Union Ministry?

A. Ministry of Skill Development and Entrepreneurship 

B. Ministry of Commerce and Industry

C. Ministry of MSME

D. Ministry of Education

 

Exit mobile version