மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு அளவீடு மற்றும் நிலைத்தன்மை 9th Social Science Lesson 7 Questions in Tamil

9th Social Science Lesson 7 Questions in Tamil

7. மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு அளவீடு மற்றும் நிலைத்தன்மை

  1. கூற்று 1: பொருளாதார மேம்பாடு என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், நிலையான வளர்ச்சியையும் குறிக்கிறது.

கூற்று 2: உயர்ந்த வருவாய், தரமானக் கல்வி, நல்ல உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைந்த வறுமை, நிலைத்தச் சமவாய்ப்பு போன்றவை வாழ்க்கைத்தரத்தில் மேம்பாட்டைக் குறிக்கிறது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: பொருளாதார மேம்பாடு என்பது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சியையும், புதிய தொழில்நுட்பங்களையும் ஏற்றுக்கொள்வதாகும்.)

  1. கீழ்க்கண்டவற்றுள் பொருளாதார முன்னேற்றத்தின் முதன்மையானக் குறியீடுகள் எவை?

1. நிகர நாட்டு உற்பத்தி (NNP)

2. தனிநபர் வருமானம் (PCI)

3. வாங்கும் திறன் சமநிலை (PPP)

4. மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI)

A) அனைத்தும் B) 1, 2, 4 C) 2, 3, 4 D) 1, 3, 4

  1. பின்வருவனவற்றுள் G-8 நாடுகளில் அல்லாதது எது?

A) ஆப்கானிஸ்தான்

B) மாலத்தீவுகள்

C) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

D) பூடான்

(குறிப்பு: G8 நாடுகள் – ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை.)

  1. ஓர் ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் குறிப்பிட்டக் காலத்திற்குள் உற்பத்திச் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு ___________ எனப்படும்.

A) மொத்த நாட்டு உற்பத்தி

B) நிகர நாட்டு உற்பத்தி

C) மொத்த உள்நாட்டு உற்பத்தி

D) நிகர உள்நாட்டு உற்பத்தி

  1. ___________ தேசிய உற்பத்தியின் உண்மையான அளவாக கருதப்படுகிறது.

A) மொத்த நாட்டு உற்பத்தி

B) நிகர நாட்டு உற்பத்தி

C) மொத்த உள்நாட்டு உற்பத்தி

D) நிகர உள்நாட்டு உற்பத்தி

(குறிப்பு: நிகர நாட்டு உற்பத்தி நாட்டு வருமானம் என்றும் அறியப்படுகிறது.)

  1. கூற்று 1: தனிநபர் வருமான உயர்வு எப்போதும் மொத்த உண்மையான உற்பத்தியின் உயர்வு என்று பொருள்படும்.

கூற்று 2: தனிநபர் வருமானமே நாட்டின் மேம்பாட்டை அளவிடும் சிறந்த குறியீடு ஆகும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: நாட்டு வருமானமே பொருளாதார மேம்பாட்டின் குறியீடாகக் கருதப்படுகிறது.)

  1. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

A) நாடுகளின் வளர்ச்சியினை ஒப்பிட, மொத்த வருவாயைக் கணக்கிடுவது ஒரு பயனுள்ள நடவடிக்கையாக இருக்க முடியாது,

B) நாட்டின் மொத்த வருவாயை ஒப்பிட்டு சராசரி தனிநபர் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளதென்று சொல்ல முடியாது.

C) நாட்டின் தலா வருமானத்தை கணக்கிட நாட்டின் மொத்த மக்கள்தொகையை நாட்டின் மொத்த வருமானத்தால் வகுக்க வேண்டும்.

D) அனைத்து நாடுகளின் தனிநபர் வருமானத்தின் கணக்கீடுகள் சர்வதேச அளவில் ஒப்பிடுவதற்காக அமெரிக்க டாலரில் மட்டுமே கணக்கிடப்படுகிறது.

(குறிப்பு: நாட்டின் தலா வருமானத்தை கணக்கிட நாட்டின் மொத்த வருமானத்தை நாட்டின் மொத்த மக்கள்தொகையால் வகுக்க வேண்டும்.)

  1. வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா எத்தனையாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது?

A) 1 B) 2 C) 3 D) 4

(குறிப்பு: வாங்கும் திறன் சமநிலை என்பது ஒரு நாட்டினுடைய நாணயங்களின் எண்ணிக்கைக்கு இணையாக, ஒரு சந்தையில் அமெரிக்க டாலரில் வாங்குவதற்கேற்றவாறு, உள்நாட்டு சந்தையில் அதே அளவிலானப் பொருட்களையும் வாங்குவதற்குத் தேவைப்படுகிறது.)

  1. வாங்கும் திறன் சமநிலையில் முதல் இரண்டு இடத்தில் உள்ள நாடுகள் முறையே

A) ஐக்கிய அமெரிக்க நாடுகள், சீனா

B) சீனா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்

C) சீனா, ஜப்பான்

D) ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஜப்பான்

  1. _____________ துறையில் பயன்படுத்தக் கூடிய மனித வளங்களை கொண்டிருக்கும் மக்களையே மனிதவளம் என்ற சொல் குறிக்கிறது.

A) விவசாயத்துறை

B) தகவல் தொழில்நுட்பத் துறை

C) உற்பத்தித் துறை

D) பொருளாதாரத் துறை

(குறிப்பு: எந்த ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் மனித வளங்கள் அவசியமாகும்.)

  1. மனிதவள மேம்பாடு என்பது மனிதனின் உடல் திறன் மற்றும் சுகாதாரத் திறன்களை ________ மூலம் மேம்படுத்துவதாகும்.

A) சமூகம்

B) கல்வி

C) தலா வருமானம்

D) உழைப்பு

(குறிப்பு: மனித வளத்தில் கல்வி மற்றும் உடல் நலத்தில் செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் உயர்ந்த வருமானத்தை அளிக்கலாம்.)

  1. சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. இந்தியாவில் மனித வளங்களின் வளர்ச்சிக்கு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பொறுப்பாகும்.

2. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம் புதுடெல்லியில் சாஸ்திரி பவனில் அமைந்துள்ளது.

A) இரண்டும் தவறு

B) 1 மட்டும் சரி

C) 2 மட்டும் சரி

D) இரண்டும் சரி

  1. _____________ என்பது சமூகத்தின் மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த மேம்பாட்டைக் குறிக்கிறது.

A) தலா வருமானம்

B) நிகர நாட்டு உற்பத்தி

C) மனித வளர்ச்சி குறியீடு

D) உள்நாட்டு உற்பத்தி

(குறிப்பு: ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தால் உலகின் மனித வளர்ச்சி அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.)

  1. நிலையான பொருளாதார மேம்பாடு என்பது, தற்போதுள்ள __________ ஐ சேதப்படுத்தாமல் மேம்பாடு அடைய வேண்டும்.

A) பொருளாதாரம்

B) சுற்றுச்சூழல்

C) மனிதவளம்

D) கல்வியறிவு

(குறிப்பு: அறிவியில் அறிஞர்கள் பொருளாதார வல்லுநர்கள், தத்துவவாதிகள் மற்றும் பிற சமூகவியலாளர்கள் போன்றோர் ஒன்று சேர்ந்து உழைப்பதன் விளைவாக நிலையான மேம்பாடு அமையும்.)

  1. தமிழ்நாட்டின் கல்வியறிவு வீதம் தென்மாநிலங்களில் ____________ இடத்தை பெற்றுள்ளது.

A) 1 B) 2 C) 3 D) 4

(குறிப்பு: தமிழ்நாட்டின் கல்வியறிவு வீதம் தேசிய சராசரியை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்விக்கானச் சேர்க்கையானது இந்தியாவில் மிக உயர்ந்ததாகும்.)

  1. கீழ்க்கண்டவற்றுள் புதுப்பிக்கத் தகுந்த வளம் எது?

A) நிலக்கரி

B) பெட்ரோலியம்

C) ஹைட்ரோகார்பன்

D) நிலத்தடி நீர்

(குறிப்பு: இயற்கை வளங்களை புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்கதகாத வளங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம்.)

  1. நிலையான மேம்பாட்டை அடைவதற்கு கீழ்க்கண்ட எவற்றை சமநிலையில் வைத்திருக்க வேண்டும்?

1. பொருளாதாரம் 2. சமூகம்

3. சுற்றிச்சூழல் 4. கல்வியறிவு

A) அனைத்தும் B) 1, 2, 3 C) 2, 3, 4 D) 1, 2, 4

  1. சரியான இணையைத் தேர்ந்தெடு.

1. புதுப்பிக்கத்தக்க வளங்கள் – தாவரங்கள் விலங்குகள்

2. புதுப்பிக்கத்தகாத வளங்கள் – கனிமங்கள், புதைப்படிவ எரிபொருள்கள், மண்

A) இரண்டும் தவறு

B) 1 மட்டும் சரி

C) 2 மட்டும் சரி

D) இரண்டும் சரி

  1. கீழ்க்கண்டவற்றுள் புதுப்பிக்கத்தக்க வளங்கள் எவை?

1. சூரியசக்தி 2. காற்று சக்தி 3. நீர்

4. மரம் 5. காகிதம் 6. கண்ணாடி

A) அனைத்தும்

B) 1, 2, 3, 4, 5

C) 2, 3, 4, 5

D) 1, 3, 4, 5

(குறிப்பு: புதுப்பிக்கத்தக்க வளங்கள் மாசற்ற மற்றும் சுற்றுச்சூழல் நலம் காக்கிறது. இந்த வளங்கள் புதுப்பிப்பதற்கான ஒரு குறியை நேரத்தை எடுத்து கொள்கிறது.)

  1. கீழ்க்கண்டவற்றுள் புதுப்பிக்க இயலாத வளங்கள் எவை?

1. உலோகங்கள் 2. கண்ணாடி

3. புதைப்படிவ எரிபொருட்கள் 4. காகிதம்

A) அனைத்தும் B) 1, 2, 3 C) 2, 3, 4 D) 1, 2, 4

(குறிப்பு: புதுப்பிக்கத் தகாத வளங்கள் சூழலை மாசுப்படுத்துவும் சேதப்படுத்தவும் செய்கின்றன. இந்த வளங்கள் உருவாக்குவதற்குப் பல நூற்றாண்டுகள் தேவைப்படுகின்றன.)

  1. அனல் மின் நிலையம் சூழலை மாசுபடுத்தும் ___________ ஐ அதிக அளவு வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.

A) சல்பர் டை ஆக்சைடு

B) கார்பன் டை ஆக்சைடு

C) நைட்ரஸ் ஆக்சைடு

D) குளோரோ புளுரோ கார்பன்

(குறிப்பு: இந்தியாவின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனல் மின்சார மற்றும் புனல் மின்சார நிலையங்களை சார்ந்திருக்கிறது.)

  1. கூற்று 1: சூரியசக்தி என்பது சூரிய ஒளி மூலம் மின்சக்தியை நேரடியாக சூரிய ஒளியின் மின்னழுத்த செல்கள் மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்துவதாகும்.

கூற்று 2: சூரிய ஒளி தகடுகள் சூரிய ஒளியினை மின்சக்தியாக மாற்ற சூரிய ஒளியை வேதிவினைக்கு உட்படுத்தி ஆற்றலாக மாற்றுகிறது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: சூரிய மின்தகடு அமைப்பின் மூலம், வீடு மற்றும் அலுவலகத்திற்கு தேவையான மின்சாரம் தயாரிக்க முடியும்.)

  1. தமிழகத்தில் 2017ஆம் ஆண்டு சூலை 31ஆம் நாள் வரை நிறுவப்பட்ட சூரிய அமைப்புகளின் மூலம் பெற்ற மின்திறன் ________ மெகாவாட் ஆகும்.

A) 597 B) 1298 C) 1697 D) 1582

(குறிப்பு: தமிழ்நாடு அதிக அளவில் சூரிய மின்தகடு அமைப்பு கொண்ட மாநிலமாக உள்ளது. இந்தியாவில் சூரியசக்தி மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முன்னணியில் உள்ளது.)

  1. இந்தியா தன் சுற்றுச்சூழல் கொள்கைகளைக் கடந்த __________ ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது.

A) 10 B) 20 C) 25 D) 30

(குறிப்பு: காற்று, நீர் மாசுபாடு, கழிவு மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சிக்கல்களைப் பாதுகாக்கும் விதமாக இக்கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது.)

  1. இந்திய அரசியலமைப்பின் ________ பிரிவு காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் காட்டு உயிர்கள் மற்றும் இயற்கைச் சூழலைப் பேணவும், மேம்படுத்தவும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கவும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்டுள்ளனர் என வலியுறுத்துகிறது.

A) 41 B) 41 (A) C) 51 (A) D) 49(A)

(குறிப்பு: இந்தியாவின் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் அதிகாரங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி, நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.)

  1. காடுகள் அழித்தலை தடைசெய்தல் மற்றும் காடுகள் அல்லாத பகுதிகளில் மரம் வளர்த்தலை ஊக்கப்படுத்தும் சட்டம்

A) பல்லுயிர்மை பாதுகாப்புச் சட்டம், 2002

B) சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986

C) வன (பாதுகாப்பு) சட்டம், 1980

D) வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம், 1972

  1. தவறான இணையைத் தேர்ந்தெடு.

A) பல்லுயிர்மை பாதுகாப்புச் சட்டம், 2002 – பல்லுயிர்களை பாதுகாத்தல்

B) சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1949 – சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான அதிகாரம் வழங்குதல்

C) நீர் (நீர் பாதுகாப்பு மற்றும் மாசுபடுத்துதல் தடுப்பு) சட்டம், 1974 – அனைத்து ஆறுகள், ஏரிகள், குளங்களை மீட்டு பராமரித்தல்

D) வனவிலங்கள் பாதுகாப்பு சட்டம், 1972 – காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது.

(குறிப்பு: சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 – சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான அதிகாரம் வழங்குதல்)

  1. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் சட்டம்

A) தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம், 2010

B) சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986

C) வன (பாதுகாப்பு) சட்டம், 1980

D) வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம், 1972

  1. சரியான இணையைத் தேர்ந்தெடு. (G8 நாடுகள் – மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் (அமெரிக்க டாலரில் மதிப்பு) 2018)

1. இங்கிலாந்து – 40,03,000

2. ரஷ்யா – 10,63,000

3. கனடா – 47,66,000

4. பிரெஞ்சு – 42,42,000

A) அனைத்தும் சரி

B) 2, 3, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) 1, 3, 4 சரி

  1. சரியான இணையைத் தேர்ந்தெடு. (G8 நாடுகள் – மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் (அமெரிக்க டாலரில் மதிப்பு) 2018)

1. அமெரிக்க ஐக்கிய நாடுகள் – 61,69,000

2. இத்தாலி – 33,73,000

3. ஜப்பான் – 30,73,000

4. ஜெர்மனி – 47,54,000

A) அனைத்தும் சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) 1, 3, 4 சரி

(குறிப்பு: ஜப்பான் – 40,06,000)

  1. தவறான இணையைத் தேர்ந்தெடு. (சார்க் நாடுகள் – மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் (அமெரிக்க டாலரில் மதிப்பு) 2018)

A) ஆப்கானிஸ்தான் – 610.24

B) பங்களாதேஷ் – 1,66,000

C) பூடான் – 1,22,000

D) இந்தியா – 1,99,000

(குறிப்பு: பூடான் – 3,22,000)

  1. சரியான இணையைத் தேர்ந்தெடு. (சார்க் நாடுகள் – மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் (அமெரிக்க டாலரில் மதிப்பு) 2018)

1. மாலத்தீவுகள் – 1,32,000

2. நேபாளம் – 882.93

3. இலங்கை – 4,05,000

4. பாகிஸ்தான் – பொருந்தாது.

A) அனைத்தும் சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) 1, 3, 4 சரி

  1. சரியான இணையைத் தேர்ந்தெடு. (பிரிக்ஸ் நாடுகள் – மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் (அமெரிக்க டாலரில் மதிப்பு) 2018)

1. பிரேசில் – 10,51,000

2. ரஷ்யா – 19,63,000

3. இந்தியா – 1,99,000

4. சீனா – 5,28,000

5. தென் ஆப்பிரிக்கா -6,29,000

A) அனைத்தும் சரி

B) 1, 2, 4 சரி

C) 2, 3, 4, 5 சரி

D) 1, 2, 3, 5 சரி

(குறிப்பு: சீனா – 9,38,000)

  1. பொருத்துக.

நாடுகளின் வகைகள் தலா வருமானம்

(அமெரிக்க டாலரில்)

1. குறைந்த வருவாய் i) < 1005

2. குறைந்த நடுத்தர வருவாய் ii) 1006-3955

3. உயர் நடுத்தர வருவாய் iii) 3956-12, 235

4. உயர்ந்த வருவாய் iv) > 12,235

A) i ii iii iv

B) ii iv iii iv

C) iii ii i iv

D) ii i iv iii

  1. கீழ்க்கண்டவற்றுள் மனிதவள மேம்பாட்டு குறியீட்டெண்ணில் அடங்குபவை எவை?

1. ஆயுட்காலம் 2. சராசரி கல்வி அளவு

3. வயது வந்தோர் கல்வியறிவு வீதம் 4. வாழ்க்கைத் தரம்

A) அனைத்தும் B) 1, 2, 4 C) 2, 3, 4 D) 1, 3, 4

  1. தவறான இணையத்யைத் தேர்ந்தெடு.(நாடுகள் – மனித வள மேம்பாடு குறியீடு 2015)

A) இந்தியா – 0.624

B) ரஷ்யா – 0.785

C) சீனா – 0.738

D) பாகிஸ்தான் – 0.550

(குறிப்பு: ரஷ்யா – 0.804)

  1. தவறான இணையத்யைத் தேர்ந்தெடு.(நாடுகள் – மனித வள மேம்பாடு குறியீடு 2015)

A) நேபாளம் – 0.558

B) பங்களாதேஷ் – 0.579

C) தென்ஆப்பிரிக்கா – 0.666

D) இலங்கை – 0.746

  1. 2011ல் தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் _________ சதவீதம் ஆகும்.

A) 74.04 B) 75.36 C) 78.03 D) 80.09

(குறிப்பு: 2011ல் இந்தியாவின் கல்வியறிவு விகிதம் 74.04.)

  1. 2011ஆம் ஆண்டில் இந்தியாவின் பாலின விகிதம்

A) 996 B) 943 C) 973 D) 993

(குறிப்பு: பாலின விகிதம் என்பது 1000 ஆண்களுக்கு தலா பெண்களின் எண்ணிக்கை.)

  1. 2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பாலின விகிதம்

A) 912 B) 919 C) 996 C) 993

  1. தமிழ்நாட்டில் 2015-2016ஆம் ஆண்டில் உயர்கல்வியில் சேர்க்கை சதவீதம்

A) 30.8 B) 20.7 C) 44.3 D) 26.1

(குறிப்பு: தமிழ்நாட்டில் 2015-2016ஆம் ஆண்டில் உயர்கல்வியில் சேர்க்கை சதவீதம் 24.5 ஆகும்.)

  1. பொருத்துக.

மாநிலங்கள் கல்வியறிவு விகிதம்

1. ஆந்திரா i) 67.02

2. கர்நாடகம் ii) 75.36

3. கேரளா iii) 94

4. குஜராத் iv) 78.03

5. உத்திரப் பிரதேசம் v) 69.72

A) i ii iii iv v

B) ii iv v iii iv

C) iii ii i iv v

D) ii i iv v iii

  1. சரியான இணையைத் தேர்ந்தெடு. (பாலின விகிதம்)

1. ஆந்திரா – 993

2. கர்நாடகா – 973

3. கேரளா – 1084

4. குஜராத் – 912

5. உத்திரப்பிரதேசம் – 919

A) அனைத்தும் சரி

B) 1, 2, 3 சரி

C) 2, 3, 4, 5 சரி

D) 1, 3, 4, 5 சரி

(குறிப்பு: குஜராத் – 919, உத்திரப் பிரதேசம் – 912.)

  1. பொருத்துக.

மாநிலங்கள் உயர்கல்வியில் சேர்க்கை

1. ஆந்திரா i) 24.5

2. கர்நாடகம் ii) 20.7

3. கேரளா iii) 30.8

4. குஜராத் iv) 26.1

5. உத்திரப் பிரதேசம் v) 30.8

A) i ii iii iv v

B) ii iv v iii iv

C) v iv iii ii i

D) ii i iv v iii

  1. கூற்று: மேம்பாடு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.

காரணம்: மக்கள் அதிக வருவாய், சிறந்த கல்வி, உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைந்த வறுமை பெறுவார்கள்.

A) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

B) கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல

C) கூற்று சரி, காரணம் தவறு

D) கூற்று தவறு, காரணம் சரி

  1. மனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது

A) ஏழை மக்கள் மீதான முதலீடு

B) வேளாண்மை மீதான செலவு

C) சொத்துக்கள் மீதான முதலீடு

D) ஒட்டு மொத்த மக்களின் திறமை

  1. நாடுகளுக்கு இடையேயான மேம்பாட்டை ஒப்பிட அவர்களின் மிக முக்கிய பண்புகளில் ஒன்றாக கருதப்படுவது

A) வளர்ச்சி

B) வருமானம்

C) செலவீனம்

D) சேமிப்புகள்

  1. __________ வருவாயை தலா வருமானம் என்றும் அழைக்கலாம்.

A) சராசரி

B) மொத்த

C) மக்கள்

D) மாத

  1. சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று

A) இந்தியா

B) பாகிஸ்தான்

C) சீனா

D) பூடான்

(குறிப்பு: சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் – ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை)

  1. பரம்பரை ரீதியான சமத்துவம் எந்த நடைமுறையில் உறுதி செய்யப்படுகிறது?

A) தொழிற்சாலை

B) பொருளாதார மேம்பாடு

C) நிலையான மேம்பாடு

D) பொருளாதார வளர்ச்சி

 

Exit mobile version