18th & 19th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

18th & 19th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 18th & 19th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

18th & 19th August 2022 Tnpsc Current Affairs in Tamil

1. முதல் இரண்டு ஆண்டுகளில் குழந்தைகளின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட தேசிய அளவிலான இயக்கத்தின் பெயர் என்ன?

அ. மாத்ரித்வா 1000

ஆ. பாலன் 1000 

இ. புத்ரா 1000

ஈ. சுகன்யா 1000

2. ‘வானிலிருந்து மருத்துவம்’ என்ற டிரோன் அடிப்படையிலான மருத்துவ சேவையை அறிமுகப்படுத்திய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. பஞ்சாப்

ஆ. அருணாச்சல பிரதேசம் 

இ. குஜராத்

ஈ. கர்நாடகா

3. அண்மையில் தொடங்கப்பட்ட மந்தன் தளத்துடன் தொடர்புடைய துறை எது?

அ. மின்னணு உற்பத்தி

ஆ. தடுப்பூசி

இ. ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் 

ஈ. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி

4. 2022 ஜூலையில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் எவ்வளவு?

அ. 11.93%

ஆ. 13.93% 

இ. 15.93%

ஈ. 17. 93%

5. நலவாழ்வு மையங்களை வலுப்படுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குச் செயல்திறன் அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டை அறிவித்த நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. தேசிய நலவாழ்வு ஆணையம் 

இ. AIIMS

ஈ. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்

6. HEI–இன் சமீபத்திய அறிக்கையின்படி, உலகின் அதிக மக்கள்தொகைகொண்ட நகரங்களில், நுண்துகள் PM 2.5–இன் அதிகபட்ச சராசரி அளவைக் கொண்டுள்ள நகரம் எது?

அ. டாக்கா

ஆ. வாரணாசி

இ. புது தில்லி 

ஈ. கொழும்பு

7. ‘வித்யா இரதம் – நடமாடும் பள்ளி’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. பீகார்

இ. அஸ்ஸாம் 

ஈ. அருணாச்சல பிரதேசம்

8. கீழ்க்காணும் எந்த வரம்பு வரையிலான வேளாண் கடனுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது?

அ. ரூ.1 இலட்சம்

ஆ. ரூ.2 இலட்சம்

இ. ரூ.3 இலட்சம்

ஈ. ரூ.5 இலட்சம்

9. ‘தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாடு – 2022’ நடைபெறும் இடம் எது?

அ. புனே

ஆ. விசாகப்பட்டினம்

இ. புது தில்லி 

ஈ. மைசூரு

10. சமீபத்தில் தங்களை, ‘சபாய் மித்ரா சுரக்ஷித் ஷேஹர்’ (2022 ஆகஸ்ட் வரையிலும்) என்று அறிவித்துக்கொண்ட நகரங்களின் எண்ணிக்கை என்ன?

அ. 100

ஆ. 250

இ. 500 

ஈ. 750

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. வியட்நாம் – இந்தியா இடையேயான இருதரப்பு இராணுவப் பயிற்சி நிறைவு

வியட்நாம் – இந்தியா இடையேயான இருதரப்பு இராணுவப்பயிற்சி (VINBAX) கடந்த ஆகஸ்ட்.1ஆம் தேதி முதல் ஹரியானாவின் சந்திமந்திரில் தொடங்கி நடைபெற்று வந்தது.

இப்பயிற்சியில், பேரிடர் காலங்களில் மனிதர்களை மீட்க உதவும் இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் தற்சார்பு இந்தியாவின்கீழ் உருவாக்கப்பட கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன. ஐநா அமைதி குழு நடவடிக்கைகளில் ராணுவப் பொறியாளர் மற்றும் மருத்துவக் குழுக்களின் செயல்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சி நடைபெற்றது. வியட்நாமின் இராணுவம் முதன்முதலாக வெளிநாட்டுடன் மேற்கொண்ட முதல் இராணுவப்பயிற்சி இதுவாகும். அடுத்த ‘VINBAX’ பயிற்சி வியட்நாமில் 2023 ஆண்டு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. ‘உத்ராசக்தி’ இருதரப்பு வான்பயிற்சி நிறைவு

மலேசியாவின் குவான்டன் விமானத்தளத்தில் நடந்த இந்திய வான்படை மற்றும் இராயல் மலேசியன் வான்படை இடையேயான இருதரப்பு விமானப் பயிற்சி ‘உத்ராசக்தி’ கடந்த ஆகஸ்ட்.16 அன்று நிறைவு பெற்றது.

நான்கு நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் இரண்டு வான்படைகளும் இணைந்து சிக்கலான வான்வெளித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டன. இருதரப்பினரிடமிருந்தும் அதிகளவிலான போர் உத்திகள் வெளிப்படுத்தப்பட்டன.  இருவான்படைகளும் தங்களது சிறப்பான போர் நடவடிக்கைகளை பகிர்ந்துகொள்ள உத்ராசக்தி பயிற்சி உதவியது. பயிற்சியின் நிறைவு விழாவில், 7 சுகோய்-30M KI & சுகோய்-30 MKM போர் விமானங்கள் வானில் பறந்து சாகத்தை நிகழ்த்தின. தொடர்ந்து இந்திய வான்படை குழுவினர் ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் நடக்கவுள்ள ‘பிட்ச் பிளாக்-22’ விமானப்பயிற்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.

3. `3 இலட்சம் வரையிலான குறுகியகால விவசாயக்கடனுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம் வழங்க நடுவண் அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் தலைமையிலான நடுவணமைச்சரவை, `3 இலட்சம் வரையில், விவசாயிகளுக்கு குறுகியக்காலக்கடன் வழங்கும் அனைத்து வகையான நிதிநிறுவனங்களுக்கும் ஆண்டுக்கு 1.5 சதவீத வட்டி மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு 2022-23 நிதியாண்டு முதல் 2024-25 வரை `3 இலட்சம் வரை குறுகியக்காலக் கடனுதவி அளிக்கும், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு மற்றும் கணினிமயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு வட்டி மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்கீழ் கடன் வழங்க 2022-23 முதல் 2024-25 வரை உள்ள நிதியாண்டில் `34,856 கோடி கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வட்டி மானிய அதிகரிப்பு, வேளாண் துறையில் தொடர்ந்து கடன் வழங்குவதை உறுதிசெய்யும் என்பதோடு, கடன் வழங்கும் நிறுவனங்களின் குறிப்பாக மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றின் நிதி நிலையையும் சாத்தியத் தன்மையையும் உறுதிசெய்யும். உரியகாலத்தில் கடனை திருப்பிச்செலுத்தும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 4% வட்டிவிகிதத்தில் குறுகிய கால கடன் வழங்குவது தொடரும்.

4. கேரள அரசு சார்பில் வாடகை கார் முன்பதிவு செயலி – முதல்வர் தொடங்கி வைத்தார்

கேரள மாநில அரசு சார்பில் வாடகை கார் முன்பதிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘கேரளா சவாரி’ என்ற இந்தச்செயலிவழி முன்பதிவு சேவையை மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் தொடங்கி வைத்தார். நாட்டிலேயே முதல்முறையாக கேரள அரசு சார்பில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஓலா, உபேர் போன்ற வாடகை கார் முன்பதிவு செயலிகளுக்குப் போட்டியாக அரசு இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. கார் மட்டுமில்லாது ஆட்டோவையும் இந்தச்செயலிமூலம் முன்பதிவு செய்ய முடியும்.

5. பெயர்மாற்றம் பெற்றது குரங்கு அம்மையின் இரகம்

குரங்கம்மை தீநுண்மியின் துணை இரகங்களுக்கு ‘காங்கோ படுகை, தென்னாப்பிரிக்க கிளேட்’ என்றிருந்த பெயர்களை, ‘கிளேட் 1’, ‘கிளேட் 2’ என உலக நலவாழ்வு அமைப்பு மாற்றியுள்ளது.

18th & 19th August 2022 Tnpsc Current Affairs in English

1. What is the name of the national campaign launched to focus on development of children in the first two years?

A. Matritva 1000

B. Paalan 1000 

C. Putra 1000

D. Sukanya 1000

2. Which state/UT launched the first flight of drone service – ‘Medicine from the sky’?

A. Punjab

B. Arunachal Pradesh 

C. Gujarat

D. Karnataka

3. Manthan platform, which was launched recently, is associated with which field?

A. Electronics Manufacturing

B. Vaccination

C. Research and Innovation 

D. Goods and Services Tax

4. What is the wholesale inflation of India in July 2022?

A. 11.93%

B. 13.93% 

C. 15.93%

D. 17. 93%

5. Which institution announced performance–based fund allocation to States and UTs to strengthen health facilities?

A. NITI Aayog

B. National Health Authority 

C. AIIMS

D. Indian Council of Medical Research

6. Which city has the highest average level of fine PM 2.5 among the world’s most populated cities, as per HEI’s recent report?

A. Dhaka

B. Varanasi

C. New Delhi 

D. Colombo

7. Which state launched ‘Vidya Rath–School on Wheels’ project?

A. Madhya Pradesh

B. Bihar

C. Assam 

D. Arunachal Pradesh

8. An interest subvention of 1.5 per cent per annum has been approved for agriculture loan up to which limit?

A. Rs 1 lakh

B. Rs 2 lakh

C. Rs 3 lakh 

D. Rs 5 lakh

9. Which is the venue of the ‘National Security Strategies (NSS) Conference 2022’?

A. Pune

B. Vishakhapatnam

C. New Delhi 

D. Mysuru

10. How many cities have recently declared themselves as ‘Safai Mitra Surakshit Shehar’ (as of August 2022)?

A. 100

B. 250

C. 500 

D. 750

Exit mobile version