இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் 9th Social Science Lesson 9 Questions in Tamil

9th Social Science Lesson 9 Questions in Tamil

9. இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்

வரலாற்றறிஞர் பர்ட்டன் ஸ்டெய்ன் குப்தப் பேரரசின் காலத்தை விவரிப்பதற்கு __________ என்னும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

A) இடைக்காலம்

B) செவ்வியல்

C) நவீன காலம்

D) பிரிட்டிஷ்

(குறிப்பு: வரலாற்றை பண்டைய/செவ்வியல் காலம், இடைக்காலம், நவீனகாலம் எனக் காலவரையறை செய்வது ஐரோப்பிய வரலாற்றில் மரபாகப் பின்பற்றப்படுகிறது.)

பர்ட்டன் ஸ்டெய்ன் கூற்றுப்படி இந்திய வரலாற்றின் இடைக்காலம் என்பது

A) கி.பி. 5 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை

B) கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை

C) கி.பி 6 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை

D) கி.பி 5 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை

(குறிப்பு: கி.பி. 7 ஆம் நூற்றாண்டு – ஹர்ஷ சாளுக்கிய பேரரசுகளின் காலம், கி.பி. 16 ஆம் நூற்றாண்டு – மொகலாய பேரரசின் தொடக்கம்.)

பர்ட்டன் ஸ்டெய்ன் வரையறையின் படி இந்திய வரலாற்றில் நவீன காலத்தின் தொடக்கம் என்பது

A) கி.பி 15 முதல் கி.பி 16ஆம் நூற்றாண்டு வரை

B) கி.பி 16 முதல் கி.பி 17ஆம் நூற்றாண்டு வரை

C) கி.பி 16 முதல் கி.பி 18 ஆம் நூற்றாண்டு வரை

D) கி.பி 15 முதல் கி.பி 17ஆம் நூற்றாண்டு வரை

(குறிப்பு: இக்காலப் பகுதியில் இந்தியாவின் பல பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்த, உறுதியான அரசியல் மாற்றங்களுக்கு உள்ளாயின.)

___________காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசின் விரிவாக்கம் பாண்டிய பல்லவ அரசுகளை மறையச் செய்து வடக்கே ஒரிசா வரை பரவியது.

A) முதலாம் இராஜராஜன்

B) இரண்டாம் இராஜேந்திரன்

C) முதலாம் நரசிம்மவர்மன்

D) இரண்டாம் நரசிம்மவர்மன்

தென்னிந்தியாவில் ___________ நூற்றாண்டின் இறுதியில் சோழப் பேரரசின் மறைவைத் தொடர்ந்து பல சமயம் சார்ந்த அரசுகள் தோன்றின.

A) 11 B) 12 C) 13 D) 14

(குறிப்பு: இறுதியில் தென்னிந்தியா முழுவதிலும் விஜயநகரப் பேரரசு தனது ஆட்சி அதிகாரத்தை நிறுவி எழுச்சி பெற்றது. இது தென்னிந்தியாவில் சமயம் சார்ந்த ஆட்சியின் கோட்டையாகக் கருதப்பட்டது.)

கூற்று 1: பன்னிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து பல நூற்றாண்டு காலம் நீடித்த முஸ்லிம்களின் ஆட்சி டெல்லியில் தொடங்கி வட இந்தியா முழுவதும் பரவியது.

கூற்று 2: கி.பி. 1526 இல் பாபர் இப்ராஹிம் லோடியை தோற்கடித்ததிலிருந்து வட இந்தியாவில் மொகலாயர் தலைமையில் முஸ்லிம்களின் ஆட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்தும் பணி துவங்கியது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: கி.பி.1526 ல் மொகலாயப் பேரரசு அதன் புகழின் உச்சத்தில் காபூலிலிருந்து குஜராத் மற்றும் வங்காளம் வரையிலும் காஷ்மீரத்திலிருந்து தென்னிந்தியா வரையிலும் பரவியிருந்தது.)

மேலைக் கடற்கரையில் போர்ச்சுக்கீசியர்கள் வந்திறங்கிய ஆண்டு

A) கி.பி.1496

B) கி.பி.1497

C) கி.பி.1498

D) கி.பி.1499

முஸ்லிம்கள் ஆட்சி, 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் __________ ஆல் டெல்லியில் நிறுவப்பட்டது.

A) பாபர்

B) அலாவுதீன் கில்ஜி

C) இப்ராஹிம் லோடி

D) முகமது கோரி

(குறிப்பு: அடுத்து வந்த நூறு ஆண்டுகளுக்கு இந்த ஆட்சியானது இப்பகுதியைவிட்டு வேறு எங்கும் பெருமளவில் பரவவில்லை.)

__________ நூற்றாண்டு முதலாகவே மேற்காசியாவைச் சேர்ந்த முஸ்லிம் படையெடுப்பாளர்கள் குஜராத்திலும் சிந்துவிலும் தங்கள் சுல்தானியங்களை நிறுவி ஆட்சி புரிந்து வந்தனர்.

A) கி.பி. 6

B) கி.பி 7

C) கி.பி 8

D) கி.பி 9

(குறிப்பு: கி.பி. 9ஆம் நூற்றாண்டிலேயே அராபிய வணிகர்கள் மேலைக் கடற்கரைத் துறைமுகங்களில் குறிப்பாக கேரளத் துறைமுகங்களில் வணிகம் செய்தனர்.)

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியின் தாக்கம் __________ ஆட்சியின் போது உணரப்பட்டது.

A) பாபர்

B) அக்பர்

C) முகமது கோரி

D) அலாவுதீன் கில்ஜி

(குறிப்பு: அலாவுதீன் கில்ஜி (கி.பி.1296-1316) ஆட்சியை விரிவுப்படுத்துதல் என்பதைக்காட்டிலும் செல்வங்களைக் கவர்ந்து செல்லும் நோக்கத்துடனே தென்னிந்தியாவின் மீது பல படையெடுப்புகளை மேற்கொண்டார்.)

அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியில், வளர்ந்து வரும் அவருடைய நாட்டின் இரண்டாவது வலிமைமிகுந்த தளமாக திகழ்ந்தது

A) ஆக்ரா

B) தேவகிரி

C) காபூல்

D) குஜராத்

(குறிப்பு: தேவகிரி (அவுரங்காபாத்திற்கு அருகில்) அலாவுதீன் கில்ஜியால் கைப்பற்றப்பட்டது. இந்நகரத்திற்கு ‘தெளலதாபாத்’ என மறுபெயர் சூட்டப்பட்டது.)

கி.பி 1300களின் தொடக்கப் பத்தாண்டுகளில் அலாவுதீன் கில்ஜியின் அடிமையும், படைத் தளபதியுமான __________ன் தலைமையில் தென்னிந்தியப் படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

A) மாலிக் ஆம்பர்

B) முகமது கோரி

C) மாலிக்கபூர்

D) இப்ராஹிம் மாலிக்

(குறிப்பு: அலாவுதீன் கில்ஜிக்குப் பின்னர் ஆட்சி பொறுப்பேற்ற துக்ளக் வம்ச அரசர்களும் தங்கள் படைகளைத் தெற்கு நோக்கி அனுப்பினர்.)

அலாவுதீன் பாமன்ஷா __________ ஆண்டு பாமினி சுல்தானியத்தை உருவாக்கினார்.

A) கி.பி. 1327

B) கி.பி. 1329

C) கி.பி. 1342

D) கி.பி. 1347

(குறிப்பு: முகமதுபின் துக்ளக்கின் ஆட்சியின்போது, தெளலதாபாத்தில் கலகம் வெடித்தது. அதன் விளைவாக பாமினி சுல்தானியம் ஏற்படுத்தப்பட்டது.)

பாமினி சுல்தானியத்தின் தலைநகர் ___________.

A) பிரார்

B) பிடார்

C) அகமதுநகர்

D) கோல்கொண்டா

கூற்று: பாமினி சுல்தானியம் சுமார் முந்நூறு ஆண்டு காலம் நிலைத்திருந்தது.

காரணம்: மக்களிடையே மதிப்புப் பெற்றிருந்த அரசியல் மேதையும் விசுவாசமிக்க அமைச்சருமான மகமத் கவான் என்பவரின் சிறந்த நிர்வாகமாகும்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

D) கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல

(குறிப்பு: பாமினி சுல்தானியம் சுமார் நூற்றைம்பது ஆண்டு காலம் நிலைத்திருந்தது.)

பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் தக்காணத்தில் _________ சுல்தானியங்கள் உதயமாயின.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: மகமுத் கவானின் இறப்பிற்குப் பின்னர் பல ஆளுநர்கள் தங்களைச் சுதந்திர அரசர்களாக அறிவித்துக் கொண்டனர்.)

கீழ்க்கண்டவற்றுள் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் தக்காணத்தில் தோன்றிய சுல்தானியங்கள் எவை?

1. பீஜப்பூர் 2. கோல்கொண்டா 3. அகமதுநகர்

4. பிரார் 5. பிடார் 6. தெளலதாபாத்

7. விஜயநகர்

A) 1, 2, 3, 5, 6

B) 1, 2, 3, 4, 5

C) 2, 3, 4, 5, 6

D) 1, 2, 4, 5, 7

(குறிப்பு: இவற்றில் அளவில் பெரியதான பீஜப்பூரும் கோல்கொண்டாவும் பெருமளவு பொருளாதார வளர்ச்சியைப் பெற்றன.)

தக்காண சுல்தானியங்களை ஒளரங்கசீப் கைப்பற்றிய ஆண்டு

A) கி.பி. 1560

B) கி.பி. 1620

C) கி.பி. 1650

D) கி.பி. 1660

(குறிப்பு: இக்காலக்கட்டத்தில் தெற்கே மெட்ராஸ் உட்பட அனைத்துப் பகுதிகளும் மொகலாயப் பேரரசின் பகுதிகளாயின.)

கூற்று 1: சோழப் பேரரசின் விரிவாக்கம் முதலாம் ராஜராஜன் காலத்தில் தொடங்கியது.

கூற்று 2: தனது படைகளை வடகிழக்கு இந்தியாவில் கங்கை நதி வரை நடத்தி சென்ற முதலாம் ராஜேந்திரன் காலத்தில் சோழப் பேரரசு மேலும் விரிவடைந்தது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

“கங்கையும், கடாரமும் கொண்ட சோழன்” எனும் பட்டத்தைப் பெற்றவர்

A) முதலாம் இராஜராஜன்

B) முதலாம் ராஜேந்திரன்

C) இரண்டாம் ராஜேந்திரன்

D) முதலாம் நரசிம்மவர்மன்

(குறிப்பு: முதலாம் ராஜேந்திரன் தனது கப்பற்படைகளை ஸ்ரீவிஜய சைலேந்திர அரசுக்கு எதிராகவும் (இந்தோனேசியா) கடாரம் (கேடா) மற்றும் ஸ்ரீலங்காவிற்கு எதிராகவும் அனுப்பிவைத்தார். இதன் காரணமாக கங்கையும் கடாரமும் கொண்ட சோழன் என அழைக்கப்படுகிறார்.)

ஸ்ரீலங்கா சோழப் பேரரசின் ஒரு மாகாணமாக ___________ ஆண்டுகள் இருந்தது.

A) 5 B) 8 C) 10 D) 14

(குறிப்பு: சோழர்கள் காலத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சீனா உடனான வணிகம் பெருமளவில் விரிவடைந்தது.)

___________காலத்தில் கீழைச் சாளுக்கிய அரசோடு மேற்கொள்ளப்பட்ட திருமண உறவுகள் மூலம் சோழப் பேரரசு ஒரிசாவின் எல்லைவரை பரவியது.

A) முதலாம் இராஜராஜன்

B) முதலாம் ராஜேந்திரன்

C) இரண்டாம் ராஜேந்திரன்

D) முதலாம் குலோத்துங்கன்

(குறிப்பு: முதலாம் குலோத்துங்கன், ராஜேந்திர சோழனின் பேரன் ஆவார்.)

கூற்று 1: தமிழ் வணிகர்களோடு ஏற்பட்ட இடைவிடாத தொடர்பினால் இந்தியப் பண்பாடு மற்றும் கலையின் செல்வாக்கு தென்கிழக்கு ஆசியாவில் பரவியது.

கூற்று 2: அதை கம்போடியாவிலுள்ள நேர்த்திமிக்க, மிகப்பிரமாண்டமான அங்கோர்-வாட் கோவில்களில் பார்க்கலாம்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

கடைசி சோழப் பேரரசர் மூன்றாம் ராஜேந்திரனுக்கு பின்னர் ___________ ஆண்டு சோழப் பேரரசு முற்றிலும் வீழ்ந்தது.

A) கி.பி. 1250

B) கி.பி. 1269

C) கி.பி. 1272

D) கி.பி. 1279

(குறிப்பு: இதனைத் தொடர்ந்து இப்பகுதிகளில் பல அதிகார மையங்கள் உருவாயின.)

__________நூற்றாண்டின் இறுதியில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனை போன்ற அறிவுக் கூர்மையுடைய மன்னர்களால் பாண்டிய நாடு ஆளப்பட்டது.

A) 11 B) 12 C) 13 D) 14

13ஆம் நூற்றாண்டின் இறுதியில் வடக்கே பேலூரையும் பின்னர் ஹளபேடுவையும் தலைநகராகக் கொண்ட __________அரசு அமைந்திருந்தது.

A) முகலாய

B) ஹொய்சால

C) காகத்தியர்கள்

D) விஜயநகர

(குறிப்பு: ஹொய்சால அரசு இன்றைய கர்நாடக மாநிலத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாய் இருந்தது.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. காகத்தியர்கள் வாராங்கல்லிலிருந்து (தெலுங்கானா) ஆட்சி செய்தனர்.

2. தேவகிரியில் யாதவர்கள் ஆட்சி புரிந்தனர்.

3. 13ம் நூற்றாண்டின் இறுதியில் தேவகிரி அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பினால் வீழ்ந்தது.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: 13ம் நூற்றாண்டின் இறுதியில் தென்னிந்திய அரசுகள் தங்களிடையே அமைதியான ஒத்துழைப்பைக் கொண்டிராத காரணத்தினாலும் அவர்களிடையே ஏற்பட்ட உட்பூசல்களும், போர்களும் மோதல்களும் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.)

_____________அரசு உருவாக்கப்பட்டதே தென்னிந்தியாவின் இடைக்கால வரலாற்றின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும்.

A) முகலாய

B) மராத்திய

C) விஜயநகர

D) காகத்திய

(குறிப்பு: ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் விஜயநகர அரசு நிறுவப்பட்டது.)

ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகியோர் ___________ வம்சத்தை சேர்ந்தவர்கள்.

A) சங்கம

B) சாளுவ

C) துளுவ

D) ஆரவிடு

(குறிப்பு: இவர்களே சங்கம வம்சத்தின் முதல் அரசர்கள் ஆவர்.)

ஹரிஹரர், புக்கர் அவர்களால் _________ நதியின் தென்கரையில் புதிய தலைநகர் ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு விஜயநகரம் எனப்பெயர் சூட்டப்பட்டது.

A) கிருஷ்ணா

B) காவேரி

C) கோதாவரி

D) துங்கபத்ரா

(குறிப்பு: விஜயநகரம் என்பதற்கு வெற்றியின் நகரம் என்று பொருள்.)

ஹரிஹரர் _________ ஆண்டு அரசராக முடிசூட்டப்பெற்றார்.

A) கி.பி.1324

B) கி.பி.1328

C) கி.பி.1336

D) கி.பி.1338

(குறிப்பு: சங்கம் வம்ச அரசர்கள் விஜயநகரை சுமார் 150 வருடங்கள் ஆட்சி செய்தனர்.)

விஜயநகர அரசர்களுள் மாபெரும் அரசரான கிருஷ்ணதேவராயர் ____________ வம்சத்தைச் சேர்ந்தவராவார்.

A) சங்கம

B) சாளுவ

C) துளுவ

D) ஆரவிடு

(குறிப்பு: விஜயநகர அரசு பேரரசாக விரிவடைந்த போது தெற்கேயிருந்த ஹொய்சாள அரசும் தமிழகப் பகுதியில் இருந்த அரசுகளும் விஜயநகர அரசோடு இணைத்துக் கொள்ளப்பட்டன.)

1565 இல் _________ போரில் தக்காண சுல்தான்களின் கூட்டுப்படையினர் விஜயநகரைத் தோற்கடித்தனர்.

A) சந்தேரிப் போர்

B) கான்வா போர்

C) தலைக்கோட்டைப் போர்

D) கோல்கொண்டா போர்

(குறிப்பு: விஜயநகர பேரரசர்கள் இதன் பின்னர் தங்கள் தலைநகரைத் தெற்கேயுள்ள பெனுகொண்டாவிற்கும் இறுதியில் திருப்பதி அருகேயுள்ள சந்திரகிரிக்கும் மாற்றினர்.)

விஜயநகரப் பேரரசு (தலைக்கோட்டை போருக்கு பின் மீதமிருந்த பகுதிகள்) இறுதியாக ____________நூற்றாண்டின் இடைப்பகுதியில் வீழ்ச்சியுற்றது.

A) 15 B) 16 C) 17 D) 18

கி.பி.1526 ஆம் ஆண்டு பானிபட் போர்க்களத்தில் _________யை வெற்றி கொண்ட பின்னர் பாபர் மொகலாய பேரரசை நிறுவினார்.

A) தௌலத்கான் லோடி

B) இப்ராகிம் லோடி

C) மகமுத் கவான்

D) அலாவுதீன் கில்ஜி

(குறிப்பு: ஒளரங்கசீப்பிற்குப் பின் மொகலாயப் பேரரசு பலவாறாக பிரிந்திருந்தாலும், அதனை கி.பி.1857ஆம் ஆண்டு பிரிட்டிஷார் முடிவுக்கு கொண்டு வந்தனர்.)

கூற்று 1: அரசு என்பது ஒரு அரசரால் அல்லது அரசியால் ஆளப்படும் ஒரு நாடு.

கூற்று 2: பேரரசு என்பது ஒரு அரசரால் அல்லது அரசியால் ஆளப்படும் பல நாடுகளை கொண்ட நிலப்பரப்பு.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

முதல் _________மொகலாயப் பேரரசர்கள் ‘மாபெரும் மொகலாயர்கள்’ எனக் குறிப்பிடப்படுகின்றனர்.

A) 3 B) 4 C) 5 D) 6

(குறிப்பு: கடைசி மாபெரும் மொகலாயப் பேரரசர் ஔரங்கசீப் ஆவார்.)

நாடுகளைக் கைப்பற்றியதன் மூலமும், ராஜஸ்தானத்து சமயம் சார்ந்த அரசுகளோடு நல்லுறவைப் பேணியதின் மூலமும் __________ தனது பேரரசை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்தினார்.

A) அசோகர்

B) அக்பர்

C) ஷாஜகான்

D) ஹூமாயூன்

மகாராஷ்டிராவில் __________நூற்றாண்டில் மராத்திய அதிகார மையம் எழுச்சி பெற்றது.

A) 15 B) 16 C) 17 D) 18

(குறிப்பு: சிவாஜியின் தலைமையில் மராத்தியர்கள் மேற்கு இந்தியப் பகுதிகளில் மொகலாயரின் அதிகாரத்தைப் பெருமளவில் மதிப்பிழக்கச் செய்தனர்.)

கூற்று 1: மொகலாயப் பேரரசு அதன் உச்சத்தில் இருந்தபோது இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது.

கூற்று 2: கேரளத்தின் தென்மேற்குப் பகுதி, தென் தமிழகப் பகுதிகள் ஆகியவை மட்டுமே மொகலாயரின் நேரடி ஆட்சிக்கு உட்படாத பகுதிகளாக இருந்தன.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

வாஸ்கோடகாமா, தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக் கொண்டு கேரளக் கடற்கரையை வந்தடைந்த ஆண்டு

A) கி.பி 1492

B) கி.பி 1494

C) கி.பி 1496

D) கி.பி 1498

கூற்று: பதினைந்தாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு ஒரு நேரடி கடல் வழியைக் கண்டறிவதில் ஐரோப்பியர்கள் தீவிரமாய் ஈடுபட்டிருந்தனர்.

காரணம்: இந்தியாவுடன் நேரடித் தொடர்பை ஏற்பத்திக் கொள்வதன் மூலம் ஐரோப்பியர்கள் நறுமணப் பொருட்களின் வணிகத்தை தங்களுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்துவிடலாம். மேலும் அப்பொருட்களைத் தங்களுக்கு சாதகமான விலையிலும் கொள்முதல் செய்யலாம் என எண்ணினர்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

D) கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல

(குறிப்பு: ஏற்கனவே இருக்கிற, மேற்காசியா மற்றும் மத்தியதரைக்கடல் பகுதிகள் வழியாகச் செல்கிற நில வழிக்கு மாற்றாக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.)

போர்ச்சுக்கீசியர்கள் கொச்சியில் தங்கள் முதல் கோட்டையை கட்டிய ஆண்டு

A) கி.பி 1498

B) கி.பி 1500

C) கி.பி 1502

D) கி.பி 1503

(குறிப்பு: தங்களுடைய கப்பற்படை வலிமையின் காரணமாகப் போர்ச்சுகீசியர்களால் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கும் மலாக்காவுக்கும் இடைப்பட்ட பல துறைமுகங்களை கைப்பற்ற முடிந்தது.)

போர்ச்சுக்கீசியர்களால் கோவா கைப்பற்றப்பட்ட ஆண்டு

A) கி.பி 1503

B) கி.பி 1505

C) கி.பி 1510

D) கி.பி 1516

(குறிப்பு: இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அரசின் மையமாக கோவா மாறியது.)

பொருத்துக.

1. புலிகாட், நாகப்பட்டிணம் i) டேனியர்கள்

2. மெட்ராஸ் ii) பிரெஞ்சுக்காரர்கள்

3. பாண்டிச்சேரி iii) ஆங்கிலேயர்கள்

4. தரங்கம்பாடி iv) டச்சுக்காரர்கள்

A) ii iii i iv

B) iii i ii iv

C) i ii iii iv

D) iv iii ii i

(குறிப்பு: தென்னிந்தியாவில் வலுவான அரசுகள் இல்லாததால் ஐரோப்பிய நாடுகளின் வணிக நிறுவனங்கள் தங்களுக்கென்று சொந்தமான வணிகத்தலங்களை ஏற்படுத்திக் கொண்டு அவற்றில் முழு அதிகாரம் செலுத்தின.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. சோழர்கள் காலம் தமிழ்நாட்டு வரலாற்றில் செழிப்புமிக்க காலமாகும்.

2. இக்காலத்தில் வணிகமும் பொருளாதாரமும் விரிவடைந்தன.

3. நகரமயமாதலும் இவற்றுடன் இணைந்து கொண்டது.

4. சோழர்கள் காலத்தில் நிர்வாக இயந்திரமானது மறுசீரமைக்கப்பட்டது.

A) அனைத்தும் சரி

B) 1, 2, 4 சரி

C) 2, 3, 4 சரி

D) 1, 3, 4 சரி

உள்ளாட்சி நிர்வாகத்தின் அடிப்படை அலகு _________.

A) நாடு

B) கோட்டம்

C) மாவட்டம்

D) ஊர்

(குறிப்பு: கிராமத்திற்கு (ஊர்) அடுத்தவை ஊர்களின் தொகுப்பான ‘நாடு’ மற்றும் ‘கோட்டம்’ (மாவட்டம்) என்பனவாகும்.)

பிராமணர்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்ட கிராமங்கள் __________ என்றறியப்பட்டன.

A) நாடு

B) நகரம்

C) பிரம்மதேயம்

D) சபை

(குறிப்பு: சந்தை கூடுமிடங்களும் சிறுநகரங்களும் ‘நகரம்’ என்றழைக்கப்பட்டன.)

தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

1. ஊர், நாடு, பிரம்மதேயம், நகரம் ஆகிய ஒவ்வொன்றும் தனக்கென ஒரு மன்றத்தைக் கொண்டிருந்தது.

2. நிலங்களையும் நீர்நிலைகளையும் கோவில்களையும் பராமரித்து மேலாண்மை செய்வது, உள்ளுர் பிரச்சனைகளை தீர்த்து வைப்பது அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரிகளை வசூல் செய்வது ஆகியவை இம்மன்றங்களின் பொறுப்புகளாகும்.

3. உள்ளாட்சி நிர்வாகம் தொடர்பான அடிப்படை முறைகளில் சோழ அரசு தலையிடவில்லை.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 3 மட்டும் தவறு

D) எதுவுமில்லை

கூற்று 1: சோழ அரசு மண்டலம், வளநாடு போன்ற நிர்வாகப் பிரிவுகளை உருவாக்கியதன் மூலம் வருவாய்த்துறை நிர்வாகத்தில் புதுமைகளைப் புகுத்தியது.

கூற்று 2: சோழர்கள் காலத்தில் வேளாண்மை மற்றும் வணிகத் துறைகளில் பல புதிய வரிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: சோழர்கள் காலத்தில் அதிக எண்ணிக்கையில் கோவில்கள் கட்டப்பட்டது மற்றொரு குறிப்பிடத்தகுந்த அம்சம் ஆகும்.)

விஜயநகர பேரரசு காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மையங்களில் __________ என்றழைக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டனர்.

A) தளபதி

B) பாளையக்காரர்கள்

C) நாயக்

D) சேனாபதி

(குறிப்பு: நாயக்கர்கள் அரசர்களிடமிருந்து நிலங்களை மானியமாகப் பெற்றனர்.)

கூற்று 1: விஜயநகர அரசு காலத்தில் நாயக்கர்களுக்கு அடுத்த நிலையில் பாளையக்காரர்கள் இருந்தனர்.

கூற்று 2: பாளையக்காரர்கள் படைகளுக்குத் தேவையான வீரர்களை வழங்கினர்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: விஜயநகரப் பேரரசு காலத்தில் பல கோட்டைகள் கட்டப்பட்டன. அவைகள் பிராமண படைத் தளபதிகளின் கீழிருந்தன.)

விஜயநகரப் பேரரசுக்கு விசுவாசமான மூன்று முக்கிய நாயக்க அரசுகள் கீழ்க்கண்ட எவற்றை மையமாக கொண்டு உருவாயின?

1. காஞ்சிபுரம் 2. செஞ்சி 3. தஞ்சாவூர்

4. மதுரை 5. திருநெல்வேலி

A) 1, 2, 3 B) 2, 3, 5 C) 2, 3, 5 D) 1, 2, 5

(குறிப்பு: இம்மூன்று நாயக்க அரசுகளும் கி.பி.1500க்கும் – கி.பி. 1550 க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாகின.)

ஒளரங்கசீப்பின் மறைவிற்கு பின்னர் கீழ்க்கண்ட எந்த மாகாண கவர்னர்கள் சுதந்திர அரசர்களாக மாறினர்?

1. வங்காளம் 2. அயோத்தி 3. ஹைதராபாத்

4. ஆக்ரா 5. ஆற்காடு

A) அனைத்தும் B) 1, 2, 3, 4 C) 1, 2, 3, 5 D) 2, 3, 4, 5

(குறிப்பு: இவ்வரசுகள் தனித்தன்மை வாய்ந்த உள்ளூர்ப் பண்பாடுகளின் (லக்னாவி, ஹைதராபாத் உணவுப் பதார்த்தங்களின் சமையல் முறை உட்பட) மையங்களாக மாறின.)

விதோபாவின் பக்தர்களால் “வர்க்கரி சம்பிரதயா” என்னும் இயக்கம் எங்கு உருவாக்கப்பட்டது?

A) வங்காளம்

B) ஆக்ரா

C) பஞ்சாப்

D) மகாராஷ்டிரா

(குறிப்பு: இவ்வியக்கம் 14ஆம் நூற்றாண்டில் எழுச்சி பெற்றது.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. இடைக்காலத்தில் ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் காரணமாக பல்வேறு சித்தாந்தங்கள் உருவாயின.

2. வித்யாராண்யர் போன்ற குருக்களின் அல்லது சமயத் தலைவர்களின் பெயரில் மடங்கள் நிறுவப்பட்டன.

3. தமிழகத்தில் வீர சைவம், கர்நாடகத்தில் சைவ சித்தாந்தம் போன்ற இயக்கங்களும் உருவாயின.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: தமிழகத்தில் சைவ சித்தாந்தம், கர்நாடகத்தில் வீர சைவம் போன்ற இயக்கங்களும் உருவாயின.)

பக்தி இயக்க புத்துயிர்ப்பின் விளைவாக சமணமதம் இந்தியாவில் வலுவிழந்த போதிலும் _________ பகுதிகளில் உள்ள வணிக சமூகங்களிடையே சமணம் செழித்தோங்கியது.

A) மகாராஷ்டிரா, பஞ்சாப்

B) ஒடிசா, வங்காளம்

C) குஜராத், மார்வார்

D) குஜராத், ஒடிசா

(குறிப்பு: சங்கரர், ராமானுஜர் ஆகியோர் பக்தி இயக்க புத்துயிர்ப்பினை மேற்கொண்டனர்.)

தூத்துக்குடிப் பகுதியில் வாழும் பரதவ சமூக (மீன் பிடிக்கும் சமூகம்) மக்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுவதற்கு கருவியாக இருந்தவர்

A) ராபர்ட் டி நொபிலி

B) புனித பிரான்சிஸ் சேவியர்

C) வில்லியம் ஸ்மித்

D) அல்புகர்க்கு

(குறிப்பு: மதுரையில் செயல்பட்ட ராபர்ட் டி நொபிலி, புனித பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் பாண்டிய நாட்டின் கடற்கரை பகுதிகளில் பரதவ சமூக மக்களிடையே சமயப் பரப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.)

கூற்று 1: சீக்கிய மதம் பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவில் வாழ்ந்த குருநானக் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.

கூற்று 2: பேரரசர் ஒளரங்கசீப் மேற்கொண்ட கடுமையான அடக்குமுறையையும் மீறி சீக்கிய மதம் வலுவாக வளர்ச்சியடைந்தது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா முழுவதும் பல மதங்கள் ஒரே நேரத்தில் இருந்துள்ளன.)

இடைக்கால இந்தியாவில் பார்சிகள் யூதர்கள் ஆகியோர் முறையே __________ பகுதிகளில் குடியேறினர்.

A) கேரளா, பஞ்சாப்

B) பஞ்சாப், கேரளா

C) குஜராத், கேரளா

D) கேரளா, குஜராத்

(குறிப்பு: சூரத் துறைமுகத்திலும், ஆங்கிலேயர் காலத்தில் பம்பாயிலும் பார்சி இன வணிகர்களே பணம்படைத்த முக்கியத்துவம் வாய்ந்த வணிகர்களாய் இருந்தனர்.)

செல்வியல் புலவரான கம்பர் தமிழில் இராமாயணத்தை எழுதி, அதை ___________ கோவிலில் அரங்கேற்றம் செய்தார்.

A) சிதம்பரம்

B) ஸ்ரீரங்கம்

C) மதுரை மீனாட்சி கோவில்

D) தஞ்சை பெரிய கோவில்

(குறிப்பு: கலிங்கத்துப் பரணி, மூவருலா ஆகியவை சோழர்கள் காலத்திய சிறந்த படைப்புகளாகும்.)

கூற்று 1: சோழர்களின் காலம் குறிப்பிடத்தகுந்த பண்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு சகாப்தமாகும்.

கூற்று 2: மிகப்பெரும் சமயத் தத்துவ ஆய்வு நூலான சங்கர-பாஷ்யம் மற்றும் ஸ்ரீபாஷ்யம் ஆகியவை எழுதப்பட்டதும் சோழர்கள் காலத்தில் தான்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

சோழர்களின் பெரும் சிறப்பு வாய்ந்த கட்டடக் கலையை கீழ்க்கண்ட எந்த இடங்களில் காணலாம்?

1. தஞ்சாவூர் பெரிய கோவில்

2. கங்கை கொண்ட சோழபுரம்

3. தாராசுரம்

4. ஸ்ரீரங்கம்

A) அனைத்தும் B) 1, 2, 3 C) 2, 3, 4 D) 1, 3, 4

(குறிப்பு: கோவில் சுவர்களிலும் தூண்களிலும் கல் சிற்பங்கள் செதுக்கப்பட்டன.)

தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

A) சோழர்கள் காலத்தில் பேரழகும் கலைநுட்பமும் பொருந்திய செப்புச் சிலைகள் மெழுகு அச்சு முறையில் வார்க்கப்பட்டன.

B) பிரபஞ்ச நடனமாடும் நடராஜர் சிலை பல்லவர்கள் கால செப்பு சிலைகளில் மிகவும் புகழ்பெற்றதாகும்.

C) ஷாஜகானாபாத் (டெல்லி), பதேபூர் சிக்ரி ஆகிய முழுமையான நகரங்களையும் தோட்டங்களையும் மசூதிகளையும் கோட்டைகளையும் மொகலாயர்கள் கட்டினர்.

D) மொகலாயர் காலத்தில் இலக்கியங்கள் பெரும்பாலும் பாரசீக மொழியில் எழுதப்பட்டாலும், உருது, இந்தி மற்றும் ஏனைய வட்டார மொழிகளிலும் இலக்கியங்கள் எழுதப்பட்டன.

(குறிப்பு: பிரபஞ்ச நடனமாடும் நடராஜர் சிலை சோழர் கால செப்பு சிலைகளில் மிகவும் புகழ்பெற்றதாகும்.

மொகலாய வம்ச அரசர்களை பற்றிய அனைத்து விபரங்களும் அடங்கிய வரலாற்று நூல்கள் ________ மொழியில் எழுதப்பட்டன.

A) சமஸ்கிருத

B) உருது

C) தெலுங்கு

D) பாரசீக

நிகழ்த்துக் கலைகளில் ஒன்றான இந்துஸ்தானி இசையில் __________ புகழ்பெற்று விளங்கினார்.

A) அக்பர்

B) தான்சேன்

C) மெக்கன்சி

D) பாணினி

(குறிப்பு: தான்சேனை ஆதரித்தவர் அக்பர். இதன் மூலம் இந்துஸ்தானி இசைக் கலைக்கு அக்பர் அளித்த ஆதரவை அறியலாம்.)

கோவில்களின் நுழைவாயில்களில் மிக நுட்பமான வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்ட மிக உயர்ந்த கம்பீரமான கோபுரங்கள் __________ அரசர்கள் காலத்தில் எழுப்பப்பட்டன.

A) மராத்திய

B) பல்லவ

C) சோழ

D) விஜயநகர

(குறிப்பு: விஜயநகர அரசர்கள் காலத்தில் கோவில் சுவர்கள் வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டன.)

விஜயநகர நாயக்க அரசர்களின் ஆதரவில் பெருமளவிலான இலக்கியங்கள் __________மொழியில் எழுதப்பட்டன.

A) சமஸ்கிருத

B) உருது

C) தெலுங்கு

D) பாரசீக

(குறிப்பு: விஜயநகர அரச குடும்ப ஆதரவில் தெலுங்கு இலக்கியம் செழிப்புற்றது.)

பிரபந்தம் எனப்படும் புதிய வகை தமிழ் இலக்கியம் யாருடைய காலத்தில் உருவானது?

A) சோழர்கள்

B) பாண்டியர்கள்

C) பல்லவர்கள்

D) விஜயநகர நாயக்கர்கள்

(குறிப்பு: காப்பிய நூலான சிலப்பதிகாரத்திற்கும் திருக்குறளுக்கும் இக்காலத்தில்தான் மிகச்சிறந்த உரைநூல்கள் எழுதப்பட்டன.)

விஜயநகர நாயக்க அரசர்கள் காலத்தில் கர்நாடக இசைக்குரிய ராகங்களை வகைப்படுத்தியவர்

A) கோவிந்த தீட்சிதர்

B) வேங்கட மகி

C) பாணினி

D) வித்யாரண்யர்

(குறிப்பு: வேங்கட மகி என்பவர் கோவிந்த தீட்சிதரின் மகன் ஆவார்.)

பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்தியா அறிந்திருந்த மிகப்பெரிய வலைப்பின்னலைப் போன்ற கால்வாய்கள் _________ ஆல் டெல்லி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கால்வாய்கள் ஆகும்.

A) பாபர்

B) ஹுமாயூன்

C) ஷாஜகான்

D) பெரோஸ் துக்ளக்

(குறிப்பு: பதினான்காம் நூற்றாண்டில் பெரோஸ் துக்ளக் இக்கால்வாய்களை அமைத்தார்.)

சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு

1. வட இந்தியாவில் கிணறுகளிலிருந்து நீர் இறைக்க ‘பாரசீகச் சக்கரம்’ பயன்படுத்தப்பட்டது.

2. தமிழ்நாட்டின் சோழ அரசர்கள் நீர்ப்பாசனத்திற்காக காவேரி நதியின் கிளை ஆறுகளை இணைத்து வலைபின்னலைப் போன்ற கால்வாய்களை அமைத்தனர்.

3. இந்திய வேளாண்மையின் மிக முக்கியமான அம்சம், அதிக எண்ணிக்கையில் பல்வகைப்பட்ட பயிர்கள் பயிர்செய்யப்பட்டமை ஆகும்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

ஐரோப்பியருடைய வருகைக்குப் பின்னர் கீழ்க்கண்ட எவை இந்தியாவில் அறிமுகமாயின?

1. சோளம் 2. புகையிலை 3. பப்பாளி

4. அன்னாசி 5. கொய்யா 6. முந்திரிப்பருப்பு

A) 1, 2, 4, 5

B) 2, 3, 4, 5

C) 1, 2, 3, 5, 6

D) அனைத்தும்

(குறிப்பு: மேற்கண்டவை அனைத்தும் மேலை நாடுகளிலிருந்து குறிப்பாக அமெரிக்காவிலிருந்து வந்தவையாகும்.)

ஏழாம் நூற்றாண்டில் உலகிலேயே அதிக அளவிலான பட்டு உற்பத்தி செய்யும் பகுதியாக __________ திகழ்ந்தது.

A) குஜராத்

B) ஆக்ரா

C) வங்காளம்

D) ஆந்திரா

(குறிப்பு: மல்பெரி பட்டுப்பூச்சிகளை வளர்த்து பட்டு உற்பத்தி செய்யும் முறை பதினான்கு பதினைந்தாம் நூற்றாண்டுகளில் அறிமுகமானது.)

மொகலாய அரசில் மிகப்பெரிய தொழிற்கூடங்கள் __________ என்ற பெயரில் பல கைவினைஞர்களை பணியிலமர்த்தி செயல்பட்டுள்ளன.

A) பர்கானா

B) கூர்க்

C) கர்கானா

D) சாய்

(குறிப்பு: கைவினைஞர்கள் தனியாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்களுடனோ வீட்டிலிருந்தோ அல்லது தொழிற்கூடத்திலோ வேலை செய்தனர்.)

இந்தியாவிலிருந்து பதினேழாம் நூற்றாண்டில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்

A) கைவினைப்பொருட்கள்

B) துணிகள்

C) நறுமணப்பொருட்கள்

D) தந்தங்கள்

(குறிப்பு: இந்தியத் துணிகளைக் கொடுத்து அதற்கு மாற்றாக நறுமணப் பொருட்களை இந்தோனேசியத் தீவுகளிலிருந்து பெறுவது மிகவும் லாபகரமானது என்பதை டச்சுக்காரர்களும் ஆங்கிலேயரும் உணர்ந்தனர்.)

இந்தியாவில் ________ பொருள் உற்பத்தியின் அடிப்படை நிலவியல் அலகாக இருந்தது.

A) கிராமம்

B) நகரம்

C) தொழிற்சாலை

D) வேளாண்மை

(குறிப்பு: செலாவணி என்பது பண்டமாற்றமாகவே இருந்தது.)

கூற்று: இந்தியா கடல் வணிகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.

காரணம்: நிலவியல் ரீதியாக இந்தியப்பெருங்கடலின் நடுவே இந்தியா அமைந்திருப்பதே இதற்கு காரணமாகும்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்

D) கூற்று காரணம் இரண்டும் சரி, ஆனால் சரியான விளக்கமல்ல

(குறிப்பு:இந்திய பெருங்கடலின் குறுக்காக, கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை விரிந்து பரந்திருந்த கடல் வணிகம் நூற்றாண்டுகளுக்கு செழித்தோங்கியது.)

கீழ்க்கண்ட எந்த துறைமுகங்கள் பிராந்திய வணிகத்தில் இடைநிலை முனையங்களாக அல்லது பொருள் வைக்கும் இடங்களாகச் செயல்பட்டன?

1. மலாக்கா 2. கோழிக்கோடு

3. சூரத் 4. கோல்கொண்டா

A) 1, 2 B) 2, 3 C) 1, 3 D) 2, 4

தவறான இணையைத் தேர்ந்தெடு.

1. குஜராத் – மசூலிபட்டினம்

2. ஆந்திரா – சூரத், கோல்கொண்டா

3. வங்காளம் – சிட்டகாங்

4. சோழமண்டலக் கடற்கரை – புலிக்காட், நாகப்பட்டினம்

5. கேரளக் கடற்கரை – கோழிக்கோடு

A) 1, 2 B) 2, 3 C) 2, 4 D) 3, 5

(குறிப்பு: குஜராத் – சூரத், கோல்கொண்டா, ஆந்திரா – மசூலிபட்டினம். மேற்கண்ட துறைமுகங்கள் பதினேழாம் நூற்றாண்டில் முக்கிய துறைமுகங்களாக திகழ்ந்தன.)

டச்சுக்கிழக்கிந்திய கம்பெனியின் சரக்குப்பட்டியலின் படி, இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் _________ விழுக்காடுகள் துணியாக இருந்தன.

A) 50% B) 70% C) 80% D) 90%

(குறிப்பு: இரும்பையும் எஃகையும் ஏற்றுமதி செய்த நாடுகளில் இந்தியா முக்கியமான ஒன்றாகும்.)

கீழ்க்கண்டவற்றுள் சீனாவிலிருந்தும் ஏனைய கீழ்திசை நாடுகளிலிருந்தும் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் எவை?

1. பட்டு 2. செராமிக் ஓடுகள் 3. தங்கம்

4. நறுமணப் பொருட்கள் 5. நறுமண மரங்கள் 6. கற்பூரம் 7. மருந்து வகைகள்

A) அனைத்தும் B) 2, 3, 4, 5 C) 1, 2, 3, 4, 5, 6 D) 1, 3, 4, 6, 7

இடைக்கால இந்தியாவில் பட்டு, மருந்து வகைகள், சாய மரங்கள், சர்க்கரை ஆகியன __________ லிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

A) ஆப்பிரிக்கா

B) பாரசீகம்

C) இந்தோனேசியா

D) ஐரோப்பா

இடைக்கால இந்தியாவில் தந்தம், தங்கம் ஆகியவை எங்கிருந்து பெறப்பட்டன?

A) ஆப்பிரிக்கா

B) பாரசீகம்

C) இந்தோனேசியா

D) ஐரோப்பா

(குறிப்பு: அடிமைகளும் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனர்.)

_________நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் வணிகக் கூட்டு நிறுவனங்கள் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டிருந்தன.

A) 12 B) 13 C) 14 D) 15

(குறிப்பு: இந்த வணிக கூட்டு நிறுவனங்களில் இரண்டு நன்கறியப்பட்டவை ஆகும். அவை ஐநூற்றுவர், மணிக் கிராமத்தார்.)

கூற்று 1: ஐநூற்றுவர்- இவ்வமைப்புகள் பல்வேறு வணிகக் குழுக்களையும் நகரம் என்ற அமைப்பை சேர்ந்த கூட்டு நிறுவனங்களையும் உள்ளடக்கியதாகும்.

கூற்று 2: மணிக்கிராமத்தார் – இவர்கள் ஐஹோலைத் தலைநகராக கொண்டவர்கள்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு:

மணிக்கிராமத்தார்- இவ்வமைப்புகள் பல்வேறு வணிகக் குழுக்களையும் நகரம் என்ற அமைப்பை சேர்ந்த கூட்டு நிறுவனங்களையும் உள்ளடக்கியதாகும்

ஐநூற்றுவர் – இவர்கள் ஐஹோலைத் தலைநகராக கொண்டவர்கள்.)

பாரசீக வளைகுடாவிலும் செங்கடலிலும் இருந்த அனைத்து துறைமுகங்களிலும் _________ ஐ சேர்ந்த வணிகர்கள் இருந்தனர்.

A) சோழ மண்டலம்

B) வங்காளம்

C) ஆக்ரா

D) குஜராத்

(குறிப்பு: பணம்படைத்த வணிகர்கள் வெளிநாட்டுத் துறைமுகங்களில் தங்கள் முகவர்களை நியமித்திருந்தனர்.)

கீழ்க்கண்ட எந்த நாடுகளில் உள்ள துறைமுகங்களில் சோழ மண்டல வணிகர்கள் செயல்பட்டனர்?

1. மலாக்கா 2. பர்மா

3. பாரசீகம் 4. தாய்லாந்து

A) அனைத்தும் B) 1, 2, 3 C) 1, 2, 4 D) 2, 3, 4

கூற்று 1: இடைக்கால பெரிய நகரங்கள் பொருள் உற்பத்தி, சந்தை, நிதி மற்றும் வங்கி சேவைகள் ஆகியவற்றின் மையங்களாகத் திகழ்ந்தன.

கூற்று 2: சிறுநகரங்கள் உள்ளூர் சந்தை மையங்களாகச் செயல்பட்டு அருகேயிருந்த கிராம உட்பகுதிகளை இணைத்தன.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: நாட்டின் தலைநகரங்களும் (டெல்லி, ஆக்ரா) பிராந்திய நகரங்களும் (பாட்னா, அகமதாபாத், லக்னோ) அரசியல் மற்றும் நிர்வாக மையங்களாக செயல்பட்டன.)

கிருஷ்ணதேவராயர் _________ன் சமகாலத்தவர்.

A) பாபர்

B) ஹுமாயுன்

C) அக்பர்

D) ஷெர்ஷா

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

A) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.

B) சாளுவ அரசவம்சம் நீண்டகாலம் ஆட்சி செய்தது.

C) விஜயநகர அரசர்கள் பாமினி சுல்தானியத்துடன் சுமூகமான உறவுகளைக் கொண்டிருந்தனர்.

D) ரஜபுத்திர அரசுகள் பாரசீகத்திலிருந்தும் அரேபியாவிலிருந்தும் குடிபெயர்பவர்களை ஈர்த்தன.

(குறிப்பு: சங்கம அரசவம்சம் நீண்டகாலம் ஆட்சி செய்தது.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

A) புராணக்கதைகளைக் கொண்ட கற்பனையான வம்சாவளிகள் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

B) அவுரி என்பது இந்தியாவில் மிக முக்கியமான பானப்பயிராகும்.

C) மகமுத் கவான் அலாவுதின் கில்ஜியின் அமைச்சர் ஆவார்.

D) போர்ச்சுகீசியர்கள் தங்கள் முதல் கோட்டையை கோவாவில் கட்டினர்.

(குறிப்பு: அவுரி இந்தியாவில் பயிரிடப்பட்ட முக்கியமான சாயப் பயிராகும். போர்ச்சுகீசியர்கள் தங்கள் முதல் கோட்டையை கொச்சியில் கட்டினர்.)

பொருத்துக.

1. போர்ச்சுகீசியர்கள் i) வங்காளம்

2. தான்சேன் ii) கோட்டம்

3. பட்டுவளர்ப்பு iii) அக்பரின் அரச சபை

4. அங்கோர்வாட் iv) கோவா

5. மாவட்டம் v) கம்போடியா

A) ii i iii iv v

B) iv iii i v ii

C) iii iv i v ii

D) iv iii ii i v

நகரமயமாதலின் போக்கு ___________காலத்தில் அதிகரித்தது.

A) மொகலாயர்

B) மராத்தியர்

C) விஜயநகர அரசு

D) சோழர்கள்

(குறிப்பு: விஜயநகர அரசு காலத்தில் தமிழ்நாடு முழுவதிலும் அதிக எண்ணிக்கையில் கோவில்கள் எழுப்பப்பட்டபோது நகரமயமாதலின் போக்கு அதிகரித்தது.)

Exit mobile version