28th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

28th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 28th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

28th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. DBTமூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிதியுதவி வழங்க உள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ) சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்

ஈ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

2. எந்தத் திட்டத்தின்கீழ், AIIMS நிறுவனங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கின்றது?

அ) பிரதமர் ஜன் ஆரோக்கியா யோஜனா

ஆ) பிரதமர் ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா

இ) பிரதமர் வயா வந்தனா திட்டம்

ஈ) பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா

3. 2021 மே வரை, ‘Open Skies’ ஒப்பந்தத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் எண்ணிக்கை என்ன?

அ) 4

ஆ) 14

இ) 24

ஈ) 34

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஆம்போடெரிசின் B என்பது எந்த நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தாகும்?

அ) டெங்கு

ஆ) நிமோனியா

இ) COVID-19

ஈ) கருப்புப்பூஞ்சை

5. இந்திய துணைக்கண்டத்தின் ஜூன்-செப்டம்பர் வரையிலான முதன்மை மழைக்காலமானது, எந்தப்பருவகாலமாக குறிப்பிடப்படுகி -றது?

அ) தென்மேற்கு பருவமழை

ஆ) வடகிழக்கு பருவமழை

இ) மழைக்காலம்

ஈ) இலையுதிர் காலம்

6. இந்திய அளவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிற மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) ஆந்திர பிரதேசம்

இ) ஒடிஸா

ஈ) கர்நாடகா

7. பிறபொருளெதிரி கண்டறிதல் அடிப்படையிலான ‘DIPCOVAN’ என்னும் கருவியை உருவாக்கியுள்ள அமைப்பு எது?

அ) ISRO

ஆ) DRDO

இ) HAL

ஈ) BHEL

8. நடப்பாண்டில் (2021) வரும் உலக தேனீ நாளுக்கான கருப் பொருள் என்ன?

அ) Bee hives Matter

ஆ) Bees and Nature

இ) Conserve the Bee Habitat

ஈ) Bee engaged – Build Back Better for Bees

9. நடப்பாண்டின் (2021) G7 சுகாதார அமைச்சர்கள் கூட்டமானது எங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது?

அ) IIT மெட்ராஸ்

ஆ) MIT

இ) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

ஈ) அண்ணா பல்கலைக்கழகம்

10. இந்தியாவில் கண்டறியப்பட்ட, நோயெதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதால் ஏற்படுவதும், கருப்பு பூஞ்சையைவிட ஆபத்தானதுமான புதிய தொற்று எது?

அ) அடர் பூஞ்சை

ஆ) சாம்பல் பூஞ்சை

இ) சிவப்பு பூஞ்சை

ஈ) வெள்ளை பூஞ்சை

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பொறியியல் படிப்புகளை இனி தமிழ் உள்ளிட்ட எட்டு மொழிகளில் படிக்கலாம்: AICTE தகவல்

பொறியியல் படிப்புகளை தமிழ் உள்பட எட்டு மொழிகளில் படிக்க அகில இந்திய தொழில்நுட்பக்கல்விக்கவுன்சில் (AICTE) ஒப்புதல் வழங்கியுள்ளது.

2. கரோனா 2ஆவது தாக்கத்தால் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை: ரிசர்வ் வங்கி அறிக்கை

இந்திய பொருளாதாரத்தில், கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட அளவுக்கு தற்போது பாதிப்பு ஏற்படவில்லை; இருப்பினும் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2020-21ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல், இந்திய பொருளாதாரத்தில் மாறாத வடுவை ஏற்படுத்திவிட்டது. 2021-21-ஆம் நிதியாண்டின் தொடக்கத்திலேயே கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவத் தொடங்கிவிட்டது. இது, நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதமாக அதிகரிக்கும் என்ற ரிசர்வ் வங்கியின் கணிப்பில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தொடங்கியது பரவலைக் கட்டுப்படுத்த உதவியது. கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக நாடுகள் தனித்தனியாக போராடுவதைக் காட்டிலும், சர்வதேச அளவில் கூட்டாக முயற்சி செய்தால் மட்டுமே பலன்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

இந்திய பொருளாதாரத்தில் கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட அளவுக்கு இரண்டாவது அலையின்போது பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. மேலும், இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வருவதைப் பொருத்தே நாட்டின் பொருளாதார வளா்ச்சியை தீா்மானிக்க முடியும். நாட்டின் பொருளாதாரம் மெல்ல வளா்ச்சிப் பாதையை நோக்கி செல்கிறது. இந்த நேரத்தில், எதிா்கால திடீா் செலவுகளை சமாளிக்கும் வகையில் வருவாயை சேமிக்க வேண்டும்.

சரக்கு-சேவை வரி தொடா்ந்து 7-ஆவது முறையாக ஏப்ரல் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் நல்ல நிலையில் செயல்படுவதைக் காட்டுகிறது. பணப்புழக்கம் அதிகரிப்பு: கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலால், மக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை முன்னெச்சரிக்கையாக பாதுகாத்து வைத்தனா். இதனால், சராசரியைக் காட்டிலும் கடந்த ஆண்டு (2020-21) பணப்புழக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, 2020 மாா்ச் 31 நிலவரப்படி, ரூ.500, ரூ.2,000 நோட்டுகளில் 83.4 சதவீதம் புழக்கத்தில் இருந்தது. இது, 2021 மாா்ச்சில் 85.7 சதவீதமாக அதிகரித்தது.

ஆகவே, அரசின் கருவூலத்தில் போதிய அளவில் ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நடப்பு நிதியாண்டில் பணப்புழக்கம் சீரான அளவில் இருக்கவும் ரிசா்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். வங்கிகளுக்கு அறிவுறுத்தல்: வங்கிகள் தங்களது வாராக் கடன் விவரங்களைக் கண்காணிக்க வேண்டும். கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணமாக ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்வதற்கு வங்கிகள் தங்கள் மூலதனத்தின் ஒரு பகுதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு வங்கிக் கடன் தவணைக்கான வட்டியை ரத்து செய்ததால், வங்கிகளுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும் அதற்கு முன்பாகவே வங்கிகளின் நிலைமை நல்ல நிலையில் இருந்தது.

உணவுப் பொருள் விநியோகம்: கடந்த ஆண்டு தேசிய அளவிலான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு உணவுப் பொருள்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, அவற்றின் விலையும் உயா்ந்தது. பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற உணவுப் பொருள்கள் விற்பனையில் விநியோகத்துக்கும் தேவைக்கும் இடையேயான சீரற்ற நிலை தொடா்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது. நிகழாண்டில் உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரித்தால், அவற்றின் விலை சற்று குறைய வாயப்புள்ளது.

கச்சா எண்ணெய் விலை: கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடுகள் அதன் உற்பத்தியைக் குறைத்துள்ளன. எரிபொருள்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால், அதன் விலை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. அமெரிக்காவின் வெளிநாட்டு வர்த்தக பிரிவு இயக்குநராக இந்திய அமெரிக்கர் நியமனம்

அமெரிக்காவின் வெளிநாட்டு வர்த்தக சேவைகள் பிரிவின் இயக்குநராக இந்திய-அமெரிக்கரான அருண் வெங்கட்ராமனை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார். அமெரிக்க வர்த்தக அமைச்சகத்தின் சர்வதேச சந்தைகள் துறைகளுக்கான இணை அமைச்சராகவும் அவரை அதிபர் பைடன் நியமித்துள்ளார்.

1. Which Union Ministry is set to give a financial assistance to transgender persons through DBT?

A) Ministry of Home Affairs

B) Ministry of Social Justice and Empowerment

C) Ministry of Law and Justice

D) Ministry of Rural Development

2. Under which scheme, the Central government approves to set up AIIMS institutes?

A) PM Jan Arogya Yojana

B) PM Swasthya Suraksha Yojana

C) PM Vaya Vandana Yojana

D) PM Matru Vandana Yojana

3. As of May 2021, how many countries are members of the Open Skies Treaty?

A) 4

B) 14

C) 24

D) 34

4. Amphotericin B, which was making news recently, is a drug used to treat which disease?

A) Dengue

B) Pneumonia

C) COVID–19

D) Mucormycosis

5. The principal rainy season for the Indian subcontinent, June to September, is referred to as which season?

A) South–west Monsoon

B) North–east Monsoon

C) Rainy Season

D) Autumn Season

6. Which state leads in sweet potato production across India?

A) Tamil Nadu

B) Andhra Pradesh

C) Odisha

D) Karnataka

7. DIPCOVAN, is an antibody detection–based kit developed by which organisation?

A) ISRO

B) DRDO

C) HAL

D) BHEL

8. What is the theme for World Bee Day 2021?

A) Bee hives Matter

B) Bees and Nature

C) Conserve the Bee Habitat

D) Bee engaged – Build Back Better for Bees

9. Where is the 2021 G7 Health Ministers’ Meeting scheduled to be held?

A) IIT Madras

B) MIT

C) Oxford University

D) Anna University

10. What is the new infection diagnosed in India, which is caused due to low immunity and is more adverse than black fungus?

A) Dark Fungus

B) Grey Fungus

C) Red Fungus

D) White Fungus

Exit mobile version