20th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

20th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 20th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. உலக டுனா நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஏப்ரல்.30

ஆ. மே.02 

இ. ஜூன்.03

ஈ. மே.13

2. ஆண்டுதோறும், ‘உலக கால்நடை நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. ஏப்ரல் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை 🗹

ஆ. மே மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை

இ. ஜூன் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை

ஈ. டிசம்பர் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை

3. இந்திய ஆய்வறிஞர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கியூப்சாட் லக்ஷ்யாSAT என்ற நானோ செயற்கைக்கோள், கீழ்காணும் எந்த நாட்டிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது?

அ. அமெரிக்கா

ஆ. ஐக்கிய இராச்சியம் (UK) 

இ. இஸ்ரேல்

ஈ. ஆஸ்திரேலியா

4. ‘Zhongxing 6D’ என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?

அ. இஸ்ரேல்

ஆ. சீனா 

இ. ஜப்பான்

ஈ. தென் கொரியா

5. அண்மையில் ஏவப்பட்ட, ‘NROL-85’ என்பது கீழ்காணும் எந்த நாட்டின் உளவுத்துறை செயற்கைக்கோளாகும்?

அ. அமெரிக்கா 

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. இஸ்ரேல்

ஈ. பிரான்ஸ்

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற ஹர்ஷதா ஷரத் கருட் என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. குத்துச்சண்டை

ஆ. பளு தூக்குதல் 

இ. ஸ்குவாஷ்

ஈ. ஹாக்கி

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சஜன் பிரகாஷ் மற்றும் வேதாந்த் மாதவன் ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. நீச்சல் 

ஆ. மட்டைப்பந்து

இ. குத்துச்சண்டை

ஈ. பூப்பந்து

8. பேரிடர் தாங்கும் உட்கட்டமைப்புக்கான சர்வதேச மாநாட்டை நடத்திய நாடு எது?

அ. பிரான்ஸ்

ஆ. ஐக்கிய இராச்சியம் (UK)

இ. இந்தியா 

ஈ. நியூசிலாந்து

9. 2022-இல் நடைபெற்ற இரண்டாவது ‘இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டை’ நடத்திய நாடு எது?

அ. பின்லாந்து

ஆ. நெதர்லாந்து

இ. டென்மார்க் 

ஈ. பெல்ஜியம்

10. 2022-இல் FIFA U-17 மகளிர் உலகக்கோப்பையை நடத்தும் நாடு எது?

அ. பிரேசில்

ஆ. இந்தியா 

இ. கனடா

ஈ. கிரேக்கம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆ இரா வேங்கடாசலபதிக்கு இயல் விருது

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் 2021ஆம் ஆண்டுக்கான, ‘இயல் விருது’ தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆய்வாளரான ஆ இரா வேங்கடாசலபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல கட்டுரை பிரிவில் நீதிபதி சந்துருவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்பைச் செலுத்தியவர்களுக்கு ‘இயல் விருது’ என்ற பெயரில் வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனை விருது வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழின் மிக முக்கியமான விருதாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஆ இரா வேங்கடாசலபதிக்கு 2021-ஆம் ஆண்டுக்கான ‘இயல் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. புனைவு இலக்கியப் பிரிவில் பா அ ஜயகரன், கவிதைப்பிரிவில் ஆழியாள், கட்டுரைப்பிரிவில் நீதிபதி சந்துரு, மொழிபெயர்ப்புப்பிரிவில் மார்த்தா ஆன் செல்பி ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

‘இயல் விருதை’ ஏற்கெனவே, சுந்தரராமசாமி, அம்பை, ஐராவதம் மகாதேவன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், சுகுமாரன், எஸ் இராமகிருஷ்ணன், இமையம், வண்ணதாசன், சு வெங்கடேசன் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.

2. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4%: ஐநா கணிப்பு

உக்ரைன்-ரஷியா இடையேயான போர்ச்சூழல் காரணமாக நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதம் அளவுக்கே இருக்கும் என ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை வெளியிட்ட பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து மீண்டுவரும் உலக பொருளாதாரத்தை உக்ரைன்-ரஷியா இடையே நீடித்து வரும் போர் நிலைகுலையச் செய்துள்ளது. உணவு மற்றும் இதர பொருள்களின் விலை அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளதுடன் பணவீக்கத்தைத் தூண்டி உலக நாடுகளை அழுத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், ஐரோப்பாவில் நெருக்கடிகளை தூண்டிவிட்டுள்ளது.

2022 ஜனவரியில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டில் சர்வதேச பொருளாதாரம் 4.0 சதவீதம் அளவுக்கு வளர்ச்சிகாணும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சர்வதேச நிலவரங்கள் முற்றிலும் மாறியுள்ளதால் உலகப் பொருளாதரம் 3.1 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில், அதிக பணவீக்கம், வேலைவாய்ப்பு சந்தையில் காணப்படும் சமச்சீரற்ற மீட்சி நிலையால் தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளில் பாதிப்பு ஆகியவற்றுக்கிடையிலும் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் மிக முக்கிய பொருளாதார நாடாக இன்னும் உள்ளது.

கடந்த ஆண்டில் இந்தியா 8.8 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், நடப்பாண்டில் 6.4 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2023 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மேலும் சரிந்து 6 சதவீதமாகும். உணவு மற்றும் எரிபொருள்களின் விலை அதிகரிப்பால், உலக பணவீக்கம் 2022-இல் 6.7 சதவீதமாக அதிகரிக்கும். இது, 2010-2020 ஆண்டுகளுக்கிடையில் காணப்பட்ட சர்வதேச பணவீக்கமான 2.9 சதவீதத்தைக் காட்டிலும் இருமடங்கு அதிகம் என ஐநா ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. உலக சாம்பியன் நிகாத் ஜரீன்

இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிகாத் ஜரீன் வாகை சூடினார். இப்போட்டியில் சாம்பியன் ஆன 5-ஆவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், இறுதிச்சுற்றில் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் ஜித்போங் ஜுடாமûஸ தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார். நிகாத் ஜரீனுக்கு முன், மேரி கோம் (2002, 2005, 2006, 2008, 2010, 2018), சரிதா தேவி (2006), ஜெனி R L (2006), லேகா K C (2006) ஆகியோர் மட்டுமே உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளாவர். இந்த ஆண்டு போட்டியில் நிகாத் ஜரின் தவிர்த்து, மனீஷா மெளன் (57 கிலோ), பர்வீன் ஹூடா (63 கிலோ) ஆகியோர் வெண்கலம் வென்றிருந்தனர்.

4. துப்பாக்கி சுடுதல்: இந்தியா முதலிடம்

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் (ISSF) நடத்திய ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா 33 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்து நிறைவுசெய்துள்ளது. ஜெர்மனியில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவின் பதக்க வரிசையில் 13 தங்கம், 15 வெள்ளி, 5 வெண்கலம் அடங்கும்.

5. காற்று மாசு உயிரிழப்பு: முதலிடத்தில் இந்தியா

அனைத்து விதமான மாசுபாடு காரணமாக உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் 23.5 இலட்சம் பேர் உயிர் இழந்திருப்பது தெரியவந்துள்ளது. உலக அளவில் இந்த எண்ணிக்கை 90 இலட்சமாக உள்ளது. இதில் காற்று மாசு முக்கியப்பங்கு வகிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த “தி லான்செட்” மருத்துவ இதழ் உலகம் முழுவதும் மாசுபாடுகள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து ஆய்வு நடத்தி, அது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் வாகனப்போக்குவரத்து மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றால் ஏற்படும் காற்று மாசுவும் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலிடத்தில் இந்தியா: உலக அளவில் 2019ஆம் ஆண்டில் அனைத்து வகையான மாசுபாட்டுக்கு 90 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதில் வீடுகளிலிருந்து ஏற்படும் காற்று மாசு மற்றும் சுற்றுப்புற காற்று மாசு காரணமாக மட்டும் 66.7 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியா 23.5 இலட்சம் உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதில் சுற்றுப்புறச்சூழல் மாசுபாடு காரணமாக 9.8 இலட்சம் உயிரிழப்புகளும், வீடுகளினால் ஏற்படும் காற்று மாசு காரணமாக 6.1 இலட்சம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவில் காரணம் என்ன? இந்தியாவைப் பொருத்தவரை வீடுகளில் விறகுகள் உள்ளிட்ட உயிரிக்கழிவுகள் எரிக்கப்படுவதே காற்று மாசுவுக்கு மிக முக்கியக் காரணமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, நிலக்கரி எரிப்பது, பயிர்க்கழிவுகளை எரிப்பது உள்ளிட்ட காரணங்களால் காற்று மாசு ஏற்படுகிறது.

காற்று மாசு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு தேசிய தூய்மை காற்று திட்டம் அறிமுகம், தேசிய தலைநகர பிராந்திய பகுதியில் காற்று தர மேலாண்மை ஆணையம் அமைத்தது, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமான நடவடிக்கைகள் எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதும், காற்று மாசுவைக் கட்டுப்படுத்த வலுவான மையப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதன் காரணமாக, ஒட்டுமொத்த காற்றின் தரத்தின் மேம்பாடு குறைவாகவும், சீரற்றதாகவும் உள்ளது.

`357 லட்சம் கோடி இழப்பு

மாசுபாட்டால் ஏற்பட்டிருக்கும் கூடுதல் உயிரிழப்புகள் காரணமாக உலக அளவில் 2019ஆம் ஆண்டில் `357 லட்சம் கோடி (4.6 டிரில்லியன் டாலர்) மதிப்பில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மொத்த உலகப் பொருளாதாரத்தில் 6.2 சதவீதமாகும். இந்தியாவில் காற்று மாசு, ஓசோன் மாசு, தொழில்சார் புற்றுநோய்கள் உள்ளிட்ட நவீன வடிவ மாசுபாடு காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்பு 2000-2019ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

நீர்நிலை மாசுபாடு

காற்று மாசுவுக்கு அடுத்தபடியாக நீர்நிலை மாசுபாடு காரணமாக உலக அளவில் 13.6 இலட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

1. When is the ‘World Tuna Day’ celebrated every year?

A. April.30

B. May.02 

C. June.03

D. May.13

2. When is the ‘World Veterinary Day’ annually observed?

A. Last Saturday of April 

B. Last Saturday of May

C. Last Saturday of June

D. Last Saturday of December

3. CubeSat LakshyaSAT, a nano–satellite built by an Indian Research Scholar, was launched from which country?

A. USA

B. UK 

C. Israel

D. Australia

4. Which country launched the ‘Zhongxing 6D’ communication satellite?

A. Israel

B. China 

C. Japan

D. South Korea

5. NROL–85, which was launched recently, is an intelligence satellite of which country?

A. USA 

B. UAE

C. Israel

D. France

6. Harshada Sharad Garud, who was seen in the news, is associated with which sports?

A. Boxing

B. Weight–Lifting 

C. Squash

D. Hockey

7. Sajan Prakash and Vedaant Madhavan, who were seen in the news, are associated with which sports?

A. Swimming

B. Cricket

C. Boxing

D. Badminton

8. Which country hosted the ‘International Conference on Disaster Resilient Infrastructure (ICDRI)’?

A. France

B. UK

C. India 

D. New Zealand

9. Which country is the host of second ‘India–Nordic Summit’ held in 2022?

A. Finland

B. Netherlands

C. Denmark 

D. Belgium

10. Which country is the host of FIFA U–17 Women’s World Cup in 2022?

A. Brazil

B. India 

C. Canada

D. Greece

Exit mobile version