பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல் 9th Social Science Lesson 13 Questions in Tamil

9th Social Science Lesson 13 Questions in Tamil

13. பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்

  1. டிசம்பர் 26, 2004 அன்று சுமத்ரா கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ரிக்டர் மதிப்பு

A) 8.9 B) 9.0 C) 9.1 D) 9.3

(குறிப்பு: சுமத்ரா தீவில் 1879 பேர் இறந்ததாகவும் மற்றும் 5600 பேர் காணாமல் போனதாகவும் இறுதி புள்ளி விவரம் கூறுகிறது.)

  1. மோக்கேன் என்ற பழங்குடி மனிதன் வசிக்கும் தீவு

A) அந்தமான் தீவுகள்

B) நிக்கோபர் தீவுகள்

C) மாலத்தீவுகள்

D) லட்சத்தீவுகள்

  1. பேரிடரை எதிர்கொள்ளல் என்பது கீழ்க்கண்ட எவற்றை உள்ளடக்கியது?

1. இயற்கை கட்டமைப்பை நிலைநிறுத்துதல்

2. பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புனர்வாழ்வளித்தல்

3. இழந்த வாழ்வாதாரத்தைப் புனரமைப்பது

4. பாதிப்படைந்த அடிப்படைக் கட்டமைப்பை நிலைநிறுத்த மறுசீரமைப்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளுதல்

A) அனைத்தும் B) 2, 3, 4 C) 1, 3, 4 D) 2, 3

(குறிப்பு: பேரிடர் என்பது உயிருக்கும் உடைமைகளுக்கும் அழிவையும் சேதத்தையும் ஏற்படுத்தும் பேராபத்து ஆகும்.)

  1. மக்களின் முதன்மை பேரிடர் மீட்பு குழுக்கள் எவை?

1. காவலர்கள் 2. மாநில அமைச்சர்கள்

3. தீயணைப்புத் துறையினர் 4. அவசர மருத்துவ குழுக்கள்

A) அனைத்தும் B) 1, 2, 3 C) 1, 2, 4 D) 1, 3, 4

(குறிப்பு: தீ, வெள்ளம் அல்லது தீவிரவாதச் செயல் எதுவாக இருந்தாலும் இவர்கள் தான் முதலில் களத்தில் இருப்பவர்கள். பேரிடரின்போதும் அதற்கு பின்பும் மனநல மருத்துவர்கள் மற்றும் சமூக மருத்துவமனைகள் போன்றவையும் இவ்வகை சேவை வழங்குவதில் பங்கேற்கின்றன.)

  1. பேரிடர் மேலாண்மை என்பது கீழ்க்கண்ட எவற்றை உள்ளடக்கியது?

1. தடுத்தல் 2. தணித்தல் 3. தயார் நிலை

4. எதிர்கொள்ளல் 5. மீட்டல்

A) 1, 3, 4, 5 B) 2, 3, 4, 5 C) 1, 3, 4, 5 D) அனைத்தும்

(குறிப்பு: பேரிடர் மேலாண்மையில் அரசு, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் குழு சார் நிறுவனங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.)

  1. நவீன பேரிடர் மேலாண்மை என்பது கீழ்க்கண்ட எவற்றை உள்ளடக்கியது?

1. பேரிடருக்கு முந்தைய திட்டமிடல்

2. தயார்நிலை செயல்பாடுகள்

3. நிறுவன திட்டமிடல்

4. தகவல் மேலாண்மை

5. பொது தொடர்புகள்

A) அனைத்தும் B) 1, 2, 4 C) 1, 2, 4, 5 D) 1, 2, 3, 5

(குறிப்பு: நவீனப் பேரிடர் மேலாண்மை என்பது பேரிடருக்குப் பிந்தைய உதவிகளையும் தாண்டிச் செல்லும் ஒன்றாகும்.)

  1. கூற்று 1: நெருக்கடி நிலை மேலாண்மை என்பது பேரிடர் மேலாளரின் கடமையின் ஒரு பகுதியாகும்.

கூற்று 2: பேரிடர் மேலாண்மையின் மரபு சார்ந்த அணுகுமுறை என்பது செயல்பாடுகளின் வரிசைகளின் பல படிநிலைகளைக் கொண்டுள்ளது. இது பேரிடர் மேலாண்மை சுழற்சி எனப்படும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

  1. கூற்று 1: புவித்தட்டுகளின் நகர்வால் புவியின் ஒரு பகுதியில் திடீரென ஏற்படும் நில அதிர்வை நிலநடுக்கம் என்கிறோம்.

கூற்று 2: நிலநடுக்கம் புவித்தட்டுகளின் மையத்தில் ஏற்படுகிறது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: நிலநடுக்கம் புவித்தட்டுகளின் எல்லைகளில் ஏற்படுகிறது.)

  1. புவியின் உட்பகுதியில் நிலநடுக்கம் தோன்றுமிடத்தை __________ என்கிறோம்.

A) மையப்புள்ளி

B) நிலநடுக்கமையம்

C) ஆதாரப் புள்ளி

D) அதிர்வுப் புள்ளி

(குறிப்பு: நிலநடுக்க மையத்திற்குச் செங்குத்தாக புவியின் மேற்பரப்பில் காணப்படும் இடத்திற்கு மையப்புள்ளி என பெயராகும்.)

  1. நிலநடுக்கத்தால் ஏற்படும் பாதிப்பானது எந்த பகுதியில் மிகவும் அதிகமாக இருக்கும்?

A) நிலநடுக்க மையத்திற்கு அருகில்

B) மையப்புள்ளிக்கு அருகில்

C) நிலநடுக்க மையத்திற்கும் மையப்புள்ளிக்கும் இடையில்

D) நிலநடுக்க மையத்தில்

  1. நிலநடுக்கம் __________ என்ற கருவியால் பதிவு செய்யப்படுகிறது.

A) பாரோமீட்டர்

B) அனிமோமீட்டர்

C) சீஸ்மோகிராப்

D) ஓடோமீட்டர்

(குறிப்பு: நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் அளக்கப்படுகிறது.)

  1. உலகிலேயே மிக அதிக அடர்த்தியான நில நடுக்க பகுதிகளை கொண்டுள்ள நாடு

A) இந்தோனேசியா

B) ஜப்பான்

C) டோங்கா

D) பிஜி

(குறிப்பு: ஜப்பான் முழுவதும் நிலநடுக்கப்பகுதியில் அமைந்துள்ளது.)

  1. கூற்று: இந்தோனேசியா அதிக நிலநடுக்கப் பகுதிகளைக் கொண்டுள்ளது.

காரணம்: ஜப்பானை விட அதிக பரப்பளவைக் கொண்டுள்ளதால் இந்தோனேசியாவில் தான் உலகிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

D) கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல

  1. ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் அதிக நிலநடுக்கங்களைக் கொண்டுள்ள நாடுகள் எவை?

1. டோங்கா 2. பிஜி

3. சிங்கப்பூர் 4. இந்தோனேசியா

A) அனைத்தும் B) 1, 2, 3 C) 1, 2, 4 D) 2, 3, 4

(குறிப்பு: மேற்கண்ட நாடுகள் உலகின் மிக தீவிர நில அதிர்வுப் பகுதிகளில் அமைந்துள்ளன.)

  1. ஆழிப்பேரலையானது 10 – 30 மீட்டர் உயரத்தில் மணிக்கு _________ கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.

A) 200 – 300 B) 300 – 400 C) 500 – 700 D) 700 – 800

(குறிப்பு: ஆழிப்பேரலை வெள்ளப் பெருக்கை உண்டாக்கும். இது மின்சாரம், தகவல் தொடர்பு, நீர் அளிப்பு போன்றவற்றைப் பாதிக்கின்றது.)

  1. கீழ்க்கண்ட எவற்றால் ஆழிப்பேரலை ஏற்படுகிறது?

1. நிலநடுக்கம்

2. எரிமலை வெடிப்பு

3. கடலுக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவு

4. குறுங்கோள்கள்

A) அனைத்தும் B) 1, 2, 4 C) 1, 2, 3 D) 2, 3, 4

(குறிப்பு: ஆழிப்பேரலை உயிர்ச் சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது.)

  1. __________ ஆண்டு பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் சகிப்புத் தன்மையில்லா நாடுகளில் சிரியா, நைஜீரியா மற்றும் ஈராக்கிற்கு அடுத்ததாக இந்தியா உள்ளது என முடிவு வெளியிடப்பட்டது.

A) ஏப்ரல் 11, 2013

B) ஏப்ரல் 11, 2014

C) ஏப்ரல் 11, 2015

D) ஏப்ரல் 11, 2016

(குறிப்பு: மேற்கண்ட ஆய்வில் 198 நாடுகள் இடம்பெற்றன.)

  1. கூற்று 1: வெப்பமான மற்றும் வறண்ட காலத்தில் அடர்ந்த மரங்கள் காணப்படும் பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுகிறது.

கூற்று 2: காட்டுத்தீயினால் மக்கள் வசிக்கக் கூடிய இடங்கள் புகைமூட்டத்தால் பாதிக்கப்படுகின்றன. தீப்புகை காற்றில் பரவும்போது சுவாசம் தொடர்பான இடர்ப்பாடுகளை ஏற்படுத்துகிறது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: காட்டுத்தீ புல்வெளிகள் புதர்கள், காடுகள், பாலைவனங்கள் போன்ற பகுதிகளில் ஏற்படுகிறது.)

  1. இந்தியாவில் தீ மற்றும் தீ சார்ந்த விபத்துகளால் சுமார் _________ பேர் இறக்கின்றனர்.

A) 10,000 B) 15,000 C) 20,000 D) 25,000

(குறிப்பு: தீ விபத்தில் இறக்கும் 25000 பேரில் 66% பேர் பெண்களாகும்.)

  1. ‘விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்!’ என்பது எதற்கான ஒத்திகை?

A) தீ

B) நிலநடுக்கம்

C) சுனாமி

D) கலவரம்

(குறிப்பு: சில நிலநடுக்கங்கள் பெரிய நிலநடுக்கங்களுக்கு முன்பு ஏற்படும் அதிர்வுகளாகும். நாம் இடம்பெயர்வதைக் குறைத்து அருகில் உள்ள பாதுகாப்பான இடத்திற்குச் சென்று நில அதிர்வு முடியும் வரை காத்திருந்து உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.)

  1. தீவிபத்து ஏற்படும் போது அழைக்க வேண்டிய எண்

A) 114 B) 112 C) 115 D) 118

  1. ‘நில்! விழு! உருள்!’ என்பது எதற்கான ஒத்திகை

A) தீ

B) நிலநடுக்கம்

C) சுனாமி

D) கலவரம்

(குறிப்பு: தீவிபத்தின் போது ஆடையில் தீப்பிடித்தால் ஓடாமல் தரையில் படுத்து உருண்டு தீ பரவுவதைத் தடுக்கலாம்.)

  1. கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது தவறு?

A) தீ விபத்திலிருந்து தப்பிக்க “நில்! விழு! உருள்!”.

B) விழு! மூடிக்கொள்! பிடித்துக்கொள்! என்பது நிலநடுக்க தயார்நிலை

C) “கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்” என்பது வெள்ளப்பெருக்குக்கான தயார்நிலை.

D) துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டால் தரையில் கிடைமட்டமாகப் படுத்துக்கொண்டு தலையையும் கழுத்தையும் மூடிக்கொள்ளவும்.

(குறிப்பு: “கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்” என்பது ஆழிப்பேரலைக்கான தயார் நிலை.)

Exit mobile version