10th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

10th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 10th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்தியாவின் முதல் குடிமக்களால் உருவாக்கப்பட்ட மாநில அளவிலான பறவைகள் விவரப்படத்தை வெளியீடு செய்துள்ள மாநிலம் / UT எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா 

இ) கர்நாடகா

ஈ) மேற்கு வங்கம்

2. புதிய இராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள கிஜாடியா வனவுயிரி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம்/UT எது?

அ) ஹரியானா

ஆ) பீகார்

இ) குஜராத் 

ஈ) உத்தரகாண்ட்

3. சத்தீஸ்கரின் ஒருங்கிணைப்புடன், ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத்’திட்டம் எத்தனை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது?

அ) 15

ஆ) 20

இ) 28

ஈ) 35 

4. தலையில்லா குதிரைக்கருகே புதைக்கப்பட்ட மனிதனி -ன் எலும்புக்கூடு, எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?

அ) ரஷ்யா

ஆ) கிரீஸ்

இ) ஜெர்மனி 

ஈ) சீனா

5. அண்மையில் IT துறைக்காக பிரத்யேக ‘தொழில்நுட்ப பூங்கா’வைத் திறந்த வடகிழக்கு மாநிலம் எது?

அ) அஸ்ஸாம்

ஆ) மேகாலயா 

இ) மணிப்பூர்

ஈ) மிசோரம்

6. 2021இல் இந்தியாவின் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

அ) அமெரிக்கா 

ஆ) சீனா

இ) நெதர்லாந்து

ஈ) ஜெர்மனி

7. கடந்த பத்தாண்டுகளில் 0.93% என்ற மிகக்குறைந்த வளர்ச்சியைக்கண்ட இந்திய அண்டை நாடு எது?

அ) இலங்கை

ஆ) நேபாளம் 

இ) பங்களாதேஷ்

ஈ) மியான்மர்

8. “A Little Book of India: Celebrating 75 years of Independence” என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ) ரஸ்கின் பாண்ட் 

ஆ) அருந்ததி ராய்

இ) சுதா மூர்த்தி

ஈ) விக்ரம் சேத்

9. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாவட்டம் எது?

அ) ஈரோடு 

ஆ) கோயம்புத்தூர்

இ) திண்டுக்கல்

ஈ) சேலம்

10. தேசிய பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டத்தின் (HRIDAY) திட்ட காலம் என்ன?

அ) 2014-2018

ஆ) 2015-2019 

இ) 2016-2020

ஈ) 2017-2021

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி: சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்குநோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கரோனா நோயாளிகளில் 70% பேர் உயிரிழக்கின்றனர்.

10 கோடி தடுப்பூசி இலக்கு

இதுவரை 4 லட்சத்து 99,408 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 26 லட்சத்து 92,917 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 7 லட்சத்து 40,383 சிறுவர்களுக்கு 2ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 9 கோடியே 71 லட்சத்து 61,368 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் 10 கோடி தடுப்பூசி என்ற இலக்கை அடைவோம்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குருதிசார் ஆய்வின் (சீரோ சர்வே) 4ஆம்கட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பரில் வெளியான முதல்கட்ட ஆய்வில் 32 சதவீதம் பேருக்கும், 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான 2ஆம் கட்ட ஆய்வில் 29% பேருக்கும், 2021ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெளியான 3ஆம்கட்ட ஆய்வில் 70% பேருக்கும் தமிழகத்தில் நோயெதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டது.

அதேபோல், தமிழகத்தில் நேற்றுமுன்தினம் வெளியான 4ஆம் கட்டஆய்வில் 10 வயதுக்கு மேற்பட்ட 87 சதவீதம் பேருக்கு நோயெதிர்ப்புசக்தி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு 30 குழுக்களைக் கொண்ட 1,706 பேர், 32,245 கிராமமற்றும் நகர்ப்புற மக்களின் இரத்த மாதிரிகளை சேகரித்து மாநில பொது சுகாதாரத்துறை ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெளியான முடிவுகளாகும்.

திருவாரூர் மாவட்டம் முதலிடம்

இதில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவீதமாகவும், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 69 சதவீதமாகவும் உள்ளது தெரிய வந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்சமாக திருவாரூரில் 93 சதவீதம் பேருக்கும், தென்காசியில் 92 சதவீதம் பேருக்கும், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் 91 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 90 சதவீதம் பேருக்கும், நெல்லை, நாமக்கல், சென்னை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 88 சதவீதம் பேருக்கும், நீலகிரி, அரியலூர், தூத்துக்குடி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 87 சதவீதம் பேருக்கும், தேனி, திருச்சி, திருப்பூர், இராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கரூர், வேலூர், புதுக் கோட்டை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 86 சதவீதம் பேருக்கும்,

திருவண்ணாமலை, இராமநாதபுரம், மயிலாடுதுறை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் 85% பேருக்கும், தருமபுரி, காஞ்சிபுரம், திருப்பத்தூர் மாவட்டங்களில் முறையே 84, 83, 82% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2. சூரிய புயலில் சிக்கிய 40 செயற்கைக்கோள்கள் வளிமண்டலத்தில் நுழைந்து எரிந்தன

அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியிருந்த 40 செயற்கைக்கோள்கள் சூரிய புயல் தாக்குதலால் புவிவட்டப்பாதையிலிருந்து விலகி வளி மண்டலத்துக்குள் நுழைந்து எரிந்தன.

இதுதொடர்பாக ஸ்பேக்ஸ்X நிறுவனம் தெரிவித்ததாவது:

சமீபத்தில் ஏற்பட்ட சூரிய புயல், வளிமண்டலத்தை அடர்த்தியாக்கியது. இதனால் கடந்த வாரம் விண்வெளியில் செலுத்தப்பட்டிருந்த 49 சிறிய செயற்கைக் கோள்களில் (ஒரு செயற்கைக்கோளின் எடை 260 கிகி) 40 செயற்கைக்கோள்கள் புவி வட்டப்பாதையிலிருந்து விலகி மீண்டும் வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரிந்தன. சில செயற்கைக்கோள்கள் புவிவட்டப்பாதையில் இருந்து விலகும் தறுவாயில் உள்ளன. இந்த விபத்தைத் தவிர்க்க மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன. இந்தச் சம்பவத்தால் புவி வட்டப்பாதையிலோ, பூமியிலோ எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் ஸ்பேஸ்X நிறுவனத்தின் சுமார் 2,000 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன. அவற்றின்மூலம் உலகின் தொலைதூர இடங்களுக்கு இணையவழி சேவை கிடைத்து வருகிறது. இச்செயற்கைக்கோள்கள் பூமியை 340 மைல்களுக்கும் அதிகமான உயரத்தில் சுற்றிவருகின்றன என்று தெரிவித்துள்ளது.

3. சென்னை – விளாடிவோஸ்க் நகரங்களுக்கான கடல்வழி வர்த்தக போக்குவரத்து திட்டம்: விரைவில் செயல்படுத்தப்படும் என ரஷ்ய துணைத் தூதர் தகவல்

சென்னை – விளாடிவோஸ்க் (ரஷ்யா) நகரங்களுக்கான கடல்வழி வர்த்தக போக்குவரத்து திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்று ரஷ்ய துணைத்தூதர் ஒலெக் என் அவ்தீவ் கூறினார்.

இந்தியா, ரஷ்யா இடையிலான உறவை வலுப்படுத்த கலாச்சாரம், வர்த்தகம், அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதன்தொடர்ச்சியாக இந்திய – ரஷ்ய தொழில் வர்த்தக சபை மற்றும் ரஷ்ய பிரிமோர்ஸ்கி மண்டல தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் இரு நாடுகளுக்கு இடையே புதிய தொழில் வாய்ப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இணையவழியில் நேற்று கையெழுத்தாகின.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய – ரஷ்ய தொழில் வர்த்தக சபை நிறுவனர் V M லட்சுமி நாராயணன், பிரிமோர்ஸ்கி மண்டல தொழில் வர்த்தக கூட்டமைப்பு தலைவர் போரிஸ் ஸ்டுப்நட்ஸ்கி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

1. Which state/UT has released India’s first citizen–driven state–level Bird Atlas?

A) Tamil Nadu

B) Kerala 

C) Karnataka

D) West Bengal

2. Khijadiya wildlife sanctuary, is a new Ramsar site, located in which state/UT?

A) Haryana

B) Bihar

C) Gujarat 

D) Uttarakhand

3. With the integration of Chhattisgarh, the ‘One Nation One Ration Card’ plan is operational in how many states/UT?

A) 15

B) 20

C) 28

D) 35 

4. Skeletal remains of a man buried near a headless horse have been found in which country?

A) Russia

B) Greece

C) Germany 

D) China

5. Which North–Eastern state recently inaugurated a dedicated ‘Technology Park’ for IT sector?

A) Assam

B) Meghalaya 

C) Manipur

D) Mizoram

6. Which country is the top export destination of India’s electronic goods in 2021?

A) USA 

B) China

C) The Netherlands

D) Germany

7. Which neighbouring country of India witnessed a record low growth of 0.93 per cent in the last decade?

A) Sri Lanka

B) Nepal 

C) Bangladesh

D) Myanmar

8. Who is the author of the book titled “A Little Book of India: Celebrating 75 years of Independence”?

A) Ruskin Bond 

B) Arundhati Roy

C) Sudha Murty

D) Vikram Seth

9. The Sathyamangalam Tiger Reserve is located in which district?

A) Erode 

B) Coimbatore

C) Dindigul

D) Salem

10. What was the mission period of National Heritage City Development and Augmentation Yojana (HRIDAY)?

A) 2014–2018

B) 2015–2019 

C) 2016–2020

D) 2017–2021

Exit mobile version