Discussion on Tnpsc group 4 exam – Part 2

Discussion on Tnpsc group 4 exam – Part 2

Finally, the group 4 notification has been released for 5451 vacancies. Only 3 months are there for tnpsc group 4 exam. Exam date is November 6. So we must speed up our studies. Here we have planned to upload lot of shortcuts in tamil and english. Please make use of it.

குரூப் 4 தேர்விற்கு தயாராகும் நண்பர்களுக்கு வணக்கம். ஆவலுடன் எதிர்பார்த்த குரூப் 4 தேர்வு அறிவிக்கை வெளியாகி விட்ட நிலையில், அதற்கு நம்மை எப்படி தயார் படுத்திக்கொள்வது என்பது பற்றி இங்கு காணவிருக்கிறோம்.மொத்தம் 5451 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Discussion on Tnpsc group 4 exam – Part 2

Latest Tamil Nadu Jobs

குரூப் 4 தேர்வு அறிவிக்கை

காலியிடங்கள் – 5451

இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) – 2345
இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) – 121
வரி தண்டலர் – 8
நில அளவர் – 532
வரைவாளர் – 327
தட்டச்சர் – 1714
சுருக்கெழுத்து தட்டச்சர் – 404

விண்ணப்பிக்க கடைசி தேதி – செப்டம்பர் 8

தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி – செப்டம்பர் 11

Exam date 06.11.16

இன்னும் தேர்விற்கு மூன்றே மாதங்கள் இருப்பதால், திட்டமிட்டு படிப்பது அவசியமாகும். போன தேர்வில் என்னென்ன தவறுகள் செய்தோம், இந்தமுறை கேள்விகள் எப்படி வரும் , கணித கேள்விகளுக்கு எப்படி தயார் ஆவது , அறிவியல் பாடத்திற்கு எப்படி படிப்பது , ஆக மொத்தம் இந்த குரூப் 4 தேர்வில் எப்படி வென்று பணியில் அமர்வது குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலை இங்கு நாம் பார்க்கவிருக்கிறோம். எனவே நமது விண்மீன் இணையதளத்திற்கு வருகை தந்து பயன் பெறுங்கள்.

முதலில் நாம் இங்கு கணித பாடத்தில் இருந்து படிக்க துவங்குவோம்.

Tnpsc தேர்வில் பகடையின் முகப்பக்கத்தை கொடுத்து ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.ஆகையால் அதைப்பற்றிய எமக்கு தெரிந்த நுணுக்கங்களைக் காண்போம்.
பகடை ஒரு கனசதுரம் ஆகும். அதற்கு ஆறு பக்கங்கள் உள்ளன என்பதை நாம் அறிவோம்.

ABCG, GCDE, DEFH, BCDH, AGEF மற்றும் ABHF.
எப்போதுமே ஒரு பக்கத்திற்கு நான்கு பக்கங்கள் அடுத்துள்ள பக்கமாக அமையும்.
இங்கு ABCG க்கு எதிர்ப்பக்கம்  DEFH ஆகும்.
CDEG என்பது மேல் பக்கமாகும்.
ABHF  என்பது கீழ் பக்கமாகும்.
Latest Tamil Nadu Jobs

1. இரண்டு எதிர் எதிர்ப் பக்கங்கள் அடுத்தடுத்த பக்கங்களாக அமையாது.

(Two opposite faces cannot be adjacent to one another)

ஒரு பகடையின் இரண்டு நிலைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. எண் 4 க்கு எதிராக உள்ள எண் எது?
எண் 4 க்கு 6,2,5 மற்றும் 3 அடுத்துள்ள பக்கங்களாக உள்ளதால், நான்கிற்கு எதிராக அமைய வாய்ப்பில்லை.
எனவே மீதம் உள்ள 1 தான் நான்கிற்கு எதிராக உள்ள எண் ஆகும்.

2. ஒரு பகடையின் இரண்டு வெவ்வேறு நிலைகள் கொடுக்கப்பட்டு, அதில் இரண்டு எண்கள் இரண்டு நிலைகளிலும் அமைந்திருந்தால், 
மீதமுள்ள இரு எண்கள் எதிர் எதிர் பக்கங்களாக அமையும்.


(If two different positions of a dice are shown and one of the two common faces is in the same position then of the remaining faces will be opposite to each other)

5, 3 இங்கு கொடுக்கப்பட்ட இரு நிலைகளிலும் இருமுறை வந்துள்ளது.
மீதம் இருப்பது 2, 4. எனவே இந்த 2 மற்றும் 4 எதிர் எதிர் பக்கங்களாகும்.

3. ஒரு பகடையின் இரண்டு வெவ்வேறு நிலைகள் கொடுக்கப்பட்டு, அதில் ஒரு எண் இரண்டுநிலைகளிலும் ஒரே முகப்பக்கத்தில் அமைந்திருந்தால், மற்ற முக பக்கத்திலுள்ள எண்கள் அடுத்த நிலையில் அதே இடத்தில் உள்ள எண்ணுக்கு எதிர் பக்கங்களாக அமையும்.

(If in two different positions of dice, the position of a common face be the same, then each of the opposite faces of the remaining faces will be in the same position)

இங்கு இரு நிலைகளிலும் 3 பொதுவாக ஒரே இடத்தில் அமைந்துள்ளது.
ஆகையால் 5, 6 எதிர்ப்பக்கம். 4, 2 உம் எதிர் எதிர் பக்கம்.


4. ஒரு பகடையின் இரண்டு வெவ்வேறு நிலைகள் கொடுக்கப்பட்டு,பொதுவான பக்கத்தின் நிலைமாறியிருந்தால், 
மேலும் ஒரே ஒரு எண் மட்டும் விடுபட்டிருந்தால் அந்த விடுபட்ட எண்ணேபொதுவான பக்கத்திலுள்ள எண்ணின் எதிர்ப்பக்கம்.

(If in two different positions of a dice, the position of the common face be not the same, then opposite face of the common face will be that which is not shown on any face in these two positions. Besides, the opposite faces of the remaining faces will not be the same)

இங்கு 1 இன் இடம் இரு நிலைகளிலும் வெவ்வேறு இடத்தில் உள்ளது.
6 மட்டும் இந்த எண்களில் விடுபட்டுள்ளது. எனவே 1க்கு எதிர்ப்பக்கம் 6.
A dice thrown 4 times produced the following results which number will appear opposite to number 3?

Discussion on Tnpsc group 4 exam – Part 3 – Updated Soon. Please leave your valuable comments…உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யவும். உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ் புக்கில் ஷேர் செய்யவும்…

Latest Tamil Nadu Jobs

Exit mobile version