புவி மாதிரி 6th Social Science Lesson 20 Questions in Tamil

6th Social Science Lesson 20 Questions in Tamil

20. புவி மாதிரி

  1. புவி ________ மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டதாகும்.

A) 490.8

B) 510.1

C) 590.1

D) 498.1

விடை மற்றும் விளக்கம்

B) 510.1

(குறிப்பு: புவியானது துருவப் பகுதிகளில் தட்டையாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் சற்றுப் பருத்தும், கோளவடிவமாக காணப்படுகிறது. புவியின் வடிவம் புவிவடிவம் (Goid) என்று அழைக்கப்படுகிறது.)

2. கூற்று 1: உலகில் முதன்முதலாக புவி மாதிரியை கி.பி 150ஆம் ஆண்டில் கிரேக்கர்கள் உருவாக்கியுள்ளனர்.

கூற்று 2: இந்திய வானியல் அறிஞர் முதலாம் ஆரியபட்டர் அவர்கள் எழுதிய “ஆர்யபட்ட சித்தாந்தம்” என்ற நூலில் “விண்மீன்கள் வானில் மேற்குப்புறமாக நகர்வது போன்ற தோற்றம், புவி தன்னுடைய அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் விளைகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

விடை: D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

3. நில வரைபடத்தில் முதன்முதலில் அட்ச தீர்க்கக் கோடுகளை வரைந்தவர் யார்?

A) ஆரியபட்டர்

B) தாலமி

C) கோபர்நிகஸ்

D) வாஸ்கோடாகாமா

விடை மற்றும் விளக்கம்

B) தாலமி

(குறிப்பு: தாலமியின் ‘Geographia’ என்ற நூலில் புவியின் அளவும், அதன் மேற்பரப்பைக் குறித்த விவரங்களும், அட்சக்கோடுகள் மற்றும் தீர்க்கக் கோடுகளின் அடிப்படையில் அமைந்த பல்வேறு இடங்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளது.)

4. கூற்று 1: புவி பால்வெளி விண்மீன்திரள் மண்டலத்தில் உள்ளது.

கூற்று 2: புவியில் திசைகளைச் சுட்டிக் காண்பிக்கும்பொழுது வடக்கு திசையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

விடை: C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

5. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

A) புவியின்மீது கிழக்கிலிருந்து மேற்காக கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கற்பனைக்கோடுகள், அட்சக்கோடுகள் எனப்படும்.

B) புவியின் மையத்தில் காணப்படும் 0° அட்சக்கோடு நில நடுக்கோடு எனப்படும்.

C) ஒவ்வொரு அட்சக்கோட்டிற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு தூரம் 111கி.மீ ஆகும்.

D) நிலநடுக்கோட்டிலிருந்து வடக்கிலிலும் தெற்கிலும் 180° வரை இணையான கோடுகளாக சமதூர இடைவெளியில் அட்சக்கோடுகள் வரையப்பட்டுள்ளன.

விடை மற்றும் விளக்கம்

D) நிலநடுக்கோட்டிலிருந்து வடக்கிலிலும் தெற்கிலும் 180° வரை இணையான கோடுகளாக சமதூர இடைவெளியில் அட்சக்கோடுகள் வரையப்பட்டுள்ளன.

(குறிப்பு: நிலநடுக்கோட்டிலிருந்து வடக்கிலிலும் தெற்கிலும் 90° வரை இணையான கோடுகளாக சமதூர இடைவெளியில் அட்சக்கோடுகள் வரையப்பட்டுள்ளன.)

6. கூற்று: அட்சக்கோடுகள் 90° வடக்கு, 90° தெற்குப் பகுதியில் கோடாக இல்லாமல், புள்ளியாகக் காணப்படுகின்றன.

காரணம்: புவி கோள வடிவத்துடன் காணப்படுவதால், 90° வடக்கு மற்றும் தெற்கு நோக்கி செல்லச் செல்ல அட்சக்கோடுகளின் நீளம் குறைந்து கொண்டே செல்கிறது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

D) கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல

விடை மற்றும் விளக்கம்

C) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

(குறிப்பு நில நடுக்கோட்டிலிருந்து வடதுருவம் வரை வட அரைக்கோளத்தில் கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் ‘வட அட்சக்கோடுகள்’ எனவும், தென் அரைக்கோளத்தில் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் ‘தென் அட்சக்கோடுகள்’ எனவும் அழைக்கப்படுகின்றன.)

7. வட மற்றும் தென் அரைக்கோளத்தில் முறையே எத்தனை அட்சக்கோடுகள் அமைந்துள்ளன?

A) 90, 90

B) 91, 91

C) 89, 90

D) 89, 89

விடை மற்றும் விளக்கம்

D) 89, 89

(குறிப்பு: இடையில் ஒரு நிலநடுக்கோடும், இருதுருவங்களிலும், கோடுகள் புள்ளியாகவும் என மொத்தம் 181 அட்சக்கோடுகள் புவியில் வரையப்பட்டுள்ளன.)

8. புவியின் நடுவில் வரையப்பட்டுள்ள நிலநடுக்கோடு மற்ற அட்சக்கோடுகளை விட நீளமாகக் காணப்படுவதால் ____________ என்று அழைக்கப்படுகிறது.

A) நிலநடுக்கோட்டு வட்டம்

B) சிறு வட்டம்

C) பெருவட்டம்

D) அட்சக்கோட்டு வட்டம்

விடை மற்றும் விளக்கம்

C) பெருவட்டம்

9. புவி தனது அச்சில் __________ சாய்ந்த நிலையில், மேற்கிலிருந்து கிழக்காகத் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றது.

A) 12 ½

B) 13 ½

C) 23 ½

D) 24 ½

விடை மற்றும் விளக்கம்

C) 23 ½

(குறிப்பு: இந்த சாய்ந்த நிலையை அச்சாகக் கொண்டு புவி மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அச்சு ஒரு கற்பனையே, இதுபோல் உண்மையான அச்சு நமது புவியில் இல்லை.)

10. கூற்று 1: 0° நிலநடுக்கோட்டிலிருந்து 90° வடதுருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி வட அரைக்கோளம் எனப்படும்.

கூற்று 2: 0° நிலநடுக்கோட்டிலிருந்து 90° தென்துருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி தென் அரைக்கோளம் எனப்படும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

(குறிப்பு: மேற்கண்ட அரைக்கோள முறை அடிப்படையிலேயே ஒரு நாடு அல்லது ஒரு இடம் எந்த அரைக்கோளத்தில் அமைந்துள்ளது என்பதை அறிகிறோம்.)

11. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

1. 0° அட்சக்கோட்டிலிருந்து 23 ½° வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் ‘தாழ் அட்சக்கோடுகள்’ எனப்படும்.

2. 23 ½° வடக்கு முதல் 66 ½ ° வடக்கு வரையிலும், 23 ½ ° தெற்கு முதல் 66 ½° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் ‘மத்திய அட்சக்கோடுகள்’ எனப்படும்.

3. 66 ½ ° வடக்கு முதல் 90° வடக்கு வரையிலும், 66 ½° தெற்கு முதல் 90° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் ‘உயர் அட்சக்கோடுகள்’ எனப்படும்.

A) 2 மட்டும் தவறு

B) 1, 2 இரண்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) எதுவுமில்லை

விடை மற்றும் விளக்கம்

D) எதுவுமில்லை

12. நிலநடுக்கோட்டிலிருந்து வடக்கில் கடகரேகை வரை மற்றும் தெற்கில் மகரரேகை வரை உள்ள பகுதி ___________ எனப்படும்.

A) வெப்பமண்டலம்

B) மித வெப்ப மண்டலம்

C) குளிர்மண்டலம்

D) துருவ மண்டலம்

விடை மற்றும் விளக்கம்

A) வெப்பமண்டலம்

(குறிப்பு: வெப்பமண்டல பகுதிகளில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழுவதால் இப்பகுதி அதிக வெப்பமடைகிறது. இதனால் புவியின் மற்ற பகுதிகளை விட இங்கு அதிக வெப்பநிலை நிலவுகிறது.)

13. கூற்று 1: வட அரைக்கோளம் கடக ரேகை முதல் ஆர்க்டிக் வட்டம் வரையிலும், தென் அரைக்கோளம் மகர ரேகை முதல் அண்டார்டிக் வட்டம் வரையுள்ள பகுதி ‘மித வெப்பமண்டலம்’ எனப்படும்.

கூற்று 2: வட அரைக்கோளம் ஆர்க்டிக் வட்டம் முதல் வடதுருவம் வரையிலும், தென் அரைக்கோளம் அண்டார்ட்டிக் வட்டம் முதல் தென்துருவம் வரையுள்ள பகுதி ‘குளிர்மண்டலம்’ எனப்படும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

(குறிப்பு: மிதவெப்பமண்டலப் பகுதிகளில் சூரியக்கதிர்கள் சாய்வாக விழுவதால் இங்கு மிதமான வெப்பநிலை நிலவுகிறது. குளிர்மண்டலப் பகுதிகளில் சூரியக்கதிர்கள் மிகவும் சாய்ந்த நிலையில் விழுவதால். இங்கு மிக மிக குறைவான வெப்பநிலை நிலவுகிறது.)

14. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

A) புவியின் மீது வடக்கு தெற்காக, செங்குத்தாக வரையப்பட்டுள்ள கற்பனைக்கோடுகள் தீர்க்கக் கோடுகள் அல்லது மெரிடியன்கள் எனப்படும்.

B) தீர்க்கக் கோடுகள் வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை அரைவட்டக் கோடுகளாக உள்ளன.

C) தீர்க்கக்கோடுகளில் 0 ° தீர்க்கக் கோடு முதன்மை தீர்க்கக் கோடு என்று அழைக்கப்படுகிறது.

D) 0° யிலிருந்து கிழக்காக உள்ள 180° தீர்க்கக் கோடும், மேற்காக உள்ள 180° தீர்க்கக் கோடும் வெவ்வேறான கோடுகள் ஆகும்.

விடை மற்றும் விளக்கம்

D) 0° யிலிருந்து கிழக்காக உள்ள 180° தீர்க்கக் கோடும், மேற்காக உள்ள 180° தீர்க்கக் கோடும் வெவ்வேறான கோடுகள் ஆகும்.

(குறிப்பு: 0° யிலிருந்து கிழக்காக உள்ள 180° தீர்க்கக் கோடும், மேற்காக உள்ள 180° தீர்க்கக் கோடும் வெவ்வேறான கோடுகள் அல்ல இரு கோடுகளும் ஒன்றே. 0 ° யிலிருந்து 180 ° கிழக்கு வரை வரையப்பட்டுள்ள தீர்க்கக் கோடுகள் ‘கிழக்கு தீர்க்கக்கோடுகள்’ எனவும் 180° மேற்கு வரை காணப்படும் தீர்க்கக் கோடுகள் ‘மேற்கு தீர்க்கக்கோடுகள்’ எனவும் அழைக்கப்படுகின்றன.)

15. புவியின் 45° அட்சப் பகுதியில் தீர்க்கக் கோடுகள் __________ இடைவெளியில் காணப்படுகின்றன.

A) 111 கி.மீ

B) 69 கி.மீ

C) 79 கி.மீ

D) 89 கி.மீ

விடை மற்றும் விளக்கம்

C) 79 கி.மீ

(குறிப்பு: தீர்க்கக்கோடுகள் புவியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் 111 கி.மீ இடைவெளியிலும், துருவப்பகுதிகளில் இடைவெளியின்றியும் காணப்படுகின்றன.)

16. கூற்று 1: 0° தீர்க்கக் கோட்டிலிருந்து 90° கிழக்கு தீர்க்கக் கோடு வரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி ‘கிழக்கு அரைக்கோளம்’ என அழைக்கப்படுகிறது.

கூற்று 2: 0° தீர்க்கக் கோட்டிலிருந்து 90° மேற்கு தீர்க்கக் கோடு வரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி ‘மேற்கு அரைக்கோளம்’ என அழைக்கப்படுகிறது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: 0° தீர்க்கக் கோட்டிலிருந்து 180° கிழக்கு தீர்க்கக் கோடு வரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி ‘கிழக்கு அரைக்கோளம்’ என அழைக்கப்படுகிறது. 0° தீர்க்கக் கோட்டிலிருந்து 180° மேற்கு தீர்க்கக் கோடு வரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி ‘மேற்கு அரைக்கோளம்’ என அழைக்கப்படுகிறது.)

17. கிரீன்விச் தீர்க்கக் கோட்டினை தீர்க்கக் கோடுகளின் தொடக்கக் கோடாக வைத்துக் கொள்வதென ___________ ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டன.

A) 1882

B) 1883

C) 1884

D) 1885

விடை மற்றும் விளக்கம்

C) 1884

(குறிப்பு: கிரீன்விச் தீர்க்கக் கோடு 0° என வரையறுக்கப்பட்டு முதன்மை தீர்க்கக்கோடு எனவும் அழைக்கப்படுகிறது.)

18. இராயல் வானியல் ஆய்வு மையம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?

A) ஜெர்மனி

B) எகிப்து

C) யுகோஸ்லோவியா

D) இங்கிலாந்து

விடை மற்றும் விளக்கம்

D) இங்கிலாந்து

(குறிப்பு: இங்கிலாந்து நாட்டின் இலண்டனுக்கு அருகிலுள்ள கிரீன்விச் என்னுமிடத்தில் இராயல் வானியல் ஆய்வு மையம் ஆய்வு மையம் அமைந்துள்ளது.)

19. கூற்று 1: தீர்க்கக் கோடுகளில் 90° தீர்க்கக் கோடானது பன்னாட்டு தேதிக் கோடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூற்று 2: பன்னாட்டு தேதிக்கோடு பசிபிக் பெருங்கடலில் அலாஸ்காவிற்கும், இரஷ்யாவிற்கும் இடையில் பேரிங் நீர்ச்சந்தி வழியாக செல்கின்றது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

(குறிப்பு: தீர்க்கக் கோடுகளில் 180° தீர்க்கக் கோடானது பன்னாட்டு தேதிக் கோடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.)

20. கூற்று 1: ஒருவர் மேற்கிலிருந்து கிழக்காக பன்னாட்டு தேதிக் கோட்டினைக் கடந்தால் ஒருநாள் குறையும்.

கூற்று 2: பன்னாட்டு தேதிக் கோட்டினை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி கடந்தால் ஒரு நாள் கூடும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

(குறிப்பு: பன்னாட்டு தேதிக் கோட்டினை அடிப்படையாகக் கொண்டு உலகில் அனைத்துப் பகுதிகளிலும் தேதி நிர்ணயிக்கப்படுகிறது.)

21. கூற்று: பன்னாட்டு தேதிக்கோடு வளைத்து வரையப்பட்டுள்ளது.

காரணம்: இது நேராக சென்றால் ஒரே நாட்டிற்குள் இரண்டு தேதிகள் அமையும்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

D) கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல

விடை மற்றும் விளக்கம்

C) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

22. புவியின் மீது கற்பனையாக வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் மற்றும் தீர்க்கக் கோடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பு _________ என அழைக்கப்படுகிறது.

A) அட்ச தீர்க்கப் பரவல்

B) தேதிக்கோட்டு வலைப்பின்னல்

C) கற்பனைக்கோட்டு வலைப்பின்னல்

D) புவி வலைப்பின்னல்

விடை மற்றும் விளக்கம்

D) புவி வலைப்பின்னல்

(குறிப்பு: புவியில் ஓர் இடத்தின் அமைவை மிகத் துல்லியமாகத் தெரிந்து கொள்ள அட்சக்கோட்டுப் பரவலும், தீர்க்கக் கோட்டுப் பரவலும் தேவைப்படுகின்றன.)

23. கூற்று 1: வடதுருவத்தையும், தென்துருவத்தையும் இணைத்து 360 தீர்க்கக் கோடுகள் புவியின் மீது வரையப்பட்டுள்ளன.

கூற்று 2: புவியின் மீது வரையப்பட்டுள்ள தீர்க்கக் கோடுகளை அடிப்படையாகக் கொண்டு நேரம் கணக்கிடப்படுகிறது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

(குறிப்பு: புவி தன் அச்சில் ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் கால அளவு ஒருநாள் ஆகும். 1 நாள் = 24 மணிநேரம், 1 மணிநேரம் = 60 நிமிடங்கள்.)

24. 1° யை கடக்க புவி எடுத்துக்கொள்ளும் கால அளவு ___________.

A) 3 வினாடிகள்

B) 3 நிமிடங்கள்

C) 4 வினாடிகள்

D) 4 நிமிடங்கள்

விடை மற்றும் விளக்கம்

D) 4 நிமிடங்கள்

(குறிப்பு: 360° = 360 தீர்க்கக் கோடுகள்,

360° = 1440 நிமிடங்கள்

1° யின் நேரம் = 1440/360 = 4 நிமிடங்கள்)

25. ஒரு மணி நேரத்தில் _______ தீர்க்கக் கோடுகளை புவி கடக்கிறது.

A) 8°

B) 12°

C) 15°

D) 18°

விடை மற்றும் விளக்கம்

C) 15°

(குறிப்பு: 1° யை கடக்க புவி எடுத்துக்கொள்ளும் கால அளவு 4 நிமிடங்கள்.

60 நிமிடங்கள்/4 நிமிடங்கள் = 60/4 = 15)

26. ஒவ்வொரு தீர்க்கக் கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும்பொழுது அக்கோட்டிலுள்ள எல்லா இடங்களிலும் நேரம் நண்பகல் 12 மணி, இதுவே _________ எனப்படும்.

A) திட்ட நேரம்

B) தீர்க்க நேரம்

C) தல நேரம்

D) அட்ச நேரம்

விடை மற்றும் விளக்கம்

C) தல நேரம்

(குறிப்பு: ஒவ்வொரு தீர்க்கக் கோட்டிற்கும் நேராக ஒருநாளில் ஒருமுறைதான் சூரியன் நேர் உச்சிக்கு வர முடியும். எனவே தல நேரம் ஒவ்வொரு தீர்க்கக் கோட்டிற்கும் மாறுபடும். பன்னாட்டு திட்ட நேரம் GMT என அழைக்கப்படுகிறது.)

27. கிரீன்விச் தீர்க்கக் கோட்டில் நண்பகல் 12 மணி என்றால் அங்கிருந்து, கிழக்கு தீர்க்கம் 1 பாகையில் ________ மணி எனவும், மேற்கு தீர்க்கம் 1 பாகையில் ________ மணி எனவும் கணக்கிடப்படுகிறது.

A) முற்பகல் 12:04, பிற்பகல் 11:56

B) பிற்பகல் 12:04, முற்பகல் 11:56

C) பிற்பகல் 12:30, முற்பகல் 11:56

D) முற்பகல் 12:30, பிற்பகல் 11:56

விடை மற்றும் விளக்கம்

B) பிற்பகல் 12:04, முற்பகல் 11:56

(குறிப்பு: எந்த ஒரு தீர்க்கக் கோட்டிலிருந்தும் கிழக்கே செல்லச் செல்ல நேரம் கூடும், மேற்கே செல்லச்செல்ல நேரம் குறையும்.)

28. மெரிடியன் என்ற சொல் ‘மெரிடியானஸ்’ என்ற __________மொழிச் சொல்லிலிருந்து வந்ததாகும்.

A) கிரேக்கம்

B) சீன

C) இலத்தீன்

D) போர்ச்சுக்கீசியம்

விடை மற்றும் விளக்கம்

C) இலத்தீன்

(குறிப்பு: மெரிடியானஸ் என்பதற்கு நண்பகல் எனப் பொருள். எனவே மெரிடியன் என்பது சூரியன் ஓர் இடத்தின் நேர் மேலே உச்சியில் உள்ளதைக் குறிக்கிறது. a.m என்பது anti – meridiem நண்பகலுக்கு முன்னதாக எனப் பொருள்படும். p.m என்பது Post – Meridiem நண்பகலுக்குப் பிறகு எனப் பொருள்படும்.)

29. குறிப்பிட்ட ஒரு தீர்க்கக் கோட்டினை ஆதாரமாகக் கொண்டு பொதுவான நேரத்தை அமைத்துக்கொள்வது __________ எனப்படும்.

A) திட்ட நேரம்

B) தீர்க்க நேரம்

C) தல நேரம்

D) அட்ச நேரம்

விடை மற்றும் விளக்கம்

A) திட்ட நேரம்

(குறிப்பு: ஒரு நாட்டின் திட்ட நேரத்தினைக் கணக்கிட அந்நாட்டின் வழியாகச் செல்லும் ஒரு குறிப்பிட்ட தீர்க்கக் கோடு பயன்படுத்தப்படுகிறது. இது திட்ட தீர்க்கக் கோடு எனப்படுகிறது.)

30. கூற்று: ஒரு நாட்டின் திட்ட தீர்க்கக் கோடு 15° அல்லது 7 ½° யின் மடங்குகளாக இருக்கும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

காரணம்: அந்நாட்டின் திட்ட நேரத்திற்கும், கிரீன்விச் திட்ட நேரத்திற்கும் உள்ள வேறுபாட்டினை ஒரு மணிநேரம் அல்லது அரை மணிநேரம் என்ற கணக்கீட்டில் அறியலாம்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

D) கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல

விடை மற்றும் விளக்கம்

விடை: C) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

31. இந்தியாவின் வழியே எத்தனை தீர்க்கக் கோடுகள் செல்கின்றன?

A) 15

B) 18

C) 27

D) 29

விடை மற்றும் விளக்கம்

D) 29

(குறிப்பு: இந்தியாவின் தீர்க்கக் கோடுகளின் பரவல் 68° 7’ கிழக்கு முதல் 97° 25’ கிழக்கு வரை உள்ளது.)

32. இந்தியாவின் மையத்தில் செல்லும் ___________ தீர்க்கக் கோட்டினை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது.

A) 72 ½° கிழக்கு

B) 72 ½° மேற்கு

C) 82 ½° கிழக்கு

D) 82 ½° மேற்கு

விடை மற்றும் விளக்கம்

C) 82 ½° கிழக்கு

(குறிப்பு: இந்தியா கிடைமட்டப் பரவலில் மேற்கில் குஜராத்தில் உள்ள கெளர்மோட்டா என்ற இடத்திற்கும், கிழக்கில் அருணாச்சலபிரதேசத்திலுள்ள கிபித்து என்ற இடத்திற்கும் சமதூர இடைவெளியில், உத்திரப்பிரதேச மாநிலம் அலுகாபாத்தில் உள்ள மிர்சாபூர் என்ற இடத்தின் வழியே 82 ½° கிழக்கு தீர்க்கக் கோடு செல்கிறது.)

33. கூற்று 1: உலகளவில் 12 நேர மண்டலங்கள் உள்ளன.

கூற்று 2: ரஷ்யா நாட்டிற்கு 7 நேர மண்டலங்கள் உள்ளன.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

விடை மற்றும் விளக்கம்

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

(குறிப்பு: உலகளவில் 24 நேர மண்டலங்கள் உள்ளன. சில நாடுகள் நீண்ட பரப்பளவில் காணப்படுவதால் ஒன்றுக்கும் மேற்பட்ட தல நேரங்களை கொண்டுள்ளன.)

34. தவறான இணையைத் தேர்ந்தெடு

1. கடக ரேகை – 23 ½° வட அட்சக்கோடு

2. மகர ரேகை – 23 ½° தென் அட்சக்கோடு

3. ஆர்க்டிக் வட்டம் – 66 ½° தென் அட்சக்கோடு

4. அண்டார்டிக் வட்டம் – 66 ½° வட அட்சக்கோடு

A) 1, 2 தவறு

B) 2, 3 தவறு

C) 1, 4 தவறு

D) 3, 4 தவறு

விடை மற்றும் விளக்கம்

D) 3, 4 தவறு

(குறிப்பு: 1. ஆர்க்டிக் வட்டம் – 66 ½° வட அட்சக்கோடு

2.அண்டார்டிக் வட்டம் – 66 ½° தென் அட்சக்கோடு)

35. ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?

A) 1240 நிமிடங்கள்

B) 1340 நிமிடங்கள்

C) 1440 நிமிடங்கள்

D) 1140 நிமிடங்கள்

விடை மற்றும் விளக்கம்

C) 1440 நிமிடங்கள்

(குறிப்பு: 24 மணி நேரத்திற்கு = 24 x 60 =1440 நிமிடங்கள்.)

36. பொருத்துக.

1. 0° அட்சக்கோடு – i) துருவம்

2. 0° தீர்க்கக்கோடு – ii) பன்னாட்டு தேதிக்கோடு

3. 180° தீர்க்கக்கோடு – iii) கிரீன்விச்

4. 90° அட்சக்கோடு – iv) நிலநடுக்கோடு

A) ii i iv iii

B) iv iii ii i

C) iv ii iii i

D) iii iv ii i

விடை மற்றும் விளக்கம்

விடை: B) iv iii ii i

37. கூற்று 1: புவியில் அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.

கூற்று 2: புவியில் தீர்க்கக் கோடுகள், ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

விடை மற்றும் விளக்கம்

விடை: C) இரண்டு கூற்றுகளும் சரி

Exit mobile version