தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள் Book Back Questions 9th Social Science Lesson 21

9th Social Science Lesson 21

21] தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்தில் குடவோலை என்னும் வழக்கப்படி கிராமச் சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தியாவில் ஜனவரி 25ஆம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடுகிறோம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயருக்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்தி வாக்குச் செலுத்தப்படுகிறது. ஒருவர் தாம் செலுத்திய வாக்குச் சரியான படி பதிவாகி உள்ளதா என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பை 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. இதை ஆங்கிலத்தில் சுருக்கமாக VVPAT (Voters Verified Paper Audit Trial) என்று குறிப்பிடுகிறார்கள்.

2014ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதல் முறையாக NOTA அறிமுகப்படுத்தப்பட்டது. உலகில் NOTA-வை அறிமுகப்படுத்திய 14வது நாடு இந்தியா ஆகும்.

இந்திய குடியரசுத் தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்? இந்திய குடியரசுத் தலைவர் பின்வரும் உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் குழாம் (Electrical College) மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவை. (1) பாராளுமன்றத்தின் இரு அவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். (2) இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள். குறிப்பு: பாராளுமன்ற இரு அவைகள் மற்றும் மாநில சட்ட மன்றங்களில் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள் இக்குழுவில் அங்கம் இடம் பெறமாட்டார்கள்.

அழுத்தக் குழுக்களுக்கான எடுத்துக்காட்டுகள்: (1) இந்திய வணிகம் மற்றும் தொழிற்துறை சம்மேளத்தின் கூட்டமைப்பு (FICCI). (2) அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC). (3) அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS). (4) இந்திய மருத்துவச் சங்கம் (IMA). (5) அகில இந்திய மாணவர் சம்மேளனம் (AISF). (6) ஆகில இந்திய சீக்கிய மாணவர் பேரவை. (7) இளம் பதாகா சங்கம் (YBA). (8) தமிழ்ச் சங்கம். (9) தமிழ்நாடு விவசாயிகள் சங்கம். (10) நர்மதா பச்சாவோ அந்தோலன்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.

(அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

(ஆ) இங்கிலாந்து

(இ) கனடா

(ஈ) ரஷ்யா

2. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு

(அ) சுதந்திரமான அமைப்பு

(ஆ) சட்டபூர்வ அமைப்பு

(இ) தனியார் அமைப்பு

(ஈ) பொது நிறுவனம்

3. இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு

(அ) பிரிவு 280

(ஆ) பிரிவு 315

(இ) பிரிவு 324

(ஈ) பிரிவு 325

4. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றி கூறுகிறது?

(அ) பகுதி III

(ஆ) பகுதி XV

(இ) பகுதி XX

(ஈ) பகுதி XXII

5. பல்வேறு அரசியல் கட்சிகளைத் தேசியக் கட்சியாகவோ அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிப்பவர்/அங்கீகரிப்பது.

(அ) குடியரசுத் தலைவர்

(ஆ) தேர்தல் ஆணையம்

(இ) நாடாளுமன்றம்

(ஈ) தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர்

5. கூற்று (A): இந்திய அரசியலமைப்புச் சுதந்திரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு வழிவகைச் செய்கிறது.

காரணம் (R): இது நாட்டின் சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது.

(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A)வை விளக்குகிறது.

(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A)வை விளக்கவில்லை.

(இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது

(ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது

6. கூற்று (A): இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அழுத்தக்குழுக்கள் காணப்படுகின்றன.

காரணம் (R): அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதை போல இந்தியாவில் அழுத்தக் குழுக்கள் வளர்ச்சியடையவில்லை.

(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A)வை விளக்குகிறது.

(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A)வை விளக்கவில்லை.

(இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.

(ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.

7. நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

(அ) 2012

(ஆ) 2013

(இ) 2014

(ஈ) 2015

8. அழுத்தக் குழுக்கள் எனும் சொல்லினை உருவாக்கிய நாடு

(அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

(ஆ) இங்கிலாந்து

(இ) முன்னாள் சோவியத் யூனியன்

(ஈ) இந்தியா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இந்திய தேர்தல் ஆணையம் ————— உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது.

2. தேசிய வாக்காளர்கள் தினம் அனுசரிக்கப்படும் நாள் —————-

3. இந்தியாவில் ————- கட்சி முறை பின்பற்றப்படுகிறது.

4. 2017ல் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளின் எண்ணிக்கை —————-

5. நர்மதா பச்சோவோ அந்தோலன் என்பது ஒரு —————-

III. பொருத்துக:

1. தேசியக் கட்சி – அ] வணிகக் குழுக்கள்

2. ஒரு கட்சி ஆட்சி முறை – ஆ] அமெரிக்க ஐக்கிய நாடுகள்

3. இரு கட்சி ஆட்சி முறை – இ] சீனா

4. அழுத்தக் குழுக்கள் – ஈ] ஏழு

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இங்கிலாந்து, 2. சுதந்திரமான அமைப்பு, 3. பிரிவு 324, 4. பகுதி XV, 5. தேர்தல் ஆணையம், 6. (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A)வை விளக்குகிறது, 7. 2014, 8. அமெரிக்க ஐக்கிய நாடுகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. 3, 2. ஜனவரி 25, 3. பல, 4. 7, 5. அழுத்தக்குழு

III. பொருத்துக:

1. ஈ, 2. இ, 3. ஆ, 4, அ

Exit mobile version