பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் Notes 8th Social Science Lesson 10 Notes in Tamil

8th Social Science Lesson 10 Notes in Tamil

10. பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

அறிமுகம்

பணத்தின் பரிணாம வளர்ச்சி

பண்டமாற்று முறை

1. இருமுகத் தேவை பொருத்தமின்மை

2. பொதுவான மதிப்பின் அள்வுகோல்

3. பொருட்களின் பகுபடாமை

4. செல்வத்தை சேமிப்பதற்கான சிரமங்க:

பணத்தின் பல நிலைகள் பின்வருமாறு

பண்டப் பணம் , உலோகப் பணம், காகித பணம், கடன் பணம், நிகர் பணம் போன்றவைகள் சமீப கால பணத்தின் வடிவங்கள் ஆகும். காலம், இடம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பணம் பல நிலைகளில் உருவானது.

பண்டப் பணம்

உலோக பணத்தின் வரலாறு

உலோக பணம்

காகித பணம்

கடன் பணம் அல்லது வங்கிப்பணம்

நிகர்பணம்

உண்டியல், கருவூலக பட்டியல், பத்திரம், கடன் பத்திரங்கள், சேமிப்பு பத்திரங்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் பண பரிணாம வளர்ச்சியின் இறுதி நிலையாகும்.

பணத்தின் சமீபத்திய வடிவங்கள்

நெகிழிப் பணம்

கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் சமீபத்திய நெகிழிப் பணமாகும். பணமில்லா பரிவர்த்தனை இதன் நோக்கமாகும்.

மின்னணு பணம்

மின்னணுப் பணம் என்பது வங்கியில் கணினி அமைப்புகளில் உள்ள மின்னணு முறையின் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதாகும்.

நிகழ்நிலை வங்கி (இணைய வங்கி)

நிகழ்நிலை வங்கி அல்லது இணைய வங்கி என்பது வாடிக்கையாளர் அல்லது பிற நிதிநிறுவனங்கள் வலைதளத்தின் மூலம் ஒரு பரந்த நிதிப் பரிவர்த்தனைகளை நடத்தும் ஒரு மின்னணு முறையாகும்.

மின் வங்கி

மின்னணு வங்கியை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) என்றும் அழைக்கலாம். காசோலை அல்லது ரொக்கத்தை விட ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு நிதியை மாற்றுவதற்கு மின்னணு வழிமுறை பயன்படுகிறது.

மணத்தின் மதிப்பு

பணத்தின் மதிப்பு இரு வகைகள்

1. பணத்தின் அக மதிப்பு

2. பணத்தின் புற மதிப்பு

பணத்தின் (ரூபாய்) குறியீடு

இந்திய ரூபாய் ₹ குறியீடு தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திரு. உதயகுமார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இது 15 – ஜூலை 2010 அன்று இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

பணத்தின் தன்மை

பணத்தின் பணிகள்

பணத்தின் பணிகளாக முதன்மை அல்லது முக்கிய பணிகள், இரண்டாம் நிலை பணிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பணிகள் என வகைப்படுத்தப்படுகின்றன.

முதன்மை அல்லது முக்கிய பணிகள்

பணத்தின் முக்கிய பணிகள் பொருளாதாரத்தில் செயல்பட்டு அவை பிரதான பணிகளின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.

1. பரிமாற்ற கருவி அல்லது பண செலுத்துகை

பணம், பண்ட மற்றும் பணிகளை வாங்க பயன்படுத்தப்படுகிறது.

2. மதிப்பின் அளவுகோ;

அனைத்து மதிப்பையும் பணத்தால் அளவிடலாம். பலவகையான பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு இடையில் பரிமாற்ற விகிதத்தை தீர்மானிப்பது எளிது.

இரண்டாம் நிலை பணிகள்

இரண்டாம் நிலை பணிகளில் மூன்று முக்கிய பணிகள்

1. எதிர்கால செலுத்துகைக்கான நிலை மதிப்பு

எதிர்கால செலுத்துகைக்கு பணம் ஒரு கருவியாகப் பயன்படுகிறது. இன்று ஒரு கடனாளி கடன் வாங்குகிறார். குறிப்பிட்ட தொகையை கூறிய படி குறிப்பிட்ட காலத்தில் செலுத்துவது கடமையாகும்.

2. மதிப்பின் நிலை கலன் அல்லது வாங்கும் சக்தியின் நிலைகலன்

சில பண்டங்கள் அழிந்து போகக்கூடியதால், பண்டமாற்று முறையில் சேமிப்பை ஊக்குவிப்பதில்லை. பணத்தின் அறிமுகத்திற்கு பிறகு எதிர்காலத்திற்காகப் பணத்தை சேமித்தார்கள். அது அழிய கூடியதில்லை.

3. மாற்று மதிப்பு அல்லது மாற்று வாங்கும் சக்தி

பணத்தால் தொலைதூர இடங்களுக்கும், வெளிநாட்டிற்கும் பண்டங்களை பரிமாற்றம் செய்ய முடியும். ஆகவே, வாங்கும் சக்தியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு அவசியம் என உணரப்பட்டது.

வரையறுக்கப்பட்ட பணிகள்

1. கடன் அடிப்படையில் இயக்கப்படுகிறது.

2. மூலதனத்தின் உற்பத்திறன் அதிகரிப்பு

3. நாட்டு வருவாயின் அளவீடு மற்றும் விநியோகம்

பணவீக்கம் மற்றும் பணவாட்டம்

வங்கியில் சேமிப்பு மற்றும் முதலீடுகள்

சேமிப்புகள்

1. மாணவர் சேமிப்பு கணக்கு

சில வங்கிகள் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கிற மாணவர்களுக்கான சேமிப்பு கணக்குகள் துவக்கியுள்ளனர். இவை நெகிழ்வான விதிமுறைகளுடன் பூஜ்ஜிய இருப்புத் தொகையில் கொண்டது இதன் முக்கிய அம்சமாகும்.

2. சேமிப்பு வைப்பு

வாடிக்கையாளர்கள் தன்னுடைய நடப்பு வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்க ஆரம்பிக்கும் கணக்கிற்கு சேமிப்பு கணக்கு எனப்படும். நுகர்வோர், பணம் தேவைப்படும் போது அவர்கள் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். அந்த வைப்பு தொகைக்கு வங்கி பெயரளவு வட்டி அளிக்கிறது.

3. நடப்பு கணக்கு வைப்பு

நடப்பு கணக்குகள் பொதுவாக வர்த்தக நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் பொது அதிகாரிகளால் ஆரம்பிக்கப்படுகிறது. தேவைக்கேற்ப வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள நடப்பு கணக்கு உதவுகின்றது.

4. நிரப்பு வைப்பு

நிரந்தர வைப்பு கணக்கு என்பது முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்கு பாதுகாப்பும், நிலையான வருவாயும், விரும்புவார்கள். நிரந்தர வைப்பை ‘காலவைப்பு’ எனவும் அழைக்கலாம். அவை குறிப்பிட்ட காலத்திற்கு நிரந்தரமாக வங்கியில் இருக்கும்.

சேமிப்பின் நன்மைகள்

மாணவர்களுக்கிடையே சேமிப்பினை ஊக்குவித்தல்

முதலீடுகள்

பல்வேறு முதலீட்டுக் கருவிகளில் முதலீடு செய்யலாம். அவைகள்

1. பங்கு வர்த்தகம்

2. பத்திரங்கள்

3. பரஸ்பர நிதி

4. பண்டங்களின் எதிர்காலம்

5. காப்பீடு

6. ஆண்டுத்தொகை

7. வைப்பு கணக்கு அல்லது வேறு பல பத்திரங்கள் அல்லது சொத்துக்கள்.

எந்த ஒரு முதலீட்டுக் கருவிகளிலும் முதலீடு செய்யும் பொழுது சில இடர்பாடுகள் ஏற்பட்டு பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டாலும், அதே முதலீட்டின் மூலம் அதிகப் பணத்தை மீளவும் பெறமுடியும் என்பது உண்மையேயாகும். முதலீடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் இயல்புடையது.

பணம் மதிப்பிழப்பு

2016 நவம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் இந்திய அரசாங்கம் கருப்பு பணத்திற்கு எதிராக அனைத்து ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களை பண மதிப்பிழப்பு செய்வதாக அறிவித்தது.

சேமிப்பு மற்றும் முதலீடுகள் – ஒப்பீடு
ஒப்பீட்டின் அடிப்படை சேமிப்பு முதலீடு
பொருள் சேமிப்பு என்பது தனிநபர் வருமானத்தில் நுகர்விற்காக பயன்படுத்தப்படாத ஒரு பகுதியேயாகும். முதலீடு என்பது மூலதன சொத்துக்களில் நிதி முதலீடு செய்யும் செயல்முறையை குறிக்கிறது.
நோக்கம் சேமிப்பு குறுகிய கால அல்லது அவசரகால தேவைகளை நிறைவேற்றும் மூலதன உருவாக்கத்திற்கும், வருவாய்க்கும் முதலீடு உதவுகிறது.
இடர்பாடு குறைந்த அல்லது புறக்கணிக்கப்பட்ட அளவு மிக அதிகம்
வருவாய் இல்லை அல்லது குறைவு ஒப்பிட்டளவில் அதிகம்
நீர்மை நன்மை அதிக நீர்மை குறைந்த நீர்மை

கருப்புப் பணம்

பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவுகள்

  1. இரட்டை பொருளாதாரம்
  2. உண்மை அளவை குறைத்து மதிப்பீடு செய்வது.
  3. வரி ஏமாற்றுதல் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு
  4. சமத்துவம் வலுவிழத்தல்
  5. பணக்காரர் மற்றும் ஏழைகளிடையே இடைவெளி அதிகரித்தல்
  6. ஆடம்பர நுகர்வு செலவு
  7. உற்பத்தி முறையில் விலகல்
  8. பற்றாக்குறை பணத்தை விநியோகித்தல்
  9. சமுதாயத்தில் பொது ஒழுக்க நிலைகளின் வீழ்ச்சிகள்
  10. உற்பத்தி மீதான விளைவுகள்

கருப்பு பணத்திற்கு எதிராக சமீபத்திய நடவடிக்கைகள்

  1. இந்தியா மற்றும் பிற நாடுகளின் அழுத்தத்தினால் சுவிட்சர்லாந்து உள்ளூர் சட்டங்களில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி சுவிஸ் வங்கி வெளிநாடுகளுக்கு உதவுகிறது.
  2. உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் கருப்பு பணத்தை கண்காணிக்க சிறப்பு விசாரணை குழு நியமிக்கப்பட்டது.
  3. பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது.

கருப்பு பணத்திற்கு எதிராக சில சட்டரீதியான கூட்டமைப்பு

  1. பண மோசடி நடவடிக்கை தடுப்பு சட்டம் 2002.
  2. லோக்பால் மற்றும் லோகாயுக்டா சட்டம்.
  3. ஊழல் தடுப்புச் சட்டம் 1988.
  4. வெளிக்கொணரப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து மசோதா (வரி விதித்தல் ) – 2015
  5. பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 1988, 2016ல் திருத்தப்பட்டது.
  6. ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் 2016.

Exit mobile version