15th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

15th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 15th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சியாமாபெய் என்ற தொல்லியல் தளம் அமைந்துள்ள நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) வியட்நாம்

இ) சீனா 

ஈ) சுமத்ரா

2. ‘Role of Labour in India’s Development’ என்ற நூலை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு

ஆ) NITI ஆயோக்

இ) பணியாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம் 

ஈ) ASSOCHAM

3. MSME அடைவகம், வடிவமைப்பு & IPR திட்டங்களின் ஒருங்கிணைப்பாக தொடங்கப்பட்ட ஒரு புதிய திட்டத்தின் பெயர் என்ன?

அ) MSME சாம்பியன்ஸ் திட்டம்

ஆ) MSME புத்தாக்க திட்டம் 

இ) MSME பிளஸ் திட்டம்

ஈ) MSME புரோ திட்டம்

4. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘Xenotransplantation’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ) கிரிப்டோ-நாணயம்

ஆ) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 

இ) குறைகடத்தி உற்பத்தி

ஈ) பருவநிலை மாற்றம்

5. உலகளாவிய வர்த்தகத்தில் ரஷ்யாவின் மிகப்பெரிய பங்களிப்பு எது?

அ) பாதுகாப்பு உபகரணங்கள்

ஆ) கச்சா பெட்ரோலியம் 

இ) சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம்

ஈ) எஃகு

6. எந்த மத்திய அமைச்சகத்தால், டிரோன் மற்றும் டிரோன் கூறுகளுக்கான PLI திட்டம் அறிவிக்கப்பட்டது?

அ) பாதுகாப்பு அமைச்சகம்

ஆ) சிவில் வான்போக்குவரத்து அமைச்சகம்

இ) வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஈ) MSME அமைச்சகம்

7. ‘யூரோபா கிளிப்பர் விண்கலம்’ என்பது பின்வரும் எந்த விண்வெளி நிறுவனத்தின் முதன்மைத் திட்டமாகும்?

அ) நாசா 

ஆ) ஈஎஸ்ஏ

இ) ஜாக்ஸா

ஈ) ரோஸ்கோஸ்மாஸ்

8. ‘Lunar Reconnaissance’ சுற்றுக்கலனை ஏவிய நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) அமெரிக்கா 

இ) ஜப்பான்

ஈ) இந்தியா

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஹோலோங்கி நகரம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) மேகாலயா

ஆ) அருணாச்சல பிரதேசம் 

இ) இராஜஸ்தான்

ஈ) ஒடிஸா

10. எந்த மாநிலத்தின் சுற்றுலாத் துறையால், “பிராஜ் ஹோலி மகோத்சவம்” நடத்தப்படுகிறது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) மத்திய பிரதேசம்

இ) ஹரியானா

ஈ) இராஜஸ்தான் 

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘`5,000 கோடி முதலீடு, 70,000+ வேலைவாய்ப்பு’ – சென்னையில் மிகப்பெரிய ஐடி வளாகத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல்

சென்னை தரமணியில், “ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்”-ன் மிகப்பெரிய உலகளாவிய வளாகத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸின் மிகப்பெரிய உலகளாவிய வளாகத்திற்கு, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

டிட்கோவின் 50 கோடி ரூபாய் முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளும் இந்தக் கூட்டுமுயற்சி செயல்திட்டத்தில், இந்த ஐடி மற்றும் ஐடிஇஎஸ் பூங்காவானது 6.8 மில்லியன் சதுர அடி பரப்பில், 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது. 5,000 கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டிருக்கும் இந்த செயல்திட்டத்தில், DLF நிறுவனம் இத்தொகையை படிப் படியாக தேவைப்படும் காலகட்டங்களில் முதலீடு செய்யும்.

இதுபோன்ற பெரிய அளவிலான வர்த்தக அலுவலக செயல்திட்டங்கள், ஒரு டிரில்லியன் SGDP (மாநில அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி) என்ற இலக்கை 2030ஆம் ஆண்டுக்குள் எட்டுவதற்கு தமிழ்நாட்டிற்கு வாய்ப்புகளை வழங்கும்.

2. நீர்நிலை ஆக்கிரமிப்பு: தமிழ்நாடு முதலிடம்

இராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் துாடு கூறியதாவது: நாடு முழுதும், 9.45 இலட்சம் நீர்நிலைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில், 18 ஆயிரத்து 691 நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில்தான் அதிகபட்சமாக 8,366 நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் 3,920; தெலுங்கானாவில், 3,032 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

3. ஏர் இந்தியாவின் புதிய தலைவராக டாடா சன்ஸ் சந்திரசேகரன் நியமனம்

ஏர் இந்தியாவின் புதிய தலைவராக சந்திரசேகரனை நியமித்து டாடா குழுமம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக இல்கர் ஐசி நியமனம் செய்யப்படுவதாக டாடா அறிவித்தது. துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் இல்கர் ஐசி. ஏப்ரல்.1ஆம் தேதி இல்கர் ஐசி பொறுப்பேற்க இருந்தார். அவரது நியமனத்துக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளப்பின.

துருக்கி அதிபருக்கு நெருக்கமானவர் என்பதால் அவரது பணிநியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது என இந்தியாவில் கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து அவர் பதவியேற்க மறுத்து விட்டார். இந்தநிலையில் ஏர் இந்தியாவின் புதிய தலைவராக சந்திரசேகரன் இருப்பார் என்று டாடா குழுமம் அறிவித்து உள்ளது. இதற்கான ஒப்புதலை டாடா குழுமம் வழங்கியது.

சந்திரசேகரன், டாடா குழுமத்திற்கு தலைமைதாங்கும் முதல் பார்சி அல்லாத தொழில்முறை நிர்வாகி ஆவார்.

4. திருக்குறள் – ‘புளியமரத்தின் கதை’ – தெலுங்கு நூல்களை முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்

உலகப்பொதுமறையாம் திருக்குறள், எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ ஆகியவற்றின் தெலுங்கு நூல்களை முதல்வர் முக ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

அரசுப் பள்ளிகளில் தொழில்நுட்பக் கட்டமைப்பை வலிமைப்படுத்தவும், எளிமையாக தொழில்நுட்ப கற்றல் வளங்களை பள்ளிகளில் உருவாக்கிடவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தொழில்நுட்ப மற்றும் கணினிமயமான பள்ளிகளின் செயல்முறைக்கு ஏற்றவகையில் ஆசிரியர்களின் தொழில் நுட்பத்திறனை மேம்படுத்த தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையும், காக்னிசன்ட் தகவல் தொழில்நுட்ப (CTS) நிறுவனமும் இணைந்து பள்ளிகளில் தொழில்நுட்ப தர மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

இந்த ஒப்பந்தம் முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் செய்துகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம்மூலமாக, கணினி மயக்கற்றல் மேம்பாட்டுத் திட்டத்துக்கு காக்னிசன்ட் நிறுவனம் அறிவுசார் பங்குதாரராக அரசுடன் இணைந்து செயலாற்றும்.

நூல்கள் வெளியீடு: ‘உலகப்பொதுமறை’ எனப் போற்றப்படும் திருக்குறள் நூலானது, பேராசிரியர் ஜெயப் பிரகாஷ்மூலமாக தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று, புகழ்பெற்ற எழுத்தாளர் சுந்தரராமசாமி எழுதிய ‘ஒரு புளியமரத்தின் கதை’ நூலானது, கெளரி கிருபானந்தனால் தெலுங்கில் மொழிபெயர்ப்பு செய்யப்
-பட்டுள்ளது. இந்த 2 நூல்களை முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

5. சேதி தெரியுமா?

மார்ச் 6: மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆறாவது முறையாகப் பங்கேற்கும் முதல் வீராங்கனை என்கிற சிறப்பை இந்தியாவின் மிதாலி ராஜ் பெற்றார்.

மார்ச் 7: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மத்திய அரசு வழங்கிய 2020-ஆம் ஆண்டுக்கான ‘மகளிர் சக்தி’ விருது நீலகிரியைச் சேர்ந்த கைவினைக்கலைஞர்கள் ஜெயமுத்து, தேஜம்மாளுக்கும் 2021-ஆம் ஆண்டுக்கான விருது மன நல மருத்துவ நிபுணர் தாரா ரங்கசாமிக்கும் வழங்கப்பட்டன.

மார்ச் 8: தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள், இனி குடும்பத் தலைவிகளின் பெயரிலேயே வழங்கப்படும் என மு க ஸ்டாலின் அறிவித்தார்.

மார்ச் 9: குஜராத் ஜாம்நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மார்ச் 9: முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மார்ச் 10: 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. பஞ்சாபில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

மார்ச் 10: இந்தியாவில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடத்தத் தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார்.

மார்ச் 11: இந்தியாவில் முதன்முறையாக முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் தொழிற்பூங்கா ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது.

6. மார்ச்.15 – உலக நுகர்வோர் நாள்

கருப்பொருள்: Fair Digital Finance

1. Archaeological site named Xiamabei, which was in the news recently, is located in which country?

A) Japan

B) Vietnam

C) China 

D) Sumatra

2. Which institution released the book titled ‘Role of Labour in India’s Development’?

A) International Labour Organisation

B) NITI Aayog

C) Ministry of Labour and Employment 

D) ASSOCHAM

3. What is the name of the new scheme launched as a consolidation of MSME Incubation, Design and IPR schemes?

A) MSME Champions Scheme

B) MSME Innovative Scheme 

C) MSME Plus Scheme

D) MSME Pro Scheme

4. Xenotransplantation, which was seen in the news recently, is associated with which field?

A) Crypto–currency

B) Organ Transplantation 

C) Semiconductor Manufacturing

D) Climate Change

5. Which product is Russia’s biggest contribution to global trade?

A) Defence Equipment

B) Crude Petroleum 

C) Refined Petroleum

D) Steel

6. PLI Scheme for Drone and Drone Components was announced by which Union Ministry?

A) Ministry of Defence

B) Ministry of Civil Aviation 

C) Ministry of Commerce and Industry

D) Ministry of MSME

7. ‘Europa Clipper spacecraft’ is a flagship project of which space agency?

A) NASA 

B) ESA

C) JAXA

D) ROSCOSMOS

8. Which country launched ‘Lunar Reconnaissance Orbiter’?

A) Russia

B) USA 

C) Japan

D) India

9. Hollongi, which was seen in the news, is a city located in which state?

A) Meghalaya

B) Arunachal Pradesh 

C) Rajasthan

D) Odisha

10. “Braj Holi Mahotsav” is hosted by the tourism department of which state?

A) Uttar Pradesh 

B) Madhya Pradesh

C) Haryana

D) Rajasthan

Exit mobile version