24th & 25th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

24th & 25th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 24th & 25th November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. எந்த ஆண்டுக்குள் யமுனையை முழுமையாக தூய்மைப்படுத்த ஆறு அம்ச செயல் திட்டத்தை தில்லி அரசு அறிவித்துள்ளது?

அ) 2022

ஆ) 2025 

இ) 2030

ஈ) 2035

2. 2022 ஜனவரி முதல் துணிகள், ஆடைகள் மற்றும் பாதணிகள் மீதான சீரான சரக்கு மற்றும் சேவை வரி (GST) விகிதம் என்ன?

அ) 5

ஆ) 8

இ) 12 

ஈ) 18

3. இந்திய காவல் அறக்கட்டளையின் ஸ்மார்ட் போலிசிங் குறியீட்டில் முதல் இடத்தைப் பிடித்துள்ள இந்திய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) தெலுங்கானா

இ) ஆந்திர பிரதேசம் 

ஈ) குஜராத்

4. COVID தொற்றை கையாள்வதற்காக சமீபத்தில் $490 பில்லியன் மதிப்பிலான ஊக்கப்பொதிக்கு ஒப்புதல் அளித்த ஆசிய நாடு எது?

அ) சீனா

ஆ) ஜப்பான் 

இ) இந்தியா

ஈ) பாகிஸ்தான்

5. 2021 – உலக கழிப்பறை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Valuing Toilets 

ஆ) Importance of Sanitation

இ) Global Sanitation Crisis

ஈ) Collective Action

6. டிஜிட்டல் வர்த்தகத்திற்காக முன்மொழியப்பட்ட திறந்த வலை- அமைப்பு திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஒரு நிபுணர் குழுவை அமைத்த நிறுவனம் எது?

அ) இந்திய தர கவுன்சில் 

ஆ) இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்

இ) இந்திய ரிசர்வ் வங்கி

ஈ) நாஸ்காம்

7. COVID-19 தடுப்பூசிகளை வாங்குவதற்காக $2 பில்லியன் கடன் வேண்டி, இந்தியா, எந்த நிறுவனத்திடம் விண்ணப்பித்துள்ளது?

அ) உலக வங்கி

ஆ) ADB-AIIB 

இ) BRICS வங்கி

ஈ) IMF

8. COP26 உச்சிமாநாட்டில் தீவுகளின் நிலையை மீட்டெடுப்பது (IRIS) குறித்த முன்முயற்சியைத் தொடங்கிய நாடு எது?

அ) UK

ஆ) அமெரிக்கா

இ) இந்தியா 

ஈ) ஆஸ்திரேலியா

9. 2021 – ஜெய் பீம் முதலமைச்சர் பிரதிபா விகாஸ் யோஜனாவைத் தொடங்கியுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) மகாராஷ்டிரா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) தில்லி 

10. Inti tanager (Heliothraupis oneilli) என்பது அண்மையில் கண்டுபி -டிக்கப்பட்ட எவ்வகை உயிரினமாகும்?

அ) பறவை 

ஆ) மீன்

இ) பாம்பு

ஈ) சிலந்தி

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வீரமரணமடைந்த ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருது; மனைவி பெற்றுக்கொண்டார்

கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்திய போது மோதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருதினை அவரது மனைவியிடம் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி லடாக் எல்லையில் இந்தியாவுக்கு உட்பட்ட கல்வான் பகுதியில் சீனப் படையினர் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய வீரரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களில் தெலங்கானா -வைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபுவும் ஒருவர்.

கர்னல் சந்தோஷ் பாபு

உயிரிழந்த 20 பேரில் ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரைச் சேர்ந்த ஹவில்தார் பழனியும் ஒருவர். வீரர் பழனியின் உடல் சொந்த கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு மத்திய, மாநில அரசுகள் சார்பில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ஹவில்தார் பழனி

உயிரிழந்த வீரர்களுக்கு ராணுவ விருதுகள் அறிவிக்கப்பட்டன. கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனிக்கான வீர் சக்ரா விருத அறிவிக்கப்பட்டது.

2. சுற்றுலாவை ஊக்குவிக்க ‘பாரத் கெளரவ்’ தனியார் ரயில் திட்டம்

சரக்கு, பயணிகள் ரயில்களுக்கு அடுத்தபடியாக சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும் இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றவும், கெளரவ் ரயில்கள் என்ற பெயரில் 190 ரயில்கள் இயக்கப்படும் என்றும் இதை தனியாரும் நிர்வகிப்பர் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

3. கரோனா ஊரடங்கு காலத்தில் புத்தகம் எழுதி வெளியிட்ட 11 வயது காஷ்மீர் சிறுமி

கரோனா ஊரடங்கு காலத்தில் புத்தகம் எழுதி இளம் எழுத்தாளராக உருவெடுத்துள்ளார் 11 வயது காஷ்மீர் சிறுமி.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்தஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டன.

இந்த ஊரடங்கு காலத்தை சில மாணவர்கள் பயனுள்ள வகையில் மாற்றிக் கொண்டனர். அந்த வகையில், தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பாட்டெங்கூ கிராமத்தைச் சேர்ந்த11 வயது சிறுமி அதீபா ரியாஸ், இளம் எழுத்தாளராக உருவெடுத்துள்ளார்.

தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் அவர், ஊரடங்கின்போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தபோது ஏற்பட்ட எண்ணங்கள், கருத்துகள், உணர்வுகளை எழுதியுள்ளார். இது ‘ஜீல் ஆப் பென்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. 96 பக்கங்களைக் கொண்டுள்ள இந்தப் புத்தகம் அமேசானில் கிடைக்கிறது.

4. தனியார் கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கும் மசோதா வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்

தனியார் கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கும் மசோதா, வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ரிசர்வ் வங்கியின் மூலம் இந்தியாவின் பிரத்தியேக டிஜிட்டல் பணம் பகிர்வதற்கும் சட்டமசோதா வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம் பல நாடுகளில் பிரபலமடைந்து வருகிறது. பிட்காயின், எத்தீரியம், லைட்காயின், டீத்தர், சொலானா போன்ற கிரிப்டோகரன்சிகளில் அதிகளவில் பரிவர்த்தனை செய்கின்றனர். ஒரு பிட்காயின் மதிப்பு தற்போதைய நிலவரப்படி 42 லட்சத்து 83 ஆயிரம் ரூபாயாகும்.

டிஜிட்டல் நாணயங்களில் முதலீடு தொடர்பான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு ஏராளமானோர் முதலீடு செய்வதால், கிரிப்டோகரன்சி பொருளாதார ரீதியாக புதிய சவாலை ஏற்படுத்தி வருகிறது.

பிரதமர் மோடி தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், தனியார் கிரிப்டோகரன்சியால் நிதிமோசடிகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி செல்லும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் 2 கோடி கிரிப்டோ முதலீட்டாளர்கள் இருப்பதாகவும், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தனியார் டிஜிட்டல் கரன்சிக்குத் தடை விதிக்கப்பட்டால் இந்நிறுவனங்கள் பேரிழப்பை சந்திக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

கிரிப்டோ கரன்சியை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரையில், கிரிப்டோகரன்சி நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிரிப்டோ கரன்சியை முறைப்படுத்தும் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. தனியார் கிரிப்டோகரன்சிக்கள் அனைத்தையும் தடை செய்ய கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய கட்டுபாடு மசோதா-2021 வகை செய்கிறது. அதேநேரம் ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வமான மின்னணு கரன்சியை அறிமுகம் செய்யவும் வழிவகை செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

5. போட்டித்தேர்வு, வேலைவாய்ப்பு தகவல்களை அறிய செயலி: அமைச்சர் தொடக்கிவைத்தார்

போட்டித்தேர்வு மற்றும் வேலைவாய்ப்புக்குரிய தகவல்களை அறிந்து கொள்வதற்கான இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி ஆகியவற்றை, பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கிவைத்தார்.

இதற்கான நிகழ்ச்சி, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட நூலக ஆணைக் குழுக்கள் மற்றும் கன்னிமாரா பொது நூலகத்தில் பணியாற்றி திறம்பட செயல்பட்டு வரும் 33 நூலகர்களுக்கு ‘Dr SR அரங்கநாதன் விருது’ வழங்கி, அமைச்சர் பாராட்டினார்.

தொடர்ந்து, போட்டித்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், மத்திய, மாநில அரசுகளின் போட்டித்தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புபற்றிய தகவல்களை அறிய ‘உங்கள் நூலகம் உள்ளங்கையில்’ (TN Employment News) என்ற திறன்பேசி செயலியை -யும், www.tnemployment.in இணையதளத்தையும், 19,684 நூல்கள் மற்றும் 2 லட்சத்து 54,694 ஓலைச்சுவடி பக்கங்களை மின்னுருவாக்கம் செய்து, வடிவமைக்கப்பட்ட மின்நூலகத்தையும் அமைச்சர் தொடக்கி வைத்தார். இதனை www.tamilnadupubliclibraries.org என்ற இணைய தளம் வழியாகப் பயன்படுத்தலாம்.

6. நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை செயல்படுத்துவதில் சிம்லாவுக்கு முதலிடம்

ஐநா’இன் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை சிறப்பாகச்செயல்படுத்தும் நகரங்களில் ஹிமாசல் தலைநகர் சிம்லா முதலிடம் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் தமிழகத்தின் கோவை நகரம் இரண்டாமிடத்தையும், திருச்சி நகரம் 8ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.

நீடித்த வளர்ச்சியை உறுதிசெய்வதற்காக 17 இலக்குகளை ஐநா நிர்ண -யித்துள்ளது. வறுமை ஒழிப்பு, பசி ஒழிப்பு, சிறந்த சுகாதாரம், சிறந்த கல்வி, பாலின சமத்துவம், சுத்தமான குடிநீர், மலிவான-தூய்மை எரிசக்தி, ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல், பருவநிலை மாற்றத்தைத் தடுத்தல் உள்ளிட்ட இலக்குகள் அதில் இடம்பெற்றுள்ளன. அந்த இலக்குகளை 2030ஆம் ஆண்டுக்குள் எட்ட வேண்டுமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐநா நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் இந்திய நகரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து NITI ஆயோக், ஜெர்மனியின் ஜிஐஇசட் நிறுவனம் ஆகியவை இணைந்து ஆய்வு நடத்தின. நாட்டில் உள்ள 56 நகரங்களில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வுக்குறியீட்டையும், அதுசார்ந்த தகவல் தளத்தையும் NITI ஆயோக் துணைத்தலைவர் இராஜீவ் குமார் வெளியிட்டார். ஆய்வுக்குறியீட்டில் சிம்லா, கோவை, சண்டீகர் ஆகிய நகரங்கள் முதல் மூவிடங்களைப் பிடித்துள்ளன. தன்பாத், மீரட், இடாநகர் ஆகியவை கடைசி இடங்களைப் பிடித்துள்ளன. இதுதொடர்பாக இராஜீவ் குமார் கூறுகையில், “வளர்ச்சியின் இயந்திரமாக நகரங்கள் வேகமாக உருவெடுத்து வருகின்றன. இந்தியா-ஜெர்மனி ஒத்துழைப்புடன் தற்போது வெளியிடப் -பட்டுள்ள ஆய்வுக்குறியீடும், தகவல் தளமும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் நகரங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க உதவும்” என்றார்.

இந்த ஆய்வுக் குறியீட்டில் மதிப்பெண்களின் அடிப்படையில் நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 100 மதிப்பெண் என்பது அனைத்து இலக்குகளையும் அடைந்துவிட்டதைக் குறிக்கும். ஆனால், எந்த நகரமும் 80 மதிப்பெண்களுக்கு அதிகமாகப் பெறவில்லை.

7. ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி இன்று தொடக்கம்

12ஆம் ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஒடிஸா மாநில தலைநகரம் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா அரங்க -த்தில் ஸ்டேடியத்தில் இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி ‘ஏ’ பிரிவில் பெல்ஜியம், சிலி, மலேசியா, தென்ஆப்பிரிக்கா, ‘பி’ ரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பிரான்ஸ், போலந்து, கனடா, ‘சி’ பிரிவில் ஸ்பெயின், நெதர்லாந்து, தென் கொரியா, அமெரிக்கா, ‘டி’ பிரிவில் ஜெர்மனி, அர்ஜென்டினா, பாகிஸ்தான், எகிப்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவிலுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும். கொரோனா பயணக்கட்டுப்பாடுக
-ளை காரணம் காட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் விலகி விட்டன. ஆறு முறை சாம்பியனான ஜெர்மனி, இருமுறை சாம்பியனான இந்தியா மற்றும் பெல்ஜியம், நெதர்லாந்து அணிகள் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் உள்ளன.

இந்திய அணி விவேக் சாகர் பிரசாத் தலைமையில் களம் இறங்குகிறது. இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்தவராவார். 2016ஆம் ஆண்டு பெல்ஜியத்தை தோற்கடித்து வாகை சூடிய இந்திய அணி பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது. உள்ளூர் சூழல் இந்திய அணிக்கு சாதகமான அம்சமாகும். ஆனால் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறை காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

8. தமிழகத்துக்கான மத்திய தணிக்கை குழு; ஆலோசகர்களாக அசோக்வரதன் ஷெட்டி, ஜாங்கிட் நியமனம்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் முதல் கூட்டம்

தமிழகத்துக்கான மத்திய தணிக்கை குழுவின் ஆலோசகர்களாக முன்னாள் அதிகாரிகள் அசோக்வரதன் ஷெட்டி, ஜாங்கிட் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. மத்திய, மாநில அரசுகளின் செலவுகள், திட்டங்கள் குறித்து மத்திய தணிக்கை குழு ஆய்வு செய்யும். இந்தக் குழு அனைத்து துறைகளிலும் உள்ள திட்டங்களை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்கும். இந்த அறிக்கையில்தான் எந்தெந்த துறையில் வீணாக செலவு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் எந்த துறைகளில், எந்த திட்டங்களில் நடந்துள்ளது என்பதை விரிவாக தெரிவிப்பார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியில் மின்சார துறையில் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்ய மத்தியில் தனியாக தணிக்கை குழுவும், மாநில அரசின் திட்டங்களை ஆய்வு தனியாக மாநிலக் குழுவும் உள்ளது.

தற்போது தமிழகத்தில் தணிக்கை குழு அதிகாரியாக அம்பலவாணன் உள்ளார். இந்தநிலையில், தற்போது இந்த குழுவில் எந்தெந்த துறைகளில் எப்படி திட்டங்களை ஆய்வு செய்வது, எந்த திட்டங்களை ஆய்வு செய்வது என்பது குறித்து ஆலோசனை வழங்க, தற்போது புதிதாக 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வரதன் ஷெட்டி, முன்னாள் டிஜிபி ஜாங்கிட், வருமான வரித்துறை முன்னாள் தலைமை ஆணையர் ராஜேந்திரன், மேற்கு வங்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவின் முதல் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன், தணிக்கை குழுவின் அதிகாரி அம்பல வாணன் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

9. நகர முன்னேற்றத்தை மதிப்பிடும் ‘NITI ஆயோக்’ திட்ட மதிப்பீட்டில் இந்திய அளவில் கோவைக்கு 2ஆம் இடம்

நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் திட்டத்தில் 2021-ம் ஆண்டுக்கான மதிப்பீடுகள் குறித்தஅறிக்கையில் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் கோவை 2ஆம் இடம்பெற்றுள்ளது.

நாட்டில் நிலையான வளர்ச்சி இலக்குகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிப்பது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடையே ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது ஆகிய முக்கியப் பணிகளை மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ மேற்கொள்கிறது. அந்த வகையில் முக்கிய நகரங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடும் நீடித்த வளர்ச்சி இலக்குகள் திட்டத்தில், 2021ஆம் ஆண்டுக்கான மதிப்பீடுகளை ஜெர்மனியைச் சேர்ந்த வளர்ச்சி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நிதி ஆயோக் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.

சுகாதாரம், கல்வி, பாலினம், பொருளாதார வளர்ச்சி, நிறுவனங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு இலக்குகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சியை அளவிடும் அளவுகோலாக இந்த மதிப்பீடு பார்க்கப்படுகிறது.

இவ்வாறு வெளியிடப்பட்ட மதிப்பீட்டில் ஒட்டுமொத்த அடிப்படையில் கோவை நகரம் 73.29 மதிப்பெண் பெற்று நாட்டில் 2-ம் இடம் பெற்றுள்ளது. முதலிடத்தை 75.50 மதிப்பெண்கள் பெற்று சிம்லா பிடித்துள்ளது. திருச்சி நகரம் 70 மதிப்பெண்களுடன் 8-வது இடத்தையும், சென்னை நகரம் 69.36 மதிப்பெண்களுடன் 11-வது இடத்தையும், மதுரை 65.86 மதிப்பெண்களுடன் 26-வது இடத்தையும் பெற்றுள்ளன. மொத்தமாக 56 இந்திய நகரங்கள் இந்த மதிப்பீட்டுக்கான பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வறுமை ஒழிப்பில் முதலிடம்

அதே நேரத்தில், ‘வறுமை ஒழிப்பு’ என்ற பிரிவில் 87 மதிப்பெண்கள் பெற்று கோவை முதலிடத்தில் உள்ளது. 80 மதிப்பெண்களுடன் திருச்சி, மதுரை நகரங்கள் 2-வது இடங்களில் உள்ளன. சென்னை 65 மதிப்பெண்களுடன் 10-வது இடத்தில் உள்ளது.

‘உடல் நலம் பேணுதல்’ என்ற பிரிவில் 71 மதிப்பெண்களுடன் கோவை 5ஆவது இடத்தில் உள்ளது. தரமான கல்வி என்ற பிரிவில் 88 மதிப்பெண்களுடன் கோவை 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இரு இடங்களைக் கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி நகரங்கள் பிடித்துள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிராக கணவர் அல்லது உறவினர்களால் ஏற்படுத்தப்படும் துன்புறுத்தல்கள் மற்றும் கொடுமைகள், பெண் கல்வி, பாலின பிறப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு அடையாளப்படுத்தப்படும் ‘பாலின சமன்பாடு’ பிரிவில் 87 மதிப்பெண்க
-ளுடன் சென்னை 9ஆவது இடத்திலும், 86 மதிப்பெண்களுடன் திருச்சி 11ஆவது இடத்திலும், 82 மதிப்பெண்களுடன் கோவை 16ஆவது இடத்தி -லும், 71 மதிப்பெண்களுடன் மதுரை 41ஆவது இடத்திலும் உள்ளன.

இயற்கை பேரிடர் பாதிப்புகளால் ஏற்படும் உயிரிழப்புகள், காற்றின் தரம், மத்திய அரசின் திட்டத்தின்கீழ் LED மின் விளக்குகளை விநியோகித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 நகரங்களும் 67 மதிப்பெண்களுடன் 18-வது இடத்தில் உள்ளன.

தொழில், உள்கட்டமைப்பு

தொழில், கண்டுபிடிப்புகள் மற்றும் உள்கட்டமைப்புப் பிரிவில் 70 மதிப்பெண்களுடன் கோவை நகரம் 4ஆம் இடத்தில் உள்ளது. இவ்வாறு பல்வேறு பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நகரங்களின் ‘ரேங்க்’ பட்டியலிடப்பட்டுள்ளது.

10. கிரிப்டோ கரன்சியை அறிமுகம் செய்கிறது ஆர்பிஐ: தனியார் கரன்சியை தடை செய்ய புதிய மசோதா தயார்

புதிய கிரிப்டோ கரன்சியை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிமுகம் செய்யவும் தனியார் கரன்சியை தடை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்குத் தயாராக உள்ளது.

மெய்நிகர் கரன்சி எனப்படும் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளிக்கவில்லை. ஆனால் இதை முறைப்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து இது தொடர்பான புதிய மசோதாவை தயார் செய்துள்ளது.

கிரிப்டோ கரன்சி மற்றும் முறைப்படுத்தல் மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி மசோதா 2021, என பெயரிடப்பட்டுள்ள இந்தமசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு தயாராக உள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்தால் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

இதன்படி, ரிசர்வ் வங்கி பிரத்யேகமாக கிரிப்டோ கரன்சியை அறிமுகம் செய்யும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக சோதனை ரீதியில்டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கிவிரைவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. அத்துடன் அனைத்துதனியார் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையும் தடை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அதே சமயம் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மற்றும் அதன் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சில நிபந்தனைகளுடன் குறிப்பிட்டவர்த்தகத்துக்கு அனுமதிப்பதுஎன்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மக்களவை செய்திக்குறிப்பில் இம்மசோதா தாக்கலாகலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல மாநிலங்களவையின் அலுவல் நேரத்திலும் இது இடம்பெற்றுள்ளது.

இந்த மசோதா குறித்த விவரம் எதுவும் பொது தளத்தில் வெளியிடப்படவில்லை. அத்துடன் இது தொடர்பாக பொது மக்களிடம் கருத்துகளும் கேட்கப்படவில்லை.

கிரிப்டோ கரன்சி முதலீடு குறித்து விரிவான விளம்பரங்கள் வெளியாகின்றன. இதில் பலரும் முதலீடு செய்து அதிக நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு யாரை பொறுப்பாக்குவது என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

இம்மாதம் 13-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். முறையற்ற கிரிப்டோ கரன்சி வர்த்தகம் அந்நியச் செலாவணி மோசடிக்கும், தீவிரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பதற்கும் பயன்படும் என்று கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இது குறித்து தீவிரமான உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்ற கருத்தும் வெளியிடப்பட்டது.

கடந்த வாரம் நாடாளுமன்ற நிதித்துறை நிலைக்குழு, கிரிப்டோ கரன்சி குறித்து இத்துறை வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது கிரிப்டோ வர்த்தகம் தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டது. அத்துடன் இந்த வர்த்தகத்தை முறைப்படுத்துவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது. – பிடிஐ

11. முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசிய பணக்காரர் பட்டியலில் அதானி முதலிடம்

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் 2015-ம் ஆண்டிலிருந்து முதலிடத்தில் இருந்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தற்போது இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தற்போது முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு, அதன் பங்கு விலை உயர்ந்ததைத் தொடர்ந்து கவுதம் அதானிமுதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். புளூம்பர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் நவம்பர் 23-ம் தேதி நிலவரப்படி முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 9,100 கோடி டாலராக இருந்தது. அதானியின் சொத்து மதிப்பு 8,880 கோடி டாலராக இருந்தது. நேற்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலைகள் 1.72 சதவீதம் சரிந்தன. இதனால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்து முதலிடத்துக்கு முன்னேற வழியேற்படுத்தியது.

அதானி என்டர்பிரைஸஸ் பங்கு விலை 2.34% உயர்ந்தன. அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல பங்கு விலை 4 % அதிகரித்தது. இதனால் சந்தை மதிப்பு ரூ.3.5 லட்சம் கோடி லாபம் ஈட்டியது. அதேநேரம் அதானி டிரான்ஸ்மிஷன் சந்தை மதிப்பு ரூ.2.13 லட்சம் கோடி சரிந்தது. அதேபோல அதானி பவர் சந்தை மதிப்பு ரூ.41 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்தது. இதேபோல அதானி கிரீன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் பங்கு விலைகள் 1 % சரிந்தன.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கவுதம் அதானியின் சொத்துமதிப்பு இந்த ஆண்டில் மட்டும்5,500 கோடி டாலர் அதிகரித்துள்ளது. அதேநேரம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் 1,430 கோடி டாலர் அதிகரித்துள்ளது. 2021-ம் ஆண்டில் அதானியின் சொத்து மதிப்பு உலகின் மற்ற 10 முன்னணி கோடீஸ்வரர்களை விட அதிகமாகும். கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் சொத்து மதிப்பு 4,720 கோடி டாலரும் செர்கி பிரினின் சொத்து மதிப்பு 4,490 கோடி டாலரும் உயர்ந்தது.

12. காஞ்சிபுரத்தில் தகவல் மையம் – லார்சன் அண்ட் டூப்ரோ தமிழக அரசுடன் ஒப்பந்தம்:

லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் காஞ்சிபுரத்தில் மிகப் பெரிய தகவல் மையத்தை (டேட்டா சென்டர்) உருவாக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது 90 மெகாவாட் திறன் கொண்டதாகும். இது சார்ந்த பிற யூனிட்டுகளும் இங்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும். இதனால் 1,100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதில் 600 பேர் நேரடி வேலைவாய்ப்பையும், 500 பேர் மறைமுகவேலைவாய்ப்பையும் பெறுவ -ர் என நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்தது தொடர்பான அறிக்கையை மும்பை பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த கடிதத்தில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மையம் அமைப்பதற்குத் தேவையான தடையற்ற மின்சாரத்தை தமிழக அரசு வழங்கும். அத்துடன் மையம் அமைப்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளையும் செய்து தரும்.

13. தில்லி அரசின் சுற்றுலாத் திட்டத்தில் விரைவில் ‘வேளாங்கண்ணி தேவாலயம்’ கேஜரிவால் அறிவிப்பு

தில்லி அரசின் மூத்த குடிமக்களுக்கான இலவச புனித யாத்திரை திட்டத்தின்கீழ் இடம்பெற்றுள்ள புனித யாத்திரை இடங்கள் பட்டியலில் தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயமும் விரைவில் சேர்க்கப்பட உள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ‘முக்கிய மந்திரி தீர்த்த யாத்திரை திட்ட’த்தை தில்லி அரசு டிசம்பர் 3ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளதாகவும், அப்போது மூத்த குடிமக்கள் யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தில்லி அரசின் மூத்த குடிமக்களுக்கான புனித யாத்திரை திட்டத்தில் உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரத்தையும் சேர்ப்பதற்கு தில்லி அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் 1,000 மூத்த யாத்ரீகர்கள் அயோத்திக்கு ரயிலில் டிசம்பர் 3ஆம் தேதி தில்லியில் இருந்து புறப்பட்ட உள்ளனர் என்று தில்லி அரசின் தீர்த்த யாத்ரா விகாஷ் சமிதியின் தலைவர் கமல் பன்ஸல் தெரிவித்தார்.

14. சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாடு: இந்தியாவுக்கு ரூ.2,236 கோடி கடன்

இந்தியாவில் 13 மாநிலங்களில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து ரூ.2,236 கோடி கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டது.

இதன்மூலம் நகர்ப்புறங்களில் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் 5.1 கோடி பேர் உள்பட மொத்தம் 25.6 கோடி பேர் பயன்பெறுவர் என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் சார்பில், நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் பிரிவு கூடுதல் செயலர் ரஜத் குமார் மிஷ்ராவும், ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில், அதன் பிராந்திய இயக்குநர் தெகியோ கோனிஷியும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

மத்திய அரசின் முக்கியத் திட்டங்களை நகர்ப்புறங்களில் விரிவுபடுத்தி, எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் தரமான ஆரம்ப சுகாதார சேவைகளைப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும் என ரஜத் குமார் மிஷ்ரா தெரிவித்தார். மேலும், இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பில் பெருந்தொற்று ஏற்படுத்திய சவால்களுக்கு மத்தியில், ஆரம்ப சுகாதார வசதிகளை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மத்திய அரசின் பிரதமர் ஆரோக்கிய தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு கூடுதல் நிதியுதவி கிடைக்கவுள்ளது. கரோனா தொற்றுப்பரவலுக்கு இடையே, எதிர்காலத்தில் பெருந்தொற்று பரவல் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளும் வகையில், சுகாதார உள்கட்டமைப்பு வசதியை வலுப்படுத்தும் வகையில், மத்திய அரசு கடந்த அக்டோபரில் இத்திட்டத்தை தொடங்கியது. இத்திட்டம் தமிழகம், தெலங்கானா, மேற்கு வங்கம், ஆந்திரம், அஸ்ஸாம், சத்தீஸ்கர், ஹரியாணா, ஜார்க்கண்ட், கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

15. 50 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு

நாட்டில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் ரத்தசோகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது அண்மையில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விகிதாசாரம் கடந்த முறையைவிட அதிகம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மக்கள்தொகை, இனப்பெருக்கம், குழந்தைகள் நலன், குடும்ப நலன்கள், ஊட்டச்சத்து மற்றும் பிற ஆரோக்கியம் சார்ந்த ஆய்வுகளை, ‘தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFH சர்வே)’ என்ற பெயரில் மத்திய குடும்ப நல அமைச்சகம் ஒவ்வொரு முறையும் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி NFH சர்வே-5’இன் முதல் கட்ட ஆய்வு முடிவுகள் கடந்த 2020, டிசம்பரில் வெளியிடப்பட்டன. அதில் 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் கட்ட (NFH சர்வே-5) ஆய்வு முடிவுகளை குடும்பநல அமைச்சகம் வெளியிட்டது.

அதன் விவரம் வருமாறு: அருணாசல பிரதேசம், சண்டீகர், சத்தீஸ்கர், ஹரியாணா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், தில்லி, ஒடிஸா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழகம், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இந்த முடிவுகளை முதல் கட்ட ஆய்வுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஊட்டச்சத்து விகித குறைபாடு 38-இலிருந்து 36 சதவீதமாகவும், உணவை வீணாக்குவது 21-சதவீதத்திலிருந்து 19 சதவீதமாகவும் குறைந்துள்ளது. குறைந்த எடை கொண்ட குழந்தைகளின் விகிதம் 36-இலிருந்து 32 சதவீதமாகக் குறைந்துள்ளது.

14 மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் உள்பட பெண்கள், குழந்தைகள் ரத்தசோகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு 180 நாள்களுக்கும் மேலாக இரும்புச்சத்து மாத்திரைகள் (அயர்ன் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள்) வழங்கப்பட்டபோதும் இந்தப் பாதிப்பு குறையவில்லை. இந்திய அளவிலும் இது பாதியாகும்.

6 மாதங்களுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவது 2015-16-இல் 55 சதவீதமாக இருந்தது. அந்த விகிதம் 2019-21-இல் 64 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த முன்னேற்றம் இரண்டு கட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்விலும் தெரியவந்துள்ளது.

குழந்தை பிறப்பு விகிதம்: மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 79 சதவீதத்திலிருந்து 89 சதவீதமாக உயர்ந்துள்ளது. புதுச்சேரியிலும், தமிழகத்திலும் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பு 100 சதவீதத்தைத் தொட்டுள்ளது. 7 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த விகிதாசாரம் 90 சதவீதத்தை எட்டியுள்ளது.

மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் இந்த விகிதாசாரம் அதிகம்.

குடும்ப நல அறுவை சிகிச்சைகள் 13 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆய்வு நடத்தப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் 12 முதல் 23 மாதங்களுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி விகிதம் 62 சதவீதத்திலிருந்து 76-ஆக அதிகரித்துள்ளது. 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த விகிதாசாரம் அதிகம் உள்ளது. குறிப்பாக, ஒடிஸாவில் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியை 90 சதவீதம் பெற்றுள்ளன. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதற்கு மத்திய அரசின் “இந்திர தனுஷ் மிஷன்’ திட்டம் தொடங்கப்பட்டது முக்கியக் காரணமாகும்.

ஒரு பெண்ணின் சராசரி கருத்தரிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் பெண்களின் கருத்தரிப்பு விகிதாசாரம் மொத்தமாக 2.2 சதவீதத்திலிருந்து 2.0 ஆக குறைந்துள்ளது. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் மாநிலங்களைத் தவிர ஏனைய மாநிலங்களில் இந்த விகிதம் 2.1 சதவீதம் என்ற இலக்கை அடைந்துள்ளது.

கருத்தடை செய்வதில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர ஏனைய மாநிலங்களில் ஒட்டுமொத்த கருத்தடை செய்யப்படும் விகிதம் 54 சதவீதத்திலிருந்து 67 சதவீதமாக உயர்ந்துள்ளது. கருத்தடை செய்வதற்கு நவீன முறைகளைக் கையாள்வதும் அதிகரித்துள்ளது.

NFHS-4 மற்றும் NFHS-5 உடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் வங்கிக்கணக்குகளை பெண்கள் கையாளு -தல் ஆகியவை 53 சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக அதிகரித்துள்ளன.

மத்திய பிரதேசத்தில் இந்த விகிதாசாரம் 37 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில் ஏனைய மாநிலங்களில் ஏற்கெனவே 70% பெண்கள் வங்கிக்கணக்குகளை கையாளுகின்றன -ர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய குடும்ப நலத் துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் இந்த ஆய்வுகள் நாட்டில் ஆரோக்கியம் மற்றும் குடும்பநலம்சார்ந்த உண்மைக -ளைத் தெரிந்துகொள்ளவும், தரவுகளை ஒப்பிடவும் உதவுகிறது.

16. முதல்முதலாக அன்டார்டிகாவில் தரையிறங்கியது ஏ340 விமானம்

அமெரிக்காவின் ஏர்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஏ340 வகை விமானமொன்று அன்டார்டிகாவில் முதல்முறையாகத் தரையிறங்கியது.

இதுகுறித்து சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளதாவது:

அன்டார்டிகா கண்டத்தில் ஏர்பஸ் ஏ340 விமானம் முதல்முறையாக தரையிறங்கியுள்ளது. போர்சுகலில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஹை ஃபிளை நிறுவனத்துக்குத் சொந்தமான அந்த விமானம், தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரிலிருந்து புறப்பட்டு அன்டார்டிகா வந்தது.

இந்தப் பனி கண்டத்துக்கு முதல்முறையாக லாகீட் வேகா-1 வகை விமானம் கடந்த 1928-ஆம் ஆண்டில் தரையிறங்கியது. அதனைத் தொடர்ந்து அங்கு பல்வேறு விமானங்கள் தரையிறங்கினாலும், அன்டார்டிகா செல்வதற்கு பெரும்பாலும் கப்பல்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், அங்கு ஏ340 விமானம் முதல்முறையாகத் தரையிறங்கியிருப்பது, இதே போன்ற பயணங்கள் இனி அதிகம் நிகழும் என்ற எதிர்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று CNN தெரிவித்துள்ளது.

17. அமெரிக்கா தலைமையில் நடக்கும் ஜனநாயக உச்சி மாநாட்டுக்கு சீனா, ரஷியாவுக்கு அழைப்பு இல்லை

உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இருநாடுகளின் உறவு மோசமடைந்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் முதல் முறையாக காணொலி காட்சி வாயிலாக அண்மையில் சந்தித்து பேசினர். இதன் மூலம் இருநாடுகளின் உறவில் இணக்கமான சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதே போல் அமெரிக்க அரசு துறைகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல், உக்ரைனை ஆக்கிரமிக்கும் முயற்சி போன்ற விவகாரங்களில் ரஷியா மற்றும் அமெரிக்கா இடையே உரசல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ரஷியா அதிபர் புதினும் விரைவில் நேரில் சந்தித்து பேச முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அமெரிக்கா கொடி

இந்த நிலையில் ஜனநாயகம் தொடர்பாக அமெரிக்கா தலைமையில் நடக்கும் சர்வதேச உச்சி மாநாட்டில் சீனா மற்றும் ரஷியாவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

‘ஜனநாயக உச்சி மாநாடு’ என்கிற பெயரில் அடுத்த மாதம் (டிசம்பர்) 9,10 ஆகிய தேதிகளில் காணொலி காட்சி வாயிலாக அமெரிக்கா இந்த மாநாட்டை நடத்துகிறது. முதல் முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தான் உள்பட 110 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி ஜனாதிபதி ஜோ பைடனின் தலைமையில் நடக்கும் இந்த 2 நாள் மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு ஜனநாயக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றின் வாய்ப்புகள் குறித்து இந்த உச்சிமாநாடு கவனம் செலுத்தும்.

மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் தலைவர்கள் தங்கள் நாட்டில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்த தனிப்பட்ட மற்றும் கூட்டு அர்ப்பணிப்புகள், சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை அறிவிக்க வாய்ப்புள்ளது.

இதனிடையே ஜனநாயகம் தொடர்பாக நடக்கும் இந்த முதல் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனாவையும், ரஷியாவையும் அமெரிக்கா அழைக்கவில்லை. அந்த இரு நாடுகளிலும் ஜனநாயக அச்சுறுத்தல்கள் இருப்பதாக அமெரிக்க தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், அந்த நாடுகளை அமெரிக்கா புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு புறம் இருக்க மாநாட்டில் பங்கேற்க சீனாவை அழைக்காத அமெரிக்கா, தைவானுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தீவு நாடான தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வரும் நிலையில், அமெரிக்கா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை ஆதரித்து வருகிறது.

இந்த சூழலில் ஜனநாயக மாநாட்டில் சீனாவை புறக்கணித்து விட்டு, தைவானை அமெரிக்கா அழைத்திருப்பது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

18. தமிழகத்தில் நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 19% ஆக உயர்த்த மத்திய அமைச்சர் ஒப்புதல்: அமைச்சர் சக்கரபாணி

தமிழகத்தில் நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 19% ஆக உயர்த்த மத்திய அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கர பாணி பேட்டியளித்தார். 17%லிருந்து 20%ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் 19%ஆக உயர்த்த ஒப்பதல் வழங்கப்பட்டு உள்ளது எனக் கூறினார்.

1. Delhi Government announced a six–point action plan to completely clean the Yamuna by which year?

A) 2022

B) 2025 

C) 2030

D) 2035

2. What is the uniform Goods and services tax (GST) rate on fabrics, apparel, and footwear, from January 2022?

A) 5

B) 8

C) 12 

D) 18

3. Which Indian state has been ranked first in the Indian Police Foundation’s Smart Policing Index?

A) Tamil Nadu

B) Telangana

C) Andhra Pradesh 

D) Gujarat

4. Which Asian country recently approved a record $490 billion stimulus package to tackle Covid pandemic?

A) China

B) Japan 

C) India

D) Pakistan

5. What is the theme of the ‘World Toilet Day’ 2021?

A) Valuing toilets 

B) Importance of sanitation

C) Global sanitation crisis

D) Collective action

6. Which institution has established a team of experts to execute proposed Open Network for Digital Commerce project?

A) Quality Council of India 

B) National Payment Corporation of India

C) Reserve Bank of India

D) NASSCOM

7. India has applied for a USD 2 billion loan to purchase COVID–19 vaccines, from which institution?

A) World Bank

B) ADB–AIIB 

C) BRICS Bank

D) IMF

8. Which country launched the Initiative for the Resilient Island States (IRIS) at COP 26 summit?

A) UK

B) USA

C) India 

D) Australia

9. Jai Bhim Mukhyamantri Pratibha Vikas Yojana 2021 is launched by which state / UT?

A) Tamil Nadu

B) Maharashtra

C) Andhra Pradesh

D) Delhi 

10. Inti tanager (Heliothraupis oneilli), a recently discovered species is a?

A) Bird 

B) Fish

C) Snake

D) Spider

Exit mobile version