1st June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

1st June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டமானது (PMEGP) எந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது?

அ. 2023–24

ஆ. 2024–25

இ. 2025–26 

ஈ. 2029–30

2. அண்மையில், ‘பரமானந்தா’ என்னும் மீத்திறன் கணினியை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. ஐஐடி கௌகாத்தி

ஆ. NIT திருச்சிராப்பள்ளி

இ. ஐஐடி காந்திநகர் 

ஈ. ஐஐடி மெட்ராஸ்

3. ‘Tobacco: Poisoning Our Planet’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. உலக சுகாதார நிறுவனம் 

இ. UNICEF

ஈ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

4. 2021–22–இல் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. மகாராஷ்டிரா 

இ. அஸ்ஸாம்

ஈ. ஹிமாச்சல பிரதேசம்

5. ஐக்கிய அரபு அமீரகத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்திட்ட நாடு எது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. இஸ்ரேல் 

இ. பிரான்ஸ்

ஈ. இத்தாலி

6. ‘கதிசக்தி சஞ்சார்’ வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ. ரெயில்வே அமைச்சகம்

ஆ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

இ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஈ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 

7. 2022 – உலக புலம்பெயர்ந்த பறவைகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Impact of Light Pollution on Migratory Birds 

ஆ. Impact of Air Pollution on Migratory Birds

இ. Impact of Noise Pollution on Migratory Birds

ஈ. Impact of Pandemic on Migratory Birds

8. 2022 போர்ப்ஸ் பட்டியலின்படி, உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர் யார்?

அ. லியோனல் மெஸ்ஸி 

ஆ. விராட் கோலி

இ. லீப்ரான் ஜேம்ஸ்

ஈ. கிறிஸ்டியானோ ரொனால்டோ

9. Roy: Going for Broke’ என்பது எந்தக் கிரிக்கெட் வீரரின் சுயசரிதையாகும்?

அ. ஷேன் வார்ன்

ஆ. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 

இ. ரிக்கி பாண்டிங்

ஈ. ஆடம் கில்கிறிஸ்ட்

10. இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) எத்திட்டத்தின் பாகமான திட இராக்கெட் பூஸ்டர் HS–200–ஐ வெற்றிகரமாக பரிசோதித்தது?

அ. ககன்யான் 

ஆ. ஆதித்யா–L1

இ. சந்திரயான்–3

ஈ. ஆதித்யா–L2

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மாநிலங்களுக்கு GST இழப்பீடு `86,912 கோடி: தமிழகத்துக்கு `9,602 கோடி

மாநிலங்களுக்கு சரக்கு சேவை வரியின் (GST) இழப்பீட்டுத் தொகையாக `86,912 கோடி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மே.31ஆம் தேதி வரையிலான இந்த இழப்பீட்டுத் தொகையில், தமிழகத்துக்கு `9,602 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் சார்பில் அத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய GST இழப்பீட்டுத் தொகை `25,000 கோடியாக உள்ளது. இருப்பினும் மாநிலங்களின் மூலதனச் செலவுகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் கூடுதல் வரி மூலம் மற்றும் சொந்த நிதி ஆதாரங்களிலிருந்தும் `61,912 கோடியையும் சேர்த்து விடுவிப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. GST இழப்பீட்டு தொகை வழங்கப்படாதது குறித்து சர்ச்சை எழுப்பப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு தற்போது நிலுவையின்றி அனைத்து தொகையையும் முழுமையாக விடுவித்துள்ளது.

2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் GST அமலுக்கு வந்தபோது, மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பீட்டை ஈடுகட்ட அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க சட்டம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், இந்த வரி இழப்பீட்டை மாநிலங்களுக்கு கூடுதலாக வழங்க மத்திய அரசு மேலும் நிதி ஆதாரங்களுக்கு சில சரக்குகளில் கூடுதல் வரி (செஸ்) விதித்து மாநிலங்களின் வருவாயை மத்திய அரசு பாதுகாத்தது. இது கூட்டு வளர்ச்சி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2017-18, 2018-19 நிதியாண்டுகளில் குறிப்பிட்ட நேரத்தில் GST இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கரோனா நோய்த் தொற்றால் மத்திய அரசுக்குரிய கூடுதல் வரி அதிகரிக்கவில்லை என்பதுடன், கூடுதல் வரி வருவாயில் வீழ்ச்சியும் ஏற்பட்டது. இந்த வீழ்ச்சிக்கான இடைவெளியை நிரப்பவும், மாநில அரசுக்கு வழங்க வேண்டிய GST இழப்பீட்டுக்காக நிதி ஆதாரங்களின் இடைவெளியைப் போக்கவும் வெளிச்சந்தையில் மாநிலங்கள் கடன் பெற மத்திய அரசு அனுமதித்தது. பின்னர், அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்ட நிலையில், கடந்த 2020-21 நிதியாண்டில் `1.1 லட்சம் கோடி, 2021-22 நிதியாண்டில் ரூ.1.59 லட்சம் கோடி என சந்தையில் கடனைப் பெற்றுக் கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதுதவிர வழக்கமான GST இழப்பீட்டு தொகையையும் மத்திய அரசு விடுவித்து வந்தது.

ஆனால், நிகழாண்டில் GST வரி, கூடுதல் வரி வருவாய் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை முன்னிட்டு கடந்த நிதியாண்டிற்கும் நடப்பு நிதியாண்டிற்கும் வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையின் நிலுவைத் தொகையை முழுமையாக உடனடியாக வழங்க மத்திய அரசு முன் வந்துள்ளது. இதன்படி சரக்கு சேவை வரியின் இழப்பீட்டை பெறும் 21 மாநிலங்களுக்கு கடந்த ஜனவரி 2022 வரையிலான தொகை ரூ.47,617 கோடி; 2022, பிப்ரவரி-மார்ச் ஆகிய மாதங்களுக்கு `21,322 கோடி; இறுதியாக ஏப்ரல் – மே மாதங்களுக்கு ரூ.17,973 கோடி என மே 31-ஆம் தேதி வரை மொத்த நிலுவைத் தொகை `86, 912 கோடியாக கணக்கிடப்பட்டது. இந்தத் தொகை முழுமையாக இந்த மாநிலங்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், மகாராஷ்டிர மாநிலத்தை (`14,145 கோடி) அடுத்து தமிழகம்தான் அதிக அளவாக `9,602 கோடி பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களில் உத்தர பிரதேசம் `8,874 கோடி, கர்நாடகம் `8,633 கோடி, தில்லி `8,012 கோடி பெற்றுள்ளது.

இதில் தமிழக அரசு தரப்பில் ரூ.11,600 கோடி வரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன் கணக்கீட்டின்படி ரூ.9,602 கோடி கிடைத்துள்ளது. இறுதிக் கணக்கீடுகளில் எதிர்பார்த்த தொகை முழுமையாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

2. சொற்குவையில் 7.64 இலட்சம் கலைச்சொற்கள் உருவாக்கம்: விரைவில் கட்டணமில்லா தொலைபேசி சேவை

தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் தொடங்கப்பட்ட சொற்குவை திட்டத்தின்கீழ் இதுவரை 7 லட்சத்து 64 ஆயிரத்து 824 கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்க்கலைச்சொல் தொடர்பான ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது குறித்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் செய்திக்குறிப்பு:

600-க்கும் மேற்பட்ட துறைகள்: இன்றைய கல்விப்புலத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட துறைகளில் புழங்கும் கலைச்சொற்கள் அனைத்தையும் திரட்டி அவற்றுக்கு நிகரான தமிழ்க்கலைச்சொற்களை வடிவமைத்து இணைய தளத்தின் பொதுவெளியில் வெளியிடுவதும், இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அகராதிகளில் இடம்பெற்றுள்ள அனைத்துச்சொற்களையும் ஒன்று திரட்டி, நிரல்படுத்தி தமிழின் சொல்வளத்தை உலகறியச் செய்வதுமே சொற்குவைத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட “sorkuvai.com” என்ற இணையதளத்தின் வாயிலாக தமிழ்க்கலைச்சொல் தொடர்பான ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. விரைவில் தொடங்கப்படவுள்ள 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லாத் தொலைபேசி வாயிலாகவும் தமிழ்க்கலைச்சொல் தொடர்பான ஐயங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்.

3. `3,000 கோடிக்கு அஸ்திரா ஏவுகணை கொள்முதல்: பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இராணுவத்தளவாட உற்பத்தியில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் `2,971 கோடியில் அஸ்திரா எம்கே-1 ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

அஸ்திரா எம்கே-1 ஏவுகணை, இந்திய கடற்படையிலும் விமானப்படையிலும் விண்ணில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத்தாக்கி அழிக்கும் வலிமைகொண்டது.

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 248 அஸ்திரா ஏவுகணைகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. அவற்றில், 200 ஏவுகணைகள் இந்திய வான்படையிலும், 48 ஏவுகணைகள் கடற்படையிலும் பயன்படுத்தப்படும். DRDO வடிவமைத்த அஸ்திரா ஏவுகணை முதன்முதலில் கடந்த 2003-ஆம் ஆண்டு மே மாதம் பரிசோதிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த ஏவுகணைகள் பல முறை பரிசோதிக்கப்பட்டு சுகோய் போர் விமானத்தில் சேர்க்கப்பட்டன. அந்த ஏவுகணைகள், அடுத்த சில ஆண்டுகளில் தேஜஸ் மார்க்-1ஏ போர்விமானத்திலும் மேம்படுத்தப்பட்ட மிக்-29 ரக போர்விமானங்களிலும் சேர்க்கப்படும்.

4. உக்ரைன்-ரஷியா போர் எதிரொலி! இந்தியா பொருளாதார வளர்ச்சி 4.1%-ஆக குறைவு

உக்ரைன்-ரஷியா போர் எதிரொலியால் ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4ஆவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.1 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புள்ளியியல் அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:

உக்ரைன்-ரஷியா போர் காரணமாக இந்திய பொருளாதாரம் நான்காவது காலாண்டில் குறைந்த அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, ஜனவரி-மார்ச் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.1% அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது. பணவீக்கம் பொருளாதார மீட்சிக்கு பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, 2021-22 முழு நிதியாண்டில் (2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச்) நாட்டின் பொருளாதாரம் 8.7 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது. இது, அமைச்சகம் மூன்று மாதங்களுக்கு முன்பாக மதிப்பீடு செய்திருந்த 8.9 சதவீதத்தைக் காட்டிலும் 0.2 சதவீதம் குறைவாகும். அதேசமயம், முந்தைய 2020-21 நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.6 சதவீதம் பின்னடைவைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி-மார்ச் காலாண்டில் சீனா பொருளாதாரம் 4.8% வளர்ச்சியை எட்டிய நிலையில், இந்திய பொருளாதாரம் அதைவிட குறைவாகவே வளர்ச்சியடைந்துள்ளதாக புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1. The Prime Minister’s Employment Generation Programme (PMEGP) has been extended till which year?

A. 2023–24

B. 2024–25

C. 2025–26 

D. 2029–30

2. Which institution recently unveiled ‘Param Ananta’ Super Computer?

A. IIT Guwahati

B. NIT Tiruchirappalli

C. IIT Gandhinagar 

D. IIT Madras

3. Which institution released the report titled ‘Tobacco: Poisoning Our Planet’?

A. NITI Aayog

B. World Health Organization 

C. UNICEF

D. Ministry of Health and Family Welfare

4. Which state is the top sugar producer of India in 2021–22?

A. Kerala

B. Maharashtra 

C. Assam

D. Himachal Pradesh

5. Which country has recently signed a free trade agreement (FTA) with the United Arab Emirates?

A. Australia

B. Israel 

C. France

D. Italy

6. Which Union Ministry launched the ‘GatiShakti Sanchar portal’?

A. Ministry of Railways

B. Ministry of Housing and Urban Affairs

C. Ministry of Information and Broadcasting

D. Ministry of Electronics and IT 

7. What is the theme of the ‘World Migratory Bird Day 2022’?

A. Impact of Light Pollution on Migratory Birds

B. Impact of Air Pollution on Migratory Birds

C. Impact of Noise Pollution on Migratory Birds

D. Impact of Pandemic on Migratory Birds

8. Who was the highest–paid athlete in the world, as per Forbes’ list of 2022?

A. Lionel Messi 

B. Virat Kohli

C. LeBron James

D. Cristiano Ronaldo

9. ‘Roy: Going for Broke’ is the autobiography of which cricketer?

A. Shane Warne

B. Andrew Symonds 

C. Ricky Ponting

D. Adam Gilchrist

10. Indian Space Research Organisation (ISRO) successfully tested solid rocket booster HS–200, component of which mission?

A. Gaganyaan

B. Aditya–L1

C. Chandrayaan–3

D. Aditya–L2

Exit mobile version