பேரிடரை புரிந்து கொள்ளுதல் 6th Social Science Lesson 21 Questions in Tamil

6th Social Science Lesson 21 Questions in Tamil

21. பேரிடரை புரிந்து கொள்ளுதல்

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. சிறிய கால அளவில் திடீரென்று பூமியில் ஏற்படக்கூடிய அதிர்வு நிலநடுக்கம் ஆகும்.

2. எந்த புள்ளியில் நிலநடுக்கம் தோன்றுகிறதோ இப்புள்ளி மையப்புள்ளி எனப்படுகிறது.

3. மையப்புள்ளியிலிருந்து செங்குத்தாகப் புவிப்பரப்பில் காணப்படும் பகுதி நிலநடுக்க மையம் எனப்படும்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 1 மட்டும் சரி

D) 1, 3 சரி

விடை மற்றும் விளக்கம்

C) 1 மட்டும் சரி

(குறிப்பு: எந்த புள்ளியில் நிலநடுக்கம் தோன்றுகிறதோ இப்புள்ளி நிலநடுக்கம் மையம் எனப்படுகிறது. நிலநடுக்க மையத்திலிருந்து செங்குத்தாகப் புவிப்பரப்பில் காணப்படும் பகுதி மையப்புள்ளி எனப்படும்.)

2. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

1. புவியின் உட்பகுதியிலிருந்து சிறிய திறப்பு வழியாக, லாவா சிறிய பாறைகள் மற்றும் நீராவி போன்றவை புவியின் மேற்பரப்பிற்கு உமிழப்படுவதே எரிமலை எனப்படும்.

2. அதிக அழுத்தம் உள்ள காற்றால் சூழப்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த பகுதியில் இருந்து சூறாவளி உருவாகும்.

3. வளிமண்டல காலநிலையினால் திடீரென்று தொடர்ச்சியாக மின்சாரம் வெளிப்படும் நிகழ்வு இடி ஆகும்.

A) அனைத்தும்

B) 1, 2

C) 1, 3

D) எதுவுமில்லை

விடை மற்றும் விளக்கம்

D) எதுவுமில்லை

(குறிப்பு: பாறைகள், பாறைச் சிதைவுகள் மண் போன்ற பொருள்கள் சரிவை நோக்கி மொத்தமாகக் கீழே நகர்வது நிலச்சரிவு எனப்படும்.)

3. கூற்று 1: ஒரு சமுதாயத்தின் செயல்பாட்டில் மனித உயிர் மற்றும் உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும்படியான தொடர்ச்சியான இடையூறுகளே பேரிடர் எனப்படுகிறது.

கூற்று 2: இயற்கை பேரிடர் மற்றும் மனிதனால் உண்டாகும் பேரிடர்கள் என இருபெரும் பிரிவுகளாகப் பேரிடரைப் பிரிக்கலாம்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

விடை மற்றும் விளக்கம்

விடை: D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

4. கீழ்க்கண்ட எந்தக் காரணங்களால் பேரலை எனப்படும் சுனாமி தோற்றுவிக்கப்படுகிறது?

1. நிலநடுக்கம் 2. எரிமலை வெடிப்புகள்

3. கடலடி நிலச்சரிவுகள் 4. சூறாவளி

A) 1, 2, 3

B) 1, 3, 4

C) 1, 2, 4

D) 1, 3

விடை மற்றும் விளக்கம்

விடை: A) 1, 2, 3

5. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

A) தென்கிழக்கு ஆசியாவில் கி.பி 2004 டிசம்பர் 26ம் நாள் ஆழிப் பேரலை எனப்படும் சுனாமி தாக்கியது.

B) இந்தோனேசிய தீவான சுமித்தாரா தீவுக்கருகில் புவி அதிர்வு மையம் கொண்ட நிலநடுக்கம் 8.1 முதல் 8.3 ரிக்டராக பதிவானது.

C) இதனால் ஏற்பட்ட அலைகள் 30 மீட்டர் உயரம் வரை எழும்பியது.

D) கடற்கரையிலிருந்து 500 மீட்டர் வரையுள்ள சொத்துக்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

விடை மற்றும் விளக்கம்

B) இந்தோனேசிய தீவான சுமித்தாரா தீவுக்கருகில் புவி அதிர்வு மையம் கொண்ட நிலநடுக்கம் 8.1 முதல் 8.3 ரிக்டராக பதிவானது.

(குறிப்பு: இந்தோனேசிய தீவான சுமித்தாரா தீவுக்கருகில் புவி அதிர்வு மையம் கொண்ட நிலநடுக்கம் 9.1 முதல் 9.3 ரிக்டராக பதிவானது. உலகம் இதுவரை கண்டறியாத சுனாமியாக இது அமைந்தது.)

6. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி,

1. 2,00,000க்கும் மேற்பட்ட ஆசிய மக்களைக் கொன்றது.

2. இந்தியாவில் 10,000 மக்கள் கொல்லப்பட்டார்கள்.

3. தமிழ்நாட்டில் 1705 பேர் இறந்தனர்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 1, 2 தவறு

D) 1, 3 சரி

விடை மற்றும் விளக்கம்

A) அனைத்தும் சரி

(குறிப்பு: இந்த சுனாமியில் நாகப்பட்டினம் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.)

7. எந்த ஆண்டு இந்திய அரசு, ஐதராபாத்தில் INCOIS என்ற அமைப்பை சுனாமி முன்னறிவிப்பு செய்வதற்காக ஏற்படுத்தியது?

A) 2004

B) 2005

C) 2006

D) 2007

விடை மற்றும் விளக்கம்

D) 2007

(குறிப்பு: INCOIS-Indian National Centre for Ocean Information Services)

8. அதிக மழைப்பொழிவின் போது __________ மணி நேரத்திற்குள் ஏற்படும் வெள்ளப்பெருக்கு திடீர் வெள்ளப்பெருக்காகும்.

A) 10

B) 8

C) 7

D) 6

விடை மற்றும் விளக்கம்

D) 6

(குறிப்பு: அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் நீரையே வெள்ளப்பெருக்கு என்கிறோம்.)

9. கூற்று 1: ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஏற்படும் அதிகமான மழைப்பொழிவு அல்லது பனிக்கட்டி உருகுதல் அல்லது இரண்டும் சேர்ந்த சூழல் ஆற்று வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது.

கூற்று 2: கடற்கரை வெள்ளப்பெருக்கு என்பது சூறாவளி, உயர் ஓதம் மற்றும் சுனாமி ஆகியவற்றோடு தொடர்புபடுத்தப்பட்டு கடற்கரை சமவெளிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

விடை மற்றும் விளக்கம்

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

(குறிப்பு: வெள்ளப்பெருக்கிற்கான காரணங்கள்

அடைமழை

ஆற்றின் கரைகளை மீறி ஆறு பாய்ந்து செல்லுதல்

ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் அதிகமான மழைப்பொழிவு.

போதுமான பொறியியல் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்படாத கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் தடுப்பணைகள்.)

10. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

A) சென்னை இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது.

B) சென்னை ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவக்காற்றாலும், வெப்ப மண்டல புயலாலும் பெரும் தாக்கத்திற்கு உள்ளாகின்றது.

C) 2014ஆம் ஆண்டு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பெய்த பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகள் பேரழிவைச் சந்தித்தன.

D) இப்பெருவெள்ளத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

விடை மற்றும் விளக்கம்

C) 2014ஆம் ஆண்டு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பெய்த பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகள் பேரழிவைச் சந்தித்தன.

(குறிப்பு: 2015ஆம் ஆண்டு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பெய்த பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகள் பேரழிவைச் சந்தித்தன.)

11. பேரிடர் வாய்ப்பு குறைப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படும் முக்கிய காரணிகளில் தவறானது எது?

A) பரப்புரை செய்தல்

B) பங்கேற்பு கற்றல்

C) பள்ளியில் முறைசார்ந்த தலையீடு

D) கால்வாய்கள் வெட்டுதல்

விடை மற்றும் விளக்கம்

D) கால்வாய்கள் வெட்டுதல்

(குறிப்பு: பேரிடர் வாய்ப்பு குறைப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படும் நான்கு முக்கிய காரணிகளாவன: பரப்புரை செய்தல், பங்கேற்பு கற்றல், முறைசாராக் கல்வி மற்றும் பள்ளியில் முறைசார்ந்த தலையீடு ஆகியவையாகும்.)

12. கூற்று 1: பள்ளி பேரிடர் மேலாண்மை குழு, கிராம பேரிடர் மேலாண்மை குழு, மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகங்கள் ஒன்றிணைந்து பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

கூற்று 2: வானிலை முன்னறிவிப்பு, முறையான சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு, புயல் முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை ஆகியவை பேரிடரின் போது இடர் வாய்ப்பு குறைப்பிற்கு மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருகின்றன.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

விடை மற்றும் விளக்கம்

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

(குறிப்பு: செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் மேம்படுத்தப்பட்ட தகவல்களைத் தருகின்றன.)

13. உறுதிப்படுத்தப்பட்ட விவரங்கள் அல்லது புள்ளியியல் மதிப்பீடுகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட எதிர்காலத்தில் நடக்கப்போகும் பேரிடர்களை பற்றி கூறுவது ____________ எனப்படும்.

A) தணித்தல்

B) முன்னறிவிப்பு

C) புவி அதிர்வு அளவு

D) பேரிடர் மேலாண்மை

விடை மற்றும் விளக்கம்

B) முன்னறிவிப்பு

(குறிப்பு: புவி அதிர்வின்போது அளக்கப்படும் அளவு புவி அதிர்வு அளவு எனப்படும்.)

Exit mobile version