மனிதனும் சுற்றுச் சூழலும் Notes 9th Social Science

9th Social Science Lesson 12 Notes in Tamil

12. மனிதனும் சுற்றுச் சூழலும்

அறிமுகம்

மனிதனும் சுற்றுச்சூழலும்

(UNCED – United Nations Conference on Environmentnation and Development).

சுற்றுச்சூழலின் வகைப்பாடுகள் (Classification of Environment)

அ) இயற்கை சுற்றுச்சூழல்

ஆ) மனித சுற்றுச்சூழல்

இ) மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல்

அ) இயற்கை சுற்றுச் சூழல் (Natural Environment)

சுற்றுச்சூழலின் இயற்கை கூறுகளான நிலக்கோளம், நீர்க்கோளம், வாயுக்கோளம் மற்றும் உயிர்க்கோளம் ஆகியவற்றைப் பற்றி முன்பே அறிந்திருக்கின்றோம். இப்பாடத்தில் மனிதனைப் பற்றியும் மனிதனால் உருவாக்கப்பட்ட கூறுகளைப் பற்றியும் விரிவாகக் காண்போம்.

ஆ) மனித சுற்றுச்சூழல் (Human Environment)

இ) மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் (Man-made Environment)

மக்கள்தொகை (Population)

மனித இனம் அல்லாத ஓர் உலகை உன்னால் கற்பனை செய்ய முடியுமா?

பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு மனித இனம் மிக முக்கியமானதாகும். மக்கள்தொகை (Populous) என்ற சொல், இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். பாப்புலஸ் என்றால் மக்கள் என்று பொருளாகும்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழும் மொத்த மக்களின் எண்ணிக்கையை மக்கள்தொகை என்கிறோம்.

மக்கள் தொகையியல் (Demography) என்றால் என்ன?

பழங்காலத்தில் கிரேக்க மொழியில் ‘Demos’ என்றால் மக்கள் என்றும் ‘graphis’ என்றால் கணக்கிடுதல் என்றும் பொருளாகும். எனவே மக்கள்தொகையியல் என்பது புள்ளியியல் முறையில், மக்கள்தொகையைக் கணக்கிடுவதாகும்.

மக்கள்தொகை வளர்ச்சி (Population Growth)

வ. எண் கூறுகள் விளக்கம் தமிழ்நாட்டின் புள்ளி விவரம்
1 பிறப்பு விகிதம் ஓர் ஆண்டில் 1000 பேருக்கு உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 15.4% (2014)
2 மக்கள்தொகை வளர்ச்சி ஓர் ஆண்டின் சராசரி மக்கள்தொகை அதிகரிப்பு 15.6% (2011) (மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி)
3 மக்களடர்த்தி ஒரு சதிர கி.மீ. பரப்பளவில் வாழும் மக்களின் சராசரி எண்ணிக்கை. 555/Km2 (2011)
4 மொத்த கருவள விகிதம் ஒரு பெண்ணின் கருவள காலத்திற்குள் சராசரியாகப் பெற்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை. [கருவள காலம் 15 முதல் 44 வயது வரை] 1.6 பிறப்பு ஒவ்வொரு பெண்ணிற்கும் (2016)
5 குழந்தைகளின் இறப்பு வீதம் ஓர் ஆண்டில் உயிருடன் பிறந்த 1000 குழந்தைகளில் ஒரு வயதிற்குட்பட்ட இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 17/1000 (2016)
6 வாழ்நாள் மதிப்பீடு ஒரு நபரின் சராசரி ஆயுட்காலம் 70.6 ஆண்டுகள் (2010 – 14)
7 கல்வியறிவு விகிதம் மொத்த மக்கள்தொகையில் ஒரு மொழியை எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 80.09% (2011)
8 கல்வியறிவு விகிதம் மொத்த மக்கள்தொகையில் ஒரு மொழியை எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 80.09% (2011)
பாலின விகிதம் ஒரு பிரதேச மக்கள்தொகையில் 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் உள்ளனர் 996 : 1000 (2011)

மக்கள்தொகை வளர்ச்சியைக் கணக்கிடுதல் மக்கள்தொகை வளர்ச்சி = (பிறப்புவிகிதம் + குடியிறக்கம்) – (இறப்பு விகிதம் + குடியேற்றம்)

தமிழ்நாட்டின் மக்கள்தொகை தொடர்புடைய முக்கிய அம்சங்கள்

மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census)

மக்கள்தொகைப் பரவல் (Distribution of Population)

அ. இயற்கை காரணிகள் (Physical Factors)

இயற்கை காரணிகளான வெப்பநிலை, மழை, மண், நிலத்தோற்றம், நீர், இயற்கைத் தாவரங்கள், கனிம வளங்களின் பரவல் மற்றும் ஆற்றல் வளங்களின் இருப்பு உள்ளிட்டவை மக்கள்தொகை பரவலுக்கான இயற்கை காரணிகள் ஆகும்.

ஆ. வரலாற்றுக் காரணிகள் (Historical Factors)

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரிகங்கள், போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆகியவை மக்கள்தொகை பரவலுக்கான முக்கியமான வரலாற்றுக் காரணிகளாகும்.

இ. பொருளாதாரக் காரணிகள் (Economic Factors)

கல்விக்கூடங்கள், வேலைவாய்ப்புகள், உற்பத்தித் தொழிற்சாலைகள், ஆடம்பர வசதிகள், வியாபாரம், வணிகம் மற்றும் பிற வசதிகளும் ஓரிடத்தின் மக்கள் தொகைப் பரவுவதற்கு காரணமாகின்றன.

மக்களடர்த்தி (Density of Population)

உலக மக்கள் அடர்த்தியை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,

(எ.கா) கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, வடமேற்கு ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவின் கிழக்குப் பகுதி.

(எ.கா) மிதவெப்ப மண்டலப் பகுதியில் உள்ள அங்கோலா, காங்கோ, நைஜிரியா மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள சாம்பியா.

(எ.கா) மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு ஆஸ்திரேலியா, வடக்கு ரஷ்யா மற்றும் கனடா

அதிக மக்கள்தொகை மற்றும் குறைந்து மக்கள்தொகை (Over population and Under population)

அதிக மக்கள்தொகை என்பது, ஒரு நாட்டில் மக்களின் எண்ணிக்கையைவிட வளங்களின் அளவில் குறைவாக இருப்பதாகும். மாறாக, குறைந்த எண்ணிக்கையிலான மக்கள்தொகையும் அதிக அளவிலான வளமும் இருந்தால் அதனைக் குறைந்த மக்கள்தொகை என்கிறோம்.

இடப்பெயர்வு (Migration)

இடப்பெயர்வின் இரண்டு வகைகள்

அ. உள்நாட்டு இடப்பெயர்வு

இது ஒரு நாட்டின் புவியியல் எல்லைக்குள் நடைபெறும் இடப்பெயர்வாகும். அதாவது மாநிலங்களுக்கிடையேயும் மாவட்டங்களுக்கிடையேயும் கிராமங்களுக்கிடையேயும் நடைபெறுவது உள்நாட்டு இடப்பெயர்வு ஆகும்.

ஆ. பன்னாட்டு இடப்பெயர்வு

மக்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பன்னாட்டு எல்லைகளைக் கடந்து இடம்பெயர்வது பன்னாட்டு இடப்பெயர்வு ஆகும்.

குடியேற்றம் – ஒரு இடத்தைவிட்டு வெளியேறுவது, குடியேற்றமாகும்.

குடியிறக்கம் – ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து இருப்பிடத்தை அமைத்துக் கொள்வது குடியிறக்கமாகும்.

இடம்பெயர்வுக்கான தள்ளு காரணிகள் மற்றும் ஈர்ப்புக் காரணிகள் (Push and Pull Factors)

மக்களைப் புதிய வாழ்விடத்தை நோக்கி வலிந்து இடம் பெயரச் செய்யும் காரணிகள் தள்ளு காரணிகள் எனப்படும். ஈர்ப்பின் காரணமாக புதிய வாழ்விடத்தை நோக்கி மக்கள் இடம் பெயர்வது ஈர்க்கும் காரணிகள் ஆகும். இடம்பெயர்வுக்கான தள்ளு காரணிகள் மற்றும் ஈர்ப்புக் காரணிகளில் சில.

இடப்பெயர்வுக்கான தள்ளு காரணிகள் இடப்பெயர்வுக்கான ஈர்ப்புக் காரணிகள்
  • குறைந்த வேலைவாய்ப்பு வசதிகள்
  • முன்னேற்றம் அடையாத வாழ்க்கை நிலை
  • பாலைவனமாதல்
  • அடிமைநிலை அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட உழைப்பு
  • குறைந்த மருத்துவ வசதி
  • மரண அச்சுறுத்தல்
  • மாசடைதல்
  • குறைந்த அடிப்படைக் கட்டமைப்பு
  • கொடுமைப்படுத்துதல், வசதியின்மை
  • இயற்கைப் பேரிடர்
  • போர்கள்
  • அரசியல் மற்றும் சமய சுதந்திரமின்மை
  • சிறந்த வேலைவாய்ப்பு வசதிகள்
  • நல்ல வாழும் சூழல்
  • வளமான நிலப்பகுதி
  • சமூகப் பொருளாதார சுதந்திரம்
  • சிறந்த மருத்துவ வசதி
  • பாதுகாப்பு
  • தூய்மையான சுற்றுச்சூழல்
  • நல்ல அடிப்படை கட்டமைப்பு
  • கல்வி
  • நிலையான வாழ்வியல்
  • தொழிற்கூடங்கள்
  • அரசியல் மற்றும் சமயச் சுதந்திரம்

மனித குடியிருப்புகள் (Human Settlement)

குடியிருப்புகளின் வகைகள் (Types of settlement)

குடியிருப்புகள் அங்கு நடைபெறும் பணிகளின் அடிப்படையில் கிராமம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அ) கிராம குடியிருப்புகள் (Rural Settlements)

முதன்மை தொழில்களான வேளாண்மை, வனத்தொழில், கனிமத்தொழில் மற்றும் மீன் பிடித்தல் போன்றவை மேற்கொண்டிருக்கும் குடிடிருப்புகள் கிராமக் குடியிருப்புகள் எனப்படுகின்றன.

உலகின் பெரும்பாலான குடியிருப்புகள் ஆகும்.

கிராமக்குடியிருப்பு வகைகள் (Patterns of Rural Settlements)

சமவெளிப் பகுதிகளிலும், பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காணப்படும் குடியிருப்புகள் செவ்வக வடிவக் குடியிருப்புகளாகும். இங்குச் சாலைகள் செவ்வக வடிவில் காணப்படுவதோடு ஒன்றையொன்று செங்கோணங்களில் வெட்டிச் செல்லும்.

இவ்வகையான குடியிருப்புகள் சாலை, தொடர்வண்டிப் பாதை, ஆற்றங்கரை மற்றும் அணைகட்டு ஓரங்களில் காணப்படுகின்றன.

இவ்வகையான குடியிருப்புகள் ஏரிகள், குளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளைச் சுற்றி வட்டமாகவோ அல்லது அரைவட்டமாகவோ காணப்படுகின்றன.

நட்சத்திர வடிவ குடியிருப்புகள் கப்பியிடப்பட்ட அல்லது காப்பியிடப்படாத சாலை சந்திப்புகளின் ஓரங்களில் காணப்படுகின்றன. இவை நட்சத்திர வடிவத்தில் எல்லாத் திசைகளிலும் பரவிக் காணப்படும்.

ஆறுகள் ஒன்றாக சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள் முக்கோண வடிவக் குடியிருப்புகளாகும்.

T வடிவ குடியிருப்புகள் மூன்று சாலைகள் சந்திக்கும் இடங்களில் வளர்ச்சியடையும். Y வடிவக் குடியிருப்புகள் இரண்டு சாலைகள் மூன்றாவது சாலையுடன் சேரும் இடங்களில் காணப்படுகின்றது. குறுக்கு வடிவக் குடியிருப்புகள் நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களில் காணப்படுகின்றன.

இங்குச் சாலைகள் வட்ட வடிவமாகவும் ஒரு மையத்தில் முடிவடையக் கூடியதாகவும் இருக்கும். கிராமத்தின் குடியிருப்புகள் செல்வந்தரின் குடியிருப்பைச் சுற்றியோ அல்லது மசூதி, கோவில், தேவாலயங்களைச் சுற்றியோ அமைந்திருக்கும்.

ஆ) நகரக்குடியிருப்புகள் (Urban Settlements)

நகரக்குடியிருப்புகளின் வகைப்பாடுகள் (Classification of Urban Settlements)

பொருளாதார நடவடிக்கைகள் (Economic Activities)

பொருளாதார நடவடிக்கை என்பது ஒரு பகுதியில் அனைத்து நிலைகளிலும் நடைபெறும் பொருள்களின் உற்பத்தி, பகிர்வு, நுகர்வு மற்றும் சேவைகளைக் குறிப்பதாகும்.

பொருளாதார நடவடிக்கைகளின் வகைகள் (Types of Economic Activities)

முதல்நிலைத் தொழில்கள் (Primary Activities)

இரண்டாம் நிலைத் தொழில்கள் (Secondary Activities)

இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப்பொருள்கள் முடிவுற்ற பொருள்களாக மாற்றம் செய்யப்படுகின்றன.

(எ.கா): இரும்பு எஃகு தொழிற்சாலைகள், வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள்

மூன்றாம் நிலைத் தொழில்கள் (Tertiary Activities)

மூன்றாம் நிலைத்தொழிலில் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாக உற்பத்திச் செயலுக்கு தூணை புரிகின்றன. (எ.கா) போக்குவரத்து, தகவல் தொடர்பு, வங்கிகள் மற்றும் சேமிப்புக் கிடங்கு வணிகம்.

நான்காம்நிலைத் தொழில்கள் (Quaternary Activities)

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, அறிவுசார் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கைகளை நன்காம் நிலைத்தொழில் என்கிறோம். (எ.கா) ஆலோசனை வழங்குதல், கல்வி மற்றும் வங்கி சார்ந்த சேவைகள்.

ஐந்தாம் நிலைத்தொழில்கள் (Quinary Activities)

சுற்றுச்சூழல் பிரச்சனைகள் (Environmental Issues)

சில சுற்றுச்சூழல் பிரச்சனைகளைப் பற்றி நாம் அறிவோம்.

காடுகளை அழித்தல் (Deforestation)

காடுகளை அழித்தல் என்பது மக்கள் தங்களின் பிற பயன்பாடுகளுக்காகக் காடுகளில் உள்ள மரங்களை நிரந்தரமாக வெட்டியெடுத்து நிலத்தைப் பதப்படுத்திப் பயன்படுத்துவதாகும்.

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் (Effects of Deforestation)

காடுகளைப் பாதுகாத்தல் (Conservation of Forests)

  1. மரம் வெட்டுதலை முறைப்படுத்துவதன் மூலம் காடுகளைப் பாதுகாக்க முடியும்.
  2. தொடர் கண்காணிப்பு மூலமும் மனித நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் காட்டுத் தீ ஏற்படுவதைத் தவிர்த்து காடுகளைப் பாதுகாக்கலாம்.
  3. காடு வளர்ப்பு மற்றும் மீட்டுருவாக்கம்:
  1. வனவளங்களின் பயன்பாடு:

நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான காற்று முதல் பயன்படுத்தும் மரக் கட்டைகள்வரை அனைத்திற்கும் காடுகளைச் சார்ந்திருக்கின்றோம். இவை தவிர விலங்குகளின் வாழ்விடமாகவும் மனிதர்களின் வாழ்வாதாரமாகவும் காடுகள் உள்ளன. காடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்கள் நமது அன்றாட வாழ்விற்கு அவசியமாகும். இதனால் வன வளத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

  1. வளம் குன்றா வன மேலாண்மை:

மாசுறுதல் (Pollution)

மாசுறுதலின் வகைகள்

அ) காற்று மாசுறுதல் (Air pollution)

ஆ) நீர் மாசுறுதல் (Water pollution)

இ) நிலம் மாசுறுதல் (Land pollution)

ஈ) ஒலி மாசுறுதல் (Sound pollution)

உ) ஒளி மாசுறுதல் (Light pollution) ஆகும்.

அ) காற்று மாசுறுதல்

பசுமைக்குடில் விளைவு (Green House Effect)

பசுமைக்குடில் வாயுக்களான கார்பன் –டை-ஆக்சைடு , மீத்தே, நீர்மூலக்கூறுகள், குளோரோ புளோரோ கார்பன் (CFC), கார்பம் மோனாக்சைடு, ஒளிப்பட வேதியியல் தனிமங்கள் மற்றும் ஹைட்ராகார்பன் போன்றவை வளிமண்டலத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றாமல் தக்க வைக்கிறது. இவை மேலும் வளி மண்டலத்தின் வெப்ப ஏற்புத்திறன் அதிகரிக்கவும் காரணமாகின்றன. உலக வெப்ப மயமாதலால். காலநிலைமாற்றம், ஓசோன் படலம் பாதிக்கப்படுதல், கடல்மட்டம் உயருதல், கடலோர நிலப்பகுதிகளைக் கடல் ஆட்கொள்ளுதல், பனிக்கட்டி உருகுதல் போன்றவை ஏற்படுகின்றன. உலக வெப்பமடமாதல் மனித இனத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஆகவே மனிதன் சுற்றுச்சூழலை மாசுறுவதிலிருந்து பாதுகாப்பதற்குத் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும்.

அமிலமழை (Acid Rain)

மாசுப் பொருள்கள் நீராவியோடு சேர்ந்து சூரியஒளி மற்றும் உயிர்வளித் துணையோடு நீர்த்த கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இக்கலவை, மழை நீரில் கரைந்து மழையாகப் பெய்வதை அமிலமழை என்கிறோம். அமிலமழைக்குக் காரணமான வாயுக்கள் கந்தக –டை-ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் -டை-ஆக்சைடு மற்றும் படிம எரிபொருள் கண்ணுக்குத் தெரியாத பொருள்கள்.

ஓசோன் படலச் சிதைவு (Ozone Depletion)

ஓசோன் படலம்

ஆ) நீர் மாசுறுதல் (Water Pollution)

நீர் மாசுறுதல் என்பது நன்னீரின் தரத்தில் ஏற்படும் வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் மாற்றங்களாகும். குளங்கள், ஏரிகள், ஆறுகள், நிலத்தடிநீர் மற்றும் பெருங்கடல்கள் போன்ற நீர்நிலைகள் தொழிற்சாலை இரசாயன கழிவுகள், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் சாக்கடைகள் போன்றவற்றால் நீர் மாசடைகிறது.

முக்கியமான நீர் மாசுக்கள் (Major Water Pollutants)

  1. நோய்களைப் பரப்பும் காரணிகள் – பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவா, ஒட்டுண்ணி புழுக்கள் ஆகியன கழிவுநீரின் மூலமும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரின் மூலமும் பரவுகின்றன.
  2. ஆக்சிஜனை உறிஞ்சும் பாக்டீரியாக்கள் –இவை பொருட்களைச் சிதைவுறச் செய்வதன் மூலமாக ஆக்சிஜனைப் பெறுகின்றன.
  3. நீரில் கரையக்கூடிய மாசுக்கள் – அமிலங்கள், உப்பு மற்றும் நச்சு உலோகங்கள் ஆகியன.
  4. கரிம வேதியியற் பொருட்கள் – எண்ணெய், நெகிழி மற்றும் பூச்சிக் கொல்லிகள் போன்றவை.

நீரைப்பாதுகாப்பதில் நமது பங்கு

  1. ஆறு மற்றும் ஆற்றங்கரையில் கழிவுப்பொருட்களைக் குவிக்காமல், தூய்மைப்படுத்துதல் வேண்டும்.
  2. சமைத்த கொழுப்புப் பொருள்கள் மற்றும் எண்ணெய்ப் பொருட்களைச் சமையலறைத் தொட்டியில் கொட்டக்கூடாது.
  3. குளிப்பதற்கு நீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். குழாய்களில் நீர்க்கசிவு இல்லாமல் பராமரிக்க வேண்டும். கழிப்பறையில் குறைந்த அளவு நீர் வெளியேறும் வகையில் கழிவுக் கலன்களைப் பொருத்த வேண்டும்.
  4. பல் துலக்கும்பொழுதும், துணிதுவைக்கும் பொழுதும் தேவைப்படும் நேரங்களில் மட்டுமே குழாயைத் திறக்க வேண்டும்.
  5. குடிநீரைப் பாத்திரங்களில் மற்றும் குடிநீர் குடுவைகளில் (water bottles) சேமித்து வைத்துப் பயன்படுத்தவேண்டும். மேலும் குடிநீர்க் குழாய்களை நேரசியாகப் பயன்படுத்துதலைக் குறைத்துக் கொள்ள வேண்டும். முழு கொள்ளளவுடன் துணை துவைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தலாம். துவைக்கும் போது வெதுவெது[ப்பானச்ச் நீரையும் அலசும்போது குளிர்ந்த நீரையும் பயன்படுத்த வேண்டும்.

நீர் மாசடைதலின் விளைவுகள்

பேதி, கல்லீரல் பாதிப்பு, நுரையீரல் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, பக்கவாதம், நாள்பட்ட வலி, எலும்புக்குறைபாடு, புற்றுநோய் மற்றும் உயிரிழப்பு போன்றவை நீர் மாசுறுதலால் ஏற்படும் பாதிப்புகள் ஆகும்.

இ) நிலம் மாசுறுதல் (Land Pollution)

நிலம் மாசுறுதலைத் தடுக்கும் முறைகள்

  1. வீட்டுக் கழிவுகளை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு செய்யலாம்.
  2. இரசாயக் கழிவுகளையும் கனிமக் கழிவுகளையும் மறுசுழற்சி மூலம் பயன்படுத்தலாம்.

ஈ) ஒலி மாசுறுதல் (Noise Pollution)

அடிப்படையில் ஒலி மாசுறுதல் பெரும்பாலும் நகர்ப்புறப்பகுதிகளிலும், தொழிற்சாலைப் பகுதிகளிலும், நெரிசல் மிகுந்த போக்குவரத்துப் பகுதிகள் மற்றும் பல பகுதிகளில் காணப்படுகிறது. மனித மற்றும் விலக்குகளின் சமநிலையை இவ்வொலிமாசு கடுமையாக பாதிப்பதோடு அவைகளின் இடப்பெயர்விற்கும் காரணமாகிறது.

எடுத்துக்காட்டாக: சந்திப்பூர் ஏவுகளை ஏவுதளத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலிருந்து கடற்பறவைகள் இடம் பெயர்ந்துள்ளன. காதுகேளாமை, மன அழுத்தம், படபடப்பு, போன்ற பல்வேறு பிரச்சனைகளை மனிதர்களுக்கு ஏற்படுத்துகின்றது.

ஒலி மாசுபாட்டினைக் கட்டுப்படுத்தும் வழி முறைகள் (Control measures of Noise pollution)

  1. பசுமை மண்டலங்களை உருவாக்குதல்
  2. நெடுஞ்சாலை ஓரங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் , ஒலி அளவிடும் கருவிகளைப் (Decibal meters) பொருத்துதல்
  3. வீடுகளைச் சுற்றிலும் உயரமான மரங்களை வளர்த்தல்

ஒலிபெருக்கி தடைசெய்யப்பட்டுள்ளது

பொது இடங்களில் ஒலி மாசு ஏற்பட முக்கிய காரணம் ஒலிபெருக்கி ஆகும். மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒலிப்பெருக்கி தடை செய்யப்பட்டுள்ளது. கடுமையான சட்டங்களின் மூலம், மக்கள் கூடும் பகுதிகளிலும் பொது இடங்களிலும் ஒலிபெருக்கி உபயோகிப்பவர்கள் தண்டிக்கப்படுவர்.

உ) ஒளி மாசுபாடு (Light pollution)

ஒளி மாசுபாடு என்பது அதிகப்படியான ஒளியினை திறந்தவெளியில் ஏற்படுத்துவதால் உண்டாகும் ஒரு வேண்டத்தகாத நிகழ்வாகும். குறிப்பாக வானம் ஒளிர்தல், ஒளிமீறல் மற்றும் கண்களை உறுத்தும் போன்றவை ஒளிமாசு ஆகும். தெரு விளக்குகள், வாகன நிறுத்துமிட செயற்கை ஒளி விளக்குகளால் ஒளி மாசுபாடு ஏற்படுகிறது. சக்தி வளங்கள், வன உயிரி வளங்கள் , மனிதர்கள் மற்றும் வானவியல் ஆராய்ச்சி போன்றவற்றை இது பாதிக்கிறது.

நகரமயமாதல் (Urbanization)

நகரமயமாதல் என்பது ஒரு நாட்டில் நகர்ப்புறப்பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிக்கும் செயலே ஆகும்.

நகரமயமாதலினால் ஏற்படும் பிரச்சனைகள் (Problems of Urbanisation)

நீர்ம விசையியல் தொழில்நுட்பம் (Fracking)

பிற சுற்றுச்சூழல் பாதிப்புகள்

நீர்ம விசையியல் நீர் மற்றும் காற்றை மட்டுமல்லாது மண்ணையும் மாசுறச் செய்கிறது. இச்செயலின் போது சிதறும் எண்ணெய் மண்வளத்தை மட்டுமல்லாது தாவரங்களையும் பாதிக்கிறது. எண்ணெய் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் உயர் அழுத்தமும் அங்கு சேர்ந்துள்ள நீர் சேகரிப்புப் பகுதியில் புவி அதிர்வை ஏற்படுத்தலாம்.

கழிவுகள் அகற்றுதல்

கழிவுகளை எவ்வாறு அகற்றுவது?

ஈரக்கழிவுகள்: சமையலறைக் கழிவுகல், உணவுப் பொருள்கள், உணவு சமைக்கப் பயன்படும் பொருள்கள் போன்றவை.

வறண்டக்கழிவுகள்: மறுசுழற்சிக் கழிவுகளான செய்தித்தாள்கள், அட்டைகள், நெகிழிகள், உடைந்த கண்ணாடிப் பொருள்கள், நெகிழிக் குவளைகள் போன்றவை.

உயிரிக்கழிவுகள் : மேலே குறிப்பிட்ட இரண்டு கழிவுகளும் அல்லாத தேவையற்ற கழிவுகளான உயிரிகழிவுகள் அதாவது அரையாப்பு, கட்டுத்துணிகள் போன்றவை.

வளம் குன்றா வளர்ச்சி (Sustainable Development)

பூமியில் வாழும் மக்கள் தங்களுடைய தேவைக்கு அதிகமாக வளங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

வளம் குன்றா நிலை அவசியமானது. ஏன்?

தனியாள் ஆய்வு (Case study)

வளம் குன்றா வளர்ச்சியில் பாக்வளைகுடாவின் மாங்குரோவ் காடுகள்

Exit mobile version