24th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

24th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 24th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

24th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English


  1. இந்தியாவின் முன்னேற எண்ணும் மாவட்டங்கள் திட்டம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ள உலகளாவிய நிறுவனம் எது?

அ) FAO

ஆ) UNDP

இ) IMF

ஈ) உலக வங்கி

2. ஐநா பாதுகாப்பு அவையானது ____ உறுப்பினர்கள்கொண்ட ஓர் அமைப்பாகும்.

அ) 10

ஆ) 15

இ) 20

ஈ) 30

3. சமூகத்தில் _____’இன் பரவலைத் தீர்மானிப்பதற்காக செரோ ஆய்வு பயன்படுத்தப்படுகிறது.

அ) பிறபொருளெதிரியாக்கி

ஆ) பிறபொருளெதிரி

இ) வைரஸ் திரிபு

ஈ) மேற்கண்ட எதுவும் இல்லை

4. வணிக அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவின் இயற்கை வேளாண் பொருட்களின் ஏற்றுமதி, 2020-21இல் ____ சதவீதம் உயர்ந்துள்ளது.

அ) 11

ஆ) 31

இ) 51

ஈ) 71

5. IMD’இன் அண்மைய தரவுகளின்படி, கடந்த 121 ஆண்டுகளில், இந்தியாவில், 2ஆவது அதிகபட்ச மாதாந்திர மழைப்பொழிவைப் பதிவு செய்துள்ள மாதம் எது?

அ) ஏப்ரல் 2021

ஆ) மே 2021

இ) ஜூன் 2021

ஈ) ஜூலை 2021

6. AISHE அறிக்கை 2019-20’இன்படி, ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் என்ன?

அ) 27.1

ஆ) 37.1

இ) 47.1

ஈ) 57.1

7. உலகின் மிகநீள வடமான ‘ஃபிர்மினா’வை கட்டமைத்த தொழில் நுட்ப நிறுவனம் எது?

அ) மைக்ரோசாப்ட்

ஆ) கூகிள்

இ) ஆப்பிள்

ஈ) அமேசான்

8. மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக ‘நச்சுக்காற்று கோபுரத்தை’ அமைக்கவுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) கர்நாடகா

ஆ) குஜராத்

இ) புது தில்லி

ஈ) மகாராஷ்டிரா

9. எந்த விண்வெளி நிறுவனம் தனது வெள்ளிக்கோள் பயணத்தின் ஒருபகுதியாக ‘என்விஷன்’ ஆய்வுக்கலத்தை அறிவித்துள்ளது?

அ) NASA

ஆ) JAXA

இ) ISRO

ஈ) ESA

10. ஃபோர்ப்ஸின் உலகின் சிறந்த வங்கிகள் – 2021 பட்டியலில், இந்தியாவில் முதலிடத்தில் உள்ள வங்கி எது?

அ) இந்தியன் வங்கி

ஆ) பாரத வங்கி

இ) கனரா வங்கி

ஈ) DBS

செய்தித்தாள் நடப்புநிகழ்வுகள்

1. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நியூஸிலாந்து சாம்பியன்

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டியின் இறுதியாட்டத்தில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது. டெஸ்ட் கிரிக்கெட்டின் 144 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக நடத்தப்பட்ட இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது நியூஸிலாந்து. இரு இன்னிங்ஸ்களிலுமாக 7 விக்கெட்டுகள் சாய்த்த கைல் ஜேமிசன் ஆட்டநாயகன் ஆனார்.

உலக டெஸ்ட் சாம்பின்ஷிப்பில் பட்டம் வென்றுள்ள நியூஸிலாந்து அணிக்கு `11.7 கோடியும், 2ஆம் இடம்பிடித்த இந்திய அணிக்கு `5.8 கோடியும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

2. ‘கவியரசு’ கண்ணதாசன் – 95ஆவது பிறந்தநாள்

3. இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா-அமெரிக்கா கூட்டு போர்ப் பயிற்சி

இந்தியாவும், அமெரிக்காவும் இந்திய பெருங்கடல் பகுதியில் மிகப்பெரிய அளவிலான 2 நாள் கூட்டு போர்ப்பயிற்சியை தொடங்கின. தென்சீன கடல்பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் சீனா ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், அதன்மூலம் எழும் எவ்விதமான சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தக் கடல் பிராந்திய பகுதிகளில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் கூட்டு போர்ப் பயிற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்கா சார்பில் அணுசக்தியில் இயங்கக்கூடிய ‘USS ரொனால்ட் ரீகன்’ விமானம் தாங்கி போர்க்கப்பல், F-18 இரக போர் விமானங்கள், தட்பவெப்பநிலைகளிலும் ஆபத்துகுறித்து துல்லியமாக முன்னெச்சரிக்
-கை செய்யும் இ-2சி விமானம் ஆகியவை இந்தப் போர்ப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்தியா சார்பில் ஜாகுவார் மற்றும் சுகோய்-30 MKI போர் விமானங்கள், விண்ணில் பறந்தபடி எரிபொருள் நிரப்பும் IL-78 விமானம், விண்ணில் பறந்தபடி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய விமானம், கொச்சி மற்றும் டெக் போர்க்கப்பல்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா சார்பில் ஏற்கெனவே, போர்க்கப்பல் குழு ஒன்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தப் போர்க் கப்பல் குழுவில் ஏராளமான போர் விமானங்களுடன் கூடிய ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல், சிறிய அளவிலான போர்க் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்களும் இடம்பெற்றிருக்கும்.

இந்த 2 நாள் போர்ப்பயிற்சி இந்தியா-அமெரிக்க நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்தும் என்பதோடு, கடல்சார் நடவடிக்கைகளிலும் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும். வான்வழி சவால்க -ளை திறம்பட எதிர்கொள்வது, நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைக -ள் என்பன உள்ளிட்ட பலதரப்பட்ட போர்ப்பயிற்சிகள் இந்த இரண்டு நாள் பயிற்சியில் மேற்கொள்ளப்படும்.

1. Which global institution released an independent appraisal report on India’s Aspirational Districts Programme (ADP)?

A) FAO

B) UNDP

C) IMF

D) World Bank

2. The United Nations Security Council (UNSC) is a ……… member body.

A) 10

B) 15

C) 20

D) 30

3. Sero survey is used to determine the prevalence of …………. in the community.

A) Antigen

B) Antibody

C) Virus Strain

D) None of the above

4. As per the recent data from the Commerce Ministry, the exports of India’s organic farm products rose by ………. percent in 2020–21.

A) 11

B) 31

C) 51

D) 71

5. As per the recent data from IMD, India received the second highest monthly rainfall for which month in the last 121 years?

A) April 2021 B) May 2021

C) June 2021 D) July 2021

6. What is the Gross Enrolment Ratio (GER) in higher education, as per the AISHE Report 2019–20?

A) 27.1

B) 37.1

C) 47.1

D) 57.1

7. Firmina, the longest cable in the world when built, is being constructed by which technology company?

A) Microsoft

B) Google

C) Apple

D) Amazon

8. Which Indian state is constructing a ‘Smog Tower’ to curb pollution?

A) Karnataka

B) Gujarat

C) New Delhi

D) Maharashtra

9. Which space agency announced ‘Envision’ probe, as a part of its Venus mission?

A) NASA

B) JAXA

C) ISRO

D) ESA

10. Which bank was named in the first position in India in the Forbes’ World’s Best Banks 2021 list?

A) Indian Bank

B) State Bank of India

C) Canara Bank

D) DBS

Exit mobile version