பண்டைய நாகரிகங்கள் Book Back Questions 9th Social Science Lesson 2

9th Social Science Lesson 2

2] பண்டைய நாகரிகங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

எகிப்திய மம்மிகள்: பதப்படுத்தப்பட்ட இறந்த உடல் மம்மி எனப்படும். இறந்தவர்களின் உடல்களை சோடியம் கார்பனேட், சோடியம் கார்பனேட் ஆகியவற்றின் கலவையான நாட்ரன் உப்பு என்ற ஒரு வகை உப்பை வைத்துப் பாதுகாக்கும் வழக்கம் எகிப்தியரிடையே இருந்தது. நாற்பது நாட்களுக்குப் பிறகு, உப்பு உடலின் ஈரப்பதம் அனைத்தையும் உறிஞ்சிய பிறகு, உடலை மரத்தூளால் நிரப்பி, லினன் துண்டுகளால் சுற்றி, துணியால் மூடி வைத்துவிடுவார்கள். உடலை சார்க்கோபேகஸ் எனப்படும் கல்லாலான சவப்பெட்டியில் பாதுகாப்பார்கள்.

பேப்பர் என்ற சொல் “பாப்பிரஸ்” (Papyrus) என்ற தாவரத்தின் பெயரிலிருந்து வந்தது. எகிப்தியர்கள் காகித நாணல் (பாப்பிரஸ்) என்ற தாவர தண்டிலிருந்து தாள்களைத் தயாரித்தனர். இத்தாவரம் நைல் பள்ளத்தாக்கில் அதிகமாக வளர்ந்தது.

அக்காட் நகரம் தான் பின்னர் பாபிலோன் என்று அழைக்கப்பட்டது. இது மேற்கு ஆசியாவின் வணிக, பண்பாட்டு மையமாக திகழ்ந்தது.

அஸிரியப் பேரரசு உலகின் முதல் இராணுவ அரசு எனக் கருதப்படுகின்றது. அவர்கள் ஒரு வலிமையான இராணுவ சக்தியாக உருவாவதற்கான காரணம், இரும்புத் தொழில் நுட்பத்தை நன்கு பயன்படுத்தியமைதான்.

எழுத்து மற்றும் எழுத்து முறை உருவாக்கம்: எழுத்து உருவாக்கப்பட்டது மனித குல வரலாற்றில் ஒரு முக்கியமான மைல் கல்லாகும். கி. மு. (பொ. ஆ. மு) 4000 ஆண்டின் பிற்பகுதியில். சுமேரியாவில் எழுத்து முறை உருவானது. ஹைரோகிளிபிக் எனப்படும் சித்திர எழுத்து முறை என்ற எகிப்திய எழுத்து முறை கி. பி. (பொ. ஆ. மு) மூன்றாம் ஆயிரமாண்டின் துவக்கதில் உருவானது. இதே காலகட்டத்தில் ஹரப்பா மக்களும் ஒரு வித எழுத்து முறையை பின்பற்றினார்கள். எனினும் சிந்துவெளி எழுத்துகள் இன்னமும் வாசித்துப் புரிந்துகொள்ளப் படவில்லை. சீன நாகரிகமும் ஆரம்ப காலத்திலிருந்தே தனக்கென்று ஒரு எழுத்து முறையை உருவாக்கியது.

ஹரப்பா தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்பதால், சிந்துவெளி நாகரிகம் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாகரிகம் சிந்து நதிக்கு அப்பாலும் பரவியுள்ளதால் சிந்து சமவெளி நாகரிகம் என்று முன்னர் அழைக்கப்பட்டதற்கு மாறாக ஹரப்பா நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது.

சிந்துவெளி எழுத்துகள் – ஆய்வு: ஹரப்பா மக்கள் எழுதும் கலையை அறிந்திருந்தனர். இந்த எழுத்துகள் இலச்சினைகள், சுடுமண் முத்திரைகள், மட்பாண்டங்கள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. பொறிப்புகள் மிகவும் குறுகியவை. தொடர்கள் சராசரியாக ஐந்துக்கும் குறைவான குறியீடுகளையே கொண்டுள்ளன. ரோசட்டா கல்லில் காணப்பட்டது போல மும்மொழிகள் பயன்படுத்தப்படவில்லை. எழுத்துகள் வலப்பக்கதிலிருந்து இடப்பக்கமாக எழுதப்பட்டுள்ளன. கணினி மூலம் பகுப்பாய்வு செய்த இஷ்ய அறிஞர் யூரி நோரோசோவ் சிந்துவெளி எழுத்துகள் திராவிட மொழிக் குடும்பம் போன்ற வார்த்தை வரிசையைப் பெற்றுள்ளன என்கிறார். சிந்துவெளி நாகரிகம் குறித்து விரிவான ஆய்வு செய்துள்ள அறிஞரான ஐராவதம் மகாதேவன் “ஹரப்பா மொழியின் மூல வேர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளை ஒத்திருப்பதை நாம் காணலாம்” என்கிறார். மயிலாடுதுறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கோடரியில் உள்ள குறியீடுகள் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்டவையில் உள்ள குறியீடுகளை ஒத்திருக்கின்றன என்று கூறுகிறார் ஐராவதம் மகாதேவன். மே 2007ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறையால் பூம்புகாருக்கு அருகில் மேலபெரும்பள்ளம் என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பானைகளில் உள்ள அம்பு போன்ற குறியீடுகள் மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினைகளைப் போன்று உள்ளன.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை ————- என்கிறோம்.

(அ) அழகெழுத்து

(ஆ) சித்திர எழுத்து

(இ) கருத்து எழுத்து

(ஈ) மண்ணடுக்காய்வு

2. எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை ————

(அ) சர்கோபகஸ்

(ஆ) ஹைக்சோஸ்

(இ) மம்மியாக்கம்

(ஈ) பல கடவுளர்களை வணங்குதல்

3. சுமேரியரின் எழுத்து முறை ———- ஆகும்.

(அ) பிக்டோகிராபி

(ஆ) ஹைரோகிளிபிக்

(இ) சோனோகிராம்

(ஈ) க்யூனிபார்ம்

4. ஹரப்பா மக்கள் ———— பற்றி அறிந்திருக்கவில்லை.

(அ) தங்கம் மற்றும் யானை

(ஆ) குதிரை மற்றும் இரும்பு

(இ) ஆடு மற்றும் வெள்ளி

(ஈ) எருது மற்றும் பிளாட்டினம்

5. சிந்துவெளி மக்கள் “இழந்த மெழுகு செயல்முறை” முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை —————- ஆகும்.

(அ) ஜாடி

(ஆ) மதகுரு அல்லது அரசன்

(இ) பறவை

(ஈ) நடனமாடும் பெண்

6. i) மெசபடோமியாவின் மிகப் பழமையான நாகரிகம் அக்காடியர்களுடைய நாகரிகம் ஆகும்.

ii) சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை வளர்த்தெடுத்தார்கள்.

iii) யூப்ரடிஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகள் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.

iv) பாபிலோனிய அரசரான ஹமுராபி பெரும் சட்ட வல்லுனர் ஆவார்.

(அ) i சரி

(ஆ) i மற்றும் ii சரி

(இ) iii சரி

(ஈ) iv சரி

7. i) யாங்ட்சி ஆறு சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது.

ii) வு-டி சீனப்பெருஞ்சுவரைக் கட்டினார்.

iii) சீனர்கள் வெடிமருந்தைக் கண்டுபிடித்தனர்

iv) தாவோயிசத்தை நிறுவியவர் மென்சியஸ் என்று சீன மரபு கூறுகிறது.

(அ) i சரி

(ஆ) ii சரி

(இ) iii சரி

(ஈ) iii மற்றும் iv சரி

8. பின்வருவனவற்றுள் மெசபடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான கால வரிசை எது?

(அ) சுமேரியர்கள்-அஸிரியர்கள்-அக்காடியர்கள்-பாபிலோனியர்கள்

(ஆ) பாபிலோனியர்கள்-சுமேரியர்கள்-அஸிரியர்கள்-அக்காடியர்கள்

(இ) சுமேரியர்கள்-அக்காடியர்கள்-பாபலிலோனியர்கள்-அஸிரியர்கள்

(ஈ) பாபிலோனியர்கள்-அஸிரியர்கள்-அக்காடியர்கள்-சுமேரியர்கள்

9. கூற்று: மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.

காரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.

(அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

(ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

(இ) கூற்று சரி; காரணம் தவறு.

(ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. —————– என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.

2. எகிப்தியர்கள் தொடக்க காலத்தில் பயன்படுத்திய உருவ எழுத்துகள் சார்ந்த முறை —————- ஆகும்.

3. ————— என்பது பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களை விளக்கிக்கூறும் பண்டைய பாபிலோனியாவின் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்.

4. சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர் —————– ஆவார்.

5. ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானைகளின் மீதுள்ள —————- உருவங்களும் ஓவியங்களும் அவர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. அ) ஹரப்பாவில் உள்ள பெருங்குளம் அருகில் சில அறைகள் நன்கு கட்டப்பட்டிருந்தது.

ஆ) க்யூனிபார்ம் குறிப்புகள் கில்காமெஷ் காவியத்துடன் தொடர்புடையவை.

இ) சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவங்களும், செம்பில் செய்யப்பட்ட நடனமாடும் பெண் உருவமும் எகிப்தியர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.

ஈ) மெசபடோமியர்கள் சூரிய நாள்காட்டி முறையை வகுத்தார்கள்.

2. அ) அமோன் ஓர் எகிப்திய கடவுள்.

ஆ) அரண்களால் சூழ்ந்த ஹரப்பா நகரத்தில் கோயில்கள் இருந்தன.

இ) பெரிய ஸ்பிங்ஸ் என்பது பழங்கால மெசபடோமியாவில் உள்ள பிரமிடு வடிவ நினைவுச்சின்னமாகும்.

ஈ) பானை வனைவதற்கான சக்கரத்தைக் கண்டுபிடித்த பெருமை எகிப்தியர்களைச் சாரும்.

IV. பொருத்துக:

1. பாரோ – அ] ஒரு வகைப்புல்

2. பாப்பிரஸ் – ஆ] பூமியின் மிகப் பழமையான எழுத்துக் காவியம்

3. பெரும் சட்ட வல்லுனர் – இ] மொகஞ்சதாரோ

4. கில்காமெஷ் – ஈ] ஹமுராபி

5. பெருங்குளம் – உ] எகிப்திய அரசர்

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சித்திர எழுத்து, 2. மம்மியாக்கம், 3. க்யூனிபார்ம், 4. குதிரை மற்றும் இரும்பு, 5. நடனமாடும் பெண், 6. iv சரி, 7. ii சரி, 8. சுமேரியர்கள்-அக்காடியர்கள்-பாபலிலோனியர்கள்-அஸிரியர்கள், 9. கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஸ்பிங்க்ஸின், 2. சித்திர எழுத்து(ஹைரோகிளிபிக்), 3. ஹமுராபியின் சட்டத்தொகுப்பு, 4. லாவோட்சு, 5. சுடுமண்

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. க்யூனிபார்ம் குறிப்புகள் கில்காமெஷ் காவியத்துடன் தொடர்புடையவை, 2. அமோன் ஓர் எகிப்திய கடவுள்.

IV. பொருத்துக:

1. உ, 2. அ, 3. ஈ, 4. ஆ, 5. இ

Exit mobile version