18th & 19th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

18th & 19th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 18th & 19th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2022 – தொழிற்துறையில் கரியமலவாயு வெளியேற்றத்தை நிறுத்துவதற்கான உச்சிமாநாடு நடைபெறும் இடம் எது?

அ. புது தில்லி 

ஆ. மும்பை

இ. காந்தி நகர்

ஈ. டேராடூன்

2. 2022 –உலகளாவிய போக்குகள் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. UNEP

ஆ. UNHCR 

இ. WEF

ஈ. IMF

3. 2022-இல் SCO-இன் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் (SCO-RATS) கூட்டத்தை நடத்தும் நாடு எது?

அ. சீனா

ஆ. இந்தியா 

இ. வங்காளதேசம்

ஈ. பாகிஸ்தான்

4. ஐரோப்பாவின் மிகப்பெரிய துளிர் நிறுவல்கள் மாநாடான விவாடெக்கில் ஆண்டின் சிறந்த நாடாக அங்கீகாரம் பெற்ற நாடு எது?

அ. சீனா

ஆ. இந்தியா 

இ. பிரான்ஸ்

ஈ. அமெரிக்கா

5. ஆண்டுதோறும் செலவுப் பணவீக்கக் குறியீட்டை (CII) அறிவிக்கிற நிறுவனம்/துறை எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. மத்திய நேரடி வரிகள் வாரியம் 

இ. தேசிய புள்ளியியல் அலுவலகம்

ஈ. பொருளாதார விவகாரங்கள் துறை

6. 2022 ஜூன் முதல், ஐநா அவையால் அறிவிக்கப்பட்ட துருக்கியின் புதிய பெயர் என்ன?

அ. துருக்கியே 

ஆ. டர்க்கி

இ. டிரக்கி

ஈ. துர்க்

7. 2022 – GLOBSEC மன்றம் நடத்தப்படுகிற நாடு எது?

அ. சுலோவாக்கியா 

ஆ. செக் குடியரசு

இ. ருவாண்டா

ஈ. கானா

8. ஆண்டுதோறும், ‘உலக மிதிவண்டி நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.01

ஆ. ஜூன்.02

இ. ஜூன்.03 

ஈ. ஜூன்.04

9. Appreciate all parents throughout the world” என்பது ஜூன்.01 அன்று கடைப்பிடிக்கப்பட்ட எந்த நாளின் கருப் பொருளாகும்?

அ. உலகளாவிய பெற்றோர் நாள் 

ஆ. உலக மிதிவண்டி நாள்

இ. உலக பூமி நாள்

ஈ. உலக காற்று நாள்

10. இந்தியாவின் முதல் திரவ-கண்ணாடி தொலைநோக்கி அமைக்கப்பட்டுள்ள மாநிலம்/UT எது?

அ. சிக்கிம்

ஆ. ஜம்மு காஷ்மீர்

இ. உத்தரகாண்ட் 

ஈ. ஹிமாச்சல பிரதேசம்

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு: அரசாணை வெளியீடு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையை மத்திய அரசு வெளியிட்டது. கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டத்திருத்தத்தின்படி, நான்கு அரசாணைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின்படி இந்த அரசாணைகளை வெளியிட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கீச்சகத்தில் தெரிவித்துள்ளார்.

வாக்காளராக பதிவுசெய்ய வருபவர்களிடம் தேர்தல் அதிகாரிகள் ஆதார் அடையாள அட்டையைக் காண்பிக்க கோருவதற்கு இந்தப் புதிய சட்டத்திருத்தம் அனுமதியளிக்கிறது. வாக்காளர்களின் பெயர் வேறிடங்களிலும் பதிவுப் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்டவர்களிடம் ஆதார் அடையாள அட்டையைக் கோருவதற்கும் அனுமதியளிக்கிறது. எனினும், ஆதார் அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தால் மட்டும் வாக்காளர் பதிவை நிராகரிக்கக்கூடாது என்றும் சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், வாக்காளர் பட்டியலில் ஆண்டுக்கு நான்கு முறை பெயர்களைச் சேர்க்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் ஒரே ஆண்டில் ஜன.1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தங்கள் பெயர்களைச் சேர்த்துகொள்ளலாம். முன்பு ஜன.1-ஆம் தேதி மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

இதேபோல், வெளிநாடு அல்லது இராணுவத்தில் அரசுப்பணியாற்றும் தம்பதியில் ஒருவர், தன் துணைவருக்கும் சேர்த்து வாக்களிக்கும் முறையும் புதிய அரசாணையில் இடம்பெற்றிருக்கிறது.

2. 1969-க்கு பிந்தைய பிறப்பு – இறப்புகள்: இணையப் பதிவேற்றம் தொடக்கம்

தமிழ்நாடு முழுவதும் 1969ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளன.

பொதுச்சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா, பன்னாட்டு பொதுச் சுகாதார மாநாட்டுக்கான இலச்சினை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

பிறப்பு, இறப்பு பதிவேடுகளை `75 இலட்சம் செலவில் இணையப் பதிவேற்றமாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 1969ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த பிறப்பு, இறப்பு பதிவேடுகள் CSR இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன. தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களில் வருவாய்த்துறை, நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறைசார்ந்த பிறப்பு, இறப்பு பதிவாளர்களால் 16,348 பதிவு மையங்களில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகள் நிறைவடைந்த பிறகு பொதுமக்கள் எவ்வித இன்னல்களுமின்றி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணையதளம்மூலம் பதிவிறக்கஞ்செய்யலாம்.

சர்வதேச பொதுச்சுகாதாரத்துறை மாநாடு: தமிழகத்தில் பொதுச்சுகாதாரத்துறை 1922-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கர்னல் எஸ் டி இரஸ்ஸல் என்பவரை இயக்குநராகக் கொண்டு தொடங்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டில் நூறு ஆண்டுகள் நிறைவுபெற்ற இந்தத் தருணத்தில் தமிழக பொதுச்சுகாதாரத்துறை தொன்மையைப் போற்றும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக வரும் டிசம்பர் மாதத்தில் 3 நாள்கள் சர்வதேச பொதுச் சுகாதாரத்துறை மாநாடு சென்னையில் நடத்தப்படவுள்ளது.

3. ஜூன் 23-இல் பெய்ஜிங்கில் BRICS உச்சிமாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு

BRICS கூட்டமைப்பின் 14-ஆவது உச்சிமாநாடு, பெய்ஜிங்கில் வரும் 23-ஆம் தேதி காணொலி முறையில் நடைபெறும் என்று சீனா அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக்கொண்ட BRICS கூட்டமைப்புக்கு இந்த ஆண்டு சீனா தலைமைதாங்குகிறது. இந்த நிலையில், அந்தக் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சிமாநாட்டை சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சன்யங் அறிவித்தார். அவர் கூறியதாவது:

BRICS மாநாடு, சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையில் ஜூன்.23-ஆம் தேதி காணொலி முறையில் நடைபெற உள்ளது. ‘சர்வதேச வளர்ச்சிக்கான புதிய சகாப்தத்தில் BRICS நட்புறவை வளர்த்தெடுத்தல்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெறும். மறுநாள், ஜூன்.24-ஆம் தேதி, BRICS நாடுகளின் தலைவர்களும் வளரும் நாடுகளின் தலைவர்களின் தலைவர்களும் பங்கேற்கும் உயர்நிலை கூட்டம் நடைபெறவுள்ளது. முன்னதாக, மாநாட்டின் தொடக்கமாக, BRICS வர்த்தகக்குழுக்கூட்டம் காணொலி முறையில் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில், ஷி ஜின்பிங் உரையாற்றுகிறார் என்றார் அவர்.

4. இந்திய பிரஸ் கவுன்சிலுக்குப் புதிய தலைவர்

இந்திய பிரஸ் கவுன்சிலின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் (72) நியமிக்கப்பட்டுள்ளார். பிரஸ் கவுன்சிலின் தலைவர் பதவியை ஏற்கும் முதல் பெண் இவராவார்.

இதற்கான அரசாணையை மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக 2011 முதல் 2014, அக்டோபர்.29 வரையில் அவர் பணியாற்றினார். அதன்பின்னர் ஜம்மு காஷ்மீர் பேரவைத்தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். பிரஸ் கவுன்சில் தலைவர் பதவிக்காலத்தை நீதிபதி சந்திரமௌலி குமார் பிரசாத் கடந்த நவம்பர் மாதம் பூர்த்தி செய்த பிறகுப்புதிய தலைவராக தற்போது இரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

5. ‘அக்னி’ வீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு! – பாதுகாப்பு, உள்துறை அமைச்சகங்கள் அறிவிப்பு

‘அக்னிபத்’ திட்டத்தின்கீழ் பணியாற்றும் அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு, உள்துறை அமைச்சகங்களில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை, பாதுகாப்பு அமைச்சகங்கள் அறிவித்துள்ளன.

முப்படைகளில் தற்காலிகமாகப் பணியாற்ற வாய்ப்பளிக்கும் ‘அக்னிபத்’ திட்டத்தைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அறிவித்தார். 17.5 வயதில் இருந்து 21 வயது வரையிலான இளைஞர்கள் இத்திட்டத்தில் சேரலாம். இந்தத்திட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் வீரர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே 4 ஆண்டுகளுக்குப் பிறகு பணியில் தொடர்வார்கள். மற்றவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப்பலன்கள் எதுவும் கிடைக்காது. வீரர்களுக்கு முதலாவது ஆண்டில் `30,000, இரண்டாவது ஆண்டில் `33,000, மூன்றாவது ஆண்டில் `36,500, நான்காவது ஆண்டில் `40,000 மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் முடிவில் சேவா நிதியாக `11.71 இலட்சம் வழங்கப்படும் என்று இராஜ்நாத் சிங் அறிவித்தார்.

10% இடஒதுக்கீடு: இந்நிலையில், மத்திய ஆயுதக்காவல் படை, அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைகளில் அக்னி வீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. அவர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வளிக்கப்படும் என்றும், முதல் முறை சேர்க்கப்படும் வீரர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வளிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்சமயம் துணை இராணுவப்படைகளில் 18-23 வயதுக்கு உள்பட்டவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேபோல், இந்திய கடலோரக்காவல் படை, பாதுகாப்புத்துறையின் 16 பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பணிகளில் ‘அக்னி’ வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னாள் இராணுவ வீரர்களுக்கான இடஒதுக்கீடுக்கு பாதிப்பின்றி இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து அமைச்சகமும் 6 துறைகளில் ‘அக்னி’ வீரர்களுக்கு பணிவாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

1. Which is the venue of the Industrial Decarbonization Summit 2022?

A. New Delhi 

B. Mumbai

C. Gandhi Nagar

D. Dehradun

2. Which institution released the ‘2022 Global Trends Report’?

A. UNEP

B. UNHCR 

C. WEF

D. IMF

3. Which country is the host of SCO’s Regional Anti–Terrorist Structure (SCO–RATS) Meeting in 2022?

A. China

B. India 

C. Bangladesh

D. Pakistan

4. Which country has been recognized as the “country of the year” in Europe’s biggest start–up conference – Vivatech?

A. China

B. India 

C. France

D. USA

5. Which institution/ department notifies cost inflation index (CII) every year?

A. Reserve Bank of India

B. Central Board of Direct Taxes 

C. National Statistical Office

D. Department of Economic Affairs

6. What is the new name of Turkey from June 2022, as announced by the United Nations?

A. Turkiye 

B. Tarkey

C. Traki

D. Turk

7. Which country is the host of the ‘GLOBSEC 2022 Forum’?

A. Slovakia

 B. Czech Republic

C. Rwanda

D. Ghana

8. When is the ‘World Bicycle Day’ celebrated every year?

A. June.01

B. June.02

C. June.03 

D. June.04

9. ‘Appreciate all parents throughout the world’ is the theme of which day observed on June 1?

A. Global Day of Parents 

B. World Bicycle Day

C. World Earth Day

D. World Wind Day

10. India’s first liquid–mirror telescope has been commissioned in which state/UT?

A. Sikkim

B. Jammu and Kashmir

C. Uttarakhand 

D. Himachal Pradesh

Exit mobile version