26th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

26th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 26th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

26th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. NDHM பயிற்சியக சூழலானது சமீப செய்திகளில் காணப்பட்டது. NDHM’இல் ‘H’ என்பது எதைக் குறிக்கிறது?

அ) Health

ஆ) Horticulture

இ) Hurricane

ஈ) Hospital

2. ‘Threadit’ என்பது கீழ்காணும் எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான வலைத்தளமாகும்?

அ) இன்டெல்

ஆ) மைக்ரோசாப்ட்

இ) சாம்சங்

ஈ) கூகிள்

3. NIT’களில் மூன்று விண்வெளி அடைவு மையங்களை தொடங்கியுள்ள அமைப்பு எது?

அ) NASA

ஆ) DRDO

இ) ISRO

ஈ) BARC

4. “பப்பி-ஆன்டிடெரர்-2021”, என்ற கூட்டு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியை நடத்தவுள்ள அமைப்பு எது?

அ) ஐக்கிய நாடுகள் அவை

ஆ) SCO

இ) BIMSTEC

ஈ) ASEAN

5. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிரந்தர சிந்து ஆணையத்தின் 116ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ) லாகூர்

ஆ) புது தில்லி

இ) ஜெய்ப்பூர்

ஈ) ஜலந்தர்

6. நடப்பாண்டில் (2021) வரும் இனப்பாகுபாட்டை ஒழிப்பதற்கான பன்னாட்டு நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Disqualify Racism

ஆ) Racial profiling and incitement to hatred,
including in the context of migration

இ) Mitigating and countering rising nationalist
populism and extreme supremacist ideologies

ஈ) Youth standing up against racism

7. உலக வானிலை நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 20

ஆ) மார்ச் 21

இ) மார்ச் 22

ஈ) மார்ச் 23

8. உலக காசநோய் நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 21

ஆ) மார்ச் 22

இ) மார்ச் 23

ஈ) மார்ச் 24

9. அட்லாண்டிக் பகுதிகளில் நிகழும் அடிமைத்தனம் மற்றும் அடிமைகள் வர்த்தக முறையால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் பன்னாட்டு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 23

ஆ) மார்ச் 24

இ) மார்ச் 25

ஈ) மார்ச் 26

10. கைதுசெய்யப்பட்ட மற்றும் காணாமல்போன பணியாளர்களுக் -கான பன்னாட்டு ஒன்றிணையும் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 23

ஆ) மார்ச் 24

இ) மார்ச் 25

ஈ) மார்ச் 26

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நாளை (மார்ச் 26) வங்கதேசம் செல்கிறார் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மார்ச்.26 அன்று வங்கதேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக செல்கிறார். வங்கதேசத்தின் தேசிய நாள் நாளை கொண்டாடப் -படவுள்ளது. இந்த நிகழ்விற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார். இதனையடுத்து கரோனா பொதுமுடக்கத்திற்கு பின்பு, முதன்முறையாக வெளிநாட்டிற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

2. முகநூல் அரசியல் விளம்பர செலவினம்: இரண்டாமிடத்தில் தமிழகம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் மேற்கு வங்க மாநிலமே முகநூல் அரசியல் விளம்பரங்களுக்கு அதிகம் செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக அந்த மாநில தேர்தலில் களம் காணும் அரசியல் கட்சிகள் கடந்த 90 நாள்களில் `3.74 கோடியை செலவ -ழித்துள்ளன. மேற்கு வங்க மாநிலத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. முகநூல் அரசியல் விளம்பரத்துக்காக தமிழக அரசியல் கட்சிகள் `3.3 கோடியை செலவழித்துள்ளன.

சமூக ஊடக வலைதளம் அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைத் தவிர தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் கடந்த 22’ஆம் தேதி வரையிலான 90 நாள்களில், முகநூலில் அரசியல் விளம்பரத்துக்கு செலவழித்த விவரங்களின் அடிப்படையில் இந்தப் புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கு வங்க மாநில அரசியல் கட்சிகள் `3.74 கோடியை செலவழித்துள்ளன. இதில், மாநிலத்தில் புதிதாக ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டிவரும் பாஜகவைக் காட்டிலும், மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்துவரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முகநூல் அரசியல் விளம்பரத்துக்கு அதிகம் செலவழித்துள்ளது. இந்தக்கட்சி மட்டும் `1.69 கோடி செலவழித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் டிஜிட்டல் விளம்பரங்களை, தேர்தல் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

‘மேற்கு வங்கத்தின் பெருமை மம்தா’ என்பன உள்ளிட்ட விளம்பரங்களை இந்த கட்சி செய்து வருகிறது. இந்த கட்சியின் முகநூல் பக்கத்தை 13 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.

அதுபோல, பாஜக மேற்கு வங்கத்தில் முகநூல் அரசியல் விளம்பரத்துக்காக `25.31 இலட்சம் செலவழித்துள்ளது. ‘எனது குடும்பம் பாஜக குடும்பம்’ என்பன உள்ளிட்ட விளம்பரங்களை இந்த கட்சி செய்து வருகிறது. மேற்கு வங்க பாஜகவின் முகநூல் பக்கத்தை 17 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர். இந்த மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி முகநூல் விளம்பரத்துக்கு `5 லட்சம் செலவழித்துள்ளது. இடதுசாரி கட்சிகள் மிகக்குறைந்த அளவில் செலவழித்துள்ளன. மேற்கு வங்கத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு `3.3 கோடியும், அஸ்ஸாம் `61.77 இலட்சமும், கேரளம் `38.86 இலட்சமும், புதுச்சேரி `3.34 இலட்சமும் முகநூல் அரசியல் விளம்பரங்களுக்கு செலவழித்துள்ளன.

மாநிலம் – கட்சிகள் செலவழித்த தொகை

மேற்கு வங்கம் – `3.74 கோடி

தமிழ்நாடு – `3.3 கோடி

அஸ்ஸாம் – `61.77 இலட்சம்

கேரளம் – `38.86 இலட்சம்

புதுச்சேரி – `3.34 இலட்சம்

3. சூயஸ் கால்வாய் போக்குவரத்துத் தடை: மணிக்கு ரூ.2,900 கோடி இழப்பு

சூயஸ் கால்வாயில் பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் குறுக்கே திரும்பி சிக்கி, அந்த கடல்வழிப்பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதன் கார
-ணமாக மணிக்கு 40 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1869’ஆம் ஆண்டில் நிறைவுசெய்யப்பட்ட அக்கால்வாய் வழியாக உலக வர்த்தகத்தின் 12% நடைபெற்றுவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குறுக்கே சிக்கிக்கொண்ட கப்பலின் உரிமையாளரான ஜப்பானின் ஷோயேய் கிசேன், சர்வதேச வர்த்தகத்துக்கு இழப்பை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு மன்னிப்பு கோரினார். 400 மீட்டர் நீளமும் 2 இலட்சம் டன் எடையும் கொண்ட அந்தக் கப்பலை மணலில் இருந்து வெளியே கொண்டு வர முடியாமல் மீட்புக் குழுவினர் திணறி வருகின்றனர்.

4. மூன்று ரபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகின்றன: விமானப்படை பலம் அதிகரிக்கும்

பிரான்ஸ் நாட்டில் இருந்து அடுத்த வாரம் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகின்றன. அடுத்த மாதம் 9 விமானங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன. இவற்றின்மூலம் இந்திய வான்படையின் பலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கவுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸோல்ட் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் வாங்க கடந்த 2016இல் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.

`59, 000 கோடியில் இந்த விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, இதுவரை 11 ரபேல் போர் விமானங்களை அந்த நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. அந்த விமானங்கள் அம்பாலா விமானப் படை தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

தவிர இந்திய வான்படை வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக 7 விமானங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அடுத்த வாரம் 3 ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. இந்த விமானங்களும் அம்பாலா விமானப் படை தளத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அடுத்த மாதம் 9 ரபேல் விமானங்கள் வழங்கப்படவுள்ளன. இவற்றின் மூலம் இந்திய வான்படையின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும்.

அண்டைநாடுகள் சீனா, பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்காமல் அவ்வப்போது உரசலில் ஈடுபட்டு வருகின்றன. இச்சூழ்நிலையில் அதிநவீன ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை கூடுவது, இந்திய வான்படைக்கு பெரும் பலமாக அமையும்.

தற்போது புதிதாக வரவுள்ள ரபேல் விமானங்கள், மேற்குவங்க மாநிலத்தி -ல் உள்ள ஹசிமாரா விமானப்படை தளத்தில் இணைக்கப்பட உள்ளன. இவற்றுடன் சேர்த்து ஹசிமாரா தளத்தில் ஐந்து போர் விமானங்கள் பாதுகாப்புப் பணியில் இருக்கும். இதன்மூலம் இந்தியாவின் கிழக்குப் பகுதியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

1. NDHM Sandbox environment has been seen in the news recently. What does H in NDHM stand for?

A) Health

B) Horticulture

C) Hurricane

D) Hospital

2. ‘Threadit’ is a standalone website created by which tech major?

A) Intel

B) Microsoft

C) Samsung

D) Google

3. Which organisation has inaugurated 3 space incubator centres at NITs?

A) NASA

B) DRDO

C) ISRO

D) BARC

4. “Pabbi–Antiterror–2021”, a joint anti–terrorism exercise is to be held by which organisation?

A) United Nations

B) SCO

C) BIMSTEC

D) ASEAN

5. Where was the 116th Meeting of the Permanent Indus Commission between India and Pakistan held?

A) Lahore

B) New Delhi

C) Jaipur

D) Jalandar

6. What is the theme of “International Day for Elimination of Racial Discrimination 2021”?

A) Disqualify Racism

B) Racial profiling and incitement to hatred,
including in the context of migration

C) Mitigating and countering rising nationalist
populism and extreme supremacist ideologies

D) Youth standing up against racism

7. When is the World Meteorological Day observed every year?

A) March 20

B) March 21

C) March 22

D) March 23

8. When is the World Tuberculosis Day observed every year?

A) March 21

B) March 22

C) March 23

D) March 24

9. When the International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade is observed?

A) March 23

B) March 24

C) March 25

D) March 26

10. When the International Day of Solidarity with Detained and Missing Staff Members is observed?

A) March 23

B) March 24

C) March 25

D) March 26

Exit mobile version