நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் Book Back Questions 7th Science Lesson 10

7th Science Lesson 10

10] நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

டெல்லியில் உள்ள இரும்புத்தூண் ஆச்சரியத்தக்க வகையில் துருப்பிடிக்கவில்லை! டெல்லியில் உள்ள குதூப் வளாகத்தில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு இரும்புத்தூண் உள்ளது. இவ்வளவு நூற்றாண்டுகள் கடத்தும், எந்தக் கூரையும் இன்றி புறவெளியில் உள்ள அந்த இரும்புத்தூண் துருப்பிடிக்கவில்லை. இதிலிருந்து 16ஆம் நூற்றாண்டிலேயே துருப்பிடித்தலை தவிர்க்கும் உலோகத் தொழில் நுட்பத்தில் இந்திய அறிவியலாளர்கள் சிறந்து விளங்கியது புலனாகிறது.

இரும்பின் மீது குரோமியம் அல்லது துத்தநாகம் போன்ற உலோகங்களை ஒரு படலமாகப் பூசுவதும் துருப்பிடித்தலைத் தடுக்கும் ஒரு மாற்று முறையாகும். இம்முறைக்கு நாக முலாம் பூசுதல் என்று பெயர். இம்முறையைப் பற்றி விரிவாக உயர் வகுப்புகளில் கற்க இருக்கிறீர்கள்.

லூயிஸ் பாஸ்டியர் (1822-1895) என்ற பிரெஞ்சு வேதியாலர் ஒரு நுண்ணுயிரியலாளரும் ஆவார். இவரே முதன்முதலில் நொதித்தல் என்ற நிகழ்வினை விவரித்தவர் ஆவார். காற்று அற்ற சூழலில், ஈஸ்ட் என்ற நுண்ணுயிரியின் முன்னிலையில் நிகழும் செயல் நொதித்தல் என்று சுறினார். இவரே ரேபிஸ் என்ற வெறிநாய்கடிக்கும் மருத்துவம் கண்டறிந்தவர்.

ஏந்த ஒரு பொருள் ஒரு வேதிவினையில் எந்த மாற்றத்திற்கும் உட்படாமால், வேதி மாற்றத்தின் வேகத்தினை மட்டும் துரிதப்படுத்துமோ அப்பொருளுக்கு வினையூக்கி என்று பெயர். எடுத்துக்காட்டாக சர்க்கரையின் நொதித்திலில் ஈஸ்ட்டில் உள்ள நோதிகள் வினையூக்கியாக செயல்படுகிறது. வினையூக்கியைப் பற்றிய தகவல்களை உயர் வகுப்பில் கற்க இருக்கிறீர்கள்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை __________ ஆக வகைப்படுத்தலாம்.

(அ) இயற்பியல் மாற்றம்

(ஆ) வேதியியல் மாற்றம்

(இ) வெப்பம் கொள் மாற்றம்

(ஈ) வெப்ப உமிழ் மாற்றம்.

2. பின்வருவனவற்றுள் ____________ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.

(அ) குளிர்வடைதல் மற்றும் உருகுதல்

(ஆ) குளிர்வடைதல் மற்றும் உறைதல்

(இ) ஆவியாதல் மற்றும் உருகுதல்

(ஈ) ஆவியாதல் மற்றும் உறைதல்

3. கீழ்கண்வற்றில் ____________ வேதியியல் மாற்றமாகும்.

(அ) நீர் மேகங்களாவது

(ஆ) ஒரு மரத்தின் வளர்ச்சி

(இ) பசுஞ்சாணம் உயிர் – எரிவாயுவாவது

(ஈ) பனிக்கூழ் கரைந்த நிலை – பனிக்கூழாவது

4. ___________ என்பது கால – ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

(அ) பூகம்பம்

(ஆ) வானில் வானவில் தோன்றுவது

(இ) கடலில் அலைகள் தோன்றுவது

(ஈ) மழை பொழிவு

5. __________ வேதிமாற்றம் அல்ல.

(அ) அம்மோனியா நீரில் கரைவது

(ஆ) கார்பன்-டை-ஆக்ஸைடு நீரில் கரைவது

(இ) உலர் பனிக்கட்டி நீரில் கரைவது

(ஈ) துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒரு பலூனினுள் வெப்பக் காற்றினை அடைப்பது __________ மாற்றமாகும்.

2. தங்க நாணத்தினை ஒரு மோதிரமாக மாற்றுவது ___________ மாற்றமாகும்.

3. ஒரு காஸ் சிலிண்டரின் திருகினை திருப்புவதன் மூலம் __________ எரிபொருள் _______ எரிபொருளாக மாறும். இது _________ மாற்றத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

4. உணவு கெட்டுப்போதல் என்பது ___________ மாற்றமாகும்.

5. சுவாசம் என்பது ___________ மாற்றமாகும்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. ஒரு துணியினை வெட்டுதல் என்பது கால – ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

2. ஒரு குவளை நீரினை எடுத்து அதனை குளிர் சாதனப் பெட்டியின் அதிகுளிர் பகுதியில் வைத்து குளிர்விப்பது ஒரு வேதியியல் மாற்றமாகும்.

3. ஒரு அவரைத் தாவரம் சூரிய ஒளியினைப் பெற்று, அவரை விதைகளாக மாறுவது ஒரு இயற்பியல் மற்றும் கால-ஒழுங்கற்ற மாற்றமாகும்.

4. ஒரு பொருளின் வேதியியல் பண்புகள் மாறாமல் இருந்து, அதன் நிலை அல்லது வடிவம் மாறுபட்டிருந்தால், அது கால – ஒழுங்கு மாற்றமாகும்.

5. வெள்ளி நகையின் நிறம் மங்குதல் என்ற நிகழ்வு வெப்ப ஏற்பு மாற்றமாகும்.

பொருத்துக:

வ.எண்
1 உருகுதல் திரவம் நிலையில் இருந்து திண்ம நிலைக்கு மாறுதல் கடிகார முள் துடிப்பது
2 குளிர்விப்பது திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறுதல் பனிக்கட்டி உருவாவது
3 ஆவியாதல் திண்ம நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல் பூக்கள் சேகரித்தல்
4 உறைதல் வாயு நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல் பனிக்கட்டி நீராதல்
5 கால ஒழுங்கு மாற்றம் ஒழுங்கற்ற கால இடைவெளியில் நடைபெறுவது நீரில் இருந்து நீராவி
6 கால ஒழுங்கற்ற மாற்றம் ஒழுங்கான கால இடைவெளியில் நடைபெறுகிறது நீராவி நீர் துளிகள் ஆவது.

ஒப்புமை தருக:

1. இயற்பியல் மாற்றம்: கொதித்தல்:: வேதியியல் மாற்றம்: __________

2. மரக்கட்டையிலிருந்து மரத்தூள்: ___________:: மரக்கட்டையிலிருந்து சாம்பல்: வேதியியல் மாற்றம்.

3. காட்டுத் தீ: ___________ மாற்றம்:: ஒரு பள்ளியில் பாட வேளை மாறுபாடு: கால ஒழுங்கு மாற்றம்.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: பட்டாசு வெடித்தல் ஒரு இயற்பியல் மாற்றம்.

காரணம்: இயற்பியல் மாற்றம் ஒரு மீள் மாற்றமாகும்.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் கூற்று காரணத்திற்கு சரியான விளக்கமல்ல.

(இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

(ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

2. கூற்று: திரவ நிலை நீர் வெப்பப்படுத்துவதால் அதன் வாயு நிலைக்கு மாறுவது கொதித்தல் எனப்படும்.

காரணம்: நீராவி குளிர்வடைந்து நீராக மாறுவது குளிர்வித்தல் எனப்படும்.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் கூற்று காரணத்திற்கு சரியான விளக்கமல்ல.

(இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

(ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

3. கூற்று: மரக்கட்டையை எரித்து கரியாக்குதல் ஒரு இயற்பியல் மாற்றமாகும்.

காரணம்: ஒரு மரக்கட்டை துண்டினை எரிப்பதால் கிடைக்கும் விளைபொருள்களை எளிதாக மீண்டும் மரக்கட்டையாக மாற்ற முடியும்.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் கூற்று காரணத்திற்கு சரியான விளக்கமல்ல.

(இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

(ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

4. கூற்று: இரும்பிலிருந்து இரும்பு ஆக்ஸைடு உருவாவது ஒரு வேதியியல் மாற்றமாகும்.

காரணம்: இரும்பிலிருந்து துரு உருவாக, அது காற்று மற்றும் நீருடன் வினை பட வேண்டும்.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் கூற்று காரணத்திற்கு சரியான விளக்கமல்ல.

(இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

(ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

5. கூற்று: ஒரு துளி பெட்ரோலினை விரலால் தொட்டால் குளிர்ச்சியான உணர்வு ஏற்படுகிறது.

காரணம்: மேற்கூறிய நிகழ்வு வெப்பம் கொள் மாற்றமாகும்.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் கூற்று காரணத்திற்கு சரியான விளக்கமல்ல.

(இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

(ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. இயற்பியல் மாற்றம் 2. ஆவியாதல் மற்றும் உருகுதல் 3. பசுஞ்சாணம் உயிர் – எரிவாயுவானது

4. கடலில் அலைகள் தோன்றுவது 5. துருவப் பனிக்குமிழ்கள் உருவாவது

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. இயற்பியல் 2. இயற்பியல் 3. திரவ வாயு வேதியியல் 4. வேதியியல்

5. கால ஒழுங்கு

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தைத் திருத்தி எழுதுக:

1. தவறு

சரியான விடை: இதயதுடிப்பு – கால ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

2. தவறு

சரியான விடை: ஒரு குவளை நீரினை எடுத்து அதனை குளிர்சாதனப் பெட்டியின் அதிகுளிர் பகுதியில் வைத்து குளிர்விப்பது ஒரு இயற்பியல் மாற்றமாகும்.

3. தவறு

சரியான விடை: ஒரு அவரைத் தாவரம் சூரிய ஒளியினைப் பெற்று அவரை விதைகளாக மாறுவது ஒரு வேதியியல் மற்றும் கால ஒழுங்கு மாற்றம் ஆகும்.

4. தவறு

சரியான விடை: ஒரு பொருளின் வேதியியல் பண்புகள் மாறாமல் இருந்து, அதன் நிலை அல்லது வடிவம் மாறுபட்டிருந்தால் அது இயற்பியல் மாற்றம் ஆகும்.

5. சரி

பொருத்துக:

வ.எண்
1 உருகுதல் திண்ம நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல் பனிக்கட்டி நீராதல்
2 குளிர்விப்பது வாயு நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல் நீராவி நீர் துளிகள் ஆவது.
3 ஆவியாதல் திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறுதல் நீரில் இருந்து நீராவி
4 உறைதல் திரவம் நிலையில் இருந்து திண்ம நிலைக்கு மாறுதல் பனிக்கட்டி உருவாவது
5 கால ஒழுங்கு மாற்றம் ஒழுங்கான கால இடைவெளியில் நடைபெறுவது கடிகார முள் துடிப்பது
6 கால ஒழுங்கற்ற மாற்றம் ஒழுங்கற்ற கால இடைவெளியில் நடைபெறுகிறது பூக்கள் சேகரித்தல்

ஒப்புமை தருக: (விடைகள்)

1. நொதித்தல் 2. இயற்பியல் மாற்றம் 3. கால ஒழுங்கு மாற்றம்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

2. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

3. கூற்று காரணம் இரண்டும் தவறு

4. கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.

5. கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.

Exit mobile version