நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் Book Back Questions 8th Science Lesson 10

8th Science Lesson 10

10] நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

தீக்குச்சியின் தலைப்பகுதியில் பொட்டாசியம் குளோரேட்டும், ஆண்டிமனி டிரைசல்பைடும் உள்ளன. தீப்பெட்டியின் பக்கவாட்டில் சிவப்பு பாஸ்பரஸ் உள்ளது.

வேதி வினைகளின் போது வெப்பம் வெளியிடப்பட்டால் அவ்வினைகள் வெப்ப உமிழ்வினைகள் எனவும், வெப்பம் எடுத்துக் கொள்ளப்பட்டால் அவ்வினைகள் வெப்பக் கொள்வினைகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

மின்னாற்பகுத்தல் எனப்பொருள்படும் ‘எலக்ட்ரோலைசிஸ்’ என்ற சொல் மைக்கேல் பாரடே என்ற விஞ்ஞானியால் 19ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ‘எலக்ட்ரான்’ மற்றும் ‘லைசிஸ்’ என்ற இரு சொற்களிலிருந்து உருவானது. எலக்ட்ரான் என்பது மின்சாரத்தைக் குறிக்கிறது. லைசிஸ் என்பது பகுத்தல் எனப் பொருள்படும்.

சுண்ணாம்புக் கல்லானது சுட்ட சுண்ணாம்பு, நீற்றுச் சுண்ணாம்பு, சிமெண்ட் ஆகியவற்றிற்கான மூலப்பொருளாகும்.

சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் வளிமண்டலத்திலுள்ள ஓசோன் (O3) மூலக்கூறுகளைச் சிதைத்து மூலக்கூறு ஆக்சிஜனையும் அணு ஆக்சிஜனையும் உருவாக்குகின்றன. இந்த அணு ஆக்சிஜன் மீண்டும் மூலக்கூறு ஆக்சிஜனுடன் இணைந்து ஓசோனை உருவாக்குகிறது.

என்சைம்கள் மற்றும் ஈஸ்ட்டுகள் உயிரி வினைவேக மாற்றிகள் எனப்படுகின்றன.

ஒளி வேதியியல் என்பது வேதியியலின் ஒரு பிரிவாகும். இது ஒளியினால் நிகழும் வேதிவினைகளைப் பற்றியதாகும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. காகிதம் எரிதல் என்பது ஒரு _________ மாற்றம்.

அ) இயற்பியல்

ஆ) வேதியியல்

இ) இயற்பியல் மற்றும் வேதியியல்

ஈ) நடுநிலையான

2. தீக்குச்சி எரிதல் என்பது ____________ அடிப்படையிலான வேதி வினைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

அ) இயல் நிலையில் சேர்தல்

ஆ) மின்சாரம்

இ) வினைவேக மாற்றி

ஈ) ஒளி

3. __________ உலோகம் துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது

அ) வெள்ளீயம்

ஆ) சோடியம்

இ) காப்பர்

ஈ) இரும்பு

4. வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்குக் காரணமான நிறமி __________

அ) நீரேறிய இரும்பு (II) ஆக்சைடு

ஆ) மெலனின்

இ) ஸ்டார்ச்

ஈ) ஓசோன்

5. பிரைன் என்பது ____________இன் அடர் கரைசல் ஆகும்.

அ) சோடியம் சல்பேட்

ஆ) சோடியம் குளோரைடு

இ) கால்சியம் குளோரைடு

ஈ) சோடியம் புரோமைடு

6. சுண்ணாம்புக்கல் _____________ ஐ முதன்மையாகக் கொண்டுள்ளது.

அ) கால்சியம் குளோரைடு

ஆ) கால்சியம் கார்பனேட்

இ) கால்சியம் நைட்ரேட்

ஈ) கால்சியம் சல்பேட்

7. கீழ்காண்பவற்றுள் எது மின்னாற்பகுத்தலைத் தூண்டுகிறது?

அ) வெப்பம்

ஆ) ஒளி

இ) மின்சாரம்

ஈ) வினைவேக மாற்றி

8. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் ___________ வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.

அ) நைட்ரஜன்

ஆ) ஹைட்ரஜன்

இ) இரும்பு

ஈ) நிக்கல்

9. மழை நீரில் கரைந்துள்ள சல்பர் டைஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் ___________ஐ உருவாக்குகின்றன.

அ) அமில மழை

ஆ) கார மழை

இ) அதிக மழை

ஈ) நடுநிலை மழை

10. __________ புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாகின்றன.

அ) கார்பன் டை ஆக்சைடு

ஆ) மீத்தேன்

இ) குளோரோ புளுரோ கார்பன்கள்

ஈ) கார்பன் டைஆக்சைடு, மீத்தேன், குளோரோ புளுரோ கார்பன்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒளிச்சேர்க்கை என்பது __________ முன்னிலையில் நிகழும் ஒரு வேதி வினையாகும்.

2. இரும்பாலான பொருள்கள் _________ மற்றும் ____________ உதவியுடன் துருப்பிடிக்கின்றன.

3. ______________ தொழிற்சாலைகளில் யூரியா தயாரிப்பதில் அடிப்படைப் பொருளாக உள்ளது.

4. பிரைன் கரைசலின் மின்னாற்பகுத்தல் _________ வாயுக்களைத் தருகிறது

5. __________ என்பது ஒரு வேதிவினையின் வேகத்தை அதிகரிக்கும் வேதிப்பொருள் எனப்படும்.

6. வெட்டப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் பழுப்பாக மாறக் காரணம் ________ என்ற நொதியாகும்.

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. ஒரு வேதிவினை என்பது தற்காலிக வினையாகும்.

2. லெட் நைட்ரேட் சிதைவடைதல் ஒளியின் உதவியால் நடைபெறும் ஒரு வேதிவினைக்கு எடுத்துக்காட்டாகும்.

3. சுட்ட சுண்ணாம்பிலிருந்து நீற்றுச் சுண்ணாம்பு உருவாவது ஒரு வெப்பம் கொள் வினையாகும்.

4. CFC என்பது ஒரு மாசுபடுத்தியாகும்.

5. வேதிவினைகள் நிகழும் பொழுது ஒளி ஆற்றல் வெளிப்படலாம்.

IV. பொருத்துக:

அ.

1. துருப்பிடித்தல் – அ. ஒளிச்சேர்க்கை

2. மின்னாற்பகுத்தல் – ஆ. ஹேபர் முறை

3. வெப்ப வேதி வினை – இ. இரும்பு

4. ஒளி வேதி வினை – ஈ. பிரைன்

5. வினைவேக மாற்றம் – உ. சுண்ணாம்புக்கல் சிதைவடைதல்

ஆ.

1. கெட்டுப்போதல் – அ. சிதைவடைதல்

2. ஓசோன் – ஆ. உயிரி வினையூக்கி

3. மங்குதல் – இ. ஆக்சிஜன்

4. ஈஸ்ட் – ஈ. வேதிவினை

5. கால்சியம் ஆக்சைடு – உ. உணவு

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வேதியியல், 2. இயல் நிலையில் சேர்தல், 3. இரும்பு, 4. மெலனின், 5. சோடியம் குளோரைடு, 6. கால்சியம் கார்பனேட், 7. மின்சாரம், 8. இரும்பு, 9. அமில மழை, 10. கார்பன் டைஆக்சைடு, மீத்தேன், குளோரோ புளுரோ கார்பன்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. சூரிய ஒளி, 2. நீர் மற்றும் ஆக்ஜிசன், 3. அம்மோனியா, 4. குளோரின், ஹைட்ரஜன், 5. வினைவேக மாற்றி, 6. பாலிபீனால் ஆக்சிடேஸ் டைரோசினேஸ்

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. நிரந்தர, 2. வெப்பத்தின், 3. வெப்ப உமிழ்வினை, 4. சரி, 5. சரி

IV. பொருத்துக:

1. இ, 2. ஈ, 3. உ, 4. அ, 5. ஆ

1. உ, 2. இ, 3. ஈ, 4. ஆ , 5. அ

Exit mobile version