11th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

11th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 11th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘அன்பாக்ஸ் மீ பிரச்சாரம்’ என்பதுடன் தொடர்புடைய நாள் எது?

அ) திருநங்கையரை இனங்காணும் உலக நாள் 

ஆ) பாகுபாடுகள் ஒழிப்பு நாள்

இ) உலக மனிதாபிமான நாள்

ஈ) ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான உலக நாள்

2. இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, 2021 ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில், அதிக மோசடிகளை எதிர்கொண்ட வங்கி எது?

அ) பாரத வங்கி

ஆ) பஞ்சாப் தேசிய வங்கி 

இ) பாங்க் ஆப் இந்தியா

ஈ) மகாராஷ்டிரா வங்கி

3. 2022 – சௌதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வென்ற பந்தய ஓட்டுநர் யார்?

அ) மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 

ஆ) சார்லஸ் லெக்லெர்க்

இ) லூயிஸ் ஹாமில்டன்

ஈ) செபாஸ்டியன் வெட்டல்

4. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கொள்கையை (2022-27) அங்கீகரித்துள்ள மாநிலம் எது?

அ) கர்நாடகா

ஆ) அஸ்ஸாம்

இ) குஜராத்

ஈ) ஒடிஸா

5. ‘MyGov’ இணையதளத்தை அறிமுகப்படுத்திய முதல் யூனியன் பிரதேசம் எது?

அ) புதுச்சேரி

ஆ) இலட்சத்தீவுகள்

இ) ஜம்மு-காஷ்மீர் 

ஈ) சண்டிகர்

6. 2022 – தேசிய கடல்சார் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) International trade and Economy

ஆ) Sustainable Shipping beyond COVID-19 

இ) Gratitude towards Navy

ஈ) Atmanirbhar Maritime Force

7. ‘எழுந்து நில் இந்தியா’ திட்டத்தை மேற்பார்வையிடுகிற மத்திய அமைச்சகம் எது?

அ) MSME அமைச்சகம்

ஆ) நிதி அமைச்சகம் 

இ) வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

ஈ) அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

8. கங்கௌர் திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ) சிக்கிம்

ஆ) இராஜஸ்தான் 

இ) மணிப்பூர்

ஈ) அருணாச்சல பிரதேசம்

9. இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலராக நியமனம் செய்யப்பட்டவர் யார்?

அ) வினய் மோகன் குவாத்ரா 

ஆ) ருத்ரேந்திர டாண்டன்

இ) தினேஷ் பாட்டியா

ஈ) சந்தோஷ் ஜா

10. ரிக்கி கேஜ் மற்றும் பல்குனி ஷா ஆகியோர் சமீபத்தில் கீழ்காணும் எந்த விருதை வென்றனர்?

அ) அகாதமி விருதுகள்

ஆ) கிராமி விருதுகள் 

இ) பிரிட்ஸ்கர் கட்டடக்கலை பரிசு

ஈ) ஆபெல் பரிசு

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கல்வித்தரத்தில் தமிழகத்துக்கு 22ஆவது இடம்

தேசிய அளவில் கல்வித்தரத்தில் தமிழ்நாடு 22ஆவது இடத்திலிருப்பதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ பாலகுருசாமி தெரிவித்தார்.

கல்வி, சுகாதாரம், தனிநபர் வருமானம் உள்ளிட்ட காரணிகளை உள்ளடக்கிய மனித வளர்ச்சிக் குறியீட்டில், மொத்தமுள்ள 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 130 ஆவது இடத்திலேயே உள்ளது. தனி நபர் வருமானத்தில் 12 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவைவிட சீனா 8 மடங்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

நவோதயா பள்ளிகள் அமையும் பட்சத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% சிறப்பு ஒதுக்கீடு என்ற தேவை இருக்காது. தமிழகத்தில் கல்விகற்போரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட, தரத்தின் அடிப்படையில் இந்திய அளவில் 22ஆவது இடத்திலேயே தமிழ்நாடு உள்ளது என்றார்.

2. குஜராத்தில் எல்லைச்சுற்றுலா: அமித்ஷா தொடக்கி வைத்தார்

குஜராத் மாநிலத்தில் ‘சீமாதர்ஷன்’ என்ற எல்லை சுற்றுலாத் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடக்கிவைத்தார்.

நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் வாழ்க்கைமுறைபற்றி சாமானிய மக்கள் தெரிந்து கொள்ளும் நோக்கில் `125 கோடியில் இந்தச் சுற்றுலாத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

3. தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக அணி சாம்பியன்

71ஆவது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஒரு வாரமாக சென்னையில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாட்டு அணி 87-69 என்ற புள்ளிக்கணக்கில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்வை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது.

1. The ‘Unbox Me campaign’, which was launched recently, is associated with which day?

A) International Transgender Day of Visibility 

B) Zero Discrimination Day

C) World Humanitarian Day

D) International Day for People of African Descent

2. As per the data from the Reserve Bank of India, which bank recorded the highest value of frauds in April–December 2021?

A) State Bank of India

B) Punjab National Bank 

C) Bank of India

D) Bank of Maharashtra

3. Which racing driver won the Saudi Arabian Grand Prix 2022?

A) Max Verstappen 

B) Charles Leclerc

C) Lewis Hamilton

D) Sebastian Vettel

4. Which state has approved Renewable Energy Policy (2022–27)?

A) Karnataka 

B) Assam

C) Gujarat

D) Kerala

5. Which is the first Union Territory of India to launch its MyGov platform?

A) Puducherry

B) Lakshadweep

C) Jammu and Kashmir 

D) Chandigarh

6. What is the theme of the ‘National Maritime Day’ 2022?

A) International trade and Economy

B) Sustainable Shipping beyond COVID–19 

C) Gratitude towards Navy

D) Atmanirbhar Maritime Force

7. Which Union Ministry oversees the ‘Stand Up India Scheme’?

A) Ministry of MSME

B) Ministry of Finance 

C) Ministry of Commerce and Industry

D) Ministry of Science and Technology

8. Gangaur Festival is predominantly celebrated in which Indian state?

A) Sikkim

B) Rajasthan 

C) Manipur

D) Arunachal Pradesh

9. Who has been appointed as the new Foreign Secretary of India?

A) Vinay Mohan Kwatra 

B) Rudrendra Tandon

C) Dinesh Bhatia

D) Santosh Jha

10. Ricky Kej and Falguni Shah are the recent winners of which award?

A) Academy Awards

B) Grammy Awards 

C) Pritzker Architecture Prize

D) Abel Prize

Exit mobile version